Somersalt -2004/உலகசினிமா/ஆஸ்திரேலியா(பதினெட்டுபிளஸ்)வயதுப்பெண்ணின் குட்டிக்கரண வாழ்க்கை




குட்டிக்கரணம் போடுவது எல்லோராலும் முடியாது.... நாம் அனைவருமே நம் சிறுவயதில் குட்டிக்கரணம் அடித்து இருக்கின்றோம். ஆனால் சம்மர் சால்ட் என்பது என்ன தெரியுமா? தரையில் உடலோ அல்லது தலையோ படாமல் அடிப்பது... ஜின்ஸ் படத்தில் கூட கொலம்பஸ் பாடலுக்கு பிரசாந்த் தரையில் தலை படாமல் கடல் ஓரம் டைவ் அடிப்பாரே.. அதேதான்.



அது ரொம்ப ரிஸ்க்க்கும் கூட காரணம் என்ன தெரியுமா? சப்போஸ் நீங்க அப்படி சம்மர் சால்ட் அடிக்கும் போது தரையில் தலை பட்டால் கழுத்து எலும்பு உடைச்சிகிட்டு ரொம்ப காம்ளிகேட்டா ஆயிடும்... அதுக்கு அப்புறம் நடைபினம்தான். ஆனா ரொம்ப ரிஸ்க்.. பட் உடம்பு அப்படியே ஒரு சுத்தி சுத்தி தரைக்கு வரும் வித்தை அது .. ஆனா யாரும் நம்மை குட்டிக்கரணம் அடிக்க சொல்லுவதில்லை நாமாகத்தான் அதை செய்கின்றோம்.....அதன் விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.

எல்லாராலையும் முடியாது.. ஆனா அதை செய்யனும்னு நினைக்கறவங்க அந்த ரிஸ்க் எடுப்பவர்கள் ஒருசிலர்தான்.. அதை அடிச்சி பழைய பொஷிஷனுக்கு வருவதற்க்குள் போதும் போதும் என்றாக விடும். வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்க்கும் இதை உதாரணம் சொல்லலாம்.. இந்த வித்தையைத்தான் கரணம் தப்பினால் மரணம்னு சொல்லுவாங்க..


பெரும்பாலான சமுக தவறுகளுக்கு பெரிய காரணம். பசி, இருப்பிடம்,காமம் சார்ந்த அடிப்படை விஷயங்களை முன் வைத்தே பல குற்றங்கள் நிகழ்கின்றன.. இத்தனை பேர் வசிக்கும் சென்னையில் யாரையும் தெரியாமல் சென்னைக்கு வந்து உயிர் பிழைப்பது என்பது முதலில் பெரிய விஷயம்... அதன் பிறகே அங்கீகாரமான வாழ்க்கை வாழ முயற்சி எடுக்க முடியும்..ஒரு ஆண் சாக்கு போர்த்திக்கொண்டு கூட பிளாட்பாரத்தில் தூங்கி விட முடியும்... ஆனால் பெண்.....?? சரி தமிழ்நாட்டில் இப்படி என்றால் உறைய வைக்கும் குளிர் தேசத்தில் எப்படி இருக்கும்?.....



தமிழ் திரைபடங்களில் இருக்கும் ஸ்கிரிப்ட்டில் ஒரு கட்டத்துக்குமேல் போகாமல் அப்படியே இடித்து  இடித்து நின்று விடுவார்கள்.. காரணம் என்னவென்றால் சார் இதை நம்ம கல்சர் ஏற்றுக்கொள்ளாது என்பார்கள்.. ஆனால் இந்த சமுகத்தில் நடக்காத விஷயங்களே இல்லை என்பேன்.. அனால் அதனை தகர்த்து எரிந்தவர்கள் இங்கே பாராட்டை பெற்றவர்கள்..அந்த வகையில் ஒரு அளவுக்கு இயக்குனர் பாலசந்தர் அந்த மாதிரி கல்ச்சர் செண்டிமென்ட்களை தனது ஸ்கிரிப்ட்டில் உடைத்து இருக்கின்றார் என்பேன்..


நான் ஒரு சீன் சொல்லறேன்... அந்த சீனை தமிழ்சினிமாவில் வைக்க முடியமா? என்று பாருங்கள்... அந்த பதினாறு வயது பெண்ணுக்கு அப்பா இல்லை..அம்மா தனது பாய்பிரண்டோடு வாழ்ந்து வருகின்றாள்.. அம்மாவும் அவய் பாய்பிரண்டும் ரொம்ப அன்னியோன்யமாகவே இருக்கின்றார்கள்..அம்மா வேலைக்கு போகின்றாள்... பாய்பிரண்ட் வேலைக்கு போகவில்லை காரணம் மழை.. அம்மா கார் கிளம்பி செல்லும் சத்தம்கேட்டதும் காபி கலந்து அம்மாவின் பெட்ரூமில் காபி எடுத்து வந்து அம்மாவின் பாய்பிரண்டுக்கு கொடுக்கின்றாள்...


நடிகை திரிஷா மார்பில் மீன் படம் வரைந்து இருப்பது போல அவன் மார்பில் ஒரு பெரிய டிராகன் படம்வரைந்து வைத்து இருக்கின்றான்.. அதை பார்த்த அந்த பெண் இது பச்சை குத்தும் போது ரொம்பவும் வலித்ததா? நான் தொட்டு பார்க்கலாமா? என்று கேட்டு விட்டு அவன் அருகில் உட்கார்ந்து தொட்டு விட்டு பருவ கோளாறு காரணமாக அவனை கிஸ் அடித்து விடுகின்றாள்..இதுவரை அப்படி பெரிய எண்ணம் இல்லை என்றாலும் ஒரு வயது பெண் கிஸ் அடித்த்தும் அவனும் தன்னிலை மறந்து அவளை படுக்கையில் சாய்த்து அவள் அணிந்து இருக்கும் டிஷர்ட் உள்ளே கைவிட்டு மார்பை பிசைந்து அடுத்த கட்டதுக்கு போகும் போது அவள் அம்மாவந்து இப்படி ஒரு காட்சியை பார்த்தால் எப்படி இருக்கும்??? அடி வயறு கலங்காது???


இப்படி ஒரு காட்சி நம் படங்களில் யோசிக்கும் போதே சார் இது அப்பா சென்டிமென்ட்.... சார் மகமாதிரி அந்த பொண்ணு? எப்படிசார் காம பீலிங் வரும் என்று விலக்கிவிடுவார்கள்.. ஆனால் வரும் அவர்களும் மனிதர்கள்.. வந்தால் பிரச்சனை ஆகும் என்பதை உணர வைக்க வேண்டும்... அதை பதிவு செய்ய வேண்டும்.. இங்கேதமிழ்நாட்டில் இருக்கும் அப்பாக்கள் எல்லாருமே கடவுளுக்கு நிகராக யோக்கிய புருஷர்களாக சித்தரிக்கபடுக்கின்றார்கள்.. அப்படி அல்ல அவர்களும் மனிதர்கள்.....

இதேதமிழகத்தில்தான் சொந்த அப்பாவே தன் மகளுக்கு வயிற்றில் பிள்ளை கொடுத்து அதை கலைக்க வழி தெரியாமல் கொலை செய்தது இதே தமிழ்நாட்டில்தான். அது போல அப்பாக்கள் நிறைய....சந்திக்கு வந்தது சிலது... சந்திக்கு வராமல் போனது பலது....

தெரிந்தே தவறு செய்யும் பெண்களை ஒன்றும் செய்து விட முடியாது.... ஆனால் அப்பாவியாய் பிளைன்டாக நம்பும் பெண்களுக்கும் இப்படியும் வாழ்வில் சம்பவங்கள் நடக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும்...
சரி கதைக்கு வருவோம்....

தன் பாய்பிரண்டோட கட்டிலில் புரண்டு கொண்டு இருப்பதை பார்த்தால் எந்த நாடாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் கொஞ்சுவார்களா? வீட்டை விட்டு துரத்திவிடுகின்றாள்...இங்கு எதுவுமே நடக்கவில்லை என்று பாய்பிரண்ட் கத்துகின்றான்.. அப்படி என்ன கதை அது??? இப்ப பார்க்கலாம்...



Somersalt -2004/உலகசினிமா/ஆஸ்திரேலியா படத்தின் கதை என்ன???

Heidi (Abbie Cornish) 16வயது பெண்....இளம் வயது பயம் அறியாது... அம்மாவின் பாய்பிரண்டை கிஸ் பண்ணும் போது அம்மா பார்த்து விட்டு என் எதிரில் நிற்க்காதே என்று சொல்ல வேறு வழியில்லாமல் கையில் இருக்கும் காசை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் நகரத்துக்கு போகின்றாள்.. அங்கு யாரும் இல்லை... தங்க இடம் இல்லை..சாப்பிட சோறு இல்லை..வேலை தேடுகின்றாள்..ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கின்றது. வாம்மா வீட்டை விட்டு வந்து விட்டாயா? இதோ வேலை என்று தூக்கி கொடுத்து விட வில்லை. அதுக்கு நிறைய போராட வேண்டி இருக்கின்றது. அங்கு Joe ( Sam Worthington) என்பவனை சந்திக்கின்றாள். அவன் அவளைபடுக்கையில் மட்டும் யூஸ் செய்கின்றான்..புதிய வேலைக்கு போன இடத்திலும் பிரச்சனை... வாழ்க்கை வெறுத்த போக தங்க இடம் கொடுத்த வீட்டில் நடந்த சின்ன பிரச்சனைக்கு அறையை காலி செய்ய சொல்கின்றார்கள்.. என்ன செய்யவாள் அந்த சின்ன பெண்......??? நடுதெரு நாராயணனாக திரும்பவும் நின்றாளா? இல்லையா என்பதை வெண்திரையில் பார்த்துக்கொள்ளவும்....



படத்தின்சுவாரஸ்யங்களில் சில..


உறவு சிக்கலையும் மனித உணர்வுகளையும் ஒரு பெண் இயக்குனர் பார்வையில் இந்த படம் விவரிக்கின்றது. ஆண் இயக்குனர் படங்களை விட பெண் இயக்குனர் படங்கள் உணர்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்கின்றார்கள்.. மிக முக்கியமாக பெண்கள் பக்க எண்ணவோட்டங்களை....

அந்த பெண்ணின் நடிப்பு சான்சே இல்லை...அந்த பெண்ணின் நிர்வாணம் சில நேரத்தில் சலனபடுத்தினாலும்.... கேமராவுக்கு பின் ஒரு பெண் இயக்குனர் கேமராமேன் நின்று அவளது அசைவுகளை கவனித்து கட் சொல்லி ஒன்மோர் போகின்றார்கள் என்று நினைக்கும் போது அநத பெண்ணை ரொம்பவும் பிடித்து விடுகின்றது...


வயது கோளாறில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் அல்லது தெரிந்தே செய்து விட்டு மாட்டிக்கொண்டதும்,, அவர்கள்படும் பாட்டை அந்த பெண் கவிதையாக நடித்து இருக்கின்றார்...

அம்மாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு என் முகத்தில் முழிக்காதே என்று சொல்லிவிட்டதும் அம்மாவை சமாதானபடுத்த வரும் போது அவள் தட்டி விடும் போது அந்த பெண் அழுகையில் நாமும் அந்த இடத்தில் இருப்பதை போன்ற உணர்வு....

தன்னோடு படுத்து புரளுபவன்.. தன்னை காதலிக்கவில்லை.. ஆனால் அவன் காதல் வயபட்டு இருக்கின்றான் என்று தெரிந்தும் அவன் சொல்லவில்லை என்று அறியும் போது ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட வைத்து இருக்கும் மிளக்காய் சட்னியை அப்படியே வாயில் போட்டு அமைதியாக அவள் கோபத்தை காட்டும் இடத்தில் அற்புதம்.


வேற எந்த புள்ளயை பார்த்தும் இந்த ஜாக்கி சமீபத்துல இப்படி ஆப் அனது இல்லை.... அந்த அளவுக்கு நல்ல பர்பாமர்...

புண்ணியமா போகுது என்று தங்க இடம் கொடுத்த அறையில் போதையில் பாரில் பார்த்த இரண்டு ஆண்களுடன் படுக்கையில் இருக்கும் அந்த பெண்ணை உறவுக்கு ஏற்பாடு செய்கையில் அவளுக்கு பாய் பிரண்ட் யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்கும் போது தனக்கு இல்லை என்று வெறுத்து சொல்லும் போது...அங்கு வரும் அவளது நண்பள் ஜோ கோபத்தில் அந்த பசங்களை உதைத்து விட்டு, ஸ்டெரேஸ் இருந்தால் இப்படித்தான் பசங்களோடு குடித்து விட்டு கூத்து அடிப்பியா??? என்று வழக்கம் போல் கேட்டு விட்டு கோபமாக செல்ல அவனை சமாதானபடுத்த நிர்வாணமாக நடு ரோட்டுக்கு ஒடி அந்த பனி மழையில் அவனைதடுக்க முயற்சிப்து அருமை..


தங்க வீடு கொடுத்தேன் அதுக்கா விடியற்காலை 3மணிக்கு அம்மனக்கட்டையா நடு ரோட்டுக்கு போவியா? இது நல்லவங்க வந்து போகும் இடம் உன்னைமாதிரி கழுதைங்க இருக்கும் இடம் இல்லை, வீட்டை காலி பண்ணு என்று சொல்லிவிட்டு போகும் இடம் அருமை.


விட்டை காலி செய்துவிட்டாள்.. சாவி கொடுக்க போகின்றாள் இத்தனை நாள் என்னை பார்த்துக்கொண்டதுக்கு நன்றி என்று ஹவுஸ் ஓனர் பெண்மணி ஐரீனிடம் சொல்லிவிட்டு தன் கதை சொல்லி அழும் இடத்தில் அந்த பெண் நடிப்பில் பிரமாத படுத்தி இருக்கின்றாள்...

கொலையே செய்தாலும் இந்த பூவுலகில் நம்மை மன்னிக்கும் ஒரே ஜென்ம்ம் நம்ம அம்மாதான் என்பதாய் இந்த படம் சொல்கின்றது... அந்த கிளைமாக்ஸ் அற்புதம்...

படத்தின் டிரைலர்..





படம் வாங்கிய விருதுகள்.


15 நாமினேஷனுக்கு பரிந்துரை செய்து 13 விருதுகள் பல்வேறு விழாக்களில் பெற்றபடம்...

.
In the 2004 AFI Awards held on 29 October at Regent Theatre, Melbourne, Somersault made history by winning a record 13 awards, out of its 15 nominations. The film picked up the following awards: Best Feature Film - producer, Anthony Anderson; Best Direction - Cate Shortland; Best Original Screenplay - Cate Shortland; Best Actress in a Leading Role - Abbie Cornish; Best Actor in a Leading Role - Sam Worthington; Best Actress in a Supporting Role - Lynette Curran; Best Actor in a Supporting Role - Erik Thomson; Best Editing - Scott Gray; Best Cinematography - Robert Humphreys A.C.S.; Best Sound - Mark Blackwell, Peter Smith and Sam Petty; Best Original Music Score - Decoder Ring; Best Production Design - Melinda Doring; Best Costume Design - Emily Seresin.

Somersault was also a big winner at the 2004 Film Critics Circle of Australia (FCCA) Annual Awards where it picked up five awards: Best Film; Best Director (Cate Shortland); Best Actress (Abbie Cornish); Best Cinematography (Robert Humphreys); Best Actress in a Supporting Role (Lynette Curran).

The film also dominated the publicly voted Lexus IF Awards, taking out six of its eight nominations. It won awards in the following categories: Best Director (Cate Shortland), Best Music, Best Cinematography, Best Script, Best Feature Film and Best Actress for Abbie Cornish.


படக்குழுவினர் விபரம்.

Directed by Cate Shortland
Produced by Anthony Anderson
Jan Chapman
Written by Cate Shortland
Starring Abbie Cornish,
Sam Worthington
Erik Thomson
Anne Louise Lambert
Leah Purcell
Editing by Scott Gray
Distributed by Magnolia Pictures (USA)
Release date(s) 17 May 2004 (2004-05-17)
Running time 106 minutes
Country Australia
Language English


பைனல்கிக்...
இந்த படம் சுகாசினி ஒரு டிவி பேட்டியில் சிலாகித்து சொன்னதால் இந்த படத்தை நான் தேடிப்பிடித்து பார்த்தேன்.இந்த படம் பார்த்தேதீரவேண்டியபடம்... அதனால் நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்...
குறிப்பு நான் வாங்கும் படங்கள் சென்னையில் எங்கு கிடைக்கின்றது.. என்று ஒரு கேள்வி.. பல படங்கள் நண்பர்கள் கொடுக்கின்றார்கள்..பல படங்கள் உலகபடவிழாவில் பார்த்தவை. சில படங்கள் பர்மாபஜார் மற்றும் ஜெமினி பார்சன் காம்ளெக்ஸ் கடைகிடைகளில் தேடி வாங்குகின்றேன்... எந்த குறிப்பிட்ட கடையிலும் வாங்குவது இல்லை அதனால் தேடி பார்த்து வாங்கி கொள்ளுங்கள்... வ

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

8 comments:

  1. இவர் நடித்த எலிசபெத் கோல்டன் ஏஜ் நேற்று பார்த்துவிட்டு, இவர் நடித்தப் படங்களின் லிஸ்டில் இதுவும் இருந்தது :)

    ReplyDelete
  2. பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  3. உங்க விவரிப்பு ரொம்ப அருமையா இருக்கு ஜாக்கி, லயித்து படித்தேன்... !

    ReplyDelete
  4. பர்மா பஜார், ஜெமினி பார்சன் - நெடு நாள் கேள்வியின் விளக்கத்திற்கு நன்றி !
    சுஹாசினி அக்காவும் சிலாகித்து இருக்கிறார்களா ? பார்த்துடுவோம்.

    ReplyDelete
  5. yes nalla padam
    naan parthuten
    this link http://www.moviewatch.in/watch-3331-Somersault
    thanku
    jecki sir

    ReplyDelete
  6. 18+ என்று போடுவதை பதினெட்டு பிளஸ் என்று மாற்றியதன் காரணம் என்ன ஜாக்கி..

    ReplyDelete
  7. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.. பின்னோக்கி இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகின்றது பின்னுட்டத்தில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    பிரிதம் கிருஷ்னா... நிறைய அலைந்து தேடும் விஷயம் அது... இதை சொன்னதும் அப்புறம் எந்த கடை என்று கேட்பார்கள்... சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.


    பிரபா..ஸ்பெஷல் ரீசன் எதும் இல்லை... எல்லாரும் அப்படியே எழுதனாங்க.. என் தளத்தில் மேல் 18 பிளஸ்க்கான தளம் என்று சொன்னேன். நான்.. 18+ போட்டு எழுதினேன்... நிறைய பேர் எழுதினார்கள்... சரி நாம எதாவது செஞ்ச் பண்ண வேண்டுமல்லவா? அதுக்குதான் இது..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner