சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)

ஆல்பம்..


இயக்குனர் சீமான்... காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அதிமுகவை ஆதரிக்க போவதாக அறிக்கை விடுத்தார்...அதை பலர் ரசிக்கவில்லை.. நாளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டால் என்ன செய்வார்...?? எனென்றால் இன்னும் தேர்தலுக்கு  பலநாட்கள் இருக்கின்றது... காட்சி மாறுவது அரசியலில் சாதாரணம்.... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்..


=========================
காமெடி நடிகை சோபனா திடிர் என்று தற்கொலை செய்து கொண்டு விட்டார்.. பொதுவாக நடிகைகள் தேர்ந்து எடுக்கும் கயிற்றைதான் அவரும் கடைசிநேரத்தில் நம்பி  இருக்கின்றார்....டிவி நிகழ்ச்சிகளில் ஷோபனாவோடு பணி புரிந்து இருக்கின்றேன்... ஆசிரியர் தொழிலுக்கு போய் விட்டு இரண்டு வருடத்துக்கு முன் திரும்ப திரையுலகம் வந்த போது சுறா படத்தில் ரியாஸ்கானின்  மனைவி கேரக்டரில் நடித்தார்...ஆலப்புழாவில் படப்பிடிப்பு அப்போதுதான் அவரை கடைசியாக சந்தித்தேன்.. நல்ல பெண்மணி  சிரிக்க சிரிக்க பேசுவார்...அவர் குரலில் லோக்கல் பேச்சின் வசீகரம் இருக்கும்.. உதாரணமாக ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு மனைவியாக  செல்லத்தாயி என்ற கேரக்டரில் நடித்து இருப்பார்..நான் யார்  என்று வடிவேலு கேட்க? புருசன் என்று ரொம்ப சலித்துக்கொண்டு சொல்லுவார்.... நல்ல  திறமையான நடிகை... இன்னும் அவர் தற்கொலையில் மர்மம் நீடிப்பதாக  காவல்துறை சொல்கின்றது... அவர் ஆன்மா  சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றேன்.




அவர் நடித்த அந்த காட்சி



=============
இரண்டு நாட்களாக பிபிசி செய்திகளில் முக்கிய செய்தி ஆஸ்திரேலியா வெள்ளத்தை பற்றிதான்...
நம் தமிழக தென்மாவட்டத்தை ஒரு கலக்கு கலக்கிவிட்டு அப்படியே கீழ் பக்கம் வருனபகவான் ஆஸ்திரேலியாவுக்கு போய்விட்டார் போலும்...  செம பொல பொலக்காட்டு காட்டி இருக்கின்றார்... ஆஸ்திரேலியா இந்தியர்களை உதைப்பதை விட்டு விட்டு சாக்கு பையில் மண் போட்டு வெள்ளத்தை தடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...
இன்று ஆஸ்திரேலியாவில் எடுத்த சலனபடம்... நன்றி  சேப்பல்...




=================

மிக்சர்..


நேற்று மாலை 4.30 மணிக்கு...திசையன் விளைக்கு செல்ல இருந்த ஆம்னி பேருந்து திடிர் என்று சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் தீப்பிடித்து எரிந்தது...  பேருந்து மேற்கூரையில் பார்சலில் இருந்து தீ பிடித்தாக சொல்கின்றார்கள்.  பேருந்து உட்புறத்தில் லக்கேஜ் இடத்தில் வைத்து விட்டு இறங்கி  டீ சாப்பிட்ட3 பயணிகளின் லக்கேஜ் தீயில் கருகிவிட்டது.. என்ன என்ன முக்கியமான பொருட்கள் அதில் இருந்தது என்று தெரியவில்லை...பேருந்து போகும் போது தீப்பற்றி இருந்தால் பெரிய உயிர் சேதம் ஏற்ப்பட்டு இருக்கும்.
===================
நன்றிகள்...

நான் டாட்காம்மாக மாற்றியபோது எனது தளம் அலெக்சாவில் இரண்டு மாதத்துக்கு முன்..5 லட்சத்துக்கு மேல் இருந்தது... இந்த இரண்டு மாதகாலத்தில் திரும்பவும் ஒரு லட்சத்துக்குள்  இருப்பது மட்டும் அல்லாது...70ஆயிரத்துக்குள் இருப்பதுக்கு உங்கள் பங்கு மிக முக்கியம் ....
 உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
==============
ஒரு பொது அறிவிப்பு..

வரும் மாட்டுப்பொங்கல் அன்று டாஸ்மார்க் கடைக்கு திருவள்ளுவர் தினம் என்பதால் விடுமுறை ஆகவே  மாட்டுப்பொங்கல் அன்று கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முன்பே வாங்கி வீட்டின் சிலாப்பு மற்றும் துணி பிரோ உள்ளயோ சரக்கை வைத்து சேப்ட்டி செய்யவேண்டுமாயும் கடைசி கட்டத்தில் பிளாக்கில் அனியாய விலைகொடுத்து இந்த மாதபொருளாதாரத்தில் துண்டு விழாமல் இருக்கு தமிழக குடிமகன்கள் முயற்சி எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
================


பார்த்ததில் பிடித்தது...

சென்னை பூக்கடை தேவராஜமுதலிதெரு.... நானும் நண்பரும் மெதுவடையை தொண்டைக்கு வலிக்காமல் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தோம்...ஒரு பெரியவர் பாத்திரங்கள்  பெரிய கோணிப்பையில் வைத்து சைக்கிள் ரிக்ஷாவில் தள்ளிக்கொண்டு போய் இருந்தார்...எதிரில் ஒரு பதுமை தனது காதலனுடன் பேசிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது... தொம் என்று ஒரு சத்தம் வாயில் வைத்த வடை திடிர் சத்தம் காரணமாக பூமாதேவிக்கு சமர்பித்தேன்... திரும்பி பார்த்தால்.. அந்த பாத்திர போணிபை கீழே விழுந்து விட்டது.. பதுமைகாதலன் அந்த பாத்திர கோணியை தூக்கி வைக்க முயற்சி  செய்ய முடியவில்லை.. சட்டென இருவர் கை கொடுக்க அந்த பாத்திரக்கோணி  சைக்கிள் ரிக்ஷாவில் சரியான இடத்தில் ஏறிஅமர்ந்துக்கொண்டது..   அவன் அந்த உதவி செய்து விட்டு வந்தவுடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு இந்தியில் சத்தமாக சொல்லி விட்டு சிரித்துக்கொண்டு போனது அந்த பதுமை... இந்தியில் அந்த பதுமை என்ன சொல்லியது என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்...ஏனோ திராவிட கட்சிகள் மேல் கோபம் வந்தது.

========================

ஒரு சந்திப்பு...

வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இயக்குனர் வடிவுடையான் அவர்கள் எனது தளத்தை பார்த்து விட்டு என்னை சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார்....நண்பர் ஈரோடு கணபதி அவர்கள் என்  தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல.. நான் இயக்குனரை போய்  சந்தித்தேன்.. நல்ல  நண்பர்.. நிறைய பேசினோம்...தேநீர் அருந்தி விடைபெற்றேன்....இயக்குனர் கடுமையாக உழைத்து இன்னும் சில வாரங்களில் வெளிவர இருக்கும் வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்..நண்பர்கள் இல்லாத எனக்கு நிறைய  நண்பர்களை இந்த உலகம் முழுவதும் உருவாக்கி கொடுத்தது இந்த வலையுலகம்தான் அதற்கு என் நன்றிகள்.
=========================
இந்தவார கடிதம்..


கடிதம்..1

நண்பா ஜாக்கி, நலமா?

மன்னிக்கவும், ஊருக்கு வந்த பிறகு, ஒரு முறை தான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு சென்னை வந்தால் அலைபேசியில் அழைக்க சொன்னீங்க. ஆனா, சத்தியமா நேரம் கிடைக்கல நண்பா.

சூறாவளி சுற்றுப் பயணம் மாதிரி சொந்தக்காரங்க வீட்டுக்கு போகவே நேரம் சரியாய் போச்சு.

கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி-ன்னு சுத்திகிட்டே தான் இருந்தோம்.

சென்னை வந்த பிறகு, பாஸ்போர்ட் ஆபீஸ்-க்கு 2 நாள் அலைஞ்சோம். ஊருக்கு வரதுக்கு தேவையான பொருட்கள் வாங்கவே நேரம் பத்தலை.

அதன் உங்ககிட்ட பேசவோ, உங்க வீட்டுக்கு வரவோ முடியல. தப்பா நினைக்க வேண்டாம் நண்பா.

வீட்டை கட்டி பாரு, கல்யாணம் பண்ணி பாரு-ன்னு சரியா தான் சொல்லி வெச்சிருக்காங்க நண்பா.

ஒரு மாசத்துக்கு அப்புறம், பஹ்ரைன் வந்த அப்புறம் தான் 2 நாள் நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடுத்தேன் நண்பா.

அடுத்த முறை சென்னை வந்த கண்டிப்பா உங்க வீட்டுக்கு விருந்துக்கு வருவோம்.





என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan 



==========

அன்பின் பிரசன்னா வேலை பளு காரணமாக உங்கள் திருமணத்தை மறந்து போய்விட்டேன் மன்னிக்க...இருப்பினும் மகிழ்வுடன் கடந்த நாட்களை அசைபோட்டபடி மிச்ச நாட்களை கடத்தி மனைவியை அழைத்துக்கொண்டு அரபு தேசம் சென்று சுபிட்ச வாழ்வு வாழ எல்லாம் வல்லபரம்பொருளை  வேண்டிக்கொள்கின்றேன்...
=======
கடிதம்..2
குறை ஒன்றும் இல்லை !!! said...

    அண்ணே .. ஒரு சந்தேகம்.. இந்த வாசகர் கடுதாசி எல்லாம் உண்மையா?
    Monday, January 10, 2011 7:48:00 PM ...


அன்பின் குறை ஒன்றும் இல்லை.. நான் பப்ளிஷ் செய்யும் கடிதங்கள் எல்லாம் ரத்தமும் சதையுமான  மனிதர்களால் எனக்கு எழுதபட்டவை... அதுக்கு மேல் உள்ள கடிதமே சாட்சி...எனக்கு வந்த கடிதங்கள் எனது மெயில் பாக்சில் அப்படியே வைத்து இருக்கின்றேன்....ஒரு நண்பனாக என் வீட்டுக்கு வந்தால் அந்த கடிதங்களை உங்களுக்கு காட்டுவேன்...எனக்கு இருக்கும் வேலைபளுவில் நான் ஒரு கடிதம் எழுதி கற்பனை பேர் வைத்து பப்ளிஷ் செய்து ... யப்பவ்... போதும்டா சாமி... நான் அந்த அளவுக்கு வேலை வெட்டி இல்லாமல் இல்லை... இப்படி லட்டர் போட்டுதான் நான் பாப்புலர் ஆகவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை நண்பா...இந்த நேரத்தில் எனக்கு பிடித்த ஒரு பார்த்தேதீரவேண்டியபடத்தை எழுதிவிட்டு போவேன்.. இது உனக்கான பதில் மட்டும் அல்ல.... இந்த கடிதபகுதியை நக்கல் விடும் அத்தனை பேருக்கும் சேர்த்துதான் இந்த பதில்...

நன்றி

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
================
இந்தவார நிழற்படம்..

சென்னை திநகர் பேஸ் டெப்போ எதிரில் இருக்கும் கிருஷ்ணவேணி திரையரங்கம் எதிரில் சவாரி இல்லாத ஆட்டோ டிரைவர்கள் மாலைநேரத்தில் டிராபிக்கை ஒழுங்கு படுத்துவது ரசிக்க வைத்தது... அந்த ஆட்டோ டிரைவர்களுக்கும் பொதுநலசேவைக்கும் ஜாக்கியின் சல்யூட்....
==============


இந்தவாரசினிமா... 

நடிகர்கார்த்தி வீட்டு மூன் இன்று 100க்கு மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தி கைது ஆனார்கள்.. சிறுத்தை படத்தில் ராக்கெட்ராஜா கேரக்டரில் நடித்து நடார் சமுகத்தை நோகடித்து விட்டாராம்.. இன்னும் படம்ட வரவேயில்லை அதுக்குள்.. போராட்டம் வௌங்கிடும்... வேதம் படத்தில் சிம்பு கேபிள்ராஜா என்ற பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்... கேபிள் என்ற பெயரை யூஸ் செய்யது எங்களை காயபடுத்திவிட்டார் என்று கேபிள் சங்கத்தினர் கொடிபிடிக்காமல் இருந்தால் சரி...
===========


புத்தக அறிமுகம்...


இந்த பகுதி இந்த வாரத்தில் இருந்து அரம்பிக்கபடுகின்றது..எழுத்தாளர் பா.ரா உங்கள் அறிவுரைப்பபடி....

அசையும்படம்...

இந்த புத்தகம் ஒளிபதிவுதுறையில் விருப்பம் உள்ளவர்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் இது.... ஒளிப்பதிவு பற்றி எல்லாவற்றையும் அழகு தமிழில் கூடுமானவரை சொல்லி இருக்கின்றார்...பொதுவாக இது போலான டெக்னிக்கல் விஷயங்கள் தமிழ்சினிமாவில் யாரும் வெளிப்படையாக சொல்லிக்கொடுக்கமாட்டார்கள்..

பூட்டி வைத்து இருந்த விஷயத்தை மிக எளிமையாய் புத்தகவடிவில் கொடுத்த இந்த புத்தகத்தின் ஆசிரியர் சிஜே ராஜ்குமாரை வளரும் தலைமுறை ஒளிப்பதிவாளர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..
சென்னை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கின்றது...

புத்தகம் கிடைக்கும் இடம்: விலை ரூபார் 150.
கீற்று பதிப்பகம்
23,அரங்கநாத நகர்
சிதம்பரம் - 608 001
செல்: 97896 92295


சென்னை புத்தக கண்காட்சியில்:
விஜயா பதிப்பகம்
கடை எண்:134-135


ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
==========

பிலாசபி பாண்டி

நல்ல நேரத்துக்கும் கெட்ட நேரத்துக்கும் என்ன வித்யாசம்...???

நீ நடந்து போகும் வழியில் ஒரு  அழகான பொண்ணு நடந்து வரும் போது பயங்கரமா காத்து அடிச்சி அந்த பொண்ணோட சுடிதார் ஷால் பறந்து போனா அது நல்ல நேரம்....அந்த நேரத்துல உன் கண்ணுல தூசி விழுந்துடுச்சின்னா அதுகெட்ட நேரம்...
 ====================

நான்வெஜ் 18+

ஜோக்..1

ஒருத்தன் தண்ணி போட்டு வாழ்க்கை தத்துவத்தை சொன்னான்....

மச்சி நமக்கு எல்லாம்
தண்ணி போட்டாதான்
ஆட்டம் வரும்…..

ஆனா …..
நம்ம தம்பிகளுக்கு
ஆட்டம் போட்டாதான்..... வரும்

24 comments:

  1. நல்லாத் தான் இருக்கிறது நன்றிகள்...

    ReplyDelete
  2. இயக்குனர் சீமான்... காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அதிமுகவை ஆதரிக்க போவதாக அறிக்கை விடுத்தார்...அதை பலர் ரசிக்கவில்லை.. நாளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டனி வைத்துக்கொண்டால் என்ன செய்வார்...?? எனென்றால் இன்னும் தேர்தலுக்கு பலநாட்கள் இருக்கின்றது... காட்சி மாறுவது அரசியலில் சாதாரணம்.... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்..

    @உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை!(அரசியல்)

    ReplyDelete
  3. அலெக்சா ரேங்க்குக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வழக்கம்போலவே தகவல்கள் அருமை அண்ணே,


    சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)
    அசத்தல்........

    ReplyDelete
  5. //இந்த இரண்டு மாதகாலத்தில் திரும்பவும் ஒரு லட்சத்துக்குள் இருப்பது மட்டும் அல்லாது...70லட்சத்தக்குள் இருப்பதுக்கு உங்கள் பங்கு மிக முக்கியம் .//

    அண்ணே ஒரு சிறு திருத்தம் இதில் (70லட்சம்)என்று தவறாக டைப் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் 70 ஆயிரத்துக்குள் இருப்பது என்று வரனும்....

    ReplyDelete
  6. //நடிகர்கார்த்தி வீட்டு மூன் இன்று 100க்கு மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தி கைது ஆனார்கள்.. சிறுத்தை படத்தில் ராக்கெட்ராஜா கேரக்டரில் நடித்து நடார் சமுகத்தை நோகடித்து விட்டாராம்.. இன்னும் படம்ட வரவேயில்லை அதுக்குள்.. போராட்டம் வௌங்கிடும்... வேதம் படத்தில் சிம்பு கேபிள்ராஜா என்ற பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்... கேபிள் என்ற பெயரை யூஸ் செய்யது எங்களை காயபடுத்திவிட்டார் என்று கேபிள் சங்கத்தினர் கொடிபிடிக்காமல் இருந்தால் சரி...
    //
    பிரபல பதிவரை கேவலப்படுதினதா பதிவர்கள் கொடி பிடிக்காட்டி சரி..:))

    ReplyDelete
  7. //.70லட்சத்தக்குள் இருப்பதுக்கு உங்கள் பங்கு //

    ஜாக்கி... இது 70 ஆயிரம் என்று நினைக்கிறேன்.. சரி பார்க்கவும்...

    //கேபிள் என்ற பெயரை யூஸ் செய்யது எங்களை காயபடுத்திவிட்டார் என்று கேபிள் சங்கத்தினர் கொடி//

    என்ன சொல்றீங்க... கேபிள் சங்கர் கொடி பிடிக்கறாரா? எங்க, எதுக்கு, எப்போ?

    ReplyDelete
  8. மச்சி நமக்கு எல்லாம்
    தண்ணி போட்டாதான்
    ஆட்டம் வரும்…..

    ஆனா …..
    நம்ம தம்பிகளுக்கு
    ஆட்டம் போட்டாதான்..... வரும்


    சூப்பர் , படிச்சி டு வீளுந்து வீளுந்து சீரிசன்

    ReplyDelete
  9. இந்தி தெரியல என்று திராவிட கட்சிகள் கோபம் என்றால், ஒருவேளை அவர்கள் இத்தாலியோ, பிரெஞ்சு மொழியோ பேசுனா யார் மேல கோபப்படுவீங்க

    ReplyDelete
  10. புத்தக அறிமுகம்..

    நன்றி

    ReplyDelete
  11. கலந்து கட்டி பொளந்திருக்கீங்க

    ReplyDelete
  12. கலவையாய் கலந்து கட்டி ஆடியிருக்கிறீர்கள். வழக்கம் போல் தனித்து நிற்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பிப்பரவரி மாதம் 2010தோடு நான் ஷுட்டிங் போனதுதான் அதன் பிறகு இன்று வரை அதாவது பத்துமாதங்களுக்கு மேல் ஷுட்டிங் செல்லவில்லை..வீட்டில்தான் இருக்கின்றேன்..

    பரபரப்பாய் வேலைக்கு போய்விட்டு தேமேன்னு வீட்டில் உட்கார்ந்து இருப்பது போலான கொடுமை வேறு ஒன்றும் இல்லை என்பேன்...

    வெளியில் போனால் ஒரு லிட்டர் பெட்ரோல் வண்டிக்கு தேவை என்பதால் வீட்டை விட்டு வெளியே போகவில்லை...கையில் பைசா இல்லாமல் செம டைட்
    இதுவும் நீங்க எழுதினது தான்

    அன்பின் குறை ஒன்றும் இல்லை.. நான் பப்ளிஷ் செய்யும் கடிதங்கள் எல்லாம் ரத்தமும் சதையுமான மனிதர்களால் எனக்கு எழுதபட்டவை... அதுக்கு மேல் உள்ள கடிதமே சாட்சி...எனக்கு வந்த கடிதங்கள் எனது மெயில் பாக்சில் அப்படியே வைத்து இருக்கின்றேன்....ஒரு நண்பனாக என் வீட்டுக்கு வந்தால் அந்த கடிதங்களை உங்களுக்கு காட்டுவேன்...எனக்கு இருக்கும் வேலைபளுவில் நான் ஒரு கடிதம் எழுதி கற்பனை பேர் வைத்து பப்ளிஷ் செய்து ... யப்பவ்... போதும்டா சாமி... நான் அந்த அளவுக்கு
    வேலை வெட்டி இல்லாமல் இல்லை...

    இதுவும் நீங்க எழுதினது தான்

    எது உண்மை ?

    ReplyDelete
  14. பின்னுட்டம் இட்ட அனைவருக்கு என் நன்றிகள்...

    நீண்ட கடிதத்தில் உங்கள் சந்தேகம் கேட்ட ஜெயப்பிரகாஷ்...வீட்டில் ஒரே இடத்தில் ஒன்பது மாதங்கள் உட்கார்ந்து இருக்க முடியுமா??பூவாவுக்கு என்ன செய்வது??? ? ஷுட்டிங் போகாமல் ஒன்பது மாதமாய் சும்மா இருக்கின்றேன் என்று சொன்னால் ஒரே இடத்தில் அல்ல...


    நன்றி

    ReplyDelete
  15. நன்றிங்க ஜாக்கி நான் இதுல ஒண்ணுமே பண்ணலை உங்க வலைத்தளம் கொடுக்கும் தகவல்கள் நேர்த்தியாக இருக்கிறது அதனால் ஈர்க்க பட்டு திரு vc.vadivudaiyan அவர்கள் உங்களை சந்திக்க பிரியப்பட்டார் .நானும் உங்களை ஈரோடு சங்கமத்தில் சந்தித்து உங்கள் அறிமுகம் கிடைத்த காரணத்தினால் உங்கள் இருவரையும் சந்திக்க வைத்தேன் . இந்த சந்திப்பிற்கு முழு காரணம் உங்கள் எழுத்தின் கலோகியல் தன்மையும் படங்களை பற்றிய உங்கள் நேர்த்தியான பார்வையும் தான் . விரைவில் உங்கள் திரைப்படங்களை பற்றிய பார்வைகள் அனைத்தும் ஒரு புத்தகமா வெளிவர நான் பிரியபடுகிறேன் .

    ReplyDelete
  16. நன்றிங்க ஜாக்கி நான் இதுல ஒண்ணுமே பண்ணலை உங்க வலைத்தளம் கொடுக்கும் தகவல்கள் நேர்த்தியாக இருக்கிறது அதனால் ஈர்க்க பட்டு திரு vc.vadivudaiyan அவர்கள் உங்களை சந்திக்க பிரியப்பட்டார் .நானும் உங்களை ஈரோடு சங்கமத்தில் சந்தித்து உங்கள் அறிமுகம் கிடைத்த காரணத்தினால் உங்கள் இருவரையும் சந்திக்க வைத்தேன் . இந்த சந்திப்பிற்கு முழு காரணம் உங்கள் எழுத்தின் கலோகியல் தன்மையும் படங்களை பற்றிய உங்கள் நேர்த்தியான பார்வையும் தான் . விரைவில் உங்கள் திரைப்படங்களை பற்றிய பார்வைகள் அனைத்தும் ஒரு புத்தகமா வெளிவர நான் பிரியபடுகிறேன் .

    ReplyDelete
  17. //அந்த நேரத்துல உன் கண்ணுல தூசி விழுந்துடுச்சின்னா அதுகெட்ட நேரம் //
    சீமான் vs காங்கிரஸ்,Photo,joke,etc.. , Nalla iruku pa!

    ReplyDelete
  18. அண்ணே!! ஊங்களை காயப்படுத்தவோ இல்லே கிண்டலடிக்கவோ அந்த கேள்வியை நான் கேட்க வில்லை. கேட்ட காரணம் மிகவும் எளிது 1.கடிதம் போட்ட அந்த வாசகர் ஏன் பின்னூட்டம் இடுவதில்லை? ஏனெனில் உடனடியாக தோன்றும் உணர்வு பின்னூட்டம் இடுவதே என நம்புகிறேன். 2. உங்களுக்கு கடிதம் எழுதிய நண்பர்கள் கண்டீப்பாக உங்கள் வலைத்தளத்தை பார்வையிட்டுக்கொண்டு இருப்பார்கள் என நம்புகிறென் பிறகு ஏன் எவரும் என் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுவரை ஒருவர் கூட உங்கள் இந்த பதிவு வரும் வரை... 3. நான் உங்களை நம்புகிறேன் அண்ணே... மறங்கள் தவறிருந்தால் மன்னியுங்கள்!!!!

    ReplyDelete
  19. நன்ற கணபதி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  20. நன்றி குறையொன்றும் இல்லை...நீங்கள் என்னை காயபடுத்தவில்லை.. அப்படி யாரும் என்னை எளிதில் காயபடுத்தவும் முடியாது..

    உங்கள் கேள்வி நான்பதில் சொல்வதற்க்கான கருவி...

    அண்ணே!! ஊங்களை காயப்படுத்தவோ இல்லே கிண்டலடிக்கவோ அந்த கேள்வியை நான் கேட்க வில்லை. கேட்ட காரணம் மிகவும் எளிது 1.கடிதம் போட்ட அந்த வாசகர் ஏன் பின்னூட்டம் இடுவதில்லை?


    எனக்கு நெருக்கமாக சில தகவல் தெரிவிக்க பின்னுட்டத்தை விட கடிதங்கள்தான் சிறந்தது என நினைத்து இருக்கலாம்...ஒரு தகவலை தெரிவிக்க இரண்டு வழி இருக்கும் போது ஏன் அவர்கள் இன்னோரு வழியை தேர்ந்து எடுக்கின்றார்கள் என்ற கேள்வி...பற்றி நீங்களே யோசியுங்கள்...

    ஈசிஆர் வழியா பாண்டிக்கு போலாமே.. ஏன் செங்கல் பட்டுதிண்டிவனம் வழியாக பாண்டி போகின்றார்கள் என்பதை கேட்பது போல இருக்கின்றது......


    //ஏனெனில் உடனடியாக தோன்றும் உணர்வு பின்னூட்டம் இடுவதே என நம்புகிறேன்.//

    இது உங்களுடைய விருப்பம்.. அது போல எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது..........???

    புதிதாய் வருபவர்களுக்கு பதிவர் தவிர வேறு சிலருக்கு ஓட்டு பின்னுட்டம் பற்றி அதிகம் தெரிவதில்லை.. பலர் எனது போன் நம்பர் பார்த்து பேசுகின்றார்கள்.. சிலர் பக்கத்தில் இருக்கும் மெயில் ஐடி பார்த்து எண்ணத்தை தெரிவிக்கின்றனர்...

    பிறகு ஏன் எவரும் என் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுவரை ஒருவர் கூட உங்கள் இந்த பதிவு வரும் வரை... ==//

    நல்ல கேள்வி.. ஆனால் எல்லோரும் பதில் சொல்லவேண்டும் என்று அவசியம் இல்லை...எல்லோருக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன...பதிவர்கள்தான் நெட்டில் முழ்கி இருக்கின்றார்கள்.. படிப்பவர்கள் பல வேலையைவிட்டு விட்டு படித்து விட்டு தோன்றியதை சொல்லிவிட்டு செல்கின்றனர்..



    படித்து விட்டு தோன்றுவதை கடிதமாக எழுதுகின்றனர்...

    அதுக்கு நக்கல் விடுபவர்களுக்கு எல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது எந்தவகையில் நியாயம்...

    நான் நெட்டில் இருக்கின்றேன்.. படிப்பவர்கள் எல்லோரும் படித்து விட்டு செல்லதான் நினைப்பார்கள்... அவர்களுக்கு இதுதான் வேலையா??

    இப்போதும் சொல்கின்றேன் நீங்கள் நம்ப வேண்டும் என்று நினைக்க இதை எழுதவில்லை.. எனக்கு வரும் கடிதங்களுக்கு பொதுவில் மரியாதை செய்கின்றேன்...என்னை பெத்த என் அம்மாவுக்கு நான் உண்மையாக இருக்கின்றேன்... எனக்கு அது போதும்....அந்த உலகில் அவர்கள் ஒருவர் என்னை நம்பினால் போதும்... மற்றயாரும் நம்பினாலும் நம்மபாவிட்டாலும் எனக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை..

    இந்த கடிதம் பர்சனல் இதை பிரசுரிக்கவேண்டாம் என்று சொல்லி வரும் கடிதங்களும் இருக்கின்றன....

    எனக்கும் வேலை இருக்கின்றது.. இந்த விளக்கம் போதும் என்று நினைக்கின்றேன்..

    குறை உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை...உங்கள் கேள்வி பல பதில் சொல்ல எனக்கு உதவியது மிக்க நன்றி...

    அதே போல் உங்கள் கேள்வியை சீரியசாகவும் எடுத்துக்கொள்ளலாம்.. ஜாலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்....

    நானே என்னை பற்றி வரும் வெத்து விமர்சனங்களுக்கு அலட்டிக்கொள்வது இல்லை...
    ஏன்னா இதுக்கு பதில் சொல்ல இவ்வளவு நேரம் டைப் அடித்த நேரத்துக்கு ஒரு நல்ல படம் பற்றி எழுதிவிடலாம் எனபதால்...

    நன்றி
    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்..

    ReplyDelete
  21. சரிங்கன்ணே .... இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  22. சமாதானம்...சமாதானம்...கூல்...பொங்கல் வாழ்த்துகள் மக்கா!

    ReplyDelete
  23. அலெக்சா ரேங்க்குக்கு வாழ்த்துக்கள்...
    நன்றாக எழுதி இருக்கீங்க சார்!
    ? வயிறு வலிக்க சிரித்தேன்!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner