சன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது ?
நிறைய சிரியல்களில் வேலை செய்து இருந்தாலும் .. நான் சீரியல் பார்க்கமாட்டேன்.
எப்போதுவது சேனலை மாற்றிக்கொண்டு வரும் போது நாதஸ்வரம் சீரியல் வந்தால் கொஞ்சநேரம் வைத்து பார்ப்பேன். காரணம் அந்த தொடரில் சில காட்சிகள்.. சில டயலாக்குகள் நன்றாக இருக்கும்.
சேனல்களில் நான் விரும்பி பார்ப்பது டிஸ்கவரி சேனல்தான்...அப்புறம் மூவிஸ்நவ்... ஆனால் பெங்களூரில் லுமியர்மூவிஸ் மற்றும் வேர்ல்டு சினிமா தெரிகின்றது கொடுத்த வைத்தவர்கள்... நல்ல நல்ல உலகபடங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. நேற்று கூட கிம்கிடுக்கின் பிரீத் படம் ஒளிபரப்பானது... பார்க்க கொடுத்து வைக்கவில்லை.... எந்த நேரமும் சீரியல்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது....நிறைய வீடுகளில் அததான் நிலைமை...
சென்னையில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அன்புகடையில் காய்கறி வாங்கும் போது, ரமேஷ் திருமதி செல்வத்தில் என்ன நடக்கின்றது? வீட்டில் கரண்ட் இல்லை.. என்று கடைகாரர் இடமும் ,காய்கறி வாங்க வந்த பெண்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு சீரியல் வியாதி பிடித்து இருக்கின்றது... கடைக்காரருக்கு எப்படி தெரியும்...?? இப்போது எல்லாம் எல்லா கடைகிளிலும் கலைஞர் கொடுத்த இலவச கலர் டிவி இருக்கின்றது.
சன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது ?என்பதை இங்கு பெங்களுர் வந்த போது புரிந்து போனது.... அதுதான் தமிழ்நாட்டில் பாதி பெண்களின் நிலையும்.வார நாட்களில் காலையில் பத்தரை மணிக்கு ஆரம்பிக்கின்றது.. அந்த சீரியல் விளையாட்டு...
காலை 10,30லிருந்து 11வரை மகள்.. சீரியல்
11லிருந்து 11,30வரை......... மெட்டி ஒலி...
11,30லிருந்து12 மணிவரை ....கஸ்தூரி
12லிருந்து 12,30 மணிவரை ...உறவுகள்
12,30லிருந்து 1,00மணிவரை.. அனுபல்லவி
1,00லிருந்து 1,30 மணிவரை... வசந்தம்
1,30லிருந்து 2,00மணிவரை ........இளவரசி
2,30லிருந்து 2,30மணிவரை.....அத்திப்பூக்கள்....
உணவு இடைவேளை.. சிறிது உறக்கம் கீழ் வீட்டு ஹவுஸ்ஓனர் ஆண்டடியோடு கொஞ்சம் பேச்சு...
திரும்பவும்...மாலை
6,00லிருந்து 6,30 மணிவரை....முத்தானை முடிச்சு
6,30லிருந்து 7,00மணிவரை....மாதவி
நடுவில் செய்தி.....
7,30லிருந்து 8,00மணிவரை... நாதஸ்வரம்
8,00லிருந்து 8,30 மணி வரை..... திருமதிசெல்வம்
8,30லிருந்து 9,00மணிவரை.. தங்கம்
9,00லிருந்து 9,30மணிவரை ...தென்றல்
9,30லிருந்து10,00மணிவரை...செல்லமே
10,00லிருந்து10,30மணிவரை .. இதயம்.
அவ்வளவுதான்...இந்த நேரங்களில் ஏதாவது சேனலில் நல்லபாடல் போட்டால் கூட மாற்ற முடியாது.. வார நாட்கள் முழுவதும் என் மாமியார் கையில்தான் தொலைகாட்சி ரிமோட் இருக்கும்............
இரண்டு நாட்கள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் போதே என் காதில் விழும் டயலாக்கை வைத்து என் மனைவியிடமே, நான் சீரியல் டயலாக் போல பேச வேண்டி இருப்பதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாய இருக்கின்றது...
அவன்கிட்ட சண்டை போட்டா நமக்குதான் அசிங்கம் என்ற சின்ன வாக்கியத்துக்கு....
நான்.. முள்ளுமேல சேலைபட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் சேலைக்குதாம்மா லாஸ் என்று நான் சொல்ல இரண்டு நாளில் தன் கணவனை இந்த பெங்களூர் மாற்றிவிட்டதை நினைத்து மிரண்டு போய் இருக்கின்றாள் என் மனைவி....
தொடர்ந்து கேட்கும் வசனங்கள்...
வாழவெட்டி
நான் யதார்த்தமா சொன்னேன்
கள்ளபுருஷன்..
பிரசவவலியை விட கொடுமையானது..
அம்மா சொல்லறதை கேளும்மா???
வாழ வெட்டி
எங்கயோ போறேன்.. விட்டுது பீடைன்னு சந்தோஷமா இருங்க.....
நேத்து இப்படித்தான்.. மாதவி சீரியலில் வீட்ல வௌக்கு வச்சதும் ஒரு எழவு சத்தம்.. என்னடான்னு பார்த்தா சுபலேகா சுதாகர் செத்து போய்விட்டார்.... மூனு நாட்களாக இன்னும் புதைக்கவில்லை... இன்று வெள்ளிக்கிழமை எப்படியும் இன்னைக்கு வீட்ல வௌக்கு வச்சதும் எழவு அழுகுரல்கள் கேட்கும் அது திங்கள்கிழமை வரை தொடர வாய்பு இருக்கின்றது ஏன் அடுத்தவாரம் கூட தொடர வாய்ப்பு இருக்கின்றது..
இன்று கூட இளவரசி சீரியலில் காதல் வைபோகமே, பாடலுக்கு ஆடி அடுத்தவ புருசனை கவுக்க மகிழும் ஒரு கேரக்டர்.
பொதுவாய் எல்லா சீரியல்களிலும் திருமணம் ஆன ஆண் மீது காதல் கொண்டு, அவனை வலையில் வீழ்த்த வெறிகொண்டு அலைகின்றார்கள் பெண்கள்...நானும் திருமணம் ஆகி 2 வருடம் ஆகின்றது.. எந்த பெண்ணும் என்னிடம் அந்த மாதிரி சீரியல் புத்தியில் என்னிடத்தில் பழகவில்லை.... நான் என்னபாவம் செய்தேன் கடவுளே????
எல்லா சீரியல்களிலும் ஒரு புது டிரென்ட் சாமியார் குறிசொல்வதாக காட்டுவது இப்போதைய டிரென்ட்.போலும்...
காலை பத்து மணியில் இருந்து 2,30 மணிவரை தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாவதால் 2,30 மணிக்கு மேல் சமைக்க ஆரம்பித்து 3கால் மணிக்குதான் நல்ல சோறு கிடைக்கின்றது.....
ஒரே வீட்டில் பாதியை பையன் வீடாகவும் பாதியை மகன் வீடாகவும் காட்டுவதை என் மாமியார் கண்டுபிடித்து பல நாட்கள் ஆகின்றது.....இப்போதெல்லாம் சீரியலில் கண்டினிட்டி கூட கண்டுபிடித்து விடுகின்றார்கள்... நோட் செய்யுங்கள் இதை...
சீரியல்களில் கதாபாத்திரங்கள் எதிர்கேள்வி கேட்டு கேட்டு, பார்த்து பார்த்து பழகி இப்போதேல்லாம் என்மாமியார் அம்மாஞ்சியாக கேள்வி கேட்பது சர்வசாதரணமாக போய்விட்டது..
உதாரணத்துக்கு ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்டாள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது.. அந்த லட்டர் அவள்தான் எழுதிவைத்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று எதிர் கேள்வி கேட்ககின்றார்....இதேல்லாம் சீரியல் அதிகம் பார்த்து, எல்லாத்தையும் சந்தேகத்தோடு பார்க்கும் பொதுபுத்தியின் மாற்றம் என்றால் அது மிகையாகாது.....
சீரியல் பார்ப்பதை நான் தவறு சொல்லவில்லை.. ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு வேண்டும் அல்லவா? இடை விடாது பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்..இதுதான் பலவீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை....
முன்பு புத்தகம் வாசித்தார்கள்... இப்போது அதுவும் இல்லை.. வாசிக்கும் பழக்கம் மருந்துக்கும் இல்லை.
சனி..ஞாயிறு நாட்களில் சீரியல் இல்லை அதனால் எங்கள் கைக்கு ரிமோட் கிடைக்கின்றது.....
அதே போல இரவு பத்தரை மணிக்குமேல் சீரியல் போடுவதில்லை போட்ட்லும் பார்க்க ஆட்கள் இருக்கின்றார்கள்.. தயவு செய்து அதையே எல்லையாக வைத்து அதுக்குமேல் ஒளிபரப்பாமல் இருக்க கேட்டுக்கொள்கின்றேன்.
சனி ஞாயிறு இரண்டு நாளைக்கு எங்களைநிம்மதியாக இருக்க விட்ட சன்டிவிக்கு நன்றி...
இந்த மாதிரி தீவிர ரசிகைகள் இருக்கும் வரை சன்டிவியை யாரும் அசச்சிக்க அசச்சிக்க முடியாது....
குறிப்பு
யார் வீட்டிலாவது தீவிர ரசிகைகள் மேற்படி கதையில் டவுட் ஏற்ப்பட்டால் என் மாமியாருக்கு போன் செய்தால் விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்விளக்கப்படும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
குறிப்பு..
படித்து விட்டு மறக்காமல் ஓட்டு போடுங்கள்...நண்பர்களுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல விரிவான தகவல்..
ReplyDelete//எந்த நேரமும் சீரியல்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது....நிறைய வீடுகளில் அததான் நிலைமை...//
ReplyDeletesame blood
சன் டிவிக்கு மிகப் பெரிய பலமே இந்த நாடகம் தான்.. சன் டிவியில் எனக்கு பிடித்த நாடகம்..
ReplyDeleteமெட்டிஒலி...
எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனைன்னு நினைச்சா உங்களுக்குமா?
ReplyDeleteFirst.......
ReplyDeletepaavamne neenga. we are bachelor. no serial
ReplyDeleteVery Nice & true post.
ReplyDeleteRegards
Anand
bamako,Mali.
சீரியல் பற்றி சீரியஸ்ஸா ஒரு பதிவா?
ReplyDeletegreat!!!!!!
ReplyDeletesenthil, doha
Great!!!!
ReplyDeletesenthil, doha
எந்த சீரியலாவது விட்டு போனால் இருக்கவே இருக்கு http://cooltamil.net/ பாஸ்.
ReplyDeleteசீரியல் முடிந்து அடுத்த அரை மணி நேரத்தில் அப்டேட் செய்து விடுகிறார்கள்
FIRST COMMING VADAI ENAKKE
ReplyDeleteஉண்மைதான். படிக்கும் பழக்கத்தை சீரியல் காலி செய்துவிட்டது. முன்பெல்லாம் ராணியாவது படிப்பார்கள்...
ReplyDeleteநீங்க சொல்றது கேட்டாலே பயமா இருக்கு. இப்படியல்லமா சீரியல் பார்ப்பாங்க ?
ReplyDeleteஎங்க வீட்டுல சீரியல் அரை மணிநேரம்தான்.
அடக்கடவுளே
ReplyDeleteஎப்படி இருந்தா நீங்க இப்படி ஆகிட்டிங்க. வாழ்த்துக்கள் . எப்படியோ ஒரு பதிவு கிடைச்சது
ReplyDeleteசன் டிவியின் சாம்ராஜ்யமே பெண்களை அடிப்படையாக
ReplyDeleteவைத்து தானே.
சீரியல்களின் பின்ணணி அதை விட கொடும..
ReplyDeleteநீங்கள் நொந்தகுமாரன் ஆன பின்ணணி இது தானா?
ReplyDelete//நானும் திருமணம் ஆகி 2 வருடம் ஆகின்றது.. எந்த பெண்ணும் என்னிடம் அந்த மாதிரி சீரியல் புத்தியில் என்னிடத்தில் பழகவில்லை.... நான் என்னபாவம் செய்தேன் கடவுளே????// super...
ReplyDeleteஅண்ணா....
ReplyDeleteமாமியார் நம்பர் போட்டு இருந்திருந்தீங்கன நல்ல இருக்கும்.
இரண்டு வருடம் தான ஆகுது இன்னும் நாள் இருக்கு.. நா....
ஜாக்கி, அருமையான ஆதங்கப் பதிவு. மூளையைப் பிழிந்து பிழிந்து அபத்தமான திரைக் கதையை உருவாக்குகிறார்களா? நான் ஒரு சீரியலின் ஒரு எபிசோடைக் கூட பார்த்ததில்லை. இந்தியாவில் இருக்கும் வரை வீட்டுக்குப் போகும் நேரம் இரவு 11 மணி. தற்போதும் எப்போதும் தமிழ் சேனல்கள் வைத்துக் கொண்டதில்லை. சீரியல்களின் தாக்கம் குழந்தைகள் மனதை விஷமாக்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ReplyDeleteசாதாரண சின்ன சின்ன மகிழ்வான தருனங்கள் மற்றும் நகைச்சுவை உணர்வுகள் அனைத்தையும் தொலைப்பதில் சீரியல்களின் பங்கு மகத்தானது. பொதுவாக ஆங்கில சேரியல்கள் நகைச்சுவையானவையே. தமிழ் சீரில்கள் அளவுக்கு எதிலும் இந்த அளவுக்கு திட்டம் போட்டு (படித்த வரையில்) பழிவாங்குவதும் கிரிமினல் வேலை செய்வதும் அவைகளில் இல்லை.
தமிழ் சினிமாவிலும் சரி சீரியல்களிலும் சரி, நகைச்சுவை என்பது ஒரு மாதிரியான ப்ளாக் ஹியூமராகவே இருக்கிறது. அடுத்தவன் உருவத்தை, நடை உடை பாவனைகளை, பொருளாதார பின்புலத்தை, பெற்றோர்களை கடுமையாக கேலி செய்வதே தற்போது பார்க்கும் திரைப்பட காமெடியாக இருக்கிறது.
இதன் ஆரம்பம் எஸ்.வீ.சேகரின் நாடங்கள் என்று தான் நினைக்கிறேன். அவைகளில் தான் முதன் முதலில் இந்த மாதிரி கேலிகளை முதன் முதலில் கேட்டிருக்கிறேன்.
//வார நாட்கள் முழுவதும் என் மாமியார் கையில்தான் தொலைகாட்சி ரிமோட் இருக்கும்............\\
ReplyDeleteஇதைதான் மாமியார் கொடுமைனு சொல்றாய்ங்களோ :-)
boss, romba mamiyarai kurai sonningana appram nanga saturday & sunday'lyum serial pappom ;) serails are available on net, so download panni kuda pappom.. so ja[c]kierathai.
ReplyDeleteசேம் பிளட்!
ReplyDeleteSun TV காரர்கள் தொலைக் காட்சி சீரியல்களில் எப்படி பெண்களை கட்டிப் படுவது என்பதில் கை தேர்ந்தவர்கள். [தினகரன்னு ஒரு பேப்பர் வருது, அதோட லெவல் என்னன்னு உங்களுக்கே தெரியும், அதையே தமிழில் நம்பர் ஒன் ஆக்கிய வியாபாரிகள் இவர்கள்.] பெங்களூரில் சில சமயம் காவிரி பிரச்சினையின் போது தமிழ் சேனல்களை முடக்கி விடுவார்கள், அப்போதெல்லாம் நம்ம தாய்க் குலங்கள் என்ன பண்ணும் தெரியுமா? சென்னைக்கு STD போட்டு அவளுக்கு என்ன ஆச்சு, இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள்!! சாதாரணமாக எந்த சீரியலைப் பார்த்தாலும் ஏதாவதொரு வில்லி ஒரு அபலைப் பெண்ணை வாழ விடாமல் கெடுப்பதாகவும், ஒவ்வொரு பெண்ணும்/ஆணும் ரெண்டு மூணு முறை விவாகரத்து பன்னி கல்யாணம் பண்ணுவது போலவும் காட்டுகிறார்கள். ஆனால் இவற்றை தொடர்ந்து பார்க்கும் போது அவர்களுடைய மனநிலை எந்த மாதிரி ஆகும் என்பது தெரியவில்லை.
ReplyDelete//யார் வீட்டிலாவது தீவிர ரசிகைகள் மேற்படி கதையில் டவுட் ஏற்ப்பட்டால் என் மாமியாருக்கு போன் செய்தால் விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்விளக்கப்படும்...
ReplyDelete//ரொம்ப நேரம் சிரித்தேன் சகோ...அப்புறம் அவங்களுக்கும் எப்படி பொழுதுபோகறது...
right thaan sir. pothum pothumnu iruku. evlo muttaalaa aakitanga namma vettu pombalaigala.....
ReplyDeleteரொம்பவும் நொந்து போயி இருக்கிங்க போல.
ReplyDeleteDear friend,
ReplyDeleteU have very nicely analysed the effects of serial in our life. Sun tv is one of reasons for serials' popularity in Tamil Nadu. It really affects ladies and takes their precious time.I take this opportunity to request the ladies to avoid watching serials and in turn they can read books.
Thank u,
correct,,
ReplyDeleteதனக்கு விளம்பரம் தான் சோறு போடுகின்றது என எனது உறவினர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார், இத்தனைக்கும் அவர் எந்த விளம்பரக் கம்பனியிலும் வேலை செய்யவில்லை விளம்பர இடைவேளையில் அவரின் மனைவி உணவு கொடுப்பதைத்தான் அப்படி நக்கலாக சொல்கின்றார்.
ReplyDeleteஇந்த நேர இடைவேளைகளில் நீங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றால் உங்களை வரவேற்கவே மாட்டார்கள்.
இப்ப எல்லாம் எங்க அம்மா எல்லா சீரியலும் பார்க்குறது இல்ல...
ReplyDeleteநாங்க ஒட்டு ஓட்டுன்னு ஓட்டுன விளைவு...
அப்போதெல்லாம் நல்ல நல்ல வாரத் தொடர்கள் வந்து கொண்டிருந்தது...
மர்மதேசம் போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமானவை..எனக்கு தெரிந்து கையளவு மனசு,கங்கா யமுனா சரஸ்வதி போன்ற தொடர்களே மெகா சீரியல் என்ற குப்பைக்கு வழி வகுத்தன...
//குறிப்பு
ReplyDeleteயார் வீட்டிலாவது தீவிர ரசிகைகள் மேற்படி கதையில் டவுட் ஏற்ப்பட்டால் என் மாமியாருக்கு போன் செய்தால் விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்விளக்கப்படும்...//
நலல மார்கெட்டிங் யுக்தி !
சேகர் தன் மாமியாருக்கு நல்லா 'ஜாக்கி' வைக்கிறாரோ ?
தமிழகத்தில் ஆண்களுக்கு "டாஸ்மார்க்" பெண்களுக்கு "சீரியல்"-கள்....போதைக்கு
ReplyDeleteநிறைய சிரியல்களில் வேலை செய்து இருந்தாலும் .. நான் சீரியல் பார்க்கமாட்டேன்.//////
ReplyDeleteநான் சன் டிவில் வேலை செய்தாலும் நான் சன் டிவி பார்க்கமாட்டேன்....
This comment has been removed by the author.
ReplyDeleteசிரியலா நீங்க சொல்லியிருந்தாலும் சீரியஸான விசயம் என்னவென்றால் சீரியல்கள் மனோவியாதியை வளர்க்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
ReplyDeleteபெண்கள் தரப்பில் பார்த்தால் அவர்கள் கிடைப்பதைப் பருகுகிறார்கள்.திரைப்படம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் தகுதி இழந்து ரொம்ப நாளாச்சு.திரும்ப திரும்ப ஒரே காமெடி எத்தனை நாளுக்குத்தான் கிச்சு கிச்சு மூட்டும்?செய்திகள்!எங்கயோ நடக்குறதுக்கு நாம ஏன் மண்டைய உடைச்சிக்கணும் மனோபாவம்.அரசியல் பெண்களுக்கு அலர்ஜி.இல்லைன்னா தொலைக்காட்சிக்கும் அப்பாலான உலகுக்கு தொடப்பக்கட்டைய தூக்கிட்டு வந்துட மாட்டாங்க.