சென்னை 34வது புத்தகக்கண்காட்சி...எனது பார்வையில்...(07/01/2011)
சென்னையில் டிசம்பர் சீசன் என்றால் நினைவுக்கு வருவது சங்கீதசீசன்தான்.. மேட்டுக்குடி மக்கள் ஆலாபனை,சுவரம் என்று அவர்களுக்கு புரியும் பாஷையில் சிலாகித்துக்கொள்வார்கள். நமக்கு அடியும் தெரியாது நுனியும் தெரியாது.... ஆனால் கடந்த எட்டு வருடங்களாக சர்வதேச திரைப்படவிழா சென்னையில் நடப்பதால் நமக்கும் டிசம்பருக்கும் ஏதோசம்பந்தம் இருக்கின்றது....அப்படியே அதை கடந்து ஜனவரிக்கு வந்தால் புத்தக திருவிழா... சோ  சென்னையை பொறுத்தவரை டிசம்பர்,ஜனவரி என இரண்டு மாதமும் சங்கீதம், திரைப்படம்,புத்தகம் என்று தொடர்ச்சியாக சென்னையில் திருவிழா நடக்கும்.. கர்நாடக சங்கீதத்தில் நான் ஞானம் இல்லாத காரணத்தால்... திரைப்படம் மற்றும் புத்தக கண்காட்சியில் ஆர்வத்தோடு நான் கலந்துக்கொள்வேன்..

இந்த முறை புத்தக கண்காட்சியில் கூட்டம்குறைவுதான்..ஒருவேளை  சனிக்கிழமை ஞாயிறு கூட்டம் அதிகம் வரும் என்று நினைக்கின்றேன். பார்க்கிங்கில் ரூபாய் 10யை பறித்துக்கொண்டார்கள்...

எப்போதும் போல உயிர்மை பதிப்பகத்தில் சாரு மற்றும் மஷ்யபுத்திரனை சுற்றி ஒரு வட்டம் இருந்தது....

நான் இந்த முறை முதலில் புத்தகம் வாங்காமல் ஸ்டாலை முதலில் சுற்றிப்பார்த்தேன்.  போகும் போதே அப்துல்லாவை  பார்த்தேன்... இரண்டாவதாக அக்னிபார்வையை பார்த்தேன்... அடுத்து குகனை பார்த்தேன்.. எல்லோரையும் பிறகு சந்திப்பதாக சொல்லிவிட்டு ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்தேன்.. விகடன் ஸ்டாலுக்கு வந்தேன்.. இப்போது டாக்டர் ஷாலினி இப்போது எழுதி வரும் தொடர் புத்தகமாக வந்து இருக்கும் என்று ஆர்வமாக போனால்... அந்த புத்தகம்  இன்னும் வரவில்லை என்று கை விரித்து விட்டார்கள்..


ஸ்டால்களில் ஜிகு ஜிகு வேலைகள்  செய்து வைத்து இருக்கும் ஒரே பதிப்பகம் நக்கீரன் பதிப்பகம்தான்...

எனக்கு தெரிந்து உயிர்மை மற்றும் கிழக்கு பதிப்பகத்தில் செமை கூட்டம்...கிழக்கில் நிறைய கூட்டம்...

போனமுறை போலவே இந்த முறையும் பாரதி புதிப்பகம் போய்  பழைய பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுஜாதா புத்தகங்கள் வாங்கினேன்.. எல்லாம் சேர்த்து 125ரூபாய்  வந்தது.. பில் போடும் இடத்தில் பழைய புத்தகம் என்பதால் இதற்கு கழிவு போட முடியாது என்று வருத்தம் தெரிவித்தார்கள்.. ஒரு நாவல் ரூபாய் 25ரூபாய்க்கு கிடைப்பதே பெரிய விஷயம்.. அதனால்அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி இந்த இடம் விட்டு நகர்ந்தேன்....


அப்துல்லா ஏற்க்கனவே சொன்னது போல ஏழு மணிக்கு கிழக்கு பதிப்பகம் பக்கத்தில் இருக்கும் வெற்று இடத்துக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டு போனார்...
( பா.ராவும் நாஞ்சிலும்...)


திரும்ப கிழக்கு பதிப்பகம் வர எழுத்தாளர் பாராவுக்கு ஒரு சலாம் வைத்தேன்... வாங்க ஜாக்கி என்று  வாஞ்சையோடு அழைத்தார்... பிரபலபதிவர்ன்னு சொல்லிக்க ஜாக்கிக்கு மட்டும் உரிமை உண்டுன்னு சொல்லி செமையா நக்கல் விட்டார்...பக்கத்தில் நர்சிம்..பிதாமகன் அப்படின்னு எல்லாம் ஜாக்கியை பத்தி எழுதறாங்க... ஜாம்பவான் ஜாக்கி... சோ ஜா ஜா வந்த ரைமிங்க இருக்கும் என்று நர்சிம் போட்டுதாக்க..
வாங்க அப்படியே  பக்கத்தில் போய் பேசுவோம்.. என்றார்... நர்சிம்,குகன்,ப.ரா, அப்துல்லா என எல்லோரும் கிழக்குபதிப்பகம் பக்கத்தில் இருக்கும் இடத்தில் அமர்ந்தோம்.. நான் தம்பி அப்துல்லா பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன்.. பா.ரா உடனே ஜாக்கி என் எதிரில்  வந்து உட்காருங்க உன்ககிட்ட நிறைய பேசனும் என்றார்...

நேரில்  போய் உட்கார்ந்தேன் நிறைய பேசினேன்... எப்படிங்க டெய்லி எழுதறிங்க?? சொல்லுங்க.. உங்க ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள் என்றார்..
எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்த்து.... பா.ராவின் மாயவலை படித்து விட்டு எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகின்றது.. எவ்வளவு தகவல் திரட்டி இருக்கவேண்டும்..?? என்று வியந்த  ஒரு எழுத்தாளர் என்னை எதிரில் உட்காரவைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து நான் வாயில் ஈ போவது தெரியாமல்  அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்...

எனது தமிழ்கொலைகள் பற்றி வருத்தப்பட்டார்.. இதை சுட்டிக்காட்டவில்லை என்றால் என் தொழிலுக்கு நான்  செய்யும் துரோகம் என்றார்...அதற்கு சில தீர்வுகளை சொல்லிக்கொடுத்தார்... நல்லா எழுதறிங்க... உங்க புரோப்பஷனல் வேறதான்... இருந்தாலும் எழுத்து நல்லாவே வருதுன்னும் போது தமிழ் ஸ்பெல்லிங் கொஞ்சம் நீங்க பார்த்துக்கனும் என்றார்... 
சினிமா விமர்சனம் ரொம்ப நல்லா எழுதறிங்க...கதை எழுத முயற்சி செய்யுங்கள். ஈனால் கவிதை மேல் பா.ராவுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை... கவிதை அவருக்கு பிடிக்கவில்லை.

சாண்ட்வெஜ் பேட்டன் நல்லா இருக்கு இன்னும் இந்த பேட்டனை மாத்துங்க.. இல்லைன்னா போர் அடிச்சிடும். புத்தகங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார்...இன்னும் நிறைய பேசினோம்...

பேசிக்கொண்டே இருந்த போது கிழக்கு பதிப்பகம் பத்ரி வந்தார்... ஜமாவில் கலந்து கொள்ள உட்காருகின்றீர்களா? என்று கேட்ட போது தனக்கு வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டு ஜகா வாங்கி கொணடார்... இந்த முறை கிழக்கு ஸ்டால் பெரியதுதான்.. நிறைய கூட்டம் அதனால் பத்ரி அலைந்துக் கொண்டே இருந்தார்...
பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் அந்த வழியாக கடக்கும் போது பா.ரா பரபரப்பாய் எழுந்து அவரிடம் வணக்கம் சொன்னார்... அவர் சாகித்திய விருது பெற்ற  நாஞ்சில்நாடான் அவர்கள். அவர் கிளம்ப எத்தனித்த போது பாரா என்னை அழைத்து அவர் ஜாக்கிசேகர் தமிழ் பிளாக்ல பேமசா எழுதறவர்..  இவர் அக்னி, நர்சிம், அப்துல்லா,குகன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்...

(நான் ,எழுத்தாளர் பா.ரா, எழுத்தாளர் நாஞ்சில், பதிப்பாளர் குகன் )

நான் நாஞ்சில் நாடானின் முதல் சிறுகதை பெயர் தெரியவில்லை ஒரு பெரியவர் பசியோடு முதல் மகள் வீட்டுக்கு போய் விட்டு சின்ன மகள் வீட்டில் சாப்பிட போகும் போது  அக்கா வீட்டில் அப்பா சாப்பிட்டு விட்டதான நினைத்து அவளும் சோறு போடாமல் விட்டு விட அவர் பசியோடு தெருவில் நடந்து  போவதாக அந்த கதை முடியும் அந்த கதை பற்றி சொன்ன போது..  நாஞ்சில் நாடான் அது எனது முதல் கதை...ரொம்ப நன்றி அதை படித்து விட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்...

நன்றி பா.ரா பெரிய விஷயம்... அதுதான் நல்ல பண்பும் கூட...இரண்டு எழுத்தாளர் சந்திச்சிகிட்டோம்... இவன்க யார் என்று? எங்களை கிள்ளுக்கீரையாக அவர் நினைக்கவில்லை.. நன்றி பா.ரா...மேன் மக்கள் மேன் மக்களே....

 அதன் பிறகு லக்கி இலவச இணைப்பு அதிஷா இருவரும் வந்தனர்... அடுத்து சுரேகா வந்தார்... தான் எழுதிய புத்தகத்தை பா.ராவிடம் கொடுத்தார்...அடுத்து பதிவர் சங்கர் வந்தார்..

பா.ரா டாக்டர் புருனோவும் அதியமானும் இல்லாமல் புத்தக்கண்காட்சி சிறக்கவில்லை என்று வருத்தபட்டார்....
தம்பி அப்துல்லாஅண்ணே உங்களுக்கு புடிச்ச புத்தகம் வாங்குங்க.. நான்தான் அதுக்கு பே பண்ணுவேன்... காரணம் உங்களுக்கு நான் புத்தகம் பரிசு கொடுக்கனும் என்றார்..

புத்தக பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நீ தான்  உனக்கு பிடித்த புத்தகத்தை வழங்க வேண்டும் என்றேன். பாரதி பதிப்பகம் போய் விந்தன் எழுதிய எம்ஆர்ராதவின் சிறைச்சாலை அனுபவங்கள் மற்றும் தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி புத்தகத்தை உயிர்மையிலும் வாங்கி கொடுத்தார்.. இரண்டு  புத்தகங்களின் மதிப்பு 300ருபாய்..... நன்றி அப்துல்லா... இருப்பினும் எதற்க்கான பரிசு என்று அறிவதில் ஆர்வம் எனக்கு...
 (இணைந்த இமயங்கள்...)

ஆர்வத்தோடு கேட்டேன்..அண்ணே கடலூர்ல இருந்த சென்னைக்கு வந்து பத்தாவது மட்டும் கல்விதகுதியா வச்சிகிட்டு இந்தளவுக்கு வளர்ந்ததுக்கும், அதுமட்டும் இல்லாமல்  பிளாக்கில் பிரபலமாகி அலேக்சாவில் ஒரு லட்சத்துக்குள்ள இருக்கிங்களே... அதுக்கும்...இந்த பரிசு என்றார். நான் கையெழுத்து போட்டு தேதி போட்டு கொடுக்க அப்துல்லாவை கேட்டுக்கொண்டேன்.. அது போலாவே தம்பி செய்தார்.. இந்த பின்புலத்துல இருந்து வந்ததுக்கு பெரிய இன்னுக்கு சின்ன இன்னே போடலாம் என்றார்...மிகுந்த சந்தோஷமாய் இருந்தது.. மிக்க நன்றி அப்துல்லா எனது அன்புக்கும் உனது பரிசுக்கும்....

நானும் அப்துல்லாவும் புத்தகம் வாங்கும் போது எங்கேயோ பார்த்த பெண்ணின் முகமாக தெரிய நான் தயங்க.. அவரே நீங்க ஜாக்கிதானே என்று என் தயக்கத்தை போக்கினார்.. அவர் கவிதாயினி.. கவிதா முரளிதரன் அவர்கள்..


கிழக்குக்கு பதிப்பகம் வந்தேன்...மூன்று புத்தகங்கள் வாங்கினேன்...


ஓம் ஷின்ரிக்கியோ.. பா.ராகவன்
இலங்கை இறுதி யுத்தம்... நிதின் கோகலே..
ராஜராஜசோழன்.. ச.ந. கண்ணன்

ஒரு பெண்மணி ஜெயமோகன் புத்தகம் பண்டலாக வாங்கி பில் போட கொடுத்துக்கொண்ட இருக்கும் போது நான் வாங்கிய மூன்று புத்தகங்களை சட்டென மறைத்துக்கொண்டேன். அந்த பெண்மணி பில் போட்டு விட்டு சென்றதும் நான் பில் போட்டேன்...


அப்துல்லா, மற்றும் அக்னி இரண்டு பேரும் நிறைய புத்தகங்கள் வாங்கி குவித்தார்கள்.. அக்னிக்கு உரு வருத்தம் .. புத்தகம் வாங்க 3ஆயிரம் எடுத்து வருகின்றோம் தீர்ந்து விடுகின்றது. சட்டென பக்கத்தில் ஏடிஎம் இல்லை.. கார்டில் பே பண்ணும் வசதியை பதிப்பாளர்கள் செய்து கொடுக்கவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்..

நண்பர்களிடம் விடை பெற்று வெளியே வந்தேன்... வெள்ளிக்கிழமை பெரிய கூட்டம் இல்லை.. ஒருவேளை நெருக்கத்தில் வரலாம் என்று பொதுமக்கள் நினைத்து இருக்கலாம்... ஒரே ஒரு பெண் லெக்கின்சை செம டைட்டாக  போட்டபடி ஜிங் ஜிங் என்ற  அலட்டல் நடை நடந்து என் கண்ணில் அதிகம் தென்பட்டார்... அம்புட்டுதேன்.... ஒரே ரசனை வறட்சி.. சோ சேட்.
வெளியே வழக்கம் போல நல்லி விளம்பரத்தில் இருந்த பெண்களை நான் போட்டோ எடுக்க நின்ன மறுப்பு ஏதும் சொல்லாமல் 32டை காட்டி சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.. குட்கேர்ள்ஸ்..

 செம டைட் என்பதால் சாருவின் தேகம் வாங்கவில்லை...இரண்டு நாளில் வாங்கிவிடுவேன்... சாருவை வாசிக்க தேகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன்.....பார்ப்போம்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

குறிப்பு
பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஒட்டு  போட மறவாதீர்கள்.

11 comments:

 1. வழக்கம் போல் அருமை உங்களால் மட்டுமே இவ்வாறு விமர்சிக்க முடியும் .நன்றி

  ReplyDelete
 2. ஐய்யா ஜாக்கி கிட்ட இருந்து முதல் வடை கிடைச்சிருச்சு...........................

  ReplyDelete
 3. உங்கள் website loadஆக ரொம்ப time ஆகுது check பன்னவும்

  ReplyDelete
 4. நீங்கள் எல்லாரும் எழுதுவதைப் பார்க்கும்பொழுது சென்னையில் இருந்திருக்கலாம் என்றுதான் தோணுகிறது!

  ReplyDelete
 5. நீங்கள் எல்லாரும் எழுதுவதைப் பார்க்கும்பொழுது சென்னையில் இருந்திருக்கலாம் என்றுதான் தோணுகிறது!

  ReplyDelete
 6. ஜாக்கி , கோணல் பக்கங்கள்(சாரு) ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க .
  best wishes

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ஜாக்கி.
  வருடத்தின் ஆரம்பத்தில் , பா.ரா என்ற மோதிர கை கொடுக்கப்பட்டிருகிறது.

  இந்த வருடம் உங்களுக்கு சிறப்பான வருடமாக அமையும்.

  வாழ்த்துக்கள், பா.ரா. உங்களின் அன்பார்ந்த சினேகம் பதிவர்களிடம் எப்பொழுதும் இருப்பது பாராட்டதக்கது.நன்றிகள்.

  ReplyDelete
 8. நானும் நேற்று சென்றிருந்தேன்.. எனக்கென்னவோ சென்ற வருடம் இருந்த புத்தகமே அதிகமாக கண்ணில் பட்டது.. பாரதி பதிப்பகத்திலும், கிழக்கு பதிப்புகளிலும் புத்தகம் வாங்கிகொண்டு மற்ற பதிப்பகங்களை ஒரு பார்வைகள் மட்டும் பார்த்து வந்தேன்.. வெளிவரும்போது மணிரத்னம் அவர்களை கண்டேன்.. இப்போ தான் உள்ளே போறன் பாத்துட்டு பிடித்த புத்தகம் பத்தி சொல்றேன்னு சொன்னார்.. ஆனால் அவசர வேலையால் திரும்பி வந்துவிட்டேன்...

  ReplyDelete
 9. வழக்கம் போல கலக்கல் பதிவு

  ReplyDelete
 10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  நன்றி காவேரிகனேஷ்...

  நன்றி கூர்மதியான் நீங்க சொல்வது உண்மைதான்..
  சித் உங்க சித்தம் படி நடக்கட்டும..

  ReplyDelete
 11. இலவச இணைப்பை ரசித்தேன்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner