ஆல்பம்..
எதுவந்தாலும் எதுவும் அழிச்சிபோயிடபோறதில்லை ரசிக்கும் ஆட்கள் இருக்கும் வரை அது எதாவது ஒரு வடிவத்தில் மக்களிடம் செல்வாக்கு பெற்றுக்கொண்டுதான் இருக்கும்..பிளாக் வந்தபிறகு பேஸ்புக் வந்ததது.. அதுக்கு பிறகு டுவிட்டர் வந்துச்சி.. ஆனா எதுவும் அழிஞ்சி போயிடலை..மக்கள் தங்களுக்கு எது சௌகர்யமோ அதை தேர்ந்து எடுத்துக்கொண்டார்கள்.... ஆனால் 2006ல் பிளாக்கில் எழுதிய அளவுக்கு 2010ல் பிளாக் எழுதும் அளவு குறைந்து இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து தெரிவித்து இருக்கின்றது...ஆனால் தமிழ் வலைபதிவுகள் முன்னைகாட்டிலும் அதிக மக்களிடம் சென்று சேர்கின்றது.. அதே போல நிறைய புது நண்பர்கள் எழுத ஆரம்பித்து இருக்கின்றார்கள்.. என்பது தமிழ் வலைக்கு ஒரு பெரிய பலம் என்று சொல்லிக்கொள்ளலாம்.
============================
========
இப்படி ஒரு பெரிய ஆப்பில் சமீபத்தில் திமுகழகம் உட்கார்ந்து வலியை உணர்ந்ததில்லை...ஸ்பெக்ட்ரம் பூதம் ஆட்சியில் இருப்பவர்களின் ஒரு அமைச்சரையே காவு வாங்கி இருக்கின்றது...ராஜா போல் இருந்து விட்டு நீதிமன்ற காவலில் இருப்பது ரொம்ப கொடுமையான விஷயம்... பதவி போய் இரண்டு வருடத்துக்கு பிறகு இது நடந்து இருந்தாலும் பெரிதாய் தெரிந்து இருக்காது.. ஆனால் பதவியில் இருக்கும் போதே ராஜினாமா செய்து அதன் பிறகு கைது என்று மளமளவென காரியங்கள் நடக்க துவங்க ராஜாவின் மனநிலையில் யோசித்து பார்த்தால் நைட்தூக்கம் வருவது என்பது கஷ்ட்டம்தான்.. யோசித்து பாருங்கள் மத்திய அமைச்சர் பதவி வகித்த ஒருவர் இப்போது சிறையில்...............
=================
இலங்கையில் திரும்பவும் மழை,பயங்கர வெள்ளம்... திடிர் என்று இரண்டு நாளைக்கு முன் பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்ட போது, எனக்கு தெரிந்த போனது இது தமிழ் நாட்டுக்கான மழை அல்ல என்று... நிறைய பேர் இறந்து போய் இருக்கின்றார்கள்.
==============
மிக்சர்..
சென்னையில் மினி பஸ்வர இருக்கின்றது அதுக்காக நான் வெயிட்டிங்.. அதுவும்.. அது அரசு வசம் இருக்கும் என்று நம்புகின்றேன்.. தனியார் வசம் ஒப்படைத்தால் சீட்டு ஏற்றுகின்றேன் பேர்வழி என்று நடு ரோட்டில் பப்பரப்பே என்று நின்று கொண்டு இருப்பார்கள்..இரண்டு தனியார் மினி பேருந்து டிரைவருக்கு இடையே டைம் எடுப்பதில் பிரச்சனை என்றாலோ? அல்லது அடிதடி என்றாலோ? திரும்புவும் சென்னை ஸ்தம்பித்து போகும் அதுக்கு அந்த அப்பாவி மினி பேருந்துகள் மீது பழி வந்து விடக்கூடாது..... அதனால் அருசு வசமே இருக்க வேண்டும்...
===============
வரும் செவ்வாய்கிழமை (8/02/2011) காலையில் 7 மணி பிருந்தாவனம் எக்ஸ்பிரசில் பெண்களூர் செல்ல இருக்கின்றேன்...இரண்டு நாளைக்கு அங்கு இருப்பேன் அல்லது ஒரு வாரமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை... பெங்களுர் பதிவர்கள் மற்றும் பெண்களுரில் தளத்தை வாசிப்பவர்கள் மடிவாலாவில் எதாவது ஒரு இடத்தில் உங்களுக்கு நேரம் இருப்பின் சந்திக்கலாம்....நேரம் இருந்தால் பதிவு போடுகின்றேன்.
============
டிஸ்க்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சி... சூப்பர் எரிமலை என்று ஒன்று இருக்கின்றதாம்.. அது எப்படியும் 2012ல் வெடித்தாலும் வெடிக்கும் அதனால் பூமியில் பாதி பாகம் பனால் ஆகிவிடும் என்று போகின்ற போக்கில் கொளுத்தி போட்டு விட்டு போய் இருக்கின்றார்கள்.. எனக்கு தூக்கமே இல்லை..
==========
இந்தவார சலனபடம்...
ராவணன் படம் முடியும் போது சன்னமான குரலில் ஏஆர்ரகுமான் பாடிய இந்த பாடல் பலரது கவனத்தை அப்போது கவரவில்லை.. காரணம் படம் முடியும் போது ஒலித்த பாடல் இது... ஆனால் இப்போது ஏஆர் ரகுமானை வைத்து சில காட்சிகள் எடுக்கபட்டு ராவணன் படம் எடுத்த போது எடிட்டிங்கில் பயண்படுத்தாத காட்சிகளை எல்லாம் சேர்த்து ஒரு காதல் ஆல்பம் போல் தயாரித்து வெளியிட்டு இருக்கின்றார்கள்... அந்த பாடலும் காட்சி படுத்திய விதமும் அற்புதம்..
இப்போது தமிழ் மியூசிக் சேனல்களில் மோஸ்ட் பேவரைட் சாங் இதுதான்...
=======
படித்ததில் பிடித்தது...
ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்த விஷயம்.. அது. ஒரு முறை டுவிட்டரில் படித்தேன்.. எழுதியவர் பெயர் நினைவில்லை...
மனைவி சமையல் கட்டில் சமைத்துக்கொண்டு இருக்கும் போது கட்டிதழுவி முத்தம் கொடுக்க நினைக்கின்றேன் ஹாலில் பேப்பர் படிக்கும் மனைவியின் தங்கையை.....
==============
மினி சினிமா....
நடுநிசிநாய்கள் படம் பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.. படத்தில் பாடல்கள் இல்லை... இசையும் இல்லை.... படத்தில் ஸ்பெஷல்எபெக்ட் மற்றும் வசனத்துடன் இந்த படம் வெளிவர இருக்கின்றது... பார்ப்போம்...
=======
காவலன் படத்தை பார்த்தேன்...பெரிய பில்டப் இல்லாமல் இயல்பாய் விஜய் நடித்து இருக்கின்றார்.. இதுவரை வந்த ஆறு படங்களை விட இந்த படம் ரசிக்கும் அளவுக்கு இருக்கின்றது... இடைவேளைக்கு பிறகு வரும் அந்த டுவிஸ்ட் நன்றாக இருக்கின்றது.... நிறைய பேர் காதலுக்கு மரியாதை போல இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அந்த படத்தோடு ஒப்பிட்டு சிலாகித்த சொல்லும் அளவுக்கு இல்லை.. அனால் இந்த படம் டைம்பாஸ்படமாக நிச்சயம் பார்க்கலாம்.
======================
பதினாறு படம் பார்த்தேன்.. இன்னும் நன்றாக வந்து இருக்க வேண்டியபடம்.. இருந்தாலும்ஒருமுறை பார்க்கலாம்...வனிதா என்ற பெண் கிராமத்து பத்தாம் வகுப்பு பெண் வேடம் செய்து இருக்கின்றார்... மிக அற்புதமாக நடித்த இருக்கின்றார்...அதே போல் அதே பிளாஷ்பேக் போர்ஷனில் அந்த பெண்ணின் அப்பாவாக நடித்தவர் பின்னி இருக்கின்றார்..படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் அடடா என் மீது பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்....
================
இந்தவார கடிதம்..
Dear Jackie,
After a long time I'm contacting you...but I'm following your blog posts often.
How is your life... we are all fine here... And god given me a chance to buy a
apartment here, defiantly it's gift from god for my forefather's good things....
Bithday wishes from me & my family, Many more happy retuns of
the day for you & your wife....
Anbudan
Adiyaman
=========
ரொம்ப நன்றி அதியமான்... வீடு வாங்கியதுக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
========
என்னைப்போலவே நிறைய பேர் வேலை தேடிக்கிட்டு இருக்காங்க போல?
அப்பறம் ஒரு விஷயம் சார். நான் i.T டிப்பர்ட்ட்மென்ட் இல்ல சார். உங்க சினிமா டிப்பார்ட்ட்மென்ட் தான் சார்.
cinema poster designing, audio & video editing , special effects, 3d animation, match moving ல வொர்க் பண்ணுவேன் சார் .
உதவி இயக்குனரதன் சேர முடியல. இதயாவது கத்து வைச்சிப்போம் னு படிச்சேன் சார். உங்களுக்கு குட ஒரு படத்ஹோட போஸ்டர் அனுப்பி இருந்தேன் . யாரிடமும் சொல்லாதே படம் பேர். அந்த படம் எடுக்கும் இயக்குனர் எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கார்.
அப்பறம் நான் கூட ஒரு வலைப்பதிவை ஆரம்பிசிடேய்ன் சார். சினிமா தொழில் நுட்பம் சம்பந்தமா எனக்கு தெரிந்த சின்ன சின்ன விசயங்களை பத்தி (audio & video editing , special effects, 3d animation, match மோவிங்) எழுதலாம் னு இருகேன்
அப்பறம் ஒரு விஷயம் சார். நான் i.T டிப்பர்ட்ட்மென்ட் இல்ல சார். உங்க சினிமா டிப்பார்ட்ட்மென்ட் தான் சார்.
cinema poster designing, audio & video editing , special effects, 3d animation, match moving ல வொர்க் பண்ணுவேன் சார் .
உதவி இயக்குனரதன் சேர முடியல. இதயாவது கத்து வைச்சிப்போம் னு படிச்சேன் சார். உங்களுக்கு குட ஒரு படத்ஹோட போஸ்டர் அனுப்பி இருந்தேன் . யாரிடமும் சொல்லாதே படம் பேர். அந்த படம் எடுக்கும் இயக்குனர் எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கார்.
அப்பறம் நான் கூட ஒரு வலைப்பதிவை ஆரம்பிசிடேய்ன் சார். சினிமா தொழில் நுட்பம் சம்பந்தமா எனக்கு தெரிந்த சின்ன சின்ன விசயங்களை பத்தி (audio & video editing , special effects, 3d animation, match மோவிங்) எழுதலாம் னு இருகேன்
நீங்க இந்த பதிவை எனக்காகவே போட்டது போல இருந்தது சார் அதன் நன்றி சொன்னன்.
ஒரு உதவி.....
இந்த தளத்தை நிறைய சாப்ட்வேர் மக்கள் படிக்கின்றார்கள் என்று எனக்கு தெரியும்.... உங்கள் கம்பெனி எந்த கம்பெனியாக இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் கம்பெனியில் எந்த ஓப்பனிங் இருந்தாலும் ஒரு மெயில் நமக்கு தட்டி விடவும்...புதியதாய் படிக்கும் நண்பர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும்... அந்த செய்தி ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும்.. நிறைய ஐடி நண்பர்களே இந்த ஐடியாவை சொன்னதால் நீங்கள் உங்க கம்பெனியில் சின்ன ஓப்பனிங் இருந்தாலும் சொல்லவும் அது பலருக்கு உதவி செய்யும்.....வேலை தேடுவோருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும்.. அதனால் மறவாதீர்...
--
இதயபூர்வமான வாழ்த்துக்களுடன்
ஆ.பாண்டியன்.
9789840849
ஒரு உதவி.....
இந்த தளத்தை நிறைய சாப்ட்வேர் மக்கள் படிக்கின்றார்கள் என்று எனக்கு தெரியும்.... உங்கள் கம்பெனி எந்த கம்பெனியாக இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் கம்பெனியில் எந்த ஓப்பனிங் இருந்தாலும் ஒரு மெயில் நமக்கு தட்டி விடவும்...புதியதாய் படிக்கும் நண்பர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும்... அந்த செய்தி ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும்.. நிறைய ஐடி நண்பர்களே இந்த ஐடியாவை சொன்னதால் நீங்கள் உங்க கம்பெனியில் சின்ன ஓப்பனிங் இருந்தாலும் சொல்லவும் அது பலருக்கு உதவி செய்யும்.....வேலை தேடுவோருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும்.. அதனால் மறவாதீர்...
--
இதயபூர்வமான வாழ்த்துக்களுடன்
ஆ.பாண்டியன்.
9789840849
==========================
நன்றி பாண்டியன்.......... வேலை உங்களுக்கு கிடைத்து விட்டதா??
==========
இந்தவார நிழற்படம்..
முதலில் இருக்கும் படம் நெட்டில் சுட்டது....
இரண்டாவது படம்.. நமது சென்னை திரிசூலம் மலையில் இருந்து எடுத்தது.. ஏதோ ஒரு என்ஜினியரிங் காலேஜ் என்று நினைக்கின்றேன். பெயர் தெரியவில்லை..... பச்சை பசுமைக்கு நடுவே ஒரு வெள்ளை கான்கிரிட் காட்டை பார்த்த போது கேமராவில் சிறைபிடித்தேன்.
=========
பிலாசபி பாண்டி
டேய் மவனே நல்லா படிச்சாதான் காலேஜ்ல சீட் கிடைக்கும்.. அதனால நல்லா படிடா??? டோனெஷன் குடுத்தாலும் இப்பல்லாம் சீட் கிடைக்கும் அதனால பொத்திகிட்டு நல்லா சம்பாதிக்கற வழியை பாரு....
======
நான்வெஜ் 18+
===================
ராஜா விஷயத்தில் நான் என்ன கருத்து சொல்லுவேன் என்று ஞாயிறு வரை பொறுத்து இருந்த நண்பர் மணிஜிக்கு என் நன்றிகள்..
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
அண்ணே அட்டகாசம்
ReplyDeleteபோட்டொ கலக்கல்,அது எஞ்சினியரிங் காலேஜ் அல்ல,சித்ரா டவ்ன்ஷிப் என்று நினைக்கிறேன்
>>> திரிசூலம் மலை கேமரா கிளிக்...டாப்!
ReplyDelete// நடுநிசிநாய்கள் படம் பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.. படத்தில் பாடல்கள் இல்லை... இசையும் இல்லை.... படத்தில் ஸ்பெஷல்எபெக்ட் மற்றும் வசனத்துடன் இந்த படம் வெளிவர இருக்கின்றது... பார்ப்போம்... //
ReplyDeleteநானும் எதிர்பார்க்கிறேன்...
Hi Jackie,
ReplyDeleteI am regular reader of your blog and it is always interesting. Today I found one artile (mini bus in chennai) and i am sad that you too blamed private operators as if govt buses are properly stopping in bus stop and doing good service to people.
Havent you seen the timing fight between 2 corporations itself and how the govt bus drivers behave rudely.
pls dont blame private operators for just for namesake....
best wishes
//ராஜா விஷயத்தில் நான் என்ன கருத்து சொல்லுவேன் என்று ஞாயிறு வரை பொறுத்து இருந்த நண்பர் மணிஜிக்கு என் நன்றிகள்..//
ReplyDeleteஹி...ஹி...
// மிக அற்பதமாக நடித்த இருக்கின்றார்..//
அர்த்தமே மாறுதுயா..கொஞ்சம் கவனி..
வழக்கம் போல் அருமை
ReplyDeleteரைட்டு
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteவாசகனுக்கு அருகில் நீங்கள் எபொழுதும் இருப்பது போல உணர்வு வருகிறது உங்கள் பதிவில்.
வாழ்த்துக்கள்.
sandwitch looks good. samy
ReplyDeletePHOTO SUPER
ReplyDeleteதலைவரே...
ReplyDeleteஅந்த ட்விட்டு நம்முளுதுதான்....
அது என்னவோ தெரியல தல... மச்சினியப் பாத்தா மட்டும் மைண்ட் வாய்ஸ் கேக்குது, "கண்ணா... இரண்டாவது லட்டு திங்க ஆசய்ய்ய்யா........"
:)
ReplyDelete