சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ஞாயிறு(30/01/2011)

ஆல்பம்...
ஒரு பிராந்தியத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு... அவனது நாட்டு மீனவனை ஒரு சீன்ன தீவில் இருக்கும் அரசு தொடர்ந்து கொன்று வருகின்றது. ஆனால் அது பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை... ஒரு கண்டிப்புகூட இல்லை...இன்று நிருபமா போய் என்ன பேசுவார் என்று தெரியவில்லை...40எம்பி சீட் தமிழகத்தில் இருக்கு... அது எங்களுக்கு கிடைக்கனும்னா.. தயவு செய்து எலக்ஷன் வரை எந்த தாக்குதலும்  வேண்டாம்... எலக்ஷன் முடிந்ததும் நாங்களே தாக்க ஆயுதம் கொடுக்கின்றோம்.. எந்த பிரச்சனையும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடம் உங்க ராஜ்யம்தான்.. அப்படியே மீனவர்கள் செத்தாலும் எந்த திராவிடகட்சியாக இருந்த்தாலும் ஒரு லட்சம் கொடுத்து காயத்தை ஆரப்போட்டு விடுவார்கள்... அதனால் பிளிஸ் வெயிட் பார் சம் மன்த்ஸ் என்று பேசினாலும் பேச வாய்ப்பு இருக்கின்றது...
ஒரு சந்தோஷம்.......... பாஜக தலைவர் நிதின் கட்காரி நிருபமா இலங்கைக்கு செல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று சொல்லி இருக்கின்றார். விரைவில் வேதாரண்ய மீனவர்களை சுஷ்மாசுவராஜ்  சந்திப்பார் என்றும் இந்த விஷயத்தை நாங்கள் நாடளுமன்றத்தில் கிளப்புவோம் என்ற சூளுரைத்து இருக்கின்றார்.... பார்ப்போம்.. தேர்தல் நேரத்து ஸ்டண்டாக இருந்தாலும் நாடளுமன்றத்தில் 40 எம்பி இருந்து இந்த அவல நிலை நீடிப்பது  நம் இனத்துக்கு மட்டும்தான்.
================================

டுவிட்டரில் இப்படி ஒரு எழுச்சி பெரிய விஷயம்...நான் பெங்களுருக்கு போகின்றேன் என்று சொல்லுவதாக இருக்கும் டுவிட்ட்டர்களை எல்லாம் ஒரு இரண்டு நாளைக்கு மூச்சுவிடவில்லை...இந்த எழுச்சி காரணமாக விகடன் தளத்தில் உடனே அந்த எழுச்சியை பதிவு செய்தார்கள்.. அதனால் தொடர்ந்து மாற்று ஊடகத்தில் தமிழக மீனவனுக்காக குரல் கொடுப்போம்....
டுவிட்டரில் நான் படித்து ரசித்தது....... கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகும் வித்தை  உனக்கு தெரிந்து இருக்கின்றது... தெரியாதவன் கடலில் மூழ்கி சாகின்றான்.. என்று.. இன்னும் நிறைய  கோபங்களை தொடர்ந்து வருகின்றன.... நண்பர்கள்.. டுவிட்டி வருகின்றனர்.
=======================================
இன்னும் இரண்டாயிரம் கையெழுத்து கூட போனியாகவில்லை... அதனால் பெட்டிஷனில் தமிழக மீனவருக்காக கையெழுத்து போடாதவர்கள் தயவு செய்து போட்டு நமது ஒற்றுமையை காட்ட வேண்டுகின்றேன்...அந்த லிங்க இதோ...  http://www.PetitionOnline.com/TNfisher/
===================
மிக்சர்
தலைநகரம் சென்னையில் நேற்று நடந்த அரசியல் பரபரப்பு அதிமுகவின் அஞ்சா நெஞ்சன் சேகர்பாபு திமுகவில் இணைந்து கலைஞரே அடுத்த முதல்வர் என்று  சொல்லி இருக்கின்றார்...அக்னிநட்சத்திரம் உமாபதி போல எப்படிடா? என்று ஜெ தனது தொண்டர்களிடம் கேட்டு ஆத்திரபட்டு இருக்க கூடும். இன்னும் தேர்தல் நெருக்கத்தில் இன்னும்  நிறைய காட்சிகள் காணக்கிடக்கும் என்று பட்சி சொல்கின்றது.
=======================   
நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தேன்... பெயர் வேண்டாம்..உங்கள் சாண்ட்வெஜ் நான்வெஜ் எனக்கு வர வர போர் அடிக்கின்றது அதனால் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்  நிறுத்திவிட்டு வேறு புதிய கோணத்தில் யோசித்து எழுத ஆரம்பிக்க வேண்டும் என்றார்... எனக்கு வேலை அதிகம் இல்லை எழுதுகின்றேன்...எனக்கு வேலை இருக்கும் போது  அதுவாகவே குறையும்..நான் அவரிடம் சொன்னேன்... இந்த தளத்தை நான் வேள்வி தீயில் யோசித்து இதை எழுதுகின்றேன் என்று எல்லாம் சொல்லி நடிக்கவில்லை.. நான் நினைத்த்தை பகிர்ந்து கொள்ள ஒரு இடம் எனக்கே இன்னும் போர் அடிக்கவில்லை  அப்படி போர் அடிக்கும் போது அது மாறும் என்றேன்....உங்கள் கருத்து  என்ன??
 ஒரு விளக்கம்...
தம்பி கேஆர்பி செந்தில் கூட சில சமயங்களில் விளையாட்டாகவும் நக்கலாகவும் சொல்லியதுண்டு... அண்ணே  தந்தி பேப்பர்ல வர செய்தியாவே சாண்ட்வெஜ் நான்வெஜ்ல இருக்கு... என்று சொல்லியது உண்டு... அது போல பலர் நினைத்து இருக்கக்கூடும்...பலர் நினைத்தும் இருக்கலாம்...ஒரு செய்தி அந்த செய்திக்கு எனது பார்வை என்ன என்பதைதான் நான் எழுதுகின்றேன்.. அப்படி செய்தி பேப்பாராக இருந்தால் அதன வாசிப்பவர்கள் எப்போதோ வருகை குறைந்து போய் இருக்கும்.

சென்னை, ஜனவரி23, கோட்டூர்புரத்தில் இருந்த தனியாக இருந்த பெண்ணிடம் ஒரு லட்சம் மிதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கபட்டன...

என்று  செய்திதாளை போல எழுதினால் அப்படி சொல்லலாம்... நான் அப்படி எழுதுவதில்லை என்பது எனக்கு தெரியும்.. என்னை வாசிப்பவர்களுக்கு தெரியும்... இல்லைங்க உங்களுக்கு எழுத தெரியலை... சரக்கு போயிடுச்சி.. சந்தோஷம்....நான் என்ன பரமாத்தாவா... அல்லது ஜேம்ஸ்பாண்ட் படத்தில்  வில்லன் பேப்பரில் மறுநாள் வரும் செய்திக்காக அழிவு செய்தியை உருவாக்குவானே அது போல எனது தளத்தில் வர செய்தியை உருவாக்கும்  வல்லமை என்னிடத்தில்  இல்லை...

எனக்கு செய்திகள் பேப்பர்  மற்றும் தொலைகாட்சிகள் மூலம்தான் கிடைக்கின்றன.. அதில் எனது பார்வை என்னவென்று எழுதுகின்றேன்...ரெண்டாவது எனது பார்வை இந்த தளத்தை வாசிக்கும் நண்பர்களுக்கு பிடித்து இருக்கின்றது...அயல் நாட்டில் வேலை வேலை என்று ஒடிக்கொண்டு இருப்பவனுக்கு நான் தரும்செய்திகள்...சடுதியில் அறிந்து செல்ல ஏதுவாக இருக்கின்றது... பட் இந்த விமர்சனம் சீரியசாக வைக்கும் நண்பர்கள்  தங்கள் எழுத்துக்களில் சுயம்புவாக செய்திகளை கொடுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு உங்கள் சேவையை தொடரச்செய்கின்றேன்.. வாழ்த்துக்கள்.

==========================
ஒரு உதவி..... 

இந்த தளத்தை நிறைய சாப்ட்வேர் மக்கள்  படிக்கின்றார்கள் என்று எனக்கு தெரியும்.... உங்கள் கம்பெனி எந்த கம்பெனியாக இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும்  உங்கள் கம்பெனியில்  எந்த ஓப்பனிங் இருந்தாலும் ஒரு மெயில் நமக்கு தட்டி விடவும்...புதியதாய் படிக்கும் நண்பர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும்... அந்த செய்தி ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும்.. நிறைய ஐடி நண்பர்களே இந்த ஐடியாவை சொன்னதால் நீங்கள் உங்க கம்பெனியில் சின்ன ஓப்பனிங் இருந்தாலும் சொல்லவும் அது பலருக்கு உதவி செய்யும்.....வேலை தேடுவோருக்கு அது பயன் உள்ளதாக  இருக்கும்.. அதனால் மறவாதீர்...
=========================
சென்னையின் சீப்பான ஓட்டல்..
ரொம்ப சீப்பான ஒரு  நான்வெஜ் ஒட்டல் இந்த சென்னையில் ஏசியோடு ரொம்பவும் டீசன்டாக இருக்கின்றது... மிக முக்கியமாக சர்விஸ் மற்றும் சுவை சூப்பர்..  சென்னையில் நம்ம நெல்சன்மாணிக்கம்  ரோட்டில் இருக்கும் மேத்தநகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் மாடியில் இருக்கும்  அந்த ஒட்டலின் பெயர் சீ மவுன்ட்.. எனக்கு தெரிந்து ரொம்பவும் சீப்...முக்கியமா சாப்பிட தண்ணி வைக்கின்றார்கள்... காளான்கிரேவி நல்ல சுவை... ஆப் தந்தூரி சிக்கன் 95,புல் தந்தூரி 185ரூபாய்தான். இந்த விலை எனக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை...நான்  என் மனைவி மற்றும் அவள் நண்பி மூவரும் நன்றாக சாப்பிட்டோம்.. 500ரூபாய்க்கு மேல் தாண்டவில்லை....
சினிமா...
ரஜினியின் அடுத்த படம் ராணா இயக்குபவர் கேஎஸ்ரவிக்குமார்..சரித்திரகதையாம்... ரசிகர்கள் இப்போதே கொண்டாட தயாராகிவிட்டார்கள்..
யுத்தம் செய் படத்தில் ஒய்ஜி  வில்லன் பாத்திரம் ஏற்று இருப்பதாக  கேள்வி.. படத்துக்கு  நிறைய விளம்பரம் செய்கின்றார்கள்..
====================================
இந்த வார சலனபடம்.
சரியான குத்து பாட்டு இது...அதிக கவனம் பெறாமல் போய் விட்டாலும் எனக்கு பிடித்த பாட்டு இது.... மிக முக்கியமா லாஸ்ட்  பீட்டுக்கு கண்ணகி போல புடவை கட்டி  உட்கார்ந்த படி ஆடும் நடனபெண்களின் பெண்டு நிமிர்ந்து போய் இருக்கும்....

===========

பார்த்ததில் பிடித்தது.
வம்சி புத்தக வெளியீட்டு விழாவுக்கு போய் இருந்தேன்.. இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார்.... அது பற்றி விரிவாய் எழுதுகின்றேன். ஆனால் அந்த பேச்சும் ஒரு கம்பீரமும் ஒரு படைப்பாளியை எனக்கு வெகு  நெருக்கமாக அறிமுகபடுத்தி வைத்தது...  நான் சாக்கடை என் படைப்புகளை  பற்றி பேசுங்கள் என்று சொன்ன போது இருந்த கம்பீரம் எனக்கு இரவு தூக்கம்  வெகு நேரம் பிடித்தது...
கேட்டதில் பிடித்தது
மசக்களின்னு ஒரு டிரஸ் வந்து இருக்கின்றது...இப்போது வயது பெண்களின் பேஷன் உடை.. அதாவது ஸ்லிவ்லெஸ் அந்த டிரஸ்.. ஆனால் அப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்க்காக கையில் ஒரு சல்லையான துணியை போட்டு இருக்கின்றார்கள்....ஒரு காதலன் தன் காதலியிடம் அந்த உடை போடக்கூடாது என்று சண்டை போட்டுக்கொண்டு இருந்தான்.. அதுக்கு நீ ஸ்லிவ்லெஸ் போட்டுகிட்டே போலாமே.. எதுக்கு இந்த சால்ஜாப்பு என்று கேட்க அதுக்கு அவள் என்ன சொன்னான் என்று நமக்கு தெரியும் அளவுக்கு இன்னும் தொழில்நுட்பம் வரவில்லை என்பதால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்..
==================
கடிதம்..

Helloo Mr. Jackie,

I born and brought up in cuddalore and now settled in tirunelveli, working in dubai.

Finished schooling in St.joseph school, Kamiyampettai.

Lived in Koothapakkam..

I am regular reader of your site..  Really good.. It is very simple and superb. I am fan of your "kaalavotathil kaanamal ponavaigal" section. Keep on rocking...


Sending some cuddalore Fotos which i found in net. I don' know how much it is exciting you but for me it is good..

Bye

Ganesh Babu


=============
அன்பின் கணேஷ் பாபு.. நானும் கடலூர் கூத்தப்பாக்கம்தான்...அதே கம்பியம்பேட்டையில் கைதியின் டைரி கமலஹாசன் லாரன்ஸ் சாமியார் இருக்கும் போது அதே பள்ளியில் படித்தவன்... உங்கள் கடிதம் மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது... இன்னும் நீங்கள் அனுப்பிய கடலூர் போட்டோவை  பார்க்கவில்லை பார்த்து விட்டு தனியாக மெயிலுகின்றேன்.
======================
புத்தக அறிமுகம்...
எப்படி சினிமாவோ அது போலத்தான் எனக்கு புத்தகங்களும்... நீண்ட இடைவெளிக்கு பிறகு வாரம் ஒரு புத்தகத்தையாவது வாசித்து விட வேண்டும் என்று குறிகோள் வைத்து இருக்கின்றேன். ஒரு பெரிய உழைப்பை இரண்டு வரி அல்லது நான்கு வரியில் அடக்கி விட இந்த இடம் போதவில்லை.. அந்த புத்தகத்தை சிலாகிக்க முடியவில்லை...கடமைக்கு அறிமுக்கபடுத்த வேண்டியதாக இருக்கின்றது... எனக்கு ஈடுபாடு இல்லாத எந்த விஷயத்தையும் நான் செய்வதில்லை அதனால் தனியாக புத்தகம் விமர்சனம்  என்று எழுதலாம் என்று இருக்கின்றேன்..
நன்றி..
========================
இந்த வரா சலனபடம்....
விஜய்டிவி புரோக்கிரமுக்கு பிறகு மிஷ்கினோடு நான் பேசவில்லை. அதன் பிறகு புத்தகவெளியீட்டு விழாவில் பேசிய போது என் கருத்தை எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது... சரியாக புரிந்து கொண்டேன் இருந்தும் எனது கருத்தை தொடர்ச்சியாக பதியவைத்தேன் என்றார்...
அடுத்து  ஆடுகளம் பேட்டைகாரரோடு கதைத்த போது எனது வலையையும் எனது ஆடுகளம் விமர்சனத்தையும் வாசித்ததாக சொன்னார்...பாசக்காரர்... போகும் போது போயிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.... இப்படியே இருக்க வேண்டும்...

 =================================

இந்த படம் ஜெர்மனியில் முனிச் நகரில் பக்கத்து நகரத்து சந்தில் ஒடும் ஆற்றில் எடுத்த படம்....தண்ணீர் சுற்றிலும் இருக்கும் கலர் கலர் கலவையோடு பக்கத்தில் இருக்கும் மரங்களின் பச்சை கலர் தண்ணிரில் விழுந்து குளிக்கின்றது..... சரி இதுக்கு மேல கதை விட முடியாது.... இந்த படம் சில மணி நேரத்துக்கு முன் சென்னை போட்கிளப் ஆட்கள் சென்னை அடையாறில் படகு சவாரியின் போது எடுத்த படம். நான் எடுத்ததில்  எனக்கு பிடித்த படம்.. படத்தை கிளிக்கி பார்க்கவும்..



 ========================
 பிலாசபி பாண்டி


இரண்டு குடிகாரன்கள் ரயில் டிராக்குக்கு நடுவில் நடந்து போனார்கள். மாமே ம்மால எத்தனை படி நடந்து வந்தும் இன்னும் மாடிவரலையே மச்சி. அதுகூட பரவாயில்லை மாமே... கைப்புடியை அந்த பன்னாடைங்க எம்மாங்கிழ வச்சி இருக்கானுங்க...


நான்வெஜ்18+
ஒரு பெரிய பணக்காரன்..துரோகம் செய்யும் தன் மனைவியை தீர்த்து கட்ட திட்டம் போட்டான்..டிடெக்டிவ் ஏஜென்சிகிட்ட தன் மனைவியை  பற்றி கேட்ட தகவல் 100க்கு 100 உண்மை.... சரின்னு ஹாலிவுட்ல இருந்து டேலஸ்க்கோப்பிக் கன் ஸ்பெஷலிஸ்ட்டை அடுத்த பிளைட் பிடிச்சி வரச்சொன்னான்...  ஊருக்கு போறேன்னு  பொண்டாட்டிகிட்ட சொல்லிவிட்டு கன் ஸ்பெஷலிஸ்ட்டோட எதிர் வீட்டு மாடியில போய் மறைஞ்சிகிட்டு  பெட்ரூமை  நோட்டம் விட்டாங்க...கணவன் என்ன தெரியுதுன்னு  அவன்கிட்ட கேட்டான்..  கன்காரன் ரெண்டு பேரும் மேட்டர் செய்கின்றார்கள் என்று சொன்னான்... கோபமான கணவன் இரண்டே ரெண்டு புல்லட் குறி தவறக்கூடாது... ஒன்னு என் பொண்டாட்டி முகத்துலயும் இரண்டாவது குண்டு அவளோட கள்ளகாதலன் லுல்லுவிளையும் உடனே சுடுன்னு கோபத்துல  கத்தினான்.. அந்த கன் ஸ்பெஷலிஸ்ட்டும் உடனே சுட்டான்... ஒரு தோட்டாதான் வெடிச்சிது... ஏன் இன்னோரு ரவுன்ட் சுடலைன்னு புருசன் கேட்டான்.. அதுக்கு ஸ்பெஷலிஸ்ட் சொன்னான்... அவுங்க பொசிஷனுக்கு ஒரு தோட்டா போதுமானதுன்னு சொன்னான்........

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

20 comments:

  1. my opinion is the current format is very good and interesting. keep going.

    ReplyDelete
  2. பாசக்காரர்... போகும் போது போயிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.... இப்படியே இருக்க வேண்டும்...//

    அண்ணே நீங்க எங்க இருக்கீங்க. நானும் வந்து உங்களை பார்த்துட்டு போயிட்டு வர்றேன்னு சொல்றேன். என்னை பத்தியும் பிளாக்குல போடுவீங்கல்ல? ஹிஹி

    ReplyDelete
  3. நண்பரே பெட்டிசன் ல அனுபியாச்சு 2239நம்பர். வழக்கம் போல் சண்ட்வேஜ் நான்வெஜ் தொடரவும் .வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  4. உங்ககிட்ட பெர்சனலா சொன்னதையெல்லாம் இப்டி பப்ளிக்ல சொல்லலாமா? சுத்த மோசம்ணே நீங்க!

    ReplyDelete
  5. Jackie, I love the way you are writing...this is your own style...go ahead...

    ReplyDelete
  6. இதே வடிவத்தைத் தொடருங்கள்...

    ReplyDelete
  7. save fishermen link kuduthamaiku nanri Thiru.jackie avargale.

    ReplyDelete
  8. 40எம்பி சீட் தமிழகத்தில் இருக்கு... அது எங்களுக்கு கிடைக்கனும்னா.. தயவு செய்து எலக்ஷன் வரை எந்த தாக்குதலும் வேண்டாம்... எலக்ஷன் முடிந்ததும் நாங்களே தாக்க ஆயுதம் கொடுக்கின்றோம்.. எந்த பிரச்சனையும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடம் உங்க ராஜ்யம்தான்.. அப்படியே மீனவர்கள் செத்தாலும் எந்த திராவிடகட்சியாக இருந்த்தாலும் ஒரு லட்சம் கொடுத்து காயத்தை ஆரப்போட்டு விடுவார்கள்... அதனால் பிளிஸ் வெயிட் பார் சம் மன்த்ஸ் என்று பேசினாலும் பேச வாய்ப்பு இருக்கின்றது...

    Mr.Jackyji

    I think that this is going to happen.

    Your statement is 100% correct.



    Regards
    Anand
    Bamako,Mali.

    ReplyDelete
  9. Yaar enna sonnaalum ungalukku pidikkim varaiyil neengal ezhuthuveergal endra nambikkaiyudan ungal vaasagargalil oruvan.

    ReplyDelete
  10. // உங்கள் கருத்து என்ன?? //

    வாரம் ஒருமுறை மட்டும் போடலாம்... மினி தேவையில்லை... அத்துடன் தலைப்பு மாற்றம் நிச்சயம் தேவை...

    ReplyDelete
  11. வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  12. Don't CHANGE . Don't STOP . Don't MISS.
    சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ....

    ReplyDelete
  13. ஜாக்கி,

    இப்படிப்பட்ட நேர்மையான தெளிவான அணுகுமுறை தன் வாசகர்களிடம் இருப்பது மகிழ்ச்சி. உங்களுக்கு ஆர்வம் மட்டுப்படாதவரை நிறைய கண்டனக்குரல்கள் எழுப்பப்படாதவரை எந்த யோஜனையும் இன்றி தொடரலாம்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  14. நிறைய பேசியிருக்கிறீர்கள்.
    நிறைவாவும் பேசியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. Please do the book review asap... that will be very nice...Otherwise the current one is really good too...

    ReplyDelete
  16. ஜாக்கி!கையெழுத்து போட்டதோடு என்னால் இயன்ற ஆதங்கத்தை பெட்டிஷனில் கொட்டியிருக்கிறேன்.இணைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  17. thanku jecki sir nice information
    somebody have bore don"t bother
    keep going sir simply super
    once again thank uuuuuuuuuu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner