பாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிறப்பதும் கூட...


அந்த ஆசிரியர்கள்  வாரத்தின் தொடக்கத்தில் கூட  அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக  வாழ்ந்து இருக்க வேண்டும்.....


ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து  முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்...


சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில்  படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால்  நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை மாறியதை பற்றி நான் கவலைப்படவில்லை.. இவர்கள் தவறான அனுகுமுறையால் ஒரு  அறியா குருத்து தன் உயிரைமாய்த்துக்கொண்டுவிட்டது.. அந்த  பெண் இனி திரும்பவரப்போவதில்லை.. அவள் செய்த குற்றம்.. அவள் மீனவசமுதாயத்தில் பிறந்த பெண் அவ்வளவுதான்..

வகுப்பில் நான்காயிரம் ரூபாய் தொலைந்து போய்விட்டது.. உதாரணத்துக்கு அந்த வகுப்பில் 40 மாணவிகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கண்டுபிடிக்க எல்லா மாணவிகளையும் சோதனைப்போட்டுவிட்டு குறிப்பாக திவ்யா என்ற இந்த  பெண் எடுத்து இருக்கலாம் என்று நான்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஷெர்லக் ஹோம்மாக மாறி  அந்த பெண்ணை  சந்தேகப்பட்டு நிர்வானப்படுத்தி சோதனைப்போட்டு இருக்கின்றார்கள்..
40 பெண்களில் அவள் மட்டும்,நிர்வான சோதனையை   சந்தித்து இருக்கின்றாள்...

40 பேரையும் நிர்வானபடுத்தி இருந்தால் கதை வேறுமாதரி போய் இருக்கும்...

ஆசிரியர்கள் வேலைக்கு வந்ததுமே எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் அடிமைகள் என்ற மனநிலைக்கு வந்து விடுவதும்.,.. பெரிய புடுங்கிகள் போல முடிவு எடுப்பதும் சிலருக்கு கை வந்த கலை... அது போலான ஆட்களை நான் சந்தித்து இருக்கின்றேன். பழகியும் இருக்கின்றேன்... அவர்கள் வந்தாலே மாணவர்கள் நடுங்க வேண்டும் என்று குரூரமாக நினைப்பவர்கள்.

கருப்பா இருக்கறவன் பொய் சொல்லுவான் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்.. இதுதான் காலம் காலமா நம் வாழ்க்கையில்  ஊடகங்கள் வழியாக சொல்லப்பட்டு வரும் செய்தி...


சமீபத்தில் கூட பதினாரு என்று ஒரு தமிழ்படம்  வந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது....கல்லூரியில் காதலிக்கும்  ஒரு பெண்ணின் அம்மா காரில் வந்து இறங்கி விசாரிக்கும் போது மாணவர்களில் ஒருவன் அந்த பெண்மணியை முதல் முறையாக பார்த்த மாத்திரத்தில் அவுங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லுவான் அதுக்கு நண்பன் இப்பதான் முதல் முறையா பார்க்குறே? எப்படி அவுங்க நல்லவங்கன்னு சொல்லற என்று கேட்கும் போது.. அவுங்க காரில் வந்து இருக்கின்றார்கள்..   என்று சொல்லுவான்... உடை,கலர், வாகனத்தை வைத்து நல்லவங்க என்று  நம்பும் சமுகம்தான் உலகம் எங்கும்.....

அன்பே சிவம் படத்தில் கமல் மாதவனை பார்த்து சொல்லுவார்.. ஒரு தீவிரவாதி என்னை போல அசிங்கமா இருக்கனும்னு அவசியம் இல்லை.. உங்களை மாதிரி அழகாக கூட இருக்கலாம் என்று  சொல்லுவார்...

நான்  கல்லூரியில் வேலை செய்த போது எந்த பிள்ளைகளையும் நான்  வெறுத்தது இல்லை...

தலைகாய்நதகுடும்ப பெண்தானே என்ன செய்துவிட முடியும்?? என்று அலட்சியத்தின் காரணைமாகவே நான்கு பள்ளி பேராசிரியர்களும் வாயில் பைப் வைக்காத குறையாக ஹோம்ஸ்ஆக மாறி இருக்கின்றார்கள்..

சதா, செல்வி,விஜயலட்சுமி,ஜெயலட்சுமி என்ற நான்கு பேராசிரியர்கள்...

அந்த பெண்  தற்க்கொலை செய்து கொண்டதும்  போலிஸ் வழக்கம் போல தனது திருப்பனியை செய்து இருக்கின்றது... மக்களின் எதிர்ப்பால் அந்த நான்கு பேராசிரியர்களையும் கைது செய்து இருக்கின்றது... உடனே  அந் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இருக்கின்றது...மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு திரும்பவும் புழல் சிறையில் அந்த நான்கு பேரையும் நீதிமன்ற காவலில்  அடைத்து வைக்க,  ஓ  ராமா என்று நால்வரும் அழுது இருக்கின்றார்கள்..

சமீபத்தில் ராஜா  ஸ்பெக்ட்ராமில் கூஜாவானது போல இவர்களும் திடும் என காலேஜ் போய் கொண்டு இருந்த 4 ஆசிரியர்களை கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு போக எதுவும் சாப்பிடாமல் கதறி அழுது இருக்கின்றார்கள்... அவர்களை மிரட்டித்தான் சாப்பிட வைத்து இருக்கின்றார்கள்.  நாங்கள் எந்த பாவமும் செய்யவில்லை என்று கதறி இருக்கின்றார்கள்.. ஆனால் ஒரு  பெண்ணை மட்டும் நிர்வாணபடுத்தி சோதனை செய்தது எந்தவிதத்தில் நியாயம்....

அவர்கள் நால்வருக்கும் இரண்டு நாளுக்கு முன் ஜாமின் கிடைத்து இருக்கின்றது...இதில் அந்த பெண் திவ்யா இறக்க போகின்றோம் என்று முடிவு செய்த போது எழுதிய கடித்தத்தில்  கூட தன்னை நிர்வாணபடுத்தினார்கள் என்று அந்த  பெண் எங்கேயும் குறிப்பிடவில்லை..யாருடைய பேரையும் குறிப்பிடவில்லை... அந்த அளவுக்கு மானத்துக்கும் மரியாதைக்கும் பயந்து வாழ்ந்து இருக்கின்றார்....அந்த ஏழைப்பெண் ...இறந்த போதும் தன்னை அப்படி யாரும் நினைத்து விடக்கூடாது.. அந்த கண்ணோட்டத்தில் தன்னை பார்த்து விடக்கூடாது என்று கடிதம் எழுதி நினைத்து அந்த  கடிதம் முற்று பெறாமலேயே போய்விட்டது.. அதனால் அந்த நால்வரும் தப்பித்து விடுவார்கள்..


நால்வரும் இளம் பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..அப்படி இருந்தும் ஒரு இளம் பெண்ணின் மனஉணர்வை புரிந்து கொள்ள முடியாமல் போனது பெரும் சோகம்.... சிறையில் போட்டதுக்கே கதறி இருக்கின்றீர்கள்... நால்வர் முன் அந்த பெண் நிர்வாணமாக உடைகளை களையும் போது அந்த பெண் கூச்சத்திலும், அவமானத்திலும் எப்படி கூசி போய்  இருப்பார்....என்பதை எண்ணி பார்க்கவேண்டும்...


அவர்கள் வேண்டும் என்று இதை செய்யவில்லை என்று வதாடலாம்.. ஆனால் தலைகாய்ந்த பெண் என்றால் எந்த அட்வான்டேஜ்ம் எடுத்துக்கொள்ளலாம் என்று  நினைக்கும்  ஒரு சில ஆசிரியர்களின் எண்ணத்துக்கு சாவு மணி அடித்து இருக்கின்றார் திவ்யா.........

 ஒரு விமானத்துக்கு  விபத்து ஏற்ப்பட்டுவிட்டால் அந்த விபத்துக்கான காரணத்தை உலகம் முழுமைக்கும் உள்ள விமான நிறுவனங்களுக்கு அனுப்பி அடுத்து இது போலான தவறு நடைபெறக்கூடாது என்று கிளாஸ் எடுத்து விட்டு வருவார்கள்... காரணம் பல கோடி முதலீடு... பல உயிர்கள் பயணிக்கும் பிரச்சனை... ஆனால் இது போன்ற விஷயத்தை மற்ற கல்லூரிகள் இந்த செய்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இது போலான தவறு திரும்ப நடைபெறாமல் இருக்க எல்லா முயற்சியும் செய்ய வேண்டும்.

 சரிகாஷாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஊடகங்கள இந்த அப்பாவியின் தற்கொலைக்கு  பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை காரணம்... சாவு நடந்தது மீனவ குப்பத்தில்.... இறந்து போன அந்த பெண் பைனல் இயர்.. அடுத்த வருடத்தில் எதாவது கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த பெண் மாதம் பத்தாயிரம் சம்பாதித்தால் கூட அந்த குடும்பம் அடுத்த வருடத்தில் நல்ல சோறு சாப்பிட்டு இருக்க முடியும்.... எல்லாம் மண்ணா போச்சு.............



 இந்த விஷயத்துல எனக்கு இன்னோரு பொண்ணு மேல கோபம் வருது.... பத்திரம பணத்தை வச்சிக்க துப்பு இல்லைன்னா  என்ன மயித்துக்கு பணத்தை காலேஜ்க்கு எடுத்து வரனும்...????


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


19 comments:

  1. [[[இந்த விஷயத்துல எனக்கு இன்னோரு பொண்ணு மேல கோபம் வருது.... பத்திரம பணத்தை வச்சிக்க துப்பு இல்லைன்னா என்ன மயித்துக்கு பணத்தை காலேஜ்க்கு எடுத்து வரனும்...????]]]

    இதுக்கு மேலவரைக்கும் சரி.. இது தப்பு..!

    இது எதிர்பாராமல் நடப்பதுதான். நீ உன் லைப்ல எதையும், எங்கேயும் தொலைத்ததே இல்லையா..?

    ReplyDelete
  2. உண்மைதான்னே நீங்க சொல்லறது.. அவன் மட்டும் சரியா வந்து இருந்தான்னா அந்த ஆக்கிடென்ட் நடந்து இருக்காதுன்னு கோபத்துல சொல்லுவோம் இல்லை அது போலதான்... பணம் எடுத்து வந்த புள்ளைய தூக்குல போடனும்னு எல்லாம் சொல்லவரலைன்னே... அந்த புள்ள எந்த தப்பும் செய்யலைதான்... ஒரு உயிரு போலயிடுச்சேன்னு சின்ன கோபம் அம்புட்டுதான்... அந்த வரிக்கு இப்படி ஒரு பதில் வரும்னு எதிர்பார்த்துதான்...

    உங்க கருத்துக்கு முழுதாய் உடன்படுகின்றேன்...

    ReplyDelete
  3. பாவம் தான்..அந்த பொண்ணு போட்டோ தேவையாண்ணே?

    ReplyDelete
  4. மேலை நாடுகளில் ஒரு சிறு தொகைப் பணத்தை மட்டுமே கையில் அல்லது பையில் வைத்திருக்க முடியும்!குறிப்பாக சுமார் இருநூறு ரூபாய்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.அதுவும் மாணவர் கைகளில் ஐந்து,பத்துப் பைசா இருப்பதே அபூர்வம்!பெரியவர்களிடம் கூட பெருந்தொகைப் பணம் இருப்பதில்லை.அப்படியிருந்து காணாமல் போனாலோ திருட்டுப் போனாலோ காவல்துறையினரிடம் முறையிடுவதே வேஸ்ட்!பெருந்தொகைப் பணத்தை ஏன் வைத்திருந்தாயென்று கேட்டு தொளைத்து விடுவார்கள்!

    ReplyDelete
  5. அந்த ஆசிரியர்கள் நால்வரும் கடுமையாக தண்டிக்கப்படனும்,தாராளமாக தலா ஐந்து வருஷம் தரலாம்.அந்த பெண்ணின் வீட்டுக்கு மாதம் 10 ஆயிரம் வருவது போல நஷ்டைஇடும் தரவைக்கலாம். ஒரே வகுப்பில் நாலாயிரம் வகுப்புக்கு கொண்டுவர்ர அளவுக்கு வாழ்க்கைதரம் ஒரு பக்கம் உயர்ந்துள்ளது,மறுபக்கம் செய்யாத குற்றத்துக்கு அவமானப்படும் அளவுக்கு மோசமாய் தாழ்ந்துள்ளது,சத்தியமாக அந்த பெண் 10000 சம்பாதித்து அந்த வீட்டை முன்னுக்கு கொண்டு வந்திருப்பார்,தன் அம்மாவை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டிருப்பார்,அந்த குருவிக்கூட்டை அந்த 4 ஆசிரியர்களும் கலைத்துவிட்டனர்.

    ReplyDelete
  6. தான் சொல்ல வந்ததை எந்த வித வார்த்தை அலங்காரமும் இல்லாமல் உண்மையான உணர்ச்சியுடன் சொல்றீங்க. இது... இது.. இந்த கோவம்தான் எனக்கு புடிச்சது.

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் வேலைக்கு வந்ததுமே எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் அடிமைகள் என்ற மனநிலைக்கு வந்து விடுவதும்.,.. பெரிய புடுங்கிகள் போல முடிவு எடுப்பதும் சிலருக்கு கை வந்த கலை... 100% rite..

    தான் சொல்ல வந்ததை எந்த வித வார்த்தை அலங்காரமும் இல்லாமல் உண்மையான உணர்ச்சியுடன் சொல்றீங்க. இது... இது.. இந்த கோவம்தான் எனக்கு புடிச்சது - repeat......

    ReplyDelete
  8. சில நேரங்களில் ஆசிரியைகள் வரம்பு மீறி நடந்துக் கொள்கிறார்கள்...
    கண்டிப்பாக இது கண்டிக்க வேண்டியது..

    ReplyDelete
  9. ஒவ்வொரு பாடம் கற்கவும் நாம் இப்படி உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறோம்...
    இந்த காலத்தில் ஏழைகளுக்கு அனைத்தும் இலவசமாய் கிடைக்கிறது... மரணம் உட்பட...

    ReplyDelete
  10. கொடூர மனம் படைத்த ஆசிரியர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சாவு மணி .... சேகர் உங்கள் கோபம் நியாயமானது

    ReplyDelete
  11. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  12. //அவர்கள் வேண்டும் என்று இதை செய்யவில்லை என்று வதாடலாம்.. ஆனால் தலைகாய்ந்த பெண் என்றால் எந்த அட்வான்டேஜ்ம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் ஒரு சில ஆசிரியர்களின் எண்ணத்துக்கு சாவு மணி அடித்து இருக்கின்றார் திவ்யா........//

    இது உண்மையாக இருக்கணும். இனியும் தொடரக் கூடாது. நல்ல பகிர்வு!

    ReplyDelete
  13. திவ்யா ஏழைப் பெண் அதனால் தான் அவரிடம் மாத்திரம் இந்தச் சோதனை- இது தெள்ளத் தெளிவு.
    இவ்வாசிரிகைகள் தற்கொலைக்குத் தூண்டிய கொலைக் குற்றவாளிகள்.
    இந்த ஆசிரிகைகளுக்குக் கிடைக்கும் கடுமையான தண்டனையே இப்படியான நிகழ்வுகள் இனிமேலும்
    நடக்காமல் இருக்க உதவும்.
    ஆனால் , நடக்கும் நெஞ்சுவலி நாடகங்களைப் பார்த்தால் இவை நடக்கும் போல் இல்லை.
    அந்த கல்லூரி ஸ்தபித்திருக்க வேண்டும். நடக்கவில்லையே! ஏழை என்றால் சக மாணவருக்குக் கூட இளக்காரமே!

    ReplyDelete
  14. அண்ணா திவ்யா ஏழை என்பதால் தான் இந்த கொடுமை. அந்த நாலு பேரையும் தூக்குல போடணும் .அப்ப தான் இனி மேல் இந்த கொடுமைகள் நடக்காது .எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல . இவங்களுக்கு தான் இதயமே கிடையாதே அப்புறம் எப்படி நெஞ்சுவலி வருது?

    ReplyDelete
  15. அண்ணா ஏழை என்றால் என்ன வேணாலும் செய்யலாமா ? அந்த நாலு பேரையும் தூக்கில் போடணும் ?அப்ப இனி மேல் இது போன்று ஒரு நிகழ்வு நடக்காது .

    ReplyDelete
  16. வினவில் முன்பே படிச்சுட்டேன் அண்ணே..
    என்று தணியும் இந்த அடிமையின் சோகம்?

    ReplyDelete
  17. ஆயிரம் குற்றவாளி தப்பிக்காலாம்,ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது.அந்தப் பெண்ணின் குடும்பத்தை நினைக்கவே மனசு கனக்குது.ஆனா ஒன்று அண்ணா,அவங்க சட்டத்தில இருந்து தப்பிக்கலாம்.ஆனால் அவங்க மனசாட்சி தினமும் தினமும் வதச்சிட்டே இருக்கும்.:-(

    ReplyDelete
  18. ஜாக்கி,

    நம் தமிழ் / இந்திய சமூகத்தில் புரையோடியிருக்கும் - கிட்டதட்ட கேன்சரைப் போல - இனம் சார்ந்த மதிப்பீட்ற்க்கு தங்கை திவ்யாவின் கொலை ஒரு எடுத்துக்காட்டு. என்னைப் பொருத்தவரை இது ஒரு அப்பட்டமான கொலை. அந்த பெண்ணோட அப்பா, அம்மாவ விடுங்க... அண்ணனா நான் / நீங்க இருந்திருந்தா, என்ன செஞ்சி இருப்போம்?. இந்த புள்ளியில்தான் வன்முறை, திட்டமிட்டு, சாமர்த்தியமாக - சில குறிப்பிட்ட இனங்களின் கைகளில் திணிக்கபடுகிறது. அத சத்தமில்லமா செய்யிறது - இதுபோல் மெத்த படிச்சவங்கதான்.
    இதுபோன்ற மனரீதியான டார்ச்சருக்கு பயந்துதான், பலபேர் படிச்சு மேலவந்தவுடன் , இனரீதியான அடையாளத்தை மாத்திடறாங்க / மறைக்கிறாங்க.


    அந்த 4 பேருக்கும் தண்டனை ?? - அவங்க தலை மயிரைக்கூட புடுங்கமுடியாது. இந்நேரம் அவங்களை காப்பாத்த அத்தனை வேலைகளையும் செய்து இருப்பார்கள். என்னோட ஆதங்கமெல்லாம் திவ்யா தன்னுடைய முடிவின்மூலம் , அந்த 4 பேரின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே என்பதுதான்.

    மூர்த்தி

    ReplyDelete
  19. Jackie, I dont think this incident is caste or community based violence, since this college founder board of director is Jeppiaar, chancellor of Sathayabama college he himself belongs to "paravar" or "Fernando" community it is Tamil christian fishermen community in kanyakumari area. And I know he is doing many things for fishermen community, may be (NOT SURE) this girl got admission on that basis too. I believe the teachers are well known to this fact. ஆசிரியர்கள் வேலைக்கு வந்ததுமே எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் அடிமைகள் என்ற மனநிலைக்கு வந்து விடுவதும்.,.. பெரிய புடுங்கிகள் போல முடிவு எடுப்பதும் சிலருக்கு கை வந்த கலை- I 100% percent agree this, whatever the reason the punishment to these people should be an example for others who have the same mentality.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner