சென்னையில் ஸ்பென்சர் பின்பக்கம் இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஒட்டலுக்கு ஒருவன் தன் மனைவியுடன் செல்லுகின்றான்.. அவன் பெயரை எளிதில் நினைவில் வைக்க அவக் பெயரை குமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. ஒட்டலில் காரை பார்க் பண்ணும் இடத்தில் என்ன குமார் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க? என்று செக்யூரிட்டி கேட்க இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கு கல்யாணநாள் என்று சொல்லி விட்டு ஹோட்டலுக்கு போய் விடுகின்றான்..
செக்யூரிட்டி ஒரு ஒயர்லெஸ் எடுத்து ஹலோ குமார்சார் சார் வீட்டுக்கு வர நேரம் ஆகும் என்று சொல்ல இதை எதுக்குய்யா ஒயர்லெஸ்ல சொல்லறான்னு பார்த்தா? குமார் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன் நிக்குது அதில் இருக்கும் ஒருவன் முகமுடி போட்டுகிட்டு குமார் வீட்டுல போய் திருடறான்...அந்த வீட்ல ஒரு புட்டு போட்ட பொட்டி ஒன்று இருக்கும் அதை எடுத்துக்குறான்..
பயபுள்ள அப்படியே போய் இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை குமார் பொண்டாட்டி ஒரு பெரிய போட்டோவுல செமையா இருக்காங்க.. அது என்னைய்யா திடிர்ன்னு இருக்கான்னு சொல்லறதுக்கு பதில் இருக்காங்கன்னு ரொம்பவும் பம்முற என்று நீங்கள் முனகுவது எனக்கு புரிகின்றது..அந்த அம்மா ஆண்ட்டிங்க.. அதனால அந்த மரியாதை...பட் அந்த திருட்டு பய அந்த பெரிய போட்டோமேல இருக்கும் அந்த பெண்மணிமேல காதல் வயப்பட்டு அந்தபெரிய போட்டோவையும் திருடிகிட்டு போறான்.. இப்படி வந்த இடத்துல தன் வேலையை பார்க்காம இப்படி கவனத்தை சிதறவிட்டா? எப்படி பொழப்பை பார்க்குறதுன்னு உங்களுக்கும் எனக்கும் நன்றாக தெரிகின்றது... பட் அந்த திருட்டு பயபுள்ளைக்கு தெரியலை.. காரணம்.... காதல்... சரி அப்படிப்பட்ட ஒரு திருட்டு பயபுள்ளையின் கதையை இந்தபடத்துல பார்க்கலாம்......
(thief of hearts-1984) படத்தின் கதை என்ன?
ரொம்ப சிம்பிளான கதைதான்..... மூன்றே மூன்று மெயின் கேரக்டர்களை வைத்து படம் செய்து இருக்கின்றார்கள். Scott (Steven Bauer) ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடும் போது அந்த வீட்டில் திறக்கமுடியாத சின்ன பெட்டியும் அந்த வீட்டு பெண்மணியின் புளோ அப் பெரிய போட்டோவையும் அந்த பெண்மணி அழகில மயங்கி எடுத்துகொண்டு வ்நது விடுவான்... கணவன் மனைவி ரெண்டு பேரும் இண்டிரியர் டிசைன் செய்பவர்கள். அந்த பெண்மணி மிக்கிக்கு (Barbara Williams) ஒரு பழக்கம் தன் எண்ணவோட்டங்கள் அத்தனையும் ஒரு டைரியில் எழுதி ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்து விடும் ரகம்..கணவன் கூட அவைகளை படித்தது இல்லை...
காரணம் அவள் பர்சனல். ஆனால் திருடிக்கொண்டு போன அந்த திருடன் அந்த டைரியை படித்த விட்டு அவளோடு பழகி அவளை படுக்கை வரை கொண்டு செல்கின்றான்...மிக்கி உண்மையை கண்டுபிடித்தாளா? இரண்டு பேர் ஊர்சுற்றும் வரை அவள் கணவன் என்ன செய்து கொண்டு இருந்தான்?? பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டானா? என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் கிளாசிக் வகையை சேர்ந்த்து...
இந்த படத்தின் பெரிய பிளஸ் இந்த படத்தின் இசை.... எல்லா பாடல்களுட் கேட்க கேட்க அற்புதமாக இருக்கும்.. அது மட்டும் அல்ல அந்த பின்னனி இசை கலக்கல் ரகம்..
திருடனுக்கும் வாழ்வில் தேடல் கொண்ட பெண்மணிக்கு துளிர்க்கும் அந்த காதல் மிக அழகு...
முதலில் அவனிடம் நட்பு பாராட்டும போது இருக்கும் உடைக்கும் அவன் மீது மதிப்பு வந்ததும் மிக்கிக்கு மாறும் உடைகள் வைத்தே அவள் எண்ணவோட்டத்தை விஷுவலாக சொன்னது அழகு..
என்னதான் ஸ்மார்ட் பாயாக இருந்தாலும் பெண் என்பவள் புதிரானவர்களோடும் வெளிப்படையாக இல்லாதவர்களோடும் பழகவே மாட்டார்கள்.
பார்ட்டியில் மிக்கியின் நண்பி. அவன் ரொம்ப ஸ்மார்ட் என்று சொல்லும் போது ஸ்காட் மிக்கியை பார்த்து கை அசைக்கும் போது... நீ யாரை ஸ்மார்ட்டுன்னு சொன்னியோ அந்த பையன் எனக்கு பிரண்டு என்று அவள் நண்பியை பார்க்கும் இடம் அழகு....
மிக்கி மீது ஸ்கார்ட்டுக்கு இருக்கும் காதலை கண்களில் வழிய விடுவதும்...ஸ்காட் மேல் இருக்கும் ஈர்ப்பை கண்ட்ரோல் பண்ண மிக்கி தவிப்பதும் நல்ல பர்பாமென்ஸ்...
வீட்டுக்கு வருபவளுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையில் சாய்க்கும் காட்சியை காட்சி படுத்திய இடத்தில் Douglas Day Stewart இயக்குனரின் ரசனை பளிச்.....
என்னதான் உடல் ஒத்துக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லும் அதே படுக்கறை காட்சி அருமை.
இந்த படத்தின் தயாரிப்பாளர்.. பெரிய தயாரிப்பாளர்.. Jerry Bruckheimer
இந்த படம் அப்படியே எங்கேயோ பார்த்த்து போல இருக்கின்றதா?- எஸ் தமிழில் வந்த என் சுவாசகாற்றே படத்தில் ஒரு போர்ஷன் இதில் இருந்து எடுத்து கையாளபட்டது.
படத்தில் சில காட்சிகள் இசையை ரசிக்க......
படக்குழுவினர் விபரம்.
Directed by Douglas Day Stewart
Produced by Jerry Bruckheimer
Tom Jacobson
Don Simpson
Written by Douglas Day Stewart
Starring Steven Bauer
Barbara Williams
John Getz
David Caruso
Christine Ebersole
George Wendt
Music by Harold Faltermeyer
Cinematography Andrew Laszlo
Editing by Tom Rolf
Distributed by Paramount Pictures
Release date(s) October 19, 1984
Running time 105 min.
Country United States
Gross revenue $10,400,000
பைனல் கிக்...
இந்த படத்தின் இசைக்காகவும் அந்த மெல்லிய காதல் உணர்வுகளுக்கும் இந்த படத்தை பார்க்கவேண்டும்... இந்த அவசியம் படம் பார்க்கவேண்டிய படம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
உங்கள் விமர்சனம் மிகவும் அருமை அண்ணா. படத்தின் கதைக்குள் செல்லாமால் சொல்லியிருப்பது அருமை.
ReplyDeleteநல்ல படம் ! நல்ல வலை பதிவு !
ReplyDeleteநல்ல பகிர்வு சார்...
ReplyDeleteசீக்கிரமே பாத்திடுறேன்
பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டானா? என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.// பாதி கதையை ரொம்ப நல்லா சொல்லி உசுப்பேத்தி விட்டு மீதியை திரையில் பார்க்க சொல்லிடிங்களே.இந்த படம் எந்த தியேடரில் பார்க்கிறது.
ReplyDelete