போங்கடா நீங்களும் உங்க சாலை பாதுகாப்பு வாரமும்....
ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்...
வருடா வருடம் ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்...கவர்மென்ட் அதுக்கு எதாவது செஞ்சாகனும்.. ஏன்னா கவர்மென்ட் இல்லையா??
நேற்று சாலைபாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையில் மெரினாவில் பலூன் பறக்க விடப்பட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகிவிட்டது...அது இன்றைய பேப்பரிலும் வந்து இருக்கின்றது...
அதை விட கொடுமை சாலை பாதுகாப்பு வாரம் என்றால் ஹெல்மட் போட்டு இருசக்கர வாகனங்கள் ஓட்டுங்கள் என்று சொல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றார்கள்..ஹெல்மட் போட்டு ஒரு பத்து பேரை இரு சக்கர வாகனத்தில் அமர்த்தி கொடி அசைத்து , தினசரி பத்திரிக்கை போட்டோகிராபருக்கு பல் காட்டி விட்டு, மறுநாள் வந்த போட்டோவை மனைவி, பிள்ளையிடம் காட்டி மகிழ்வதோடு சாலைபாதுகாப்பு வாரம் , அமைச்சர்கள் அதிகாரிகளை பொறுத்தவரை முடிந்து விடுகின்றது...
ஆனால் நேற்று மட்டும் 25 பேர் தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலைவிபத்தகளில் உயிர் இழந்து இருக்கின்றார்கள்... இவர்கள் எல்லாம் நடந்து சென்றவர்கள், பேருந்து மற்றும் காரில் பயணித்தவர்கள்.. அவர்கள் ஹெல்மட் போடாமல் பயணித்தவர்கள்..
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியமும் முக்கியகாரணம்தான்.... அதை மறுக்க முடியாது.. பட் நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கியகாரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும், சாலை விதிமுறைகளை மதிக்காததும்தான்...
காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.... நேற்று நடந்த பல விபத்துக்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன.
ஆனால் ரோட்டில் வாகனம் நிறுத்தும் லாரிகள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை...
ஒருவேளை லாரி லோடுபுல்லா இருக்கும் போது டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது... உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாதுதான்.. ஆனால் லாரி பழுதாகி நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண ரிப்ளெக்டர் வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னால் இப்படிபட்ட அறிவிப்பை நான் எங்கேயும் பார்த்தது இல்லை...
லாரிகள் சரக்குகள் எடுத்து சென்று நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுக்க இரவு பகல் பாராது பணியாற்றுகின்றன.. அதை மறுக்க முடியாது... ஆனால் சாலையில் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு ரோட்டில் ஒதுங்கும் நிறைய வண்டிகளை நான் காட்டுவேன்...பல அனுபவம் வாய்ந்த லாரி டிரைவர்கள்... நன்றாக ரோட்டு ஒரத்தில் லாரியை நிறுத்திவிட்டு செல்வதை நான் பார்த்து இருக்கின்றேன்.. அதே போல கார்களும்தான்... ஆனால் ஒருசில டிரைவர்களின் அலட்சியம் பலரது கனவுகளை சிதைக்கின்றது..
யாராவது புதிதாக கார் வாங்கி அவர்கள் கார் பழுதாகி நின்றால் அதை அறிவிக்க முக்கோண ரிப்ளெக்டர்களை தமிழகத்தில் பயண்படுத்தி வருகின்றார்கள்.. ஆனால் எந்த லாரியோ, பேருந்தோ பழுதாகி நின்றால் வேப்பமரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி செடிகள் மட்டுமே வாகனம் பழுதாகி நிற்க்கின்றன என்றுஅறிவிக்க வைக்க காரணம் என்ன??
அந்த முக்கோண ரிப்ளெக்டர் ஒரு கோடி ரூபாய் இருக்குமா? சரி தனியார் லாரிகளை விடுங்கள்.. அரசு பேருந்துகள்.. பழுதாகி நின்றால் அறிவிக்க இந்த முக்கோண ரிப்ளெக்ட்ர் இருக்கின்றதா? என்றால் இல்லை....
போன வருடம் ஈசிஆரில் போன அரசு பேருந்து டீசல் இல்லாமல் நடு ரோட்டில் நின்று போக, டிசல் வாங்கி வர டிரைவர் போனார்.. இருட்டில் நின்ற வண்டி மீது பின்னால் வந்த வாகனம் மோதி பழுதாகி நின்ற பேருந்துக்கு முன் நின்ற பல பயணிகள் மரித்து போனார்கள்....
100கீலோ மீட்டா வேகத்தில் தங்க நாற்கர சாலையில் வேகமாக வரும் வாகனம் இருட்டில் பழுதாகி நின்ற லாரி பற்றி அறிவிக்க நெய்வேலி காட்டாமணி செடியும், வேப்பமரத்து கிளையும் போதுமானாதா? இதை பற்றி எதாவது ஒரு அதிகாரி வாய் திறந்து இருப்பாங்களா?? அல்லது அரசுதான் இதுவரை நடவடிக்கை எடுத்து இருக்கின்றதா???
போலிஸ் பேட்ரோல் கார்கள் லஞ்சம் வாங்க விரட்டுவதில்தான் குறியாக இருக்கின்றன... நேற்று கூட திருவண்ணாமலை அருகே ஒரு லாரியை போலிஸ் சட்டென மடக்க லாரி சடன் பிரேக் பிடித்து ஒரம் கட்ட பின்னால் வந்த மாருதி கார் மோதி 4 பேர் பலியாகினர்... கொடுமை பாருங்கள்...ஒரு வாகனத்தை எப்படி ரோட்டில் ஓரம் கட் நிறுத்துவது என்று கூட தெரியவில்லை.... ஜாக்கிசான் நடித்த போலிஸ் ஸ்டோரி படத்தை பாருங்கள்...ஒரு வாகனத்தை எப்படி ஒரம் கட்டுவது என்று அதில் காட்டி இருப்பார்கள்.... ஒரு போலிஸ் மாமுல் வாங்க வாகனத்தை துரத்தி சட்டென கோபத்தில் நிறுத்த, நாலு பேர் பலி.... இந்த கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடக்காது....
அதே போல கிருஸ்மஸ் விடுமுறை கொண்டாட டெம்போ டிராவலர் வாகனத்தில் பயணித்த குடும்பம் டிரைவரை ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து ஓட்ட வைத்தது........... டிரைவர் அசதியில் கண் அயர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கின்றது... அடுத்த ஒரு பார்ட்டிக்கு வாகனம் கொடுக்க வேண்டும் என்ற முதலாளியின் வற்புறுத்தலும் காரணமாக தொடர்ந்து வாகனம் ஓட்டி அந்த ஓட்டுனர் உயிர் இழந்து இருக்கின்றார்... கூடவே சுற்றுலா சென்றவர்களும் மறித்து போய் இருக்கின்றார்கள்..
ஒரு மாதத்துக்கு முன் மதுராந்தகத்துக்கு அருகே நடந்த சாலைவிபத்தை சரி செய்ய சென்ற போலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 3 காவல்துறையினருக்கு மேல் பலியாகி போனார்கள்..
ஆம்பூர் அருகே பெங்களுர் நெடுஞ்சாலையில் எப்போதும் விபத்து நடந்துக்கொண்டேதான் இருக்கின்றது...
எங்கள் ஊர் கடலூரில் ரோட்டில் போன ஒரு பெரியவ் சட்டென திரும்ப அவர் மீது மோதாமல் வாகனத்தை திருப்ப, வாகனம் கவிழ்ந்து பள்ளி பிள்ளைகள் ஏற்றி சென்ற வேன் மீது கவிழ்ந்த வேன் மோதி....4 பெண்பிள்ளைகள் ஸ்தலத்துலேயே மரணம் அடைந்தார்கள்..
திண்டுக்கல்லில் மட்டும் கடந்த நான்கு வருடங்களில் இரவு நேர விபத்துகளில் 1930 பேர் இறந்து இருக்கின்றார்கள்.. வருடத்துக்கு சராசரியாக 450பேர் மரணத்தை தழுவுகின்றார்கள்... அதாவது ஒரு மாவட்டத்தில் மட்டும் இந்த கணக்கு .....இன்னும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கணக்கு எடுத்தால் தலை சுற்றும் காரணம்.. நிறைய உயிர் இழப்புகள்...ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தது என்றால் எதுவும் இல்லை...
நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் குறிப்பிட்ட வேகத்தை மீறும் வாகனத்துக்கு ஸ்பாட் பைன் போடுங்கள்...அல்லது கேமரா வைத்து ஆதாரத்துடன் சொல்லுங்கள்.. இதை விட குளிர் தேசத்தில் எல்லாம் சரக்கு அடித்து விட்டு வாகனம் ஓட்டுகின்றார்கள்.. ஆல்கஹால் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் தண்டியுங்கள்...
எந்திரனுக்கு அத்தனை விளம்பரம், செம்மொழிமாநாட்டுக்கு அத்தனை விளம்பரம் ஆனால் வாழும் சமுகத்தில் புரையோடி போய் இருக்கும் எந்த பிரச்சனைக்காவது எந்த தொலைகாட்சியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கின்றதா???
மக்கள் தொலைக்காட்சி மட்டும் வரதட்சனை வாங்குவது கேவலம் என்பது குறித்து விழிப்புனர்வு விளம்பரங்களை வெளியிட்டது... ஆனால் எந்த தனியார் தொலைக்காட்சியாவது மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு விழிப்புனர்வு அளித்தது இல்லை...
எப்படி சாலையை கடக்க வேண்டும்..? சிக்னலில் எப்படி நிற்க்க வேண்டும்? என்று முதலில் இருந்து மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் விழிப்புனர்வு எற்படுத்துவது நமது கடமை அல்லவா... மிக முக்கியமாக வெகுஜன ஊடகங்கள் இதனை திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தினமும் விளம்பரத்தின் மூலம் பல கோடிகளை கல்லாகட்டுகின்றீர்கள்.. உங்கள் உழைப்பு அதனால் விளையும் நன்மை உண்மைதான்.. உங்கள் இஷ்ட்டம்தான்... ஆனால்ஒரு நாளில் ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக ,பத்து நிமிடங்கள் நாம் வாழும் சமுக அமைப்புக்கு பயண்பெறும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதால் உங்கள் பேங்க் பேலன்சுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது ப்ளிஸ்....
பொது சேவை விளம்பரங்கள் எடுக்க எங்களால் முடியாது என்கின்றீர்களா?? நல்ல பொதுத்துறை விளம்பரங்கள் இயக்கி கொடுத்தால் அது நிச்சயம் நன்றாக இருந்தால் தினமும் ஒளிபரப்புவோம்...விளம்பரங்கள் ஒரு நிமிடத்தில் இருக்க வேண்டும் என்று உங்கள் தொலைகாட்சியில் விளம்பரப்படுத்தி பாருங்கள்.. எத்தனை குறும்பட இயக்குனர்கள் களத்தில் குதிக்கின்றார்கள் என்று???
எப்படி தொடர்ந்து விளம்பரம் மூலம் நீங்கள் தயாரித்த மொக்கைபடங்களை க தினமும் விளம்பரபடுத்தி மெஸ்மெரிசம் செய்து தியேட்டருக்கு மக்களை பார்க்க அழைப்பது பொல.. தொடர்ந்து விபத்து விழிப்புனர்வு விளக்கபடங்கள் ஒளிபரப்புங்கள்...
அரசும் சாலை பாதுகாப்பு வாரத்துக்கு மெரினாவில் பலூன் பறக்கவிடுவதற்கு செலவழிக்கு தொகைக்கு தனியார் தொலைகாட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புனர்வு விளம்பரம் கொடுங்கள்...
வெகுநாட்களுக்கு முன் டிடியில் ரயில்வே லெவல் கிராசிங் விபத்துகளுக்கு கார்ட்டூன் மூலம் ஒளிபரப்பிய விளம்பரம் மக்களிடம் நல்ல ரீச்...
நிறைய பேட்ரோல் வாகனத்தை அதிகபடுத்துங்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனத்தை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்...பழுதாகி நிற்கும் வாகனம் என்றால் 20மீட்டருக்கு முன் அறிவிப்பு செய்யும் முக்கோண ரிப்ளெக்டரை ரோட்டில் வைக்க சொல்லுங்கள்....ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டவைக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுங்கள்....
எத்தனை குடும்பத்தில் சாலையை எப்படி கடக்க வேண்டும்.. வாகன்த்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றார்கள்.. பள்ளியில் இதை பற்றி சொல்லிக்கொடுக்கின்றார்களா? அதுவும் இல்லை... எல்லாத்திலேயும் ஒரு அலட்சியம்.... அப்புறம் இது போல விபத்துகள் ஏன் நடக்காது..???
இது போலான விஷயங்கள் எல்லாம் செய்து விட்டு ஹெல்மெட் போட்டு வாகனம் ஒட்டுங்கள என்று சொல்லுங்கள்.. அதை விடுத்து விட்டு சாலைபாதுகாப்பு வாரம் என்றாலேஹெல்மெட் போடுங்கள் என்று சொன்னால் கடுப்பு வருகின்றது... ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்களுக்கு ஹெல்மெட் மட்டுமே தீர்வு அல்ல...என்பதே என் கருத்து...
விபத்தில் இறந்தவர்களை விட டிவியில் பத்து பேர் படுகாயம் அடைந்தவர்கள் என்று செய்தி வரும் போது அந்த பத்து பேருக்கு கை கால் போய் அவர்கள் எதிர்காலம் பாதிக்கபட்டு இருக்கும்.. இது போல தமிழகத்தில் விபத்தின் மூலம் எதிர்காலத்தை இழந்தவர்கள் ஏராளம்.... பத்தரிக்கைகளும் தொடர்ந்து சாலை விழிப்புனர்வு குறித்து தொடர்ந்து எழுதுங்கள்...
தொடர்ந்து சாலை விபத்துகள் பற்றி எழுதி வருகின்றேன்... பார்ப்போம் இந்த ஆண்டாவது நல்ல தீர்வு ஏற்படுமா? என்று....???
அமைச்சர்களே, அதிகாரிகளே அளும் அரசாங்கமே, நீங்களும் நாங்கள் போகும் சாலையில்தான் பயணிக்கக வேண்டும்...உங்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்புக்கு அரசு வாகனம் வரும், உங்கள் பிள்ளைகள் மற்றும் சொந்தத்துக்கு வராது... அவர்களும் சாலையில் பயணிக்க வேண்டும்.. இன்னும் ஒன்றை குறித்துக்கொள்ளுங்கள்...பதவி போனால் நீங்களும் பந்தோபஸ்த்து கார் இல்லாமல் மக்களோடு மக்களாக பயணித்தே ஆக வேண்டும் என்பதால் தொலைதூர நெடுஞ்சாலையில் தீவிர விபத்து கண்காணிப்பு அவசரம் மற்றும் அவசியமாகின்றது... என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
ஹலோ,...
ஜாக்கியா??
ஆமாம்.. சொல்லுங்க....
நான் அரசியல்வாதி பேசறேன்....
உங்க பிளாக் படிச்சேன்..
சரிங்க...
ஏதோ எங்க புள்ளைங்க ரோட்டுல போவனும்னு சொல்லி இருக்கே... இடியட்.. எங்க புள்ளைங்க எதுக்குடா? ரோட்டுல போவனும்...???
எல்லாரும் பிளைட்லதாண்டா போய் வராங்க.....
வாஸ்தவம்தான் அரசியல்வாதிகளே...
நன்றி...
யுடியூப்பில் தேடும் போது தினமலர் பத்திரிக்கை சாலை பாதுகாப்பு குறித்த விளக்கபடங்கள் காண கிடைத்தது.... நன்றி தினமலர்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
first :-)
ReplyDeleteஇதுல இன்னும் கொடுமை சேலம் மாவட்டம் ஒட்டிய பகுதில ரெண்டு நாள் நடந்த விபத்தில் பலி மட்டும் 11 பேரு.
ReplyDeleteuseful article..
ReplyDeleteplease write like this apart from world films...
இதைபோல பதிவுகளை தான் நான் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteகுறைகளை மட்டும் கூறாமால் உங்களால் முடிந்த தீர்வுகளையும் எங்களை போன்ற இளம் வயதினருக்கு தேவை
நன்றி
அவங்க புள்ளைங்க எல்லாம், பாரின்லே படிப்பாங்க... அப்புறம் தமிழகத்தையும் தமிழையும் காப்பாற்ற தேர்தல்லே குதிப்பாங்க...
ReplyDeleteI like your thoughts. You are correct.
ReplyDeleteஉங்க கோபம் புரிகிறது... இது தான் நம்ம ஊரின் நிலைமை... என்னத்த சொல்ல...
ReplyDeleteஜாக்கி மச்சி, ஒரு விஷயத்த நல்ல புரிஞ்சிக்கோ! அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ,அதிகாரிகளுக்கோ, காவல் துறையினருக்கோ பொது மக்கள் மீது எந்த வித அக்கறையோ, ஈடுபாடோ கிடையாது. "இவன் இல்லை என்றால் அவன்" என்ற கதியில் இயங்கும் ஒரு அரசிடமிருந்து இது போன்ற சமூக அக்கறை உள்ள செயல் பாடுகளை எதிர்பார்க்க முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஏனெனனில் சாலை விபத்துக்களில் செத்துப்போவது அவர்களோ அவர்களின் குடும்பங்களோ அல்ல. பொதுமக்கள்தான்.
ReplyDelete// தமிழக சாலைவிபத்துக்களில் இதுவரை மூன்று அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பலி, சாலை விபத்துகளில் அரசு உயர் அதிகாரிகள் பத்து பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளில் இதுவரை முப்பது காவல் துறையினர் பலி // என்று கொட்டை கொட்டையாக செய்திகள் வரட்டும் அப்புறம் பார். தனி வாரியமே அமைப்பார்கள் நம்ம ஊரில்.
டி. வி கம்பெனிகளுக்கும் இது முற்றிலும் பொருந்தும்.. அவர்களுக்கு என்ன வந்தது சாலை விபத்துகள் பற்றி கவலைப்பட. நம்ம ஜனகளுக்கு நல்ல அறிவு வந்தால் ஒழிய இவைகள் எதுவும் மாறாது மச்சி. நமக்கு எதுக்கு வீண் டென்ஷன்? உன் பதிவ சம்பந்த பட்டவர்கள் படிச்சாலும் கூட உரைக்கபோவதில்லை.
அட இதுக்கெல்லாம் ஒரு சரியான தீர்வு இருக்கு :-) .. அரசியல்வாதிங்களுக்கு, காரைப் பறிமுதல் பண்ணிட்டு ஆளுக்கு ஒரு ஹெல்மெட்டில்லாத பைக்கு குடுங்கப்பு :-)
ReplyDeleteவிபத்துகள் குறித்து உங்க கருத்தை நானும் வழிமொழிகிறேன். அரசாங்கம் இதுக்குத் தீர்வு கொடுக்காது.. அதுக்கு நிறைய வேலை இருக்கு.. சினிமா நிகழ்ச்சிகள்ல கலந்துக்குறது, ஸ்பெக்ட்ரம் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, விழிப்புணர்ச்சி முகாம் போடுறது (ரொம்ப முக்கியம்), புதுப்புதுப் படங்களுக்கு வசனம் எழுதுறது இத்யாதி இத்யாதி... அரசாங்கத்தை அதோட வேலையை செய்ய விடுங்கய்யா :-)
அப்புறம், உங்க தலைப்பு, அருமையான ஒரு டப்பிங் படம் மாதிரியே இருக்கே :-) .. காப்பிரைட் போட்ருங்க.. இல்லேன்னா பறிபோயிரும் :-)
அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லிப் பிரயோசனமில்லை. தலைக்கவசம் கட்டாயமாக்கப்போட்டு சண்டைபோட்டு கட்டாயமில்லை என வைத்தது மக்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது ஆபத்து என்பது common sense.இதையெல்லாம் மூன்றாம் ஆட்கள் வந்து சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது இல்லையா?
ReplyDeleteபெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் விபத்தை சந்திப்பதற்கு மோசமான சாலைகளே காரணம். சாலையில் இருக்கும் குண்டு, குழிகளை தவிர்க்கும்போது அருகே அல்லது பின்புறம் வரும் வாகனங்களை கவனிக்கத் தவறி ஏராளமான விபத்துகள் நடக்கின்றன.
ReplyDeleteஅதேபோல செல்போனும் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட்டுக்குள்ளேயே செல்போனை வைத்துக்கொண்டு பேசுகின்றனர். காரில் செல்பவர்களோ ஸ்பீக்கர் மூலம் பேசுகின்றனர். இவையும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
விபத்தை குறைப்பதில் அரசுக்கும் தீவிரமில்லை. மக்களுக்கும் அக்கறையில்லை.
நேற்றுதான் ஒரு நெடுந்தூர பயணம் முடித்து சென்னை திரும்பினேன், நான் மனதில் எழுத நினைத்தது அனைத்தையும் நீங்க அப்படியே எழுதி இருக்கீங்க. டிவியில் செய்தி பார்க்கும்போது நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது என்று சொல்கிறார்கள் ஆனா வாகனத்தை ரோட்டில் நிறுத்தியதற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ReplyDeleteநாம புலம்பி என்ன பயன் என்றில்லாமல் கண்டிப்பா நாம் குரல் கொடுப்போம் என்றாவது நல்லது நடக்கும்
Good Message. Keep it Up. Keep on Striking the People & Government about this.
ReplyDeleteThanks.
cell phone pesikittu varra figure'ru super'ra iruku
ReplyDeleteஜாக்கி - நம் சாலைகளில் நடப்பவர்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுப்பதில்லை இந்த இரு சக்கர வாகன ஓட்டுனர்கள். இன்று காலை நந்தனம் சிக்னலில் டெம்பிள் டவர் அருகே ஒரு பாத சாரி கடக்கும் சீபிரா கிராசிங்கிள் ஒரு போக்குவரத்து அதிகாரி கையை காட்டி என்னை இரண்டாவது லேனில் நிறுத்தினார் ... சும்மா டக்ராக முதல் லேனில் ஒரு புது மஞ்சள் காரம் அதை மதிக்காமல் நேராக போனது, நல்ல வேளை மக்கள் யாரும் அடிபடவில்லை. அந்த போக்குவரத்து அதிகாரி காரை பார்த்து திட்டிக்கொண்டிருந்தது பாவமாக இருந்தது.கேமிரா மட்டும் இருந்தால் அந்த ஆளை அப்படியே சிறைச்சாலைக்கு அனுப்பியிருக்கலாம்.பல இடங்களில் என்னை மாதிரி ஆட்கள் சாலை விதி முறையை மதிக்க நினைத்தாலும் கட்சிக்கொடி ஏற்றிய குவாலிஸ் மற்றும் அரசாங்க வாகனங்களும் மிகப்பெரிய சோதனையாக இருக்கின்றன.என்னுடைய கணிப்பின் படி ஆட்டோகளை நெறிப்படுத்தினாலேயே பல விபத்துக்கள் சென்னை சாலையில் நிகழாமல் இருக்கும்.
ReplyDeleteதுணை முதல் வலைப்பக்கத்தில் கூட பலரும் இப்பிரச்சனையை தொட்டே எழுதியுள்ளார்கள்.
எந்த தார்மீக ஒழுங்கையும் கடைப்பிடிக்காத மக்கள், காலையும் மாலையும் சினிமாக்காரனின் நிகழ்வில் பங்கேற்கும் ஒரு முதல்வர் ஊழல்பணம் தின்று தடித்துப்போன நிர்வாகம், இப்படித்தான் சாலை விபத்தில் அகால மரணம் அடையும். நமது உயிரெல்லாம் தற்காலிகமாக இருக்கிறது.. என் எண்ணம்.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteநல்ல பதிவு...
ReplyDeleteஇந்த பதிவில் உள்ள வழிமுறைகள் 50% அமல்படுத்தினாலே முக்கால்வாசி விபத்துகள் குறையும்...
அவங்க புள்ளைங்க எல்லாம், பாரின்லே படிப்பாங்க... அப்புறம் தமிழகத்தையும் தமிழையும் காப்பாற்ற தேர்தல்லே குதிப்பாங்க...
ReplyDeleteகக்கு நீ சொல்றது உண்மைதான்... ஆனா நமக்கு ஒரு தார்மீக கோபம் இருக்கு.. அதுக்கு இது போல எழுதினா குறையுது அதான்...
ReplyDeleteஅட இதுக்கெல்லாம் ஒரு சரியான தீர்வு இருக்கு :-) .. அரசியல்வாதிங்களுக்கு, காரைப் பறிமுதல் பண்ணிட்டு ஆளுக்கு ஒரு ஹெல்மெட்டில்லாத பைக்கு குடுங்கப்பு :-) //
ReplyDeleteஉண்மைதான் இப்படி செய்ய சொன்னா ஒரு வேளை தீர்வு கிடைக்கும் போல கருந்தேள்...
அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லிப் பிரயோசனமில்லை. தலைக்கவசம் கட்டாயமாக்கப்போட்டு சண்டைபோட்டு கட்டாயமில்லை என வைத்தது மக்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். //
ReplyDeleteஉண்மைதான் நீங்க சொல்வது கிருத்திகன்.. ஆனால் இந்த கட்டுரை நெடுஞ்சாலை விபத்துக்களை பற்றியது...
வக்கில் சுந்தரராஜன் சொல்வது போல முதலில் ஒழுங்கா ரோடு போடட்டும் ரோட்டுக்கு நடுவே பள்ளி இருக்கும் பள்ளங்கள் இருக்கும் ஒரே நாடும் அதுக்கு நமுவே மரக்கிளை நடுவதும் நாம்தான்..
இதெல்லாம் செஞ்சிட்டு பொதுமக்கள் கிட்ட வரட்டும் வரட்டும்... என்பதே என் வாதம்...
பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் விபத்தை சந்திப்பதற்கு மோசமான சாலைகளே காரணம். சாலையில் இருக்கும் குண்டு, குழிகளை தவிர்க்கும்போது அருகே அல்லது பின்புறம் வரும் வாகனங்களை கவனிக்கத் தவறி ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. //
ReplyDeleteஉண்மைதான்.. நீங்கள் சொல்வது...ஹெல்மேட் போட்டு தரையில் விழுந்து தலையில் வண்டி ஏறினால் என்ன செய்வது... ரோட்டை ஒழுங்கா போடவேண்டும்.....அம்புட்டுதான்...
டிவியில் செய்தி பார்க்கும்போது நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது என்று சொல்கிறார்கள் ஆனா வாகனத்தை ரோட்டில் நிறுத்தியதற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ReplyDeleteநாம புலம்பி என்ன பயன் என்றில்லாமல் கண்டிப்பா நாம் குரல் கொடுப்போம் என்றாவது நல்லது நடக்கும் //
தன்ஸ் அது போல இரண்டு லாரிமேலேயோ அல்லலது அது போல விபத்து ஏற்படுத்துவது போல நிறுத்திய கார் மேலோ வழக்கு போட்டாலே ஒரு பயம் வரும்...
ஜாக்கி : விவரமான பதிவு. சங்கு சத்தம் கேட்பவர்களுக்கு கேட்டால் நல்லா இருக்கும்..
ReplyDeleteஎன்னுடைய கணிப்பின் படி ஆட்டோகளை நெறிப்படுத்தினாலேயே பல விபத்துக்கள் சென்னை சாலையில் நிகழாமல் இருக்கும்.
ReplyDeleteதுணை முதல் வலைப்பக்கத்தில் கூட பலரும் இப்பிரச்சனையை தொட்டே எழுதியுள்ளார்கள்//
உண்மை குமார் நீங்கள் சொல்வதும் சரிதான்..
ஆம் நண்பரே, உமது இப்பதிவு மிக நல்ல அறிவுரை. எனக்கு நேர்ந்த அனுபவம், என் மனைவிக்கு இருசக்கரவாகன லைசென்ஸ் வாங்க பொய் இருந்தேன், திருநெல்வேலி ஆர்டி ஒ வில் விண்ணப்பம் எழுதி கொண்டு போய் கொடுத்தவுடன் அந்த அதிகாரி வேறு ஒரு ஆளிடம் போய் ஸ்டாம்ப் அடித்து வரும்படி கூறினார். நானும் என் மனைவியும் போனோம். அங்கு அவர் ஐம்பது ரூபாய் வேணும் என்று சொல்லி ஒரு மிலிட்டரி படம் போட்ட ஸ்டிக்கர் கொடுத்தார். நான் இது எதுக்கு என்று கேட்டேன், அதற்க்கு அவர் சொன்னார், இது கலெக்டர் கொடுக்கசொல்லி கொடுத்தார். ராணுவத்துக்கு உதவி செய்யணும்னு சொன்னார். அப்போ நான் கேட்டேன் நான் இங்க லைசென்ஸ் வாங்க வந்து இருக்கேன், எனக்கு வாகனம் ஓட்டுவதற்குரிய விபரங்கள் ஏதும் அச்சடித்து கொடுக்க முடியும்னா கொடுங்கள் என்றேன். அவர் அது இல்லை இப்போதைக்கு இதுதான் இருக்கு நீங்க அந்த அதிகாரியை போய் பார்த்துக்கோங்க அப்படிங்கிறார். நானும் அவரிடம் போய் சொன்னேன், அவர் அதுக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்துட்டு போகவேண்டியது தானேன்னு சொல்றார். பாருங்கள் எவ்வளவு கேட்டு போய் கிடக்குது நாடு...நான் இன்னும் என் மனைவிக்கு லைசென்ஸ் எடுக்கலை. இந்த முறை ஊருக்கு போய் எடுக்கணும். அனால் நான் இப்பவும் காசு கொடுக்க போவதில்லை.
ReplyDeleteநல்ல பதிவு சார்.
ReplyDeleteஇந்த பிழையை திருத்தவும்.
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு பொது(ம்)க்களின் அலட்சியமும் முக்கியகாரணம்தான்...
நண்பன் முத்து 3 முறை விபத்தில் சிக்கி இருக்கான் இந்த கேவளமான சாலையால்...
ReplyDeleteநன்றி தினமலர்...
நல்ல பதிவு. நான் கூற விரும்பும் காரணங்கள் இரண்டு.
ReplyDelete1. டாக்சி எடுப்பவர்களின் கஞ்சத்தனம். டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது என்பதற்காக டிரைவருக்கு ரெஸ்ட் கொடுக்காமல் வாகனம் ஓட்டச்சொல்வது. டிரைவர் சோர்ந்து போகும்போது அவர் கவனம் சிதைந்து விபத்து நேரிடுகிறது.
2. தேவையில்லாமல் இரவில் பயணம் செய்வது. தூக்கத்தைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. அப்படி தூக்கம் வரும்போது எந்த டிரைவரும் தூக்கம் வருகிறது, நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வதில்லை.
.........
ReplyDelete........
..........
.........!? super pathivu!
ஒரு போலிஸ் மாமுல் வாங்க வாகனத்தை துரத்தி சட்டென கோபத்தில் நிறுத்த, நாலு பேர் பலி.... இந்த கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடக்காது....
ReplyDeleteதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
அருமையான பதிவு
எந்திரனுக்கு அத்தனை விளம்பரம், செம்மொழிமாநாட்டுக்கு அத்தனை விளம்பரம் ஆனால் வாழும் சமுகத்தில் புரையோடி போய் இருக்கும் எந்த பிரச்சனைக்காவது எந்த தொலைகாட்சியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கின்றதா???
ReplyDeleteநச்...
அரசியல் வாதிகளை விடவும் கேவலமான பல அரசு அதிகாரிகள் தான் அணைத்து பிரச்சனைக்கும் காரணம்... பொது மக்களை பார்த்து இவர்கள் பயப்படும் காலம் வந்தால் தான் இதற்கெல்லாம் ஒரு திர்வு கிடைக்கும்
கக்கு சொய்லுறது தான் கரெக்ட் நாம தமிழ் நாட்ட கதி அவ்ளோதான் , இந்தியன் நு சொய்ல வருத்த படனும். அப்படி தான் இப்போ இந்தியா ஊட நெலமை இருக்கு
ReplyDeleteகால் டாக்ஸி டிரைவர்களை ஓனர் மைக்கில் திட்டுவது
ReplyDeleteமிகவும் அநாகரிகமாக இருக்கும். அதுவும் பயணிகள்
இருப்பதைப் பொருட்படுத்தாமல்.
டிரைவர் டிராபிக் க்டுமையாக இருப்பதை அறிவித்தால்-மோசமாக சாடுவதைப் பார்த்தால்
பரிதாபமாக இருக்கும்