இந்த படத்தை சீக்கிரமாக நான் பார்க்கவேண்டும் என்று நினைக்க முக்கிய காரணம். இந்த படத்தின் புரொட்யூசர் ஒரு டிவி பேட்டியில் வெற்றிமாறனை பக்கத்தில் வைத்துக்கொண்டு இன்டர்வெல் பிளாக் மட்டும் 17 நாளைக்கு ஷுட் செய்தார் என்று சொல்ல.. எனக்குள் இருக்கும் சினிமா மிருகம் விழித்துக்கொண்டது..அப்படி என்ன இன்டர்வெல் பிளாக் ??? அது 17 நாளைக்கு ஷுட் செய்யும் அளவுக்கு என்று பார்க்கவேண்டிய ஆவலை தூண்டிவிட்டு விட்டார்கள்..
தனுஷ் அம்மா பாத்திரத்துக்கு தேர்வு செய்த இடத்தில் இந்த படத்தின் இயல்புத்தன்மை பளிச்சிடுகின்றது.
கருவை சுமந்து அதன் பொருட்டு இன்ப துன்பங்களை கடந்து பிள்ளையாய் பெற்று இந்த பூமியில் அந்த பையன் சொந்தகாலில் சமுகத்தில்தலைநிமிர்ந்து நிக்க வேண்டும் என்று நினைப்பது எல்லா தாயின் கனவுதான்...உருப்படாமல் போக வேண்டும் என்று எந்த அம்மாவும் நினைப்பது இல்லை. அப்படி ஒரு அம்மாவை இந்த படத்தில் பார்த்தேன்..
நான் எட்டாம் வகுப்பு முடித்தவுடன் முதல் முதலாக விடுமுறையின் போது பகுதி நேரமாக கடலூரில் ஒரு நகை கடையில் வேலை செய்தேன்.எனக்கு ஒன்பதாம்வகுப்புக்கு தேவையான புத்தக நோட்டுக்களுடன், ஒரு 500ரூபாய் பணம் கொடுத்தார்... அந்த பணத்தில் நான் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?- ஒரு ஜவுளி கடைக்கு சென்று 75ரூபாய்க்கு ஒரு மஞ்சள் காட்டன் புடவை எடுத்துக்கொடுத்தேன்...
அந்த புடவையை என் அம்மாவிடம் கொடுத்த போது என் அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.. அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வருனிக்க முடியாது.. அப்படி ஒரு சந்தோஷத்தை என் அம்மாவின் கண்களில் பார்த்தேன்.
அந்த புடவையை ஊரில் உள்ள எல்லோரிடமும் காட்டி சந்தோஷம் கொண்டாள்.. உடல் நிலை சரியில்லாத போது கூட அந்த புடவையை கீழே போட்டோ அல்லது பக்கத்திலோ வைத்தபடி படுத்துக்கொள்ளுவாள்..பிள்ளை வாங்கி கொடுத்த ஒரு புடவைக்கு இவ்வளவு மதிப்பா என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது..
அப்படி ஒரு காட்சி இந்த படத்திலும் வருகின்றது.. சோகத்தோடு இருக்கும் தனுஷ் அம்மா கதாபாத்திரம்...அம்மாவுக்கு ஒரு பட்டுப்புடவை கட்டி நடந்து வரும் போது என் அம்மா ஞாபகம் வந்தது... இப்படி படம் நெடுக அவர் அவர்களுக்கு பிடித்த நினைவுகள் படம் நெடுக பயணிக்கின்றது....
இரண்டு வருட உழைப்புக்கு பிறகு திரைக்கு வந்து இருக்கும் படம்...நிலத்தில் சிந்திய வெற்றிமாறனின் வியர்வை துளிகள் இப்போது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றன..
வாழ்வில் ஏதாவது ஒரு துறையில் ஜெயித்த ஆட்களுக்கு எப்போதுமே தனது அனுபவக்கணக்கு மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும். ஆனால் அந்த இடத்தை ரொம்ப சின்னபையன் ஈசியாக அந்த கணக்கை சில நேரத்தில் சடுதியில் போட்டு விட முடியும்.... உதாரணத்துக்கு ஒரு உயர்நிலை பள்ளி ஆசிரியரை விட முதல் வகுப்பு குழந்தை இப்போது ஆங்கிலம் நன்றாக பேசுகின்றது அது போலதான்..
கேமராகவிஞர் பாலுமகேந்திராவிடம் பணி புரிந்த ஒருவர் திடிர் என்று பாட்டு எழுத போகின்றேன். என்று சொன்ன போது பாலுமகேந்திராவுக்கு கோபம்... பாட்டு எழுத போகின்றேன் என்றுசொன்ன உதவியாளன் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்து இருக்கின்றார்... இருப்பதை விட்டு பறப்பதை ஏன் பிடிக்க வேண்டும் என்று கூட பாலுமகேந்திரா நினைத்து இருக்கலாம்... சரி மகனே உன் பாடு என்று நம்பிக்கை இல்லாமல் அரைமனதாய் அனுப்பி வைக்க இன்று அவரின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஒளிக்கின்றன.. அந்த கவிஞர் நா .முத்துக்குமார்... இந்த செய்தி சுகா என்பர் எழுதி இந்த வார விகடன் கட்டுரையில் வந்து இருக்கின்றது..
குருவை மிஞ்சிய சிஷ்யன்கள் வாழ்வியல் சம்பவம்களை உதாரணம் சொல்ல நிறைய இருக்கின்றது. அப்படி குருவை மிஞ்சிய சிஷ்ய பிள்ளையின் கதையை மதுரை மண்ணின் மனத்தோடு சொல்லி இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்...
ஆடுகளம் படத்தின் கதை என்ன??
பேட்டைகாரர்...சேவல் சண்டையில் கிங்..சேவலை பற்றி ஏடூஇசட் தெரியும்... தோற்ற சேவலையோ அல்லது போட்டியில் தோற்கும் சேவலையோ உயிரோடு விட்டு வைக்கமாட்டார்...கழுத்து அறுத்து குழம்பு வைக்க வேண்டியதுதான்...அவரிட நிறைய விடலை பசங்கள் சேவல் சண்டையில்உதவியாய் இருந்து தொழில் நுனுக்கங்கள் கற்று வருகின்றார்கள்.. அதில் கே.பிகருப்பும் ஒருவன்.. சண்டையில் தோத்த சேவலை பேட்டைகாரர் கழுத்து அறுத்து போட சொல்ல.. அதன் மேல் உள்ள பாசத்தினால் அதனை கொல்லாமல் உயிரோடு வளர்க்கின்றான்.. கருப்பு வாழ்வில் ஐரின் என்ற ஆங்கிலோ இந்திய பெண் குறுக்கிடுகின்றாள்.. வாழ்க்கை இப்படியாக போய் கொண்டு இருக்கும் போது பேட்டைகாரர் பேச்சை மீறிஒரு காரியத்தை செய்ய போக கருப்பு வாழ்வை அந்த செயல் மாற்றியது என்பதை தியேட்டரில் போய் படத்தை பார்த்து ரசியுங்கள்..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்றவரிகளுக்கு ஏற்ப்பவும்,நமக்கு கெடுதலை செய்தாலும் அவனுக்கு நல்லதையே செய்யுங்கள் என்று சொல்வது போல எதிரிக்கு நல்லது மட்டும் அல்ல அவன் பெயர் கூட கெடக்கூடாது என்று நினைக்கும் ஒருவனின் கதை..
சேவல் சண்டையை பற்றி அக்கு வேறு ஆணிவேறாக டீடெய்லாக முதலிலேயே சொல்லி மற்ற மாவட்டத்துக்காரர்கள் எதிர் கேள்வி எழுப்பாதவாறு செய்து விட்டார் இயக்குனர் வெற்றி...
எனது ஊர் கடலூர்.. மாடு விரட்டு மட்டும் பார்த்து இருக்கின்றேன்..சேவல் சண்டை கேள்வி பட்டு இருக்கின்றேன். இந்த படம் சேவல் சண்டைக்கு மதுரை மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை அழகியலுடன் சொல்லி இருக்கின்றார்கள்.
இன்டர்வெல் பிளாக் சும்மா சொல்லக்கூடாது.. லாகான் படம் பார்த்த திருப்தி என்று ஒரு வரியில் சொல்ல முடியாது.. அந்த உழைப்புக்கு ஒரு சல்யூட்...
தனுஷ்க்கு தன் கேரியரில் இந்த படத்தை குறிப்பிட்டு சொல்லிக்கொள்ளலாம். அற்புதமான பாடிலாங்வேஜ்...என்ன டயலாக் டெலிவரி..
சேவலிடம் பேசும் போது .... தோத்து மட்டும் போயிட்டன்னு வச்சிக்க உன்னை கொன்ணே போட்டுவிடுவேன் என்று சொல்வதாகட்டும்.
தாப்சியை பார்த்து விட்டு யாத்தே சாங்கில் பின்புறமாக ஆடிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து ஆடும் போது அந்த உற்ச்சாகம் பார்வையாளனையும் தொற்றிக்கொள்வது நிஜம்..
1000ம் பணம் வேனும் என்று கேட்க பீஸ் கட்ட மட்டும் பணம் இருக்கு என்று தாப்சிசொல்ல அந்த பணத்தை பிடுங்க... அதுக்கு தாப்சி பீஸ் கட்டும் பணம் என்று சொல்ல... அதுக்கு தனுஷ் நீ தானே என்னை காதலிக்கறேன்னு சொன்ன அதுக்கு பைன் என்று சொல்லும் காட்சியிம் தியேட்டரில் வெடி சிரிப்பு...
சேவல் சண்டை என்றால் என்ன ?என்று கடைகோடி தமிழனுக்கு புரியவைத்தும்.. பிளைட்டில் எல்லாம் சேவல் வருவது என்று உண்மைகளை புட்டுபுட்டு வைக்கின்றார்கள்..
கோழியின் அடிப்பட்ட கழுத்தை தைக்கின்றார்கள். கோழிக்கு ஒத்தடம் கொடுக்கின்றார்கள்... அதுக்கு தீனியாக ஏதோ கொடுக்கின்றார்கள்.. கோழிக்கு விசுறு கின்றார்கள்.
முதலில் சேவல் சண்டைக்கு ரெய்டு வெரும் போது போலிஸ் சேசிங் காட்சிகள் அசத்தல் ... கேமராமேன் பெண்டு கழண்டு போன இடம் என்று சொல்லிக்கொள்லாம்... நிறைய பிளாக்குகளில் ஷுட் செய்து அந்த சேசிங்கை ரியலாக கண் முன் நிறுத்துகின்றார்கள்..
இந்த படத்தில் அதிகமான செட் போட்டு எடுத்த காட்சிகள் ரொம்பவும் குறைவு.. அதனால் படத்தில் ரசிகன் ஒட்டும் தன்மை அதிகரிக்கின்றது...
டாப்சி பற்றி சொல்ல வேண்டும்.. நல்லகலர்.. கோணலான வாய்தான் இருந்தாலும் ஒரு ஆங்கிலோ இந்தியன் கேள் கேரக்டருக்கு மிக அழகாக பொருந்துகின்றார்..
டாப்சி வீட்டில் டவுசருடன் தொடை தெரிய உட்கார்ந்து இருக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கின்றது. மேலும் டாப்சி பற்றி ஜொள்ள பேஜின் கடைசி பக்கத்துக்கு செல்லவும்..
தனுஷ் டாப்சி வீட்டில் இருக்கும் போது ஒரு குழந்தை அழுவும் போது அந்த குழந்தையை சமாதானபடுத்த உட்கார்ந்து எழுந்து இருக்கும் போது தப்சி போட்டு இருக்கும் சல்லை துணியில் முழுபரிணாமும் தெரிய தியேட்டரில் விசில்....
ஏற்கனவே தப்சி நடித்த தெலுங்கு படத்தை பார்த்து அரன்டு போய் உட்கார்ந்து இருந்தேன் அந்த படத்தை பற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்.
தனுஷ் கூடவே நம்பிக்கையாக பயணிக்கும் ஒரு நபர்...டாப்சியை முதலில் அவர் நன்றாக பார்த்து வைக்க.. அதை சொல்லும் போது எல்லாம் அவர் முகத்தில் காட்டும் பெருமீதமும்... இவன்பார்த்துட்டானே என்ற கோபமும் தனுஷ் முகத்தில் பிரதிபலிக்கும்.. டாப்சியை தனுஷ் பார்க்க முயற்சி செய்யும் போது எல்லாம்... மச்சி அந்த பெண் நமக்கு எல்லாம் செட் ஆகாதுடா என்று அடிக்கடி சொல்லும் போது மிளிர்கின்றார்...
வசனங்கள் ஜொலிக்கின்றது.. நிறைய காட்சி வசனங்களில் சென்சார் எட்டி பார்க்கின்றது..அம்மா தனுஷ் இடம் நான் நீ உருப்படனும்னு நினைக்கின்றேன்... நீ கோழி பீ ‘அள்ளி போட்டுதான் உன் பொழப்பு கடைசி வரை இருக்கும்னா அதை யாரு மாத்த முடியும் என்று சொல்வதாகட்டும்...என்று வசனங்களில் இயல்பு தன்மை மீறவில்லை..
டாப்சி வீட்டில் பார்ட்டியில் தனுஷை தன் பாட்டியிடம் அறிமுகபடுத்தும் போது ஜயம் காக் ரைடர் என்று தனுஷ் சொல்ல... பிக் காக் என்று சேவலை பற்றி சொல்ல பகத்தில் இருக்கும் ஆங்கிலோ இந்திய பெண் ஆர்வத்துடன் பிக் காக் என்று ஆச்சர்யத்துடன் கேட்கும் காட்சியில் நான் சிரித்து வைத்தேன்..
பேட்டைகாரர்ராக நடித்து இருக்கும் ஜெயபாலன் வாழ்ந்து இருக்கின்றார்... அவருடைய பெரிய பிளஸ் அந்த குரல் என்பேன். அவருடைய இளம் வயது மனைவியாக நடித்து இருப்பவர்.. பெயர் நினைவில்லை... நன்றாக செய்து இருக்கின்றார்....
கிஷோர் இந்த படத்தில் அசத்தி இருக்கின்றார்..இது போல எல்லா ஊர்லயும் துரை அண்ணன்கள் இருக்கின்றார்கள்... எப்படி எல்லாம் வார்த்தை கிடைக்கும் அதை வைத்து துரோகத்தை பின்னலாம் என்று பல கேரக்டர்கள் இருப்பது வாழ்வின் மீதும் நாம் பேசும் பேச்சின் மீதும் பயம் கொள்ள செய்யும். காட்சிகள்.
வெற்றிமாறன் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்... காரணம்.. பிலிமோகிராபி என்று நீங்கள் இன்ஸ்பயர் ஆன எல்லா உலகசினமா உள்ளுர் சினிமா இயக்குனர்கள் பெய்ர் போட்டு இருக்கின்றீர்கள் பாருங்கள் அதுக்குதான் அந்த நன்றி...
உலகபடம் ரேஞ்சுக்கு இயல்புதன்மை மாறாமல் காட்சிகளில் மிகைதன்மை அற்று.. கமர்சியல் பார்முலாவில், முக்கியமாக இன்டர்வெல்லுக்கு பிறகு வேறு தசையில் பயணிக்கும் திரைக்கதை கொடுத்து இதனை ரைசனையாக எடுத்து தமிழ் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்ற உங்களுக்கு என் நன்றிகள்.
கேமராமேன் வேல்ராஜ்... உழைப்பு படம் முழுக்க தெரிகின்றது...நிறைய இரவு நேரக்காட்சிகள்... முதல் ஷெட்யூல் முழுக்க இரவு பகல் பாராமல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் போனதாக லைட்மேன் ஒருவா என்னிடத்தில் சொன்னார்..
நேற்று இரவு இயக்குனர் வெற்றிமாறனுடன் கைபேசியில் பேசினேன்...
பக்கா ஸ்கிரிப்ட்டோடு அதாவது 80 சதவீகிதம் ஸ்கிரிப்டோடு படப்பிடிப்புக்கு போய் இருக்கின்றார்கள்..
பேசியதில் அவர் அம்மாவின் சொந்த ஊர் கடலூர் என்று தெரிந்த போது ரொம்பவும் மகிழ்ந்தேன்..
நிறைய பேசினேன்.. அவர் கேட்டுக்கொண்டார்.. தனுஷ் கை அறுத்து காதலை சொல்லும் காட்சி மட்டும் எனக்கு உறுத்தல் என்று சொன்னேன்.
அயன் ,எந்திரன், படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ்க்கு கிடைத்த நியாயமான மூன்றாவது வெற்றி...இந்த திரைப்படம்...சன்பிக்சர்ஸ் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடலாம்..
சன்பிக்சர்ஸ், கலாநிதிமாறன் என்று பெயர் போடும் போது எல்லாம் அல்லது அந்த பெயர்களை உச்சரிக்கும் போது எல்லாம் கைதட்ட வேண்டும் என்பது தமிழகத்தில் சடங்காகி போய்விட்டது... செம கைதட்டல்...
தனுஷ் டாப்சியுடன் ரோட்டு ஓர ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கையை கழுவி விட்டு வாயை சட்டையிலும் கையை கைலியும் துடைத்துகொள்ள டாப்சி பின்பு கைகளை ஸ்கர்ட்டில் துடைத்துக்கொள்வது அழகு...
முதல் படத்தில் செய்த பல கமர்சியல் தவறுகள் இந்த படத்தில் இல்லை.. அடுத்த படமும் ரத்தமும் கத்தியுமா என்று யாரும் கேட்டுவிடபோகின்றார்கள்.. மிஸ்டர் வெற்றி மாறன்..
சிலகுறைகள் இருந்தாலும்... நிறைய குறைகளோடு வரும் படங்கள் மிகுந்த தமிழ் சூழலில் இந்த படத்தில் உள்ள குறைகள் பராவாயில்லை என்பேன்.
வாழ்த்துக்கள் .. ஆல் த பெஸ் யூவர் நெக்ஸ்ட் புராஜெக்ட்
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்.
Directed by Vetrimaran
Produced by Kathiresan
Written by Vetrimaran
Starring Dhanush
Taapsee Pannu
Sindhu Menon
Kishore
Karunas
Music by G. V. Prakash Kumar
Cinematography Velraj
Editing by Te. Kishore
Distributed by Sun Pictures
Release date(s) January 14, 2011
Country India
Language Tamil
Budget Indian Rupee ₹ 15-20 crores
==========
சென்னை சாந்தம் தியேட்டர் டிஸ்கி..
பேஸ்புக் ஆன் லைனில் இருக்கும் போது அபினேஷ் என்ற பெட்ரிசியன் காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் பையன்.. சார்.. ஆடு புலி டிக்கெட் இருக்கு வேண்டுமா என்று 13ம் தேதி கேட்க அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கினேன். ஆன்லைனில் புக்செய்ததால் 125 ரூ கொடுத்தேன்...
நான் இருக்கும் இடத்துக்கே வந்து டிக்கெட் கொடுத்து விட்டு போனான்... ரொம்ப நன்றி.. யாராவது எக்ஸ்ட்ரா டிக்கெட் புது படத்துக்குபுக் பண்ணி எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு வேறு யாருக்காவது கொடுக்கவும்..
இண்டர்வெல்பிளாக்கில் என் சீட்டுக்கு முன் இருக்கும் ரசிகர்கள் அவர்கள் ஜெயித்தது போல் வெற்றிக்குறியும், கையாலும் அடித்துகொண்டார்கள்..
காக் ஜோக்குக்கு நான் என் பின் சிட்டில் இருந்து ஒரு பெண் குரல் என்று ஒரு சிலர் சிரித்து வைத்தோம்...
தியேட்டரில் ஸ்கிரினில் பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் சத்தியம் சினிமாஸ் பேக்ரவுண்ட்டில் நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்..
பொங்கல், கோலம் ,கரும்பு , குடிசை என தியேட்டர் வாசலில் செட் போட்டு வைக்க பலர் அதன் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்...
ஒரு பணக்கார முதுகு... மிக அழகான வேலைபாடுகளோடு எனக்கு முன்னே பத்து பேருக்கு முன் நடந்து போய் கொண்டு இருந்தது...மெல்ல திறந்தது கதவு மோகன் போல எவ்வளவோ முயற்சித்தும் என்னால் பார்க்க முடியவில்லை என்பது பொங்கலின் போது எனக்கு ஏற்பட்ட பெரிய வருத்தம்.. ஒரு வேளை முன் பக்கம்...இத்தோடு நிப்பாட்டிக்கின்றேன்..
பியூல் கார்டு ரீசார்ஸ் செய்யும் இடத்தில் நேற்று தரணி என்பவர் ரீ சார்ஜ் செய்து கொடுத்தார்.. அவரின் ஹாஸ்பிட்டாலிட்டி ரொம் நன்றாக இருந்தது....
பைனல்கிக்..
இந்த படம் பாத்தே தீரவேண்டியபடம்...வெற்றிமாறன் தமிழில் பெயர் சொல்லும் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகின்றது... காரணம் படம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரிலிஸ் ஆனது..
2011ஆம் ஆண்டின் முதல் வெற்றி படம் இது.... போன வருடம் தமிழ்படம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
நல்ல பார்வை... நன்றிகள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
//பேட்டைகாரர்ராக நடித்து இருக்கும் ஜெயபாலன் வாழ்ந்து இருக்கின்றார்... அவருடைய பெரிய பிளஸ் அந்த குரல் என்பேன்.//
ReplyDeleteகுரல் ராதாரவி.
//அவருடைய இளம் வயது மனைவியாக நடித்து இருப்பவர்.. பெயர் நினைவில்லை... நன்றாக செய்து இருக்கின்றார்....//
மீனாள்
//. பிக் காக் என்று சேவலை பற்றி சொல்ல பகத்தில் இருக்கும் ஆங்கிலோ இந்திய பெண் ஆர்வத்துடன் பிக் காக் என்று ஆச்சர்யத்துடன் கேட்கும் காட்சியில் நான் சிரித்து வைத்தேன்..
//
ஹிஹிஹி
Adukalam ranakalamunnu solli irukkinga... orla seval kattu paththathu. ippa pakkanum pola irukku.
ReplyDeleteஅருமையான பதிவு , அருமையான படத்திற்கு ...
ReplyDeleteசன் பிக்சர்ஸ்க்கு எந்திரன் கூட நியாமான வெற்றி தானே ??
DEFGHIJK சென்டர் வெற்றி.
ReplyDeleteஒரு உயர்நிலை பள்ளி ஆசிரியரை விட முதல் வகுப்பு குழந்தை இப்போது ஆங்கிலம் நன்றாக பேசுகின்றது அது போலதான்..
அருமை அருமை
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிமர்சனம் அருமை சார்...
சன் பிக்சர்ஸ்க்கு எந்திரன் கூட நியாமான வெற்றி இல்லையா தலைவரே?
ReplyDeleteஎந்திரனை சேர்த்தாச்சு நண்பர்களே...
ReplyDeleteCongratulations to Vetrrimaran
ReplyDeleteபாத்துருவோம் ஜாக்கி..
ReplyDelete"பேட்டைகாரர்ராக நடித்து இருக்கும் ஜெயபாலன் வாழ்ந்து இருக்கின்றார்... அவருடைய பெரிய பிளஸ் அந்த குரல் என்பேன்."
ReplyDeleteஅந்த குரல் ராதரவியினுடையது.
மிக லைவாக பேசியிருப்பார்.
Does it look like amores perros or it is real original story, not yet seen going to watch soon.
ReplyDeleteSuperb review congrats
ReplyDeleteஇளைஞன் விமர்சனம் எப்போ எழுதப்போரீங்கன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்.
ReplyDeleteவ.ஐ. ச. ஜெயபாலனின் நடிப்பு அவர் வில்லனாக மாரியபிறகுதான் நன்றாக இருந்தது என்பது என் அபிப்பிராயம்.
ReplyDelete