சென்னையில் இது போல ஒரு சம்பவம் போன வருடம் ஏப்ரல் மாதம் 29ம்தேதி நடந்தது.. விடியலில் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு மின்சார ரயிலை ஒருவன் கடத்தி சென்றான்.. அந்த ரயிலை வெகு வேகமாக செலுத்தி வியாசர்பாடி ஸ்டேசனில் ஒரு சரக்கு ரெயில் மேல் மோதி பெரிய விபத்தானது...எழு பேர் இறந்து போனார்கள்... 20 பேர் படுகாயம் அடைந்தார்கள்.. இன்னும் ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா? தீவிரவாதியா ?? அதுவும் தெரியவில்லை...
பொதுவாக இது போலன விஷயங்களை கதை பண்ணும் போது சமகால அரசியலை சேர்த்து ஒரு குழு அல்லது ஒரு தனிமனிதன் நாசக்காரசெயல்களை அல்லது ஒரு தீவிரவாதி நகரத்தை அழிக்க ஏதாவது செய்வான்... மக்களை குலைநடுங்கசெய்வான்.. பட் இந்த படம் ஒரு தனி மனிதனின் தவறால் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது...
இந்த படத்தை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. நேற்று இரவு படம் பார்த்து அசந்து போய் எழுதுகின்றேன்... இது போல மனநிலை பத்து வருடங்களுக்கு முன் ஸ்பிட் படம் பார்த்த போது இருந்தது.. வெகுநாட்களுக்கு பிறகு அது போலான மனநிலை....
சின்ன வயதில் இருந்து எனது கனவு என்ன தெரியுமா? ஒரு ரயில் டிரைவராக இருக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் கால ஓட்டத்தில் கனவுகள் நனவாகாமல் போய்விட்டன..
UNSTOPPABLE-2010 படத்தின் கதை என்ன??
ஒரு 80,000 கேலன் டேங் எரிபொருள் மற்றும் சரக்குகள் இருக்கும் கூட்ஸ் ரயில் ஒரு ரயில் டிரைவரின் அஜாக்கிரதையால் தானாக கிளம்பி, ஆட்டோமேட்டிக் கீயர் விழுந்து வேகமெடுத்து டிரைவர் இல்லாத அந்த ரயில் எது பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் 110கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது.... அந்த ரயிலுக்கு ஒரு நம்பர் கொடுத்த இருக்கின்றார்கள்... அந்த நம்பர்..777
சரி ஹெலிகாப்டர்ல பறந்து போய் ரயில் மேல குதிச்சி...ஹலோ நிறுத்துங்க... அதுக்கு சாத்தியம் மிகவும் குறைவு... காரணம் படத்தை பாருங்க.. அந்த முயற்சி செய்யாமல் இல்லை...ஆனால் பெயிலியர்...பக்கத்து டிராக்ல் இருந்து ஒரு ரயில் அது ஸ்பிடுக்கு முன்னாடி போய் அப்படியே வேகம் குறைத்து ரயில் வேகத்தை குறைச்சிடலாம்னு பார்த்தால் 110கீலோமீட்டர் வேகத்தை கட்டுபடுத்த முடியலை.. முன்னாடி போன ரயிலை கீழ தள்ளிவிட்டு விட்டு போய் விடுகின்றது... அதே டிராக்ல பள்ளிபிள்ளைகள் டூருக்கு போகும் ரயில் வருகின்றது...
ரயில் பேய் வேகத்தில் வருகின்றது என்று ரயிலின் யார்டு மாஸ்டர் பெண்...(Rosario Dawson) Connie Hooper ...பள்ளிபிள்ளைகள் வரும் டிரைவரிடம் சொல்ல எந்த நேரத்தில் எதிரில் அந்த எமன் வந்து நிற்குமோ என்று பயந்து டிரைவர்...ஓட்டுகின்றார்...
அதே டிராக்கில் ஒரு சரக்கு ரயில் வருகின்றது... ரயிலை ஓட்டுவது சாதாரண ஆள் இல்லை..(Denzel Washington) Frank Barnes ரயில் ரோடு என்ஜினியர்....
28 வருடமாக ரயிலின் நெளிவு சுளிவுகளுடன் பயணிப்பவர்...அவரோடு(Chris Pine) Will Colson ரயிலின் கண்டக்டர் பயணிக்கும் ரயில்
777 கட்டுபடுத்த முடியலை.. செம வேகம்.... அந்த ரயில் மோதலில் இருந்து சாமர்த்தியமா பிராங் தனது சரக்கு ரயிலை காப்பாத்திடரார்.. அதன் பிறகு தனது ரயில் என்ஜினை மட்டும் தனியா கழட்டி எடுத்துக்கிட்டு...கூடவே வர யோசிச்ச வில் காலின்சையும் அழச்சிகிட்டு கானி ஹுப்பர் தலைமையிடத்தில் இருந்து சொல்ல சொல்ல ரயிலை ரிவர்வில் மணிக்கு 90கீலோ மீட்டர் ஸ்பிட்ல அந்த ரயிலை தொரத்திகிட்டு போறார்.. அவர் துரத்தி அந்த ரயிலை பார்த்தாலும் அப்படியே நில்லுன்னு சொன்னா நீக்கவா போகுது..??? அந்த ரயிலை எப்படி நிறுத்தினாங்க???
பென்சில்வேனியாவுல ரயில் டிராக்ல ஒரு வளைவு பாலம் இருக்கு அதுவ 110கீலோமீட்டா வேகத்துல போய் ரயில் திரும்மினா ரயில் அந்த பாலத்துல இருந்து கவுந்துடும்.. அடக்த ரயில் கவுந்துட்டு போவட்டுமேன்னு சொல்லறிங்களா?? அந்த பாலத்துக்கு கீழேயே இந்ததியன் ஆயில் போல பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் இருக்கு....
அப்படி அது அந்த ஆயில் சுத்திகரிப்பு நிலையத்து மேல கவுந்தா அதுல இருக்கும் எண்ணெய்.. அப்புறம் ரயில் சுமந்து கிட்டு வரும் 80,000 கேலன் எரிபொருள் எல்லாம் சேந்து சொக்கபானை கொளுத்துனா? ஒரு எவுகளை வெடிச்ச பாதிப்பை ஏற்படுத்தும்.... பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து விடுவார்கள்...
இப்படியே சொல்லிகிட்டு இருந்தா நீங்க வேளைக்கு ஆகமாட்டிங்க.. போய் படத்தை பாருங்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
ஹாலிவுட்ல ரெண்டு ஆக்ஷன்கார பயலுக இருக்கானுங்க... ஒருத்தன் பேரு டோனிஸ்காட்...இன்னோருத்தன் பேரு ரெட்லிஸ்காட்... இரண்டு பேருமே அண்ணன் தம்பி.... இந்த படம் அண்ணன் இயக்கி வெளிவந்த இருக்கும் படம்..
2000ம் ஆண்டில் ஸ் பீட் படம் வந்து கலக்கிய போது.. அந்த படம் அப்படி ஒரு பரபரபப்பை ஏற்படுத்தியது.. இந்த படம் அந்த படத்துக்கு சற்றும் குறைவு இல்லாதது போல இயக்கி இருக்கின்றார்.. இயக்குனர் டோனிஸ்காட்....
ஏற்க்கனவே மேன் ஆப் பயர் படம் மூலம் டென்சில் வாஷிங்டன்னோடு கைகுலுக்கி இருவரும் வெற்றிபெற்றவர்கள்.....
இப்பகூட 2009ல் த டேக்கிங் ஆப் பெல்ஹேம் 123 படத்துல இரண்டு பேரும் ஜோடி போட்டு அசத்தினாங்க...அந்த படத்தை பத்தி தெரிஞ்சிக்க. இங்கே கிளிக்கவும்....
பள்ளிபிள்ளைகள் ரயில் வரும் போது நமது நெஞ்சமும் ரயில் டிரைவரின் பய முகபாவனையும் அருமை...
படத்தின் பெரிய பலம் கேமராமேன் Ben Seresin ... அவரின் உழைப்பு அலாதியானது... அதே போல இந்த படத்தின் எடிட்டர்... பாஸ்ட் கட்டிங் படத்துக்கு மெலும் விறு விறுப்பை கூட்டுகின்றது...
இந்த படத்தில் ஹெலிக்காப்டர் ஷாட் அதிகம் இருப்பதால் பேர்ட் ஐ வீயூ ஷாட் நிறைய..
வழக்கம் போல வெள்ளை சிரிப்பு சிரிக்கும் டேன்சில் அசத்தி இருக்கின்றார்...
படத்தின் புரோட்யூசர்...படத்தின் இயக்குனர் டோனிதான்..
இந்த படத்தில் நடந்த அனேக சம்பவங்கள் 2001ல் நிஜமாக நடந்தது.. ரயில் ஆள் இல்லாமல் 70கீலோமீட்டர் வேகத்தில் 2 மணி நேரம் பயணித்தது..
சினிமாவுக்கு சில மிகைபடுத்தல் மற்றும் சுவாரஸ்ய காட்சிகள் சேர்க்கபட்டன....
உண்மைசம்பவத்தில் யார் என்ன குற்றம் செய்தார்கள்.. அந்த குற்றத்துக்கு காரணம் யார் ?என்று ரயில்வே துறை வெளியிடவில்லை..
==========
படத்தின் டிரைலர்...
=================================
படக்குழுவினர் விபரம்...
Directed by Tony Scott Produced by Tony Scott
Julie Yorn
Mimi Rogers
Eric McLeod
Alex Young Written by Mark Bomback Starring Denzel Washington
Chris Pine
Rosario Dawson
Ethan Suplee
Jessy Schram Music by Harry Gregson-Williams Cinematography Ben Seresin Editing by Chris Lebenzon
Robert Duffy Studio Scott Free Productions
Prospect Park
Millbrook Farm ProductionsDistributed by 20th Century Fox Release date(s) November 12, 2010 Running time 98 minutes Country United States Language English Budget $85 millionGross revenue $136,078,23
===================
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீரவேண்டிய ஆக்ஷன் திரில்லர் படம்.....உடனே பாருங்க...
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு
பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஒட்டு போட் மறவாதீர்கள்.
படம் பார்க்க்கணும் அப்படிங்கிற ஒரு வேகத்தை ஏற்படுத்திடுச்சி உங்க விமர்சனம். இத்தனை பிரச்சனைகளை மீறி எப்படித்தான் நிறுத்தினாங்க அந்த டிரெயினை.. ஏன் சார் இவ்ளோ டெம்ப் ஏத்துறீங்க.. இன்னைக்கும் நீங்க என்னை பர்மா பஜாருக்கு அனுப்பாம விடமாட்டீங்க போல..
ReplyDeletearumai vadai innaikavathu kidaikkuma?
ReplyDeleteமிக்க நன்றி.. கவிதை.. ஒரு படத்தை நிறை குறையை விட இது போல டெம்ட் ஏத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்....என்ன நான் சொல்லறது சிட்டி பாபு...---??
ReplyDeletei think you post the review for this film is very late sir. definitely superb screenplay. worth watch it. //பார்த்தே தீரவேண்டிய ஆக்ஷன் திரில்லர் படம்//
ReplyDeleteஉங்க விமர்சனம் ஒரு வேகத்தை ஏற்படுத்திடுச்சி ...
ReplyDeleteபார்த்தே தீரவேண்டும் என்று...
நான் ஓட்டு போட்டுட்டேன்..
http://www.sakthistudycentre.blogspot.com/
//ஒரு ரயில் டிரைவராக இருக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் கால ஓட்டத்தில் கனவுகள் நனவாகாமல் போய்விட்டன.. //
ReplyDeleteநீங்க பரவாயில்லை பாஸ் நம்ம கனவு என்ன தெரியுமா ரயிலுக்கு முன்னால் பச்சை ,சிவப்பு நிறக்கொடிகளை மாறி மாறி காட்ட வேண்டும்
பாத்துட்டீங்களா?????
ReplyDeleteநான் இன்னும் இல்லை!!
நல்ல விமர்சனம்
படத்தைப் போலவே உங்கள் விமர்சனம் நல்ல ஸ்பீடு.
ReplyDeleteNALLA ACTION FILM?TODAY SEA IT
ReplyDeleteலேட்ஆனாலும் லேட்டஸ்ட் ஆகா தான் விமர்சனம் பண்ணி இருக்கீங்க
ReplyDeleteசூப்பர்ங்க♥♥♥
ReplyDeletemany scenes taken from "runaway train". that is also very fast. watch
ReplyDeletehttp://www.imdb.com/title/tt0089941/
மிக அருமையான விமர்சனம். நானும் படம் பார்த்துவிட்டேன் இரண்டு தடவை !!
ReplyDelete// இன்னும் ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா? தீவிரவாதியா ?? அதுவும் தெரியவில்லை... //
ReplyDeleteஅவனது புகைப்படத்தை ரயில்நிலையங்களில் ஒட்டி வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா... மிகவும் கோரமாக இருக்கும்...
விமர்சனம் மிக அருமை. படத்தை உடனே பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.
ReplyDeleteவிமர்சனம் அருமை. படத்தைப் போலவே!!
ReplyDelete