பெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..
அறிவிப்பு....
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.......
வாழ்வில் சில விஷயங்களை எளிதில் மறந்து விட முடிவதில்லை.. எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.. நான் முதன் முறையாக பியர் எங்கே குடித்தேன் என்று.. கடலூர் பாண்டி பார்டரில் இருக்கும் கன்னியக்கோவில் கென்னடி ஒயின்சில் 10ம் வகுப்பு படித்து விட்டு ஒரு வீடியோ கடையில் வேலை செய்த போது நான் மற்றும் ஸ்ரீகாந் என்ற நண்பரும் அவருடைய நண்பருமாக சேர்ந்து குடித்தது நன்றாக ஞாபகம் இருக்கின்றது...
அந்த பாருக்கு அப்போசிட்டில் இருக்கும் ஒரு பாரில்தான் இன்றைய பதிவுலக பிரபலம் மணிஜியை சந்தித்தேன்..
அப்பா மேல் உள்ள பயத்தில் குடித்தது அரை கிளாஸ் பியர்.. ஆனால் குடித்து விட்டு எனக்கு எந்த போதையும் வரவில்லை....
நான் என்ன நினைத்துக்கொண்டேன் என்றால் சிந்து பைரவி சிவக்குமார் போல நான் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னு குட்டி நான் என்று வேட்டி நழுவ அளப்பறை பண்ணிய படி விட்டுக்கு போவேன் சிவந்த கண்களை பார்த்து விட்டு அப்பா உதைக்க போகின்றார்..
வாசத்தை வைத்து அம்மா துடைப்பத்தால் அடிக்க போகின்றார் என்று எனக்கு பயம்... எனக்கு அது முதல் அனுபவம்... நண்பர்களுக்கு அது எத்தனையாவது என்று எனக்கு தெரியவில்லை..அவர்கள் ஆளுக்கு ஒன்றரை பீர் எடுத்துக்கொண்டார்கள்....
அடித்தது அரை பியர் கிளாஸ்... வீடு வரும் வரை வாயை ஊதி வசனை வருகின்றதா? வாசனை வருகின்றதா என்று கேட்டு கேட்டு நண்பர்களின் உயிரை எடுத்து விட்டேன்... ஓத்தா அடுத்த வாட்டி உன்னை அழைச்சிக்கினு போனா நான் ஒருத்தனுக்கு பொறக்கலைடா என்று பேச்சின் கோவத்தில் பீர் எச்சில் தெரிக்க பேசிவிட்டு போனான் என் நண்பன்... அதன் பிறகு நிறைய முறை இரண்டு பேரும் சேர்ந்து குடித்து இருக்கின்றோம்.
அதன் பிறகு எப்போதாவதுதான் பீர் எடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.. எனது 25 வயதுக்கு பிறகுதான் நான் ஹாட்டுக்கு மாறினேன். காரணம் ஹாட்டில் இருக்கும் நாற்றம்...அனாலும் எனக்கு ஹாட் அறிமுகபடுத்தி வைத்த போது இரும்புக்கடையில் நான் வேலை செய்த போது உடல் வலிக்கு அவர்களோடு எப்போதாவது மது அருந்த நினைக்கும் போது ,என் சாய்ஸ் பியராகவே இருந்தது.. ஆனால் நண்பர்கள் நான் ஹாட் அடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நச்சரித்தார்கள்....
முதலில் ஒரு புல் வாங்கி ஜுஸ் கிளாசில் எதையும் கலக்காமல்
ஆப் சரக்கை அப்படியே ஊற்றி வைத்து எதையும் கலக்காமல் அடிக்க சொன்னார்கள். நான் ஆங்கில படத்தில் பார்த்து இருக்கின்றேன்... பேசிக்கொண்டே அப்படியே கல்ப்பாக அடித்து கொண்டு பேசுவார்கள்... அந்த ஆப் சரக்கையும் ஜுஸ் கிளாசில் இருந்து அப்படியே கல்ப்பாக நாட்டி விட்டேன். எதிரில் இருக்கும் அத்தனை முகங்களும் கலவரமாக மாறியதை பார்த்தேன்..... நான் உளறுவேன் என்று எதிர்பார்த்தார்கள்... இல்லை நன்றாக சாப்பிட்டேன்.... பிறகு எனக்கு ஒரு குவட்டர் சொல்லி அதையும் அதே விதமாக எனக்கு தருவித்தார்கள்.... இந்த முறை எனக்கு போதை ஏறியது... போதை ஏறும் போதே நம்மை கவுக்க நடக்கும் சதி என்று மனதில் கூறிக்கொண்டே போதையை விரட்டினேன் அதுவும் அப்படியே மைல்டாக இருந்தது... அவர்கள் போய்விட்டார்கள்.... அதன் பிறகு என் வீட்டு அருகே வநது ஒரு கொத்து விட்டேன்.....இப்படித்தான் எனக்கு ஹாட் அறிமுகம் ஆகியது....
இந்த பிராண்டுதான் என்று செலக்ட் செய்து குடித்தது இல்லை....ஆனால் ஒருமணிதனின் போதைக்கு குவாட்டர் போதும் அதுக்கு மேல் வேண்டும் என்றால் ஒரு கட்டிங் அதுவே போதுமானது அதுக்கு மேல் சாப்பிடும் அனைத்தும் வேஸ்ட் ரகம் என்பது என் கருத்து...அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என்றால் ஆப் வரை போகலாம்....
போன முறை பெங்களுர் வந்த போது நானும் மச்சானும் டக்கிலா சாப்பிட பல கடைகள் நேரம் கெட்ட நேரத்தில் அலைந்தோம் கிடைக்கவிலைலை.....
அவன் டிரிங்ஸ் சாப்பிட மாட்டான்....
இந்த முறை பெங்களுரில் டக்கிலா சாப்பிடுவது என்று தீர்மானத்துடன் சென்ட்ரலில் டிரைன் ஏறினேன்.
நான் பெங்களுர் வருகின்றேன் என்று அறிவித்த உடன் இப்படி ஒரு மெயிலில் நண்பர் ராம் என்னை தொடர்பு கொண்டார்.
Hello,
I am not sure whether u remember me or not. Recently I sent u an email. thats fine.
Just now read ur sunday sanveg and non veg.. welcome to blr.. i am on my way back to blr from Phoenix, USA. currently in Miami, reading ur blog in trasit time. I will be back in Bangalore by tuesday morning. I will try to catch you some time wednesday evening in bangalore.
Regards,
Ram
நான் பதில் அனுப்பினேன்... பொதுவாக வெளிநாட்டில் இருந்து பேசும் மனிதர்கள் வெளிநாடு போய் விட்டு வந்தவர்கள்.. டைம் கரெக்டாக கீப்பப் செய்கின்றாகள்...
நான் பிரியாக இருக்கின்றேன் என்று சொல்லியும் அந்த நேரத்தை என்னிடத்தில் இருந்து வாங்க நிறைய யோசித்தார்கள்.. ராம் அவர் நண்பர் மாதேஷ் அவரும் என்னை சந்தித்து பேச ஆவல் கொண்டு இருப்பபதாக சொல்ல அவரோடு இரண்டு நாளைக்கு முன் பெங்களுர் சில்க் போர்டு அருகே இருக்கும் ஆரன்யா ஹோட்டலில் இரவு உணவோடு பேசினோம்.. இருவருக்கும் டிரிங்ஸ் சாப்பிடும் பழக்கம் இல்லை என்று சொன்னார்கள்...
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எங்களை தினமும் பதிவு எழுதி எங்களை மகிழ்விக்கின்றீர்கள்.. ராம் சொன்னார்.. பிளைட் மாறி டைம்பாசுக்கு என் பிளாக் உதவியதாக சொன்னார்..
(மாதேஸ் மற்றும் ராம்.. இந்த போட்டோவில் ந்ணபர் முத்துவும் இருந்து இருக்க வேண்டும்.... பட் அவருக்கு வேலை இருந்த காரணத்தால் அவரை சந்திக்க முடியவில்லை...)
நான். டக்கிலா ஆர்டர் செய்தேன்... அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது எல்லாம் கேள்விஞானம்தான்...அப்படியே சாப்பிட்டேன் வயிறு எரிந்தது...
உப்பும் எலுமிச்சையும் அந்த எரிச்சலை அடக்க பேர்கோலம் பூண்டன..60 எம்எல் டக்கிலா 4 ஷாட் அடித்தேன்....அது கொஞ்சம் பேச வைத்தது..
நான் சொன்னேன் முதல்முறையாக நான் டக்கிலா சாப்பிடும் போது என்னோடு இருந்தவர்கள் ராம் மற்றும் மாதேஸ் என்று எப்போதும் சொல்லுவேன் என்று சொன்னேன் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அவர்கள் நிறைய கேள்வி கேட்டாகள்.. நான் பதில் சொன்னேன்...
மாதேஸ் மடிவாலா பக்கத்தில் இருக்கும்oracleல் வேலை செய்கின்றார்....
ரொம்ப சந்தோஷமான சந்திப்பு...இரண்டு பேருமே பிளாக் ஆரம்பித்து விட்டு என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்பதாக சொன்னார்கள்..
ஆரண்யா ஹோட்டல் நல்ல ஒட்டல்.. நல்ல சர்விஸ்ம் கூட சில்லி பிரான் ரொம்ப சுவையாக இருந்தது...ஓட்டலில் வாம் லைட்டிங் ஹால் முழுவதும் மைல்டாக வியாபித்து இருந்தது..
(ஓட்டலில் இருந்த லைட்டிங்கில் நான் எடுத்த இந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று..)
இரண்டு பேரின் பேச்சிலும் அதீத மரியாதை நிரம்பி வழிந்தது.... இருவரும்...பாசக்கார பயபுள்ள ஊர் என்று பெயர் எடுத்த ஈரோடுபக்கம் உள்ளவர்கள்..
இன்னும் சில சமுக சேவைகளை இருவரும் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.. படித்ததோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் வாழும் சமுகத்துக்கு எதையாவது செய்வது என்பது எல்லோருக்கும் வந்து விடும் எண்ணம் அல்ல... அதுக்கு நல்ல மனது வேண்டும்.. அது பற்றி விரிவாய் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
ராம் என்னை எனது விட்டில் டிராப் செய்து விட்டு போனார்.. வீட்டில் மனைவி குழந்தை காத்து இருக்கின்றாகள் என்ற அவசரம் வாகனம் கிளப்பிச்சென்றதில்தெரிந்தது...
இனி பெங்களுர், டக்கிலா, என்று பேசும் போது இந்த இரண்டு நண்பர்கள் நினைவும் மனத்திரையில் வந்து போகும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
குறிப்பு..
படித்து விட்டு மறக்காமல் ஓட்டு போடுங்கள்...நண்பர்களுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். நன்றி
Labels:
அனுபவம்,
பயணஅனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
ReplyDeleteஎன்னைப் போன்ற புதிய பதிவர்களின் பதிவுகளைப் படித்து கருத்து சொன்னதுன்டா?
ReplyDeleteSee.,
http://sakthistudycentre.blogspot.com/
//அவசரம் வீட்டில் மனைவி ழுழந்தை காத்து இருக்கின்றாக்ள் என்ற அவசரம் வாகன்ம் ஓட்டியதில் தெரிந்தது...//
ReplyDeleteஅவசரம் டைப் செய்யும் போது வரை இருந்திருக்கிறது போல..
அதென்ன குடிக்கும் வரை ராமிற்கு மனைவி, குழந்தைகள் ஞாபகம் வரவில்லையா?
ReplyDeleteபெரும்பாலான சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் குடிக்கிறார்களே # ட்வுட்.
ReplyDelete//இரண்டு பேருமே பிளாக் ஆரம்பித்து விட்டு என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்பதாக சொன்னார்கள்..//
ReplyDeleteவித்தையெல்லாம் கத்து குடுத்துடீங்களா?
குடிப்பது என்பது தனி மனித சுதந்திரம் தான் அதை ஏன் வெளிப்படுதுகிறேர்கள் நாளைஉங்கள் குழந்தை இதை படிக்கும் போது அவர்களுக்கு அது தவறு என்பது தெரியாது இது என் தாழ்மையான கருத்து
ReplyDelete"ஓத்தா அடுத்த வாட்டி உன்னை அழைச்சிக்கினு போனா நான் ஒருத்தனுக்கு பொறக்கலைடா என்று பேச்சின் கோவத்தில் பீர் எச்சில் தெரிக்க பேசிவிட்டு போனான் என் நண்பன்"
ReplyDelete"ஓத்தா": இது போன்ற வார்த்தைகளை தவிர்த்தால் நன்றாயிருக்குமென்பது ஏன் கருத்து. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteபாரத் பாரதி ராம் மாதேஷ் இரவரும் தண்ணியை தொடவில்லை.. என்னோடு பேசிய சுவாரஸ்யம் நேரத்தை கடத்தி விட்டது...
ReplyDeleteபெரிய எழுத்தாளர்கள் குடிப்பதன் காரணம் எனக்கு தெரியாது..
வித்தையை கத்துக்கொடுத்துட்டு வந்து இருக்கேன்..
என் அப்பா டீ, காபி, தண்ணி எதுவும் தொட்டதில்லை.. என் குழந்தை என்னை பார்த்துதான் எதையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை....
ReplyDeleteஎன் பிள்ளை என்னை உத்தமனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை.. என்து பிளஸ் மைனஸ்சோடு என் பிள்ளை என்னை புரிந்து கொண்டால் போதும்...
அவனுக்கு 10 வயதில் யாரும் இந்த உலகில் உத்தமன் இல்லை என்ற உண்மை நிச்சயம் தெரிந்து விடும்...
நன்றி சிட்டிபாபு உங்கள் கருத்துக்கு... என் மீதான அக்கறைக்கும்
ஜெகன் இதுக்கான பதில் நான் நிறைய முறை சொல்லி சளித்தாகிவிட்டது... பை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமதுரை மல்லி ஐந்து பிளாக் எழுதி ஓசி சரக்கு அடிக்க இருக்கும் உங்கள் உயர்ந்த நோக்கத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் ஒரு பிளாக்எழுதி.. உங்களுக்காக யாராவது சிங்கிள் டீ வாங்கி கொடுக்க முதலில் முயற்சியுங்கள்.
வாழ்த்துக்கள்..
டக்கிலா-வில் அப்படி என்ன ஸ்பேஷல்- எழுதுங்கள்.
ReplyDelete"ஒரு வீடியோ கடையில் வேலை செய்த போது நான் மற்றும் ஸ்ரீகாந் என்ற நண்பரும் அவருடைய நண்பருமாக சேர்ந்து குடித்தது நன்றாக ஞாபகம் இருக்கின்றது..."
ReplyDeleteகூத்தப்பாக்கத்தில் இருக்கும் வீடியோகிராபர் ஸ்ரீகாந்தா?
ரொம்பவும் குள்ளமா ஒரு ஆறேகால் அடிதான இருப்பாரு?
இப்போதைய புதிய பதிவு தெரியவில்லையே ஏன்?
ReplyDeleteமிக்க சந்தோஷம் ஜாக்கி.. போட்டோஸ் மிகவும் அருமை ... நன்றிகள் பல
ReplyDelete