வெறிச்சோடிய சென்னை...பொங்கல்/2011

 (லலிதா ஜிவல்லரி எதிரில்)

 பரபரப்பானசென்னை  பொங்கல் தினமான இரண்டு நாளைக்கு தனது பரபரப்புக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சோம்பலோடு சனிக்கிழமை பொங்கல் அன்று  சென்னை கண் விழித்தது... 



சென்னையில் 144 தடை உத்தரவு போட்டது போல சென்னை வெறிச்சோடி போய் விட்டது... பொங்கல் காலை சென்னை திநகர் போன போது 365 நாட்களும் திறந்து வைத்து இருக்கும் போத்திஸ், சரவணா பிரமாண்டமாய்  போன்றவை திறந்து வைத்து இருந்தார்கள்...



மண்ணின் மைத்தர்கள் எல்லோரும் சொந்த ஊருக்கு போய்விட்டதால் சென்னைக்கு இந்த அவலம்..

(பனகல் பார்க் எதிரே...)

பட் சாலையில்  வாகனங்கள்  தேடி பார்க்க வேண்டி இருந்தது.. மாம்பல வாசிகளின் வயிற்று  எரிச்சலை கொட்டிக்கொள்ளும் துரைசாமி சப்வே காலியாக இருந்தது..

டீக்கடையில்  பக்கத்து கடைகளில் வேலை செய்யும்  பெண்கள் டீ குடிக்க வந்து இருந்தார்கள்... பொங்கல் அன்று வேலைக்கு வந்து இருந்தார்கள்.ரெஸ்ட் என்பதே இல்லை..காலையில் ஒன்பது மணிக்கு திறந்து வைத்து இரவு பதினோரு  மணிக்கு கடை சாத்தும் திநகர் துணிக்கடைகள் திறந்து வைத்து  வேலை செய்பவர்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொண்டார்கள்.

இரட்டை சம்பளமாக இருந்தாலும் பணம் தேவை எனும் போது எல்லாவற்றையயும் இழந்து விட்டு வேலைக்கு வந்துதானே ஆக வேண்டும்.
(வாணிமஹால் எதிர்பாலத்தின் மேல் இருந்து...)

பேசாம பனி அதிகமாக பொழிந்து ஆறு மாதம் வெளியே வராமல் முடங்கி கிடக்கும் ஐரோப்பிய நாடுகள் போல இருக்க வேண்டும்...கொஞ்சகாலத்துக்கு மாற வேண்டும்..........

(ஈ அடிக்கும் அசோக் பில்லர் ரோடு....)

 ஆடுகளம் படத்துக்கு மாம்பலத்தில் இருந்து பத்து நிமிடத்தில் சத்தியம் தியேட்டருக்கு போய் விட்டேன்... நான் இருப்பது   சென்னையா என்று எனக்கு சந்தேகம் வந்து தொலைத்தது..

மதியத்துக்கு மேல்தான் கூட்டம் ரோட்டில் அங்கு ஒன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் கண்ணில் தென் பட்டது...


(கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக என் வீட்டு  கேஸ் அடுப்பு பொங்கல்...)

மாலையில் சாலைகளில் கொஞ்சம் வாகனங்களை பார்க்க முடிந்தது...சிக்னலில் நிறைய நேரம் எடுத்துக்கொள்ள வில்லை... எந்த இடத்துக்கு அதிக பட்சம் 20 நிமிடத்தில் போகும் போது இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் வந்தது....


குறிப்பு மேலுள்ள படங்கள் எல்லாம் காலை பத்து மணிக்கு மேல் சென்னையின் பிரதான சாலைகளில் எடுக்கபட்டது.. படங்களை கிளிக்கி பார்க்கவும்..

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

21 comments:

  1. பொங்கல் பானைக்கு பக்கத்துல கூட சில CD கவர் தெரியுது!!! Kitchen ல கூடவா? எண்ணே உங்கள் சினிமா ஆர்வம் !!!
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  2. இப்பொழுது பண்டிகைஎல்லாம் தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறது, ஆஹா எங்கள் தி.நகரா இப்படி.

    ReplyDelete
  3. ஆமாண்ணே. ரெண்டு நாளும் சென்னை சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தது. மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. எல்லாரும் பொங்கலை முன்னிட்டு தத்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டனரோ என்று நினைத்தேன்..

    ReplyDelete
  4. பொங்கல் அன்றுகூட ரெஸ்ட் இல்லையா?

    ReplyDelete
  5. ஜாக்கி!படங்களுக்கு மேக்கப் போட்டு உங்க ஊரை அழகாய் காட்டிடுங்க.மனுசன் இருக்குற ஊரா அது:)

    சாலை,சுகாதாரம்,வாகன எண்ணிக்கை,பாதை ஒழுங்கு சொல்லிக்க வேணாம்.

    நாமெல்லாம் தடி ஊன்ற காலத்துல நினைச்சே பார்க்க முடியல சென்னை வாழ்க்கை.

    ஊருக்கு பொங்கல் கொண்டாடப் போனவங்களை அப்படியே உட்காரச் சொல்லுங்க.விவசாயத்துக்கு ஆளு கிட்டலையாம்.

    ReplyDelete
  6. me the second

    சென்னை இப்படி இருந்தா நல்ல இருக்காது ,

    ReplyDelete
  7. இங்க மஸ்கட்லைலும் சேம் தான் பொங்கல் ,

    வீரைவீல் சினிமாவில் வாய்ப்பு கீடைக்க வாழ்த்துக்கள்

    அன்புடன் இசக்கிமுத்து - மஸ்கட்

    ReplyDelete
  8. ஹா ஹா.. சற்று சுதந்திரமான சென்னையை இம்மாதிரியான தருணங்களில்தான் அனுபவிக்க முடியும!! :-)) அதுசரி, பொங்கலன்று படத்திற்கு தனியாக சென்றிருக்கீரே, மனைவியிடம் பூரி கட்டையில் அடிவாங்கியதை போட்டோ எடுத்தீரா? :-))

    ReplyDelete
  9. டியர் ஜாக்கி,

    இந்த ரசிகன் ஓட ஒரு சீரிய விண்ணப்பம் the great சச்சின் ந பத்தி ஒரு பதிவு போடவும் ,

    ReplyDelete
  10. நில்லா இருக்குது ஜாக்கி பொங்கல் வாழ்த்துகள்- சாம் மலேசியா

    ReplyDelete
  11. நல்லா இருக்குது பொங்கல் வாழ்த்துகள் ஜாக்கி - சாம் மலேசியா

    ReplyDelete
  12. // இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் வந்தது //

    சென்னை (2)செகண்ட் ஒன்னை உருவாக்க சொல்லிடுவோம். அப்ப எல்லோரும் அங்க போய்டுவாங்க. இந்த சென்னை இதுமாதிரி காத்தாடும். உங்க சந்தோஷமும் நிறைவேறிடும். சரியா அண்ணே!!

    ReplyDelete
  13. ஜாக்கி சார் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பொங்கலுக்கு விடுமுறை கிடையாது!இந்த ஆண்டில் பதினான்கு மற்றும் பதினைந்தாம் திகதிகளில் பொங்கல் கொண்டாடினார்கள்!இலங்கையிலிருந்து வெளியாகும் இரு வேறு பஞ்சாங்கங்களால் ஏற்படும் குழப்பம்!தீபாவளி,நவராத்திரி,புது வருடம் போன்ற விஷேட நாள்களும் இப்படியே தான் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது!ஒற்றுமைக்கு இலக்கணம் வகுப்போர் "நம்" ஈழத் தமிழர்கள்?!மேலும் ஐரோப்பிய நாடுகளில் புது வருடம்,தேசிய தினங்கள் விடுமுறை தினங்களாக இருக்கும் போதிலும் "நம்மவர்கள்" கடை சாத்துவதே இல்லை தெரியுமா?மக்களுக்கு "சேவை" செய்கிறார்களாம்?!?!

    ReplyDelete
  14. I too was surprised to see such a calm Chennai roads at peak hours.
    Interestingly, I told my wife that you will write an article about this based on the trend in your last few articles !!.
    You proved me right :-).

    ReplyDelete
  15. //எந்த இடத்துக்கு அதிக பட்சம் 20 நிமிடத்தில் போகும் போது இப்படி சென்னை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் வந்தது....//

    அதே அதே!

    ReplyDelete
  16. 4 வருசத்துல முதல் தடவை தி நகரில் நெருக்கடி இல்லை

    ReplyDelete
  17. உங்கள் பத்திகளை 'paragraph align' செய்து வெளியிட்டால் பார்பதற்கும் படிப்பதற்கும் அழகாயிருக்கும்.

    ReplyDelete
  18. Nice photos... Interesting!!!
    I noticed the Same thing during Diwali 2010 also.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner