அங்காடி தெரு படத்துல ஒரு சின்ன சீன்...இரண்டு பேர் காதலிப்பாங்க... அதுவும் சாதாரண காதல் இல்லை.. உயிருக்கு உயிராய் காதலிப்பாங்க... முதலில் அவன் தான் அந்த பெண் பின்னாடி சுத்தி காதலை வெளிபடுத்துவான்..ஒரு கட்டத்தில் காதல் வெளியே தெரிய அந்த கடை மேனேஜர் விசாரிக்கும் போது அடுத்த வேலை சோத்துக்காகவும் எதிர்கால வாழ்நிலை பற்றிய பயம் காரணமாகவும்...
நான் இந்த புள்ளயை காதலிக்கலை என்று பத்து பேர் முன்னாடி சொன்னதுக்காக மாடியில் இருந்து குதித்து உயிரை அந்த பெண் விட்டு விடுவாள்.. அந்த பெண் உயிரை விட ஒரே காரணம்.... ஒரு ஆண்மகனாக
நான் அந்த பிள்ளையை காதலித்தேன் என்று சொல்லமுடியாத ஒருத்தனை போய் காதலிச்சு தொலைச்சிட்டமே என்று ஒரு கோபத்திலும் தனது எதிர்காலத்தில் இப்படி ஒரு பேடிப்பையயோடு எப்படி வாழ்வது என்ற பயத்தோடும் உயிர் துறக்கின்றாள்... காரணம் காதலனின் தைரியமின்மை அந்த பெண் உயிர்துறக்க முக்கிய காரணம்....
நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கின்றீர்கள்...அந்த பெண்ணோடு ஜாலியாக இருக்கின்றீர்கள்... பொருளாதார நெருக்கடி உங்களுக்குள் வருகின்றது அப்போது என்ன செய்வீர்கள்..??? அதில் இருந்து மீள வழி பார்ப்பீர்கள்... சரி சில சுயநலவாதி காதலன்கள் என்ன செய்வார்கள்??? காதலியை விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்... அது எவ்வளவே மேல்... ஆனால் காதலித்த பெண்ணை விபச்சார புரோக்கருக்கு விற்று வரும் பணத்தில் காஸ்ட்லி பைக் வாங்கியவனை கண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்.....
VIRTUALLY A VIRGIN-2008- உலகசினிமா/ஹங்கேரி படத்தின் கதை என்ன??
நம்பிக்கை துரோகத்தை போல பெரிய துரோகம் எதுவும் இல்லை.. பணத்துக்கா காதலன் தனது காதலியை விப்ச்சாரத்தில் தள்ளியகதை இது..
புரோக்கா 18 வயது பருவ பெண்...அவளின் காதலனோடு இனிமையாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கும் போது பணம் இல்லை என்ற நிலை வரும் பொது அவளை ஒரு விபச்சார புரோக்கரிடம் விற்கின்றான்...தலையேழுத்தே என்று விபச்சாரியாக மாறுகின்றாள்... அவளது வாழ்வில் மோரிக் குறுக்கிடுகின்றான்...
விபச்சாரி என்று தெரிந்தும் நட்பு பாராட்டி அவளை மாக்கெட்டிங் வேலைக்கு சேர்த்து விடுகின்றான்..... விப்ச்சார தொழிலில் இருந்து புரோக்கா எப்படி மீண்டாள்... அவள் மீண்டு விட்டாள் போதுமா? விலை கொடுத்து வாங்கிய புரோக்கர் சும்மாவிடுவானா??? அவ்ன டார்ச்சர் போன்றவற்றில் இருந்து புரோக்கா எப்படி புது வாழ்வை துவங்குகின்றாள் என்பது மீதி கதை....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
.ஒரு விபச்சாரி அந்த தொழிலில் இருந்து எப்படி விடுபட்டு நாலு பேர் மதிக்கும் விதமாக தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக்கொள்கின்றாள் என்பதே இந்த படத்தின் கதை.
புரோக்காவை இன்று எல்லாம் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அந்த பெண் ஒரு மாதிரி அழகு.. and anothr think is she have innocent face also...என்னடா திடிர்னு இங்கிலிபீச்சுன்னு பார்க்கிறிங்களா?? சின்ன சின்ன வரியா எழுதி பார்க்கலாம்னுதான்...இப்பதான் தோனுச்சு தோனுச்சி எழுதிட்டேன்..
புரோக்காவை காதலின் விபச்சாரியாக ஒரு மாமா பையனிடம் தன்னை விற்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஓ ராமா என்று கத்தி ஆர்பாட்டம் எல்லாம் செய்யாமல் முகத்தை இறுக்கமாக வைத்து கண்களில் இருந்து பொல பொலவென் நீர் வடியும் பாருங்கள் அதுதான் நடிப்பு....
புரோக்காவை அவளது காதலன் விபச்சார புரோக்கரிடம் விற்க்கும் போது எந்த பேச்சும் பேசாமல் கலங்கிய கண்களுடன் புரோக்கர்க்களுடன் செல்வதும், புரோக்காவை லாரியில் வைத்து புனரும் போது லாரி ஓட்டுனர்கள் கிழே உண்பதற்கு கறியை நெருப்பில் வாட்டி பீஸ் பீஸ்ஆக பிய்க்கும் காட்சியும் ஒரு பெண்ணை பல பேர் ஒன்றன் பின் ஒன்றாய் புணர்ந்து முடிந்ததும் தரையில் கிழிந்த நாராய் புரோக்கா கிடக்கும் இடத்தில் நமக்கு பரிதாபம் வருகின்றது..
விபச்சார தொழில் நம்ம ஊர் போல இல்லாமல் ரோட்டில் இருக்கும் மீடியனில் தண்ணீர் பாட்டில், கொஞ்சம் சாப்பிட உணவு, எவ்வளவு நேரம்தான் நிற்பது.. அதனால் உட்கார ஒரு மடக்கு நாற்காலி என்று அந்த இடத்தை செட் செய்து அவளை அந்த இடத்தில் இறக்கிவிட்டு புரோக்கர்மாமா வருவது அந்த ஊர் தொழில் முறையை காட்டுகின்றது..
அவள் மனதை நேசித்து உடலை நேசிக்காத ஒருவன் அவள் வாழ்வில் வந்தவுடன் அவள் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதை விறு விறுப்புடன் சொல்லி இருக்கின்றார்கள்.
புரோக்கர் தனது அம்மா மருத்துவமணையில் இறக்கும் நிலையில் இருக்க...புரோக்காவை தனது மகள் என்று பொய் சொல்லி தனது அம்மாவிடம் நடிக்க சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டில் அடுத்தவனிடம் கூட்டிக்கொடுப்பது உறவு முரண்பாட்டினை காட்டுகின்றார் இயக்குனர்...
புரோக்கா மற்றும் அவள் வாழ்வில் குறுக்கிடும் மோரி இருவருக்கும் இடையே உருவாகும் காதல் அழகு.........
உடையோடு செக்ஸ் வைத்துக்கொள்ள ஒரு ரேட்... மார்பகம் காட்டினால் ஒரு ரேட்.. பிளோ ஜாப் என்றால் ஒரு ரேட் என்று கஷ்டமரிடம் புரோக்கா பேசுவதை பார்க்கும் போது நமக்கு மயக்கம் வருகின்றது...அதே கஷ்டமர் அவள் வாழ்வில் எந்த வகையில் உதவுகின்றான் என்பது கிளைமாக்ஸ்....
இந்த படததின் இயக்குனர் Péter Bacsó 2009 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்...இந்த படம் வெளியானது 2008ல்....இந்த படம்தான் அவரின் கடைசிபடம் என்று நினைக்கின்றேன். காரணம் அவருக்கு வயது 81....
இவருடை
A tanú (1969)
என்ற படம் கம்யூனிசம் பற்றி விரிவாய் பேசிய படம் அதனால் ஹங்கேரியில் தடைசெய்யபட்ட படமும் கூட...
நம்ம ஊரில் விரிட்சுவல் வெர்ஜின் மாதிரி படம் எடுத்தால் நட்டுக்குனு சாகும் வயசில் இந்தமாதிரி படம் எடுக்குது சனியன் என்று விமர்சனம் முன்வைக்கப்ட்டு இருக்கும்.
இவருடைய இந்த படத்துக்கு லைப்டைம் அச்சிவ்மென்ட் அவார்டு கிடைத்தது...
80வயசுல இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா? என்று படத்தை பார்க்கும் போது அந்த கலைஞனை கொண்டாடுவீர்கள்...
சென்னை 8ஆம் உலகபடவிழாவில் உட்லண்ஸ் சிம்பொனி தியேட்டரில் முதல் படமாக பார்த்தேன்...
படத்தன் டிரைலர்....
படக்குழுவினர் விபரம்..
Director:
Péter Bacsó
Writer:
Péter Bacsó (screenplay)
Stars:
Júlia Ubrankovics, Attila Tóth and Gergely Kaszás
Péter Bacsó
Writer:
Péter Bacsó (screenplay)
Stars:
Júlia Ubrankovics, Attila Tóth and Gergely Kaszás
பைனல் கிக்..
இந்த படம் பார்த்தேதீரவேண்டியபடம்...பீல் குட் மூவி....
============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
இந்த பதிவு பிடித்து இருந்தால் தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் ஓட்டுப்போட மறவாதீர்கள்.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் மற்றுமொரு விமர்சனம்.
ReplyDeleteநிச்சயம் பாருங்கள் குமார் அருமையான படம்...
ReplyDeleteI LIKE TO PURCHASE A DVD OF THIS MOVIE
ReplyDeleteVOTED..
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteநல்ல விமர்சனம் ஜாக்கி சார். டைரக்டர் வயசைப் பார்த்துட்டு ஆடிப்பூட்டேன்.
ReplyDeleteவணக்கம் அண்ணே என் பெயரு செந்தில். நான் இப்பொழுது தான் ப்ளாக் எழுத ஆரம்பித்துள்ளேன். இது நாள் வரை இது பற்றிய விவரம் எனக்கு தெரிய வில்லை.
ReplyDeleteதற்பொழுது தான் ஆரம்பித்துள்ளேன். எனது ப்ளாக் ஐ பார்த்து விட்டு தங்களது மேலான விமர்சனத்தை பதிவு செய்யவும்.
//and anothr think is she have innocent face also...என்னடா திடிர்னு இங்கிலிபீச்சுன்னு பார்க்கிறிங்களா?? சின்ன சின்ன வரியா எழுதி பார்க்கலாம்னுதான்...இப்பதான் தோனுச்சு தோனுச்சி எழுதிட்டேன்..// nice post & nice humour.
ReplyDeleteKannungala....yaarunna torrent link podunga....Blog padikka 10 nimisham...torrent theda 2 mani neram aaguthu....
ReplyDeleteபடத்தில் வரும் காட்சி ஒன்றில். நீ 'விபச்சாரிய' என்று அவளிடம் ஒருவன் கேட்கும் பொழுது இல்லை!! என்னுடைய "உடம்பு" மட்டும் தான் என்று கூறும் வசனம் படத்தின் highlight. a good film by the director, hats off!!!!
ReplyDelete