சின்ன வயதில் அப்பா எங்கள் ஐவருக்கும் பிறந்தநாள் தினம் என்றால் கூடைகேக் ஒரு பத்து வாங்கி வந்து காலையில் குளித்து விட்டு வந்ததும் அந்த கூடைகேக்குகளை வாய்முழுவதும் கொள்ளாத சந்தோஷத்தோடு தின்று மகிழ்ந்த நினைவுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன...
(சிறுவயதில் பூப்போட்ட சட்டையோடு)
காலையில் எழுந்ததும் எனது அம்மா என்னை குளித்து விட்டு கோவிலுக்கு போக வற்புறுத்துவாள் கோவிலுக்கு போவதே எனக்கு அபத்தமாக இருந்து இருக்கின்றது...திடிர் என்று காலையில் கோவிலுக்கு போய் சேவித்து விட்டு வருவது என்னவோ போல் இருக்கும்.
தீபாவளிக்கு மட்டுமே எனக்கு துணி கிடைக்கும் அது ரெண்டு செட்மூன்று செட் எல்லாம் இல்லை ...ஒரே ஒரு செட் டிரஸ்.. வருடத்துக்கு ஒரு செட் டிரஸ்தான்.. அதைவைத்துதான் பலவருடங்கள் நாங்கள் ஓட்டுவோம்...
துணி கிழிந்து போய் விட்டால் காலண்டரில் குத்தி வைத்து இருக்கும் ஊசியை எடுத்து ஓட்டு தையலோ அல்லது எதோ ஒரு தையலை கையால் தைத்து எங்களுக்கு போட்டு விடுவாள்.. அம்மா துணி தைக்கும் அழகே அழகு.. அதுக்கு ஈடு இணை ஏதும் இல்லை... தைத்து முடித்து ஊசியை சுற்றி இரண்டு சுற்று சுற்றி நூலை சுற்றி பல்லால் கடித்து ஏதோ சாதனை செய்தது போல் அசாருதின் பால் தூக்கி போடுவது போல் எங்களிடத்தில் போடுவாள்.... நாங்கள் கேட்ச் பிடித்து கையால் தைத்த உடையை போட்டுக்கொண்டு செல்லுவோம்.
இன்றைய தமிழ்சினிமாவில் நாயகன் சட்டை போட்ட பிறகு பட்டன் பிய்ந்துவிட்டது நாயகிக்கு தெரிந்து போனாள்.. உடனே ஊசி எடுத்து நாயகனை பார்த்து ஒரு பார்வை பார்த்து விட்டு அதனை தைத்து முடிப்பாள்... என் அம்மா அதை விட வேகமாய் பட்டன் தைத்து என்னை அவசர அவசரமாய் பள்ளிக்கு அனுப்பி இருக்கின்றாள்...
மூன்று செட் நல்ல துணிகள் இருப்பதே அப்போது எல்லாம் பெரிய விஷயம்.
இரும்புகடை செல்வராஜ் எனும் தம்பம்பட்டிகாரர் எங்கள் ஊரில் இரும்பு கடை வைத்து இருந்தார்... லாரியில் வரும் இரும்பு லோடுகளை இறக்க ஏற்ற கடை ஆட்கள் இல்லாத போது உதவி செய்வேன்.. அப்போது என் சட்டைகளை பார்த்து விட்டு அவரிடம் இருக்கும் நல்ல சட்டைகளை எனக்கு கொடுத்து உதவிசெய்வார்... ஒரு சட்டை 25பைசாவுக்கு கொடுப்பார்.. துணிகளை சும்மா கொடுக்க கூடாது என்பதற்க்காக அப்படி கொடுபபார்...
(என் அப்பா கடந்து போன ஒரு பிறந்தநாளுக்கு.....)
மேச்சான உடைகள் பார்த்து நான் எப்போதும் உடுத்தியதில்லை உடம்பை மறைக்க வேண்டும்.. அதுமட்டும் அப்போதைய தேவையாக இருந்தது....
ஒரு பத்து வருடத்துக்கு முன் நான் ஆட்டோ ஒட்டிகொண்டு இருந்தேன்... எனக்கும் ஒரு பெண்ணுக்கும் நல்ல நட்பு தொடர்ந்தது.. அப்போது அந்த பெண் 12ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்...அப்போது எனக்கு இதே போல பிப்பரவரி ஒன்று பிறந்தநாள், அவளுக்கும் அன்றுதான் பிறந்தநாள்... இதுக்கு முன் நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்தோ அல்லது பரிசோ கொடுத்தது இல்லை..
என் குடும்பம் தவிர்த்து ஒரு சில நண்பர்கள் என் பிறந்தநாளுக்கு வாழ்த்தி இருக்கின்றார்கள்.
ஒரு பிப்ரவரியின் முதல் நாளின் போதுதான் என் பிறந்தநாளின் போதுதான் என் தோழிக்கும் பிறந்தநாள் என்று தெரிந்துக்கொண்டேன்.. இருவருக்கும் ஒரே நாள் .....நான் அவளுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினேன்... ஆட்டோ ஓட்டுபவனுக்கு என்ன பெரிதான அசத்தல் ஐடியா கிடைத்து விட முடியும்..??? பத்து ரூபாய்க்கு ஒரு பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி அவள் எதிரில் அப்பியர் ஆனேன்..
அவளுக்கு பத்து ரூபாய் சாக்லெட் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அவள் என் வாழ்த்தை ஏற்றுக்கொண்டாள்..அவள் எனக்கு பரிசு கொடுப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..ஒரு கவரை கொடுத்தாள்.. என்னவென்று கேட்டேன்? பிரித்து பார் என்றாள்... நான் பிரித்து பார்த்தேன்..அது ஒரு சிவப்பு கலர் டிஷர்ட்...
அவள் அப்பா அவளுக்கு செலவுக்கு கொடுத்த காசுக்களை சேமித்து வைத்து எனக்கு பிறந்தநாள் பரிசாக அந்த சிவப்பு டிஷர்ட் கொடுத்தாள்..
என் சம்பாத்தியத்தில் வாங்காத ,என் உறவுகள் கொடுக்காத, இரத்தம் சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணிடம் இருந்து கூடைகேக் போல் அல்லாத ஒரு துணி பரிசு..
என்வாழ்வில் நான் பெற்ற முதல் பரிசு..அந்த டிஷர்ட்டை பார்த்து விட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... என் கண்களில் தென்பட்ட சந்தோஷத்தை பார்த்தபடி அவள் பேருந்து ஏறி பள்ளிக்கு போனாள்.. நான் விக்கித்து போய் அந்த சிவப்பு கலர் டிஷர்ட்டை பார்த்துக்கொண்டு இருந்தேன்...
எல்லா அரசு விழாக்களிலும் ஜனகனமன ஒரு சடங்கு போல எல்லா விழாவுக்கு அந்த சிவப்பு டிஷர்ட்டு போட்டுக்கொண்டு சுற்று ஆரம்பித்தேன்.. என் தோழி நல்ல கலர்.. அவர்கள் வீட்டு ஆட்களும் நல்லகலர் ... அதை மனதில் வைத்து எடுத்து அந்த சிவப்பு கலர் டிஷர்ட்டை எடுத்து இருக்க வேண்டும்...
ஒரு சில நண்பர்கள் ஓத்தா நீ அந்த சிவப்பு டி சர்ட்டை போடாம வந்தாதான், நீ என்ககூட வரமுடியும் என்றார்கள்... நான் அவர்களை புறக்கணித்தேன்... அந்த பண்ணாடைகளுக்கு தெரியுமா? என் சந்தோஷமும் என் வலியும் அவர்கள் அறிய நியாயம் இல்லை....
ஒரு சிலர் காசப்பு கடையில் வேலை செய்வது போல இருப்பதாக சொன்னார்கள்... என் கருப்பு கலருக்கு இது போலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது... எனக்கு ஒரு பக்கம் கவலை என் தோழியிடம் போய் என் வேதனையையும் என் நண்பர்கள் வெறுப்பேற்றுவதையும் சொன்னேன்... எனக்கு நீ இந்த சிவப்பு டி ஷர்ட்டில்அழகாய் இருக்கின்றாய் என்றாள்...
எனக்கு அந்த வார்த்தை போதுமானது.... அந்த வார்த்தைக்காக அரேபியா சென்று கூட கசாப்புக்கடையில் வேலை செய்யலாம் என்று இருந்தேன்.. அந்த டிஷர்ட்டை கொடுத்தவள் இப்போதும் எனக்கு ஒவ்வோரு பிறந்தநாளின் போதும் எனக்கு உடைகொடுத்துக்கொண்டு இருக்கின்றாள்...கால ஓட்டத்தில் என் மனைவியாக மாறிப்போன என் தோழி...
(அப்பா கொடுத்த காசு சேர்த்து சிவப்புகலர் டி ஷார்ட் பிறந்தநாள் பரிசாய் கொடுத்தவளுடன் கடந்து போன ஒரு பிறந்தநநாளின் போது இருவரும்..............)
பிறந்தநாளுக்கு மூன்று ரூபாய் கூடைகேக் அல்லாமல் பத்து ரூபாய் பைவ் ஸ்டார் சாக்லெட்டையும் தவிர்த்து பிறந்தநாள் பரிசுகொடுக்கலாம் என்று உணர்த்தியவள் என் மனைவிதான்.. இன்னும் அவள் தம்பிக்கு கொடுத்த இரண்டு பிறந்தநாள் பரிசின் மீது எனக்கு சிறு பொறாமை உண்டு... ஒரு பிறந்தநாளுக்கு பரிசாக பல்சர் பைக்.... அடுத்த பொறந்தநாளுக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தாள்....
என் அம்மாவுக்கு பிறகு என் உடை பற்றி அதிகம் கவலைப்படுபவள் என் மனைவிதான்... இன்றும் அந்த டிஷர்ட் அப்படியே வைத்து இருக்கின்றேன். இன்று எனக்கு மட்டும் 30 சட்டைகளுக்கு மேல் .. எனக்கு உடைகள் பற்றி பொது அறிவை வளர்த்து விட்டது என் மனைவிதான்..எதுக்கோ எதையாவது மாட்டிக்கொண்டு செல்லும் பழக்கம் என்னுடையது,, அதை மாற்றியவளும் அவள்தான்..
இன்னும் டி ஷர்ட்டை கவரை என் கைகளில் தினித்த அந்த கணம் என் நினைவுகளில் இன்னும் நிழல் ஆடுகின்றது...
(எனது குருநாதர் ஒளிப்பதிவாளர்..எம் எஸ்பிரபு சாருடன்.)
இன்று எங்கள் இருவர் பிறந்தநாளுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றிகள். எப்படி வாழ்த்து தெரிவித்தார்கள் என்று பார்த்தால் பேஸ்புக் வழியாக நிறைய பேர் பார்த்து விட்டு வாழ்த்து தெரிவித்தார்கள்..
(எனது குருநாதர் எனக்கு வாழ்த்து தெரிவித்த போது...)
இன்று காலையில் எனது குருநாதர் ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு அவர்களை போய் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன்... நிறைய பேசினோம்... தற்போது ரிலிஸ் ஆகி இருக்கும் பதினாறு படத்தை பார்க்க சொன்னார்... பார்க்க வேண்டும்.
ரொம்ப நெகிழ்வாக இருக்கின்றது...காலையில் முதல் போன் .... திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ராமலிங்கம் வழக்கம் போல முதல் வாழ்த்து தெரிவிக்க, பதிவர்கள் மற்றும் என் தளத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்... நிறைய பேர் அண்ணிக்கு எங்கள் வாழ்த்தை சொல்லிவிடுங்கள் என்று உரிமையுடன் சொன்னது நெகிழவைத்தது....வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteஞாபகம் வருதே..,ஞாபகம் வருதே...
ReplyDeleteவாத்தியார் வேலையை விட்டு விட்டு 35வயதில் சினிமாவில் எதையாவது சாதிக்கலாம் என்று உழைத்துக்கொண்டு இருக்கின்றேன்.இப்போது உதவி ஒளிபதிவாளராக பணியாற்றிக்கொண்டு இருக்கின்றேன்.எதுவுமே இல்லையென்றால் பரவை முனியம்மாவுக்கு 60 வயதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததை போல கிடைக்காமலா போய்விடும்? // நீங்கள் விரைவில் வெற்றிபெற எல்லாம்வல்ல இறைவனின் துணை கொண்டு வாழ்த்துகிறேன்..
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeletehappy birthday :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அடுத்த பிறந்தநாளில் உங்களின் ரொம்ப நாள் ஆசையான ஒளிப்பதிவாளன் கனவு பலிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் தல Happy Birthday do you
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் தல :-)
ReplyDeleteMany more Happy returns of the day to both of you
ReplyDeleteஉங்களுக்கும்,அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு ஜாக்கி.
ReplyDeleteஉங்க ரெண்டு பேருக்கும் எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.
belated b'day wishes jacky..
ReplyDeleteஉங்களுக்கும் அண்ணிக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றும் மன நிறைவுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
--> உங்களுக்கு சிவப்பு டீ சர்ட் கிடைத்தது
எனக்கு ஊதா கிடைத்தது
நாங்களும் அதோ ஒன் டே பர்த் குழந்தைகள் தான்
சிறுவயதில் அப்பாவியாய் தெரிகிரீர்கள்
ReplyDeleteஅண்ணனுக்கும், அண்ணிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteWish you both a vary happy birthday.
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteஉங்களுக்கும் தங்கைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
அரவிந்தன்
இந்நாள் போல எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteஉங்கள் துணைவியாருக்கும் வாழ்த்துகள்!
அதிசய ஜோடிகள்தான்.. உங்கள் இருவருக்குமே எனது வாழ்த்துகள்.. இன்றுபோல் என்றும் வாழ்க..!
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteiniya pirantha naal vaazhththukkal Jaakky!
ReplyDeleteஇருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteநண்பர் ஜாக்கிக்கும் அவரது துணவியாருக்கும் இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கள் இருவரையும் ஒரு சேர வாழ்த்திய நட்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeletehappy birth day
ReplyDeleteஇன்று போல் என்றும் வாழ்க . பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல
ReplyDeletehi Dhanasekar,
ReplyDeleteHappy birthday...
anbudan
perumal
happy birthday sir and madam
ReplyDeleteஎனது மனம்கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஇருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete//அம்மா துணி தைக்கும் அழகே அழகு.. அதுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.//
ReplyDelete//அந்த வார்த்தைக்காக அரேபியா சென்று கூட கசாப்புக்கடையில் வேலை செய்யலாம் என்று இருந்தேன்//
//என் அம்மாவுக்கு பிறகு என் உடை பற்றி அதிகம் கவலைப்படுபவள் என் மனைவிதான்//
படிக்கும் பொது மனசுக்கு நிறைவ இருக்குது jackie , இரண்டு பெருகும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தம்பதிகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteரெண்டு பேருக்கும் பி.நா வாழ்த்துக்கள் ஜாக்கி,
ReplyDeleteஇன்னிக்கு கூட விசுவின் அரட்டை அரங்கம் மாதிரி அழுகாச்சி காவியம் எதுக்கு? சந்தோஷமா எஞ்சாய் பண்ணு மச்சி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இருவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள். எந்த மதப் பண்டிகையையும் கொண்டாடத்தேவையில்லை. பிறந்த நாட்கள் கொண்டாடப்படவேண்டும் என்ற கொள்கை உடையவன் நான். உங்களுக்கு என் வாழ்த்துகள். ஞாநி
ReplyDeleteஜாக்கி குடும்பத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete-உண்மை
Ana, Wish you a Many More Happy Returns of the Day......
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் அன்பு நட்பான துனைவியாருக்கும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇருவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅடடா..காலையில் நேரில் வாழ்த்து சொல்லும் வாய்ப்பு மிஸ்சாயிடுச்சே..சாரி & மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஜாக்கி...
ReplyDelete//சேவித்து விட்டு //
சேர்க்கை தோஷம்..இல்லைன்னா இந்த வார்த்தை வர சான்ஸே இல்லை:-)))))
சிறு வயது நிகழ்ச்சி என் வாழ்கைய போல் உள்ளது சார்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteeneya pperandhanal vazthukal happy birth day varumaiyen neeram sivapu aanaal ungaluku kadhalen neeram sivapu eruvarum vallga vallmudan nadpudan nakkeeran
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteநீங்களும் அண்ணியும் நீடூழி நெடுங்காலம் இன்று போல் என்றும் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
உங்கள் அதகளத்திற்கு ஒரு அளவே இல்லையா? வீட்டுக்காரம்மா புகைப்படத்தையும் வலையில் ஏற்றிய முதல் தைரியசாலி நீங்க தான் சேகர். இந்த நாள் மட்டும் இனி வரும் எல்லா நாட்களிலும் உங்கள் இருவரின் எண்ணங்கள் ஈடேறி வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு வர தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள் மற்றும் எங்கள் பிரார்த்தனைகள். வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்.
ReplyDeleteஇருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteWish you and your wife a Very Happy Birthday and Many More Happy Returns of the day!
ReplyDeletehappy birthday dear sekar
ReplyDeletesenthil,
doha
உங்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅண்ணே உங்களுக்கும் அண்ணிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மென்மேலும் வளரவேண்டும் அண்ணே
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே.
ReplyDeleteஅண்ணிக்கும் வாழ்த்தைத் தெரிவிக்கவும்.
அப்பா கேக் ஊட்டும் போட்டோ.. பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
ReplyDeleteஇருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஉங்களுக்கும்,அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும்!
ReplyDeleteஉங்களுக்கும் இல்லத்தரசிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDelete>>> ஜாக்கி அண்ணா, தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். விரைவில் உங்கள் லட்சியம் நிறைவேறட்டும். ட்ரீட் இல்லையா??
ReplyDeleteஎன்றும் வாழ்க வளமுடன்
ReplyDeleteஅருமையான பிறந்த நாள் விருந்து போன்ற பதிவு.
ReplyDeleteஎன் அன்பான வாழ்த்துக்கள் இருவருக்கும்!
படங்கள் ரம்மியமாக உள்ளன.
தங்களுக்கும் தங்கள் அன்பு நட்பான துனைவியாருக்கும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை...
சேரன் பாண்டியன் படத்துல கவுண்டர் பேசிய டையலாக் இது... சும்மா டைம் பாசுக்காக...என்ன பண்ண பின்னூட்டத்தில் கூட டைம் பாஸ் பண்ண வேண்டி இருக்கு தல...
many more happy returns ..
ReplyDeletegod bless
அண்ணே .. வாழ்த்துக்கள்
ReplyDeleteBelated birthday wishes sir
ReplyDeleteWishing you both a very happy birthday!!!
ReplyDeleteKarthk
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteBelated Birthday Wishes Mr.Jackiesekar!
ReplyDeleteRegards,
Arunkumar, UAE
Many more happy returns of the day both of you
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநெகிழ்வான பதிவு
belated birthday wishes for both of you sir...
ReplyDeleteசொல்லவே இல்ல... சரி பரவா இல்ல... தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅண்ணா... உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசினிமாத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்.
very nice to read...
ReplyDeletetouching also...
happy birthday...
சின்ன வயது தோழி, டி ஷர்ட் பரிசு என்று ஆரம்பிக்கும் போது இது வழக்கம் போல என்று தான் இருந்தது. தோழி தான் மனைவி, இருவரின் பிறந்த நாளும் ஒன்று என்ற போது ஆச்சர்யம். சந்தோசம். வாழ்த்துக்கள். !!!
ReplyDeleteஉங்களுக்கும்,அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteநல்லா என்ஜாய் பண்ணுங்க ஜாக்கி அண்ணே...
Birthday Wishes to you Mr.Jackie - Kaliraj Kandasamy
ReplyDeleteஉங்களுக்கும்,அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநேற்று என் அம்மாவிற்கும் பிறந்த நாள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.
அண்ணனுக்கும்,அண்ணிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு எல்லா வளங்களையும் அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் சரி. போற போக்குல அப்டியே பொறந்தநாள், பொண்டாட்டி, பரிசு-ன்னு பல விஷயங்கள கிளறி விட்டுடீங்களே...
--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - Bahrain
வாழ்த்துக்கள் ஜாக்கி. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு எல்லா வளங்களையும் அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் சரி. போற போக்குல அப்டியே பொறந்தநாள், பொண்டாட்டி, பரிசு-ன்னு பல விஷயங்கள கிளறி விட்டுடீங்களே...
--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - Bahrain
வாழ்த்துக்கள் ஜாக்கி. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு எல்லா வளங்களையும் அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் சரி. போற போக்குல அப்டியே பொறந்தநாள், பொண்டாட்டி, பரிசு-ன்னு பல விஷயங்கள கிளறி விட்டுடீங்களே...
--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - Bahrain
வாழ்த்துக்கள் ஜாக்கி. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு எல்லா வளங்களையும் அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் சரி. போற போக்குல அப்டியே பொறந்தநாள், பொண்டாட்டி, பரிசு-ன்னு பல விஷயங்கள கிளறி விட்டுடீங்களே...
--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - Bahrain
1 நாள் கடந்த போதும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இனிய வாழ்த்துக்கள்- சதீஸ்,திருப்பூர்.
ReplyDeleteBest birthday wishes to both of you. Very much happy to read this post. Go for dinner somewhere out. Keep going thala.
ReplyDeleteBelated wishes sir...
ReplyDeleteBelated birthday wishes Jackie..
ReplyDeleteஎன் மீது பாசம் வைத்து வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் என் நன்றிகள்... தாமதமாய் இருந்தாலும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்
ReplyDeleteநன்றி அண்ணா உங்களது பதிவுகளை தொடர்த்து படித்து வருகிறேன்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteலேட் ஆனாலும் லேட்டஸ்ட் வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.
ReplyDelete//மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு.... //
ஒரு திரைக்கதை போன்று எல்லா உணர்வுகளையும் சுமந்து கொண்டு சென்றது.
வெகுவாக ரசித்தேன்.
happy birth day to jakkey nadpudan nakkeeran
ReplyDeletehappy birth day
ReplyDeleteவாழிய நலம் சூழி...
ReplyDeleteஅன்பு நித்யன்
belated happy birthday wishes brother...
ReplyDelete..மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு......
ReplyDeleteஇந்த பதிவ படிக்கவே ரொம்ப பொறாமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு
நாங்களேல்லாம் கல்யாணத்தக்குபுறம் பொய்வரதட்சணை கேசுல போலிசு, செயிலு, கோர்ட்டு கேசுன்னு அலையிரோம்...
யோவ் உண்மையிலேயே நீ கொடுத்து வச்ச ஆளுய்யா
அண்ணா இப்ப தான் இத வாசிச்சேன் அப்படியே புள்ளரிச்சிட்டு நீங்க ரெண்டுபேரும் நூறுவருஷம் சந்தோசமா இருக்கனும்
ReplyDeleteஎல்லோருடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteBe lated Birthday Wishes Jackie ANNA ,.. ..
ReplyDelete