காலையில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் பிடிக்க ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் என மனைவியும் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியம் வெக்கேஷனுக்கு டிரைன் பிடிக்க போவது போல் அவசர அவசரமா நாங்கள் நடந்து போனோம்..
சோம்பல் முறித்து தனது வழக்கமான வேலைக்கு ரொம்ப ஸ்லோவாக கிளம்பி வந்து கொண்டு இருந்தது.. புதுபெண்ணை மணவறைக்கு அழைந்து வருவது போல ஒரு இன்ஜின் தூக்க கலக்கத்தோடு மெல்ல அழைத்துக்கொண்டு வந்தது.
காலையில் எழு மணி டிரெயினை பிடித்து காட்பாடியில் இறங்கி விஐடியில் பாய் பிரண்டோடு கடலை போட்ட நேரம் போக
எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் படிக்க காத்து இருக்கும் பெண்கள் பிளாட்பாரத்தை வியாபித்து இருந்தார்கள்.
என்ஜினியர் பெண்கள் பாரசூட் டைவர் போல பின்புறத்தில் ஒரு பெரிய பேக்கை மாட்டியபடி ரயிலுக்குகாத்துஇருந்தார்கள். எல்லோருக்கும் பாய் பிரண்ட் டிரெயின் ஏத்தி வழி அனுப்ப வந்து இருந்ததை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பல விஷயங்களை சுமந்து செல்லும் அஞ்சலக கடிதங்கள் பிளாட்பாரத்தில் கேட்பாறற்று கிடந்தன... யார் எடுத்து விட போகின்றார்கள் என்று அலட்சியமோ? என்னவென்று தெரியவில்லை... இல்லை சம்பந்தபட்டவர்கள் பக்கத்தில் மறைவாக தம் அடித்தக்கொண்டு இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை.
ரயில்வந்து நின்றது.. வழக்கம் போல இல்லாத கூட்டத்துக்கு கூட அடித்து பிடித்து ஏறியே பழக்கப்பட்ட நம்மவர்கள் அனிச்சை செயலாக அவசரமாக ரயில் எறினார்கள்.
ரயிலில் நல்ல கூட்டம்...இந்திய நேரப்படி ஏழு பதினைந்துக்கு கிளம்ப வேண்டிய ரயில் சரியாக ஏழரை மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது...
கதவு பக்கம் போய் கதவை திறந்து நின்றவர்களை எல்லாம் ஒரு போலிஸ்காரர் கதவை சாத்தி வைக்க வேண்டும் என்றார்.. ஆனால் அவர் சொல்லிய விதம் சரியில்லை... மரியாதை இல்லாமல் பேசுவது என்பது காக்கிசட்டை போட்டதும் வந்து விடும் போல இருக்கின்றது...
ஒருவர் சீட்டு நெருக்கமாக இருக்க, ஒருமார்வாடி கதவை திறந்து போய் நிற்க்க அங்கு வந்த போலிஸ்காரர் அங்கு யார் அவுத்து போட்டு ஆடுறாங்கன்னு கேட்க? அவர் விக்கித்து நின்றார்.... எனக்கு வாயில் வந்து விட்டது... ங்கோத்தாலும் ஒக்காலும் என்று எனக்கு வாய்வரை வந்து விட்டது.. என் மனைவி இருந்த காரணத்தால் நானாக போய் கோத்துக்கொள்ளவில்லை... அவர் எதும் பேசி அதுக்கு அந்த காக்கி சட்டை பருப்பு எதாவது பேசி இருந்தால் நானும் போய் கோத்துக்கலாம் என்று இருந்தேன் அவர் எதுவும் பேசவில்லை....கதவை சாத்தி வைக்க வேண்டும் என்றால் சாத்தி விட போகின்றார்... பெரிய பருப்பு போல பேசியது காக்கிசட்டை...
காக்கி உடுப்பு போட்டு பொது மக்களை நார்நாராக மரியாதை இல்லலாமல் கிழித்து தன்னை பெரிய பருப்பாக காட்டிக்கொண்டு விட்டு எவளாவது உயர்பதவியில் இருந்தால் அவுங்க செருப்பை துடைத்து விடுவது என்பது அவர்களின் சாபம் போல என்ன செய்வது...????
ரயில் காட்பாடி போன பிறகு கூட்டம் கட்டுக்கடங்காமல் போக ரயில் கதவை திறந்து கொண்டு பொதுமக்கள் நின்று கொண்டு பயணித்தார்கள்.. அந்த நேரத்தில் அந்த காக்கி பருப்பு கதவை சாத்த வேண்டும் என்று சொல்லி இருந்தால் இருக்கும் வெறுப்புக்கு அவர் வாங்கி கட்டிக்கொண்டு இருப்பார்.... ரூல் என்றால் அது எல்லோருக்கும் பொது... 100கிலோமீட்டரில் ரூல் பேசிய போலிஸ்காரர் காணாமல் போய்விட்டார்....
முதலில் ரயிலில் காபி, டி, இட்லி, மசால்தோசை, பிரட் ஆம்லட், மிளகாய்பஞ்சி, பிரிஞ்சி, என்று வரிசையாக வந்து கொண்டே இருந்தது.... நம்ம ரயில் போல தீனிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரயில் நம்ம ரயில்தான் போல....
மெஜஸ்ட்டிக்கில் இறங்கினோம் மடிவாலாவுக்கு போக ஆட்டோவுக்கு பிக்சட் ரேட் 200 என்றார்கள். சரி பீரிப்பெய்ட் டாக்சி விசாரித்தால் ஒரு லேமினேசன் பண்ண சார்ட் காட்டி மடிவாலா மாருதிநகர்.. சார் 450ரூபாய் அகும் என்றார்கள்..என் மனைவி பாஸ்ட் டிராக்குக்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் வந்தது..
இதனால் அறியப்படுத்துவது யாதெனில் கால்டாக்சி வைத்து மெஜிட்டிக்கில் இருந்து நகரத்தின் பல்வேறு பகுதிகளை கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
கால் டாக்சியில் வந்து கொண்டு இருந்தோம் ...ரைட் வளைவது போல் பாவ்லா காட்டி சட்டு என்று அகதி ஆஸ்பிட்டல் அருகில் நேராக போனான் கால் டாக்சி டிரைவர்… மடிவாலா போக கொஞ்சம் ஊர் சுற்ற ஆரம்பித்தான் நான் தமிழில் திட்ட ஆரம்பித்தேன்.. தமிழ் தெரிந்தாலும் தெரிவது போல அவன் காட்டிக்கொள்ளவில்லை....இதனால் 150லிருந்து 175க்கு முடிய வேண்டியது 200க்கு வந்து சேர்ந்தோம்...
இன்னும் நிறைய மரம் காணாமல் போய் இருந்தது ரோடுகளை அகலபடுத்தி இருந்தார்கள்.... போரமில் இருந்து நேராக வந்து பேட்ரோல் பங்கு அருகில் லேப்ட் வளைந்து ஒன்வேயாக போவோம்.. இப்போது நேராக போனோம்...ஆனால் திடிர் என்று டு பள்ளத்தில் இறங்கி ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்... ஒரு ஆறுமாதம் கழித்து பெங்களுர் வர ஒரு சப்வே முளைத்து இருக்கின்றது... சென்னையில் இந்த வேலை முடிக்க எப்படியும் இரண்டு வருடம் ஆகி இருக்கும்... மூன்று மாதத்தில் ஒரு சப்வே.... வாய்ப்பே இல்லை.
முன்னைக்கு பெண்கள் நிறைய பெருத்து போய்விட்டார்கள்.. ஐ மீன் உடம்பில் அல்ல.. எண்ணிக்கையில் அதிகமாகி இருக்கின்றார்கள்...கவச கூண்டலமாக செல்ப்போன் காதுக்கு ஜிமிக்கி போல பெண்களுக்கு மாறி வெகுநாட்களாகிவிட்டது...நேற்று இரவு ஜெயசிங் என்ற நாகர்கோவில் நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன்... இன்று இரண்டு நண்பர்களை சந்திக்க இருக்கின்றேன்..
தனது வேலைகளைவிட்டு விட்டு ஒருவர் தேடி வந்து பார்த்து விட்டு பேசிக்கொண்டு இருப்பது பெரியவிஷயம்... முகம் தெரியாதவர்கள் நம்மீது கொண்டு இருக்கும் பாசம் பெரியவிஷயம்... பேசியவர்கள் யாருமே எனக்கு பின்னுட்டம் போடவில்லை என்று வருத்தபட்டார்கள்.. நான் சொன்னேன் வலையை வாசிப்பவர் அத்தனை பேரும் பின்னுட்டம் போட ஆரம்பித்தால் எனது மெயில் பாக்ஸ் நிரம்பி வழியும் என்றேன். அதே போல் சங்ககிரி மூர்த்தி வந்து சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார்...
இரவு பத்துமணிக்கும் பெண்களூர் பெண்களால் பரபரபப்பாகவே இருந்தது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
Hai thala!
ReplyDelete//இரவு பத்துமணிக்கும் பெண்களூர் பெண்களால் பரபரபப்பாகவே இருந்தது...//
ReplyDeleteஓ! நல்லா இருக்கும்ல! :-)
anne madiwalala enge? saturday vara irupeengala inga ?
ReplyDeleteஅருமை.. ஒரு படத்தின் திரைக்கதையை படித்த உணர்வு ஏற்படுகிறது.. காட்சி விவரிப்பும் சூப்பர்
ReplyDeleteசாண்ட்வேஜ் எங்கே
ReplyDeleteஅந்த மார்வாரி கன்னடத்திலேயோ, ஹிந்தியிலேயோ, குஜராதியிலேயோ அந்த காக்கிச்ச்சட்டையிடம் மாத்தாடியிருந்தால், அவர் சூ...ஐ மூடிக்கொண்டு போயிருப்பார்...
ReplyDeleteநீங்க கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கி ஒரு வால்வோ பேருந்தில் (500 வரிசை) ஏறி சில்க் போர்ட் நிறுத்தத்தில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்திருந்தால் ரூ.130-இல் முடிந்திருக்கும்... சாதாரண பேருந்தில் ஏறி இருந்தால், 50-60 ரூபாயில் முடிந்திருக்கும்...
முடிந்தால் நாளை மாலை உங்களை உடுப்பி கார்டன் A2B-யில் சந்திக்கிறேன்...
ஜாக்கி,
ReplyDeleteஇன்று மதியம் உங்களை சந்தித்தேன் - சங்ககிரி மூர்த்தி. உடனடி சந்திப்பிற்க்கும் , கலந்துரையாடலுக்கும் மிக்க நன்றி.
இன்றுதான் எனது பதிவுலகை ஒரு முன்னோட்ட பதிவுடன் தொடங்கியிருக்கிறேன். பதிவுலகில் என்னை கவர்ந்தகளில், உங்களுக்கு முக்கிய இடமுண்டு.
இனி அடிகடி பின்னூட்டத்தில் சந்திபோம்.
வர்ணனை அருமை.
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteமடிவாளா அருகில் இருக்கும் அந்த சுரங்க பாதை 80 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.
கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்தில் நியாயமான கட்டணத்தில் பிரிபெய்ட் ஆட்டோ கிடைக்கும்
ReplyDelete//ஒருவர் சீட்டு நெருக்கமாக இருக்க, ஒருமார்வாடி கதவை திறந்து போய் நிற்க்க அங்கு வந்த போலிஸ்காரர் அங்கு யார் அவுத்து போட்டு ஆடுறாங்கன்னு கேட்க? அவர் விக்கித்து நின்றார்.... எனக்கு வாயில் வந்து விட்டது... ங்கோத்தாலும் ஒக்காலும் என்று எனக்கு வாய்வரை வந்து விட்டது.. என் மனைவி இருந்த காரணத்தால் நானாக போய் கோத்துக்கொள்ளவில்லை...//
ReplyDeleteநல்லவேலை இல்லாவிட்டால் உங்க பையை ஐயா சோதனை பண்ணனும்னு கூப்பிடுரானுன்னு... ஏதாவது ஒரு ஸ்டெசன்ல இரக்கிவிட்டு ரோதனைய கொடுத்துஇருப்பாரு அந்த பருப்பு... இதுபோ பருப்புகளையேல்லாம் கேள்வி கேட்க ஒரு நாதியுமில்லை...
காக்கிச் சட்டை பத்திகள் ... டெரர் ... :))
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அத்ததுனை பேருக்கும் நன்றிகள்..
ReplyDeleteநான் பெண்களூரில் இருந்து திங்கள் கிழமைக்கு மேலேதான் கிளம்ப உத்தேசித்து இருக்கின்றேன்.. இன்னும் இரண்டு மாதத்துக்கு சென்னை பெங்களூர் பயணம்தான்.,..
\\நான் சொன்னேன் வலையை வாசிப்பவர் அத்தனை பேரும் பின்னுட்டம் போட ஆரம்பித்தால் எனது மெயில் பாக்ஸ் நிரம்பி வழியும் என்றேன்.\\
ReplyDelete:-)
Hello Jackie,
ReplyDeleteIt was nice talking to you.
Will catch you today if possible..
ethayam pasukeerathu maniyan mathrei bangalouru payanakathri eurnthathu supper nadpudan nakkeeran
ReplyDeletegood post . .
ReplyDelete