ஒரு இயக்குனரோடு பேசிக் கொண்டு இருந்த போது.. இன்று செவ்வாய்கிழமை இன்றுதானே துணிகள் கொடுக்க கடைசி தினம் என்ற போதுதான் எனக்கு காலையில் போன் பண்ண நினைத்து மறந்து போனது நினைவுக்கு வந்தது... பொதுவாய் தமிழகத்தில் இருந்துதான் உதவி தேவையாய் இருந்தது..
முக்கியமாக சென்னையில் இருந்து.. பணம் தேவையில்லை என்று முதலிலேயே சொல்லி இருந்தேன். என்னிடம் துணிகள் உள்ளன யாரிடம் தொடர்பு கொள்ள வெண்டும் என்று கேட்ட போது நண்பர் அருன் நம்பரை கொடுத்தேன்.. பணமாக கொடுக்கின்றேன் என்று கேட்ட வெளிநாட்டு நண்பர்களிடத்தில் கண்டிப்பாக மறுத்தேன்... நான் பதிவிட்டதற்க்கு நிறைய பேர் எனக்கு போனில் நன்றி சொன்னார்கள்..எம்மக்கள் என்று எழுதியதற்கு பலர் வாழ்த்து சொன்னார்கள்... இது என் கடமை.....அவ்வளவுதான்..
நிறையபேர்.. ஜாக்கி.. எம்மக்கள் சட்டென ஒரு ஆட்டோ பிடித்து ரங்கநாதன் தெரு போய் குழந்தைகளுக்கு உடைகள் வாங்க முடியாது என்று நிதர்சனத்தை உங்கள் பாணியில் எழுதி இருந்தது மிக்க நன்று என்று போனில் பாராட்டினார்கள்..
அப்போது மாம்பலத்தில் என் மமனைவியின் அத்தை வீட்டில் இருந்தேன் சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று நினைத்த போது நண்பர் அருன் போன் செய்து ஒரு உதவி.. இதுததான் விஷயம் இதைனை பதிவாக போட முடியுமா என்று கேட்ட போது இது என் கடமை இதை கூட செய்யவில்லை என்றால் எப்படி?? என்று கேட்டுவிட்டு இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு போய்(வீட்டில்தான்தமிழ்டைப் என்னால் அடிக்க முடியும்) டீடெயில் கேட்டு அந்த பதிவை போஸ்ட் செய்தேன்...
இது சின்ன ஊடகம் அதிகபட்சம் இரண்டு பேர் போன் செய்து உதவி செய்தால் பெரிய விஷயம் என்று நினைத்த போது.. மிக அதிகமான பேர் உதவி செய்து தங்கள் மனதாபிமானத்தை நிரூபித்து இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு நன்றி... இந்த பதிவை பண்புடன் குழுத்மத்தில் போட்டு இன்னும் பலருக்கு எடுத்து சென்ற நணபருக்கு எனது நன்றிகள்.. நண்பர் பெயர் தெரியவில்லை........
நண்பர் அருன் கடிதத்தில் குறிப்பிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
=======================
ஜாக்கி அண்னனுக்கு வணக்கம்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு அவசர உதவியாக உபயோகித்த உடைகளை சேகரித்துத் தருமாறு எங்களை(save tamils movement) நாடினார்கள், இவ்விடயமாக பலரை தொடர்பு கொண்ட போது பெரும்பாலனவர்கள் பொங்களுக்காக சொந்த ஊர் சென்றிருந்தார்கள். தங்களை தொலைபேசியில் அழைத்து இதற்காக ஓர் பதிவிடுமாறு கேட்டேன்..நீங்கள் உடனடியாக செய்யலாம் வீட்டிற்கு சென்று அழைத்து விடயங்களைத் தெரிந்து கொண்டு பதிவிட்டீர்கள் ..அதற்கு மிக்க நன்றி என்ன தான் இது நமது கடமை நன்றி தேவை இலாதது என்று சொன்னாலும் அதிக பழக்கம் இல்லாத நான் கேட்டுக் கொண்டதை உடனடியாக செயதமைக்கு நாங்கள் மிக்க கடமைப்பட்டுள்ளோம்.
உங்களது பதிவிற்கு நல்ல ...
உங்களது பதிவைப்படித்து பலர் தொலைபேசியில் அழைத்திருந்தார்கள்(வெளிநாடுகளி ல் இருந்தும்)
முதலாவதாக மதுரையில் இருந்து அருள் அழைத்திருந்தார், அவரிடமிருந்து மதுரையில் இருந்ததால் பெற முடியாது போனது
செந்தில் தொடர்பு கொண்டு துணிகளைக் கொடுத்தார், இவர் புதிய துணிகளையும் சேர்த்துக் கொடுத்திருந்தார்
தமிழ் அமுதன்(பெரம்பூர்)- தொடர்பு கொண்டுடார் நான் கோயம்பேட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன் ஆனால் அவர் எனது வீட்டு முகவரி பெற்று, ஒரு நபரை அனுப்பிவைத்தார். அவர் கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.
திருவான்மியூரிலிருந்து ஷெரிப்(பெயர் சரியாக நினைவில்லை), திங்களன்று தொடர்பு கொண்டுடார் செவ்வாயன்று துணிகளைத் தருவதாக கூறினார், செவ்வாய் மாலை திருவான்மியூரிலிருந்து விருகம்பாக்கத்திற்கு தனது காரில் வந்து கொடுத்துவிட்டுச் சென்றார் இவர் மற்றும் இவரது நண்பர்கள் திருவான்மியூர் மற்றும் பெசண்ட் நகர் பகுதிகளில் சேகரித்திருக்கிறார்கள்.பெரு மளவு துணிகளைச சேகரித்துக் கொடுத்தார்கள்
தமிழ் நாடன் துபாயில் இருந்து தொடர்பு கொண்டு தானே நேரடியாக இலங்கைக்கு அனுப்புவதாக கூறி இலங்கைத் தொடர்புகளைப் பெற்றுக் கொண்டார்
அமெரிகாவில் இருந்து ஆல்பர்ட் அவர்கள் தொடர்பு கொண்டு முகவரி வாங்கி கொளத்தூரிலிருந்து துணிகளை அனுப்பி வைத்தார்
இவர்ளுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் எங்களது நன்றிகள்
திங்களன்று உங்களை தொடர்பு கொள்ளாததற்கு ஜாக்கி அண்ணன் மன்னிக்கவும்..
--
திருவான்மியூரிலிருந்து வந்தவர் பெயர் சயந்தன்
வாழ்த்துக்கள்...அ சொ
"வாழ்வில் வசந்தம் - மனித இயல்பை பொருத்தது!"
"DEFEAT IS JUS A DELAY AND NOT A FAILURE"
"EXPECTATION BRINGS PAIN"
"DISABILITY IS GOD GIVEN....HANDICAPPED IS MAN MADE"
=======================
அனைவருக்கும் என் நன்றிகள்....இந்த உதவி செய்ய என் பதிவு ஒரு கருவியாக இருந்தைமைக்கு இறைவனுக்கு என் நன்றிகள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
உதவிகள் செய்ய உதவியாக இருப்பது எவ்வளவு புண்ணியம் தெரியுமா...? நீங்கள் புண்ணியம் செய்தவர். இணையம் செய்யும் எதையும் என்பதற்கு உங்கள் இடுகை ஒரு சான்று.
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்...
ReplyDeleteஇதில் சயந்தன் என்பவர் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதிக அளவில் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டி இருக்கின்றார்...
இவருக்கு எனது நன்றிகள்.
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் அனைவரின் சார்பிலும் நன்றிகள்..
ReplyDeleteஉதவிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் அதை பதிவின் நிறைய நண்பர்களுக்கு அறிய உதவிய உங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள் பல....
ReplyDeleteஉதவிகள் உரியவர்களுக்குப் போய் சேருகிறதோ,இல்லையோ உதவ வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அனைவருக்கும் ஈழமக்கள் சார்பில் நன்றிகளும் வணக்கங்களும்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteGood work anna,
ReplyDeleteஉதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteஈழ மக்கள் என்ற வார்த்தையை வைத்து தமிழ்நாட்டில் பலரது பிழைப்பு ஓடி கொண்டு இருக்கிறது, ஒரு சிலர் வீர வசனம் எல்லாம் பேசி ஒருபுறம் ஆளும் கட்சிகளை எல்லாம் குறை கூறியும் திரிவதைவிட அந்த நாட்டில் வசிக்கும் நமது மக்களுக்கு இந்த நேரத்தில் எது தேவை என்பதை அறிந்து உதவி புரிந்தால் அதுவே பெரிது .இந்த உதவியை செய்த அண்ணன் ஜாக்கி அவர்களுக்கும் அதற்கு துணையா இருந்த நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteC.DENNIS , BAHRAIN
ஈழ மக்களை வைத்து சுவையான உணர்சிமயமான பதிவுகளை எழுதி கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பதிவர்கள் மத்தியில் அந்த மக்களுக்கு உண்மையாக உதவிய ஜாக்கி சேகரையும் அவருக்கு உதவியோர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeletegood work done by you. we can also help from here how to do it. i am writing from pudukkottai
ReplyDeleteg varadharajan
supper boss!.
ReplyDeleteமனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு ஒரு சான்று ...
ReplyDeletesamapth,
S.Korea