சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(05/01/2011)

ஆல்பம்..


சென்னையில் புத்தக கண்காட்சி  நேற்றில் இருந்து தொடங்கியது...

இது 34வது சென்னை புத்தக கண்காட்சி..
ஒரு கோடி புத்தகங்கள்.

666 ஸ்டால்கள்...
385பதிப்பகங்கள்.
அனைத்து புத்தகத்துக்கும் 10 பர்சன்ட் தள்ளுபடி...
வரும் 17ம் தேதிவரை நடக்கின்றது..
வேலை நாட்களில் மதியம் இரண்டில் இருந்து இரவு எட்டு வரை..
விடுமுறை  நாட்களில்  11மணியில் இருந்து இரவு 8,30மணிவரை.
இடம்  சென்னை அமைந்தகரை ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி.. பச்சையப்பா கல்லூரி எதிரில்....
===================



சென்னையில் நேற்று முன்தினம்  மாலை நேரத்தில் ஒரு அரைமணிநேரத்துக்கு மேல் நல்ல மழை பெய்தது..குளிரில் இருக்கும் சென்னை மக்களுக்கு இந்த மழை மேலும் சிலு சிலுப்பை ஏற்படுத்தியது..
=================================

பீகார் பாரதீய ஜனதா எம்எல்ஏ பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு இருக்கும் போது பள்ளி ஆசிரியயை ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கின்றார்.. காரணம் ரொம்ப சிம்பிள்.. எம்எல்ஏ தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் இப்படி  செய்தேன் என்று சொல்லி இருக்கின்றார்...
======================

ரத்த சரித்ததிரம் படத்தில் சூர்யா கேரக்டராக சித்தரிக்கப்பட்ட சூரி நேற்று சுட்டுக்கொள்ளபட்டார்... கூட இருந்தே குழி பறித்த விதமாக நேற்று சூரியுடன் பயணித்த நெருங்கிய நண்பனே  பாயின்ட் பிளாங் ரேஞ்சில் சூரியை சுட்டுவிட்டதாகவும் இல்லை வேறு சிலநபர்கள் பின் தொடர்ந்து வந்து சுட்டு கொன்றதாகவும் இருவேறு தகவல்கள் உலாவருகின்றன.. இருப்பினும் தனிதெலுங்கான விஷயத்ததை கொஞ்சம் நாளைக்கு தள்ளி பேச இந்த செய்தி வாய்ப்பாகின்றது..
==============
மிக்சர்..
முல்லை பெரியாறு அணை பலத்தை பரிசோதிக்க மத்திய அரசு  குழு ஒன்று அமைத்து இருக்கின்றது... ஒரிசாவை  சேர்ந்த 3 நீச்சல் வீரர்கள் அணையின் பலத்தை பரிசோதிக்க இருக்கின்றனர்.. மூன்று நாட்களுக்கு இவர்கள் டேரோ போட்டு அணையை செக் செய்ய போகின்றார்களாம்... பார்ப்போம் ரிசல்ட்.. என்ன வருகின்றது என்று ....
=========

இந்தவார சலனபடம்...

காட்பரிஸ்ன் புதிய விளம்பரம்.. என்னை தற்போது கவர்ந்த விளம்பரம்... படிக்கட்டில்  இரண்டு டீன் ஏஜ் ஆன் பெண் இருவர் சாக்லெட் சுவைக்கின்றனர்... ரசிக்கின்றனர் .. பையன் பக்கி போல கையை எல்லாம் நக்கி வாயெல்லாம் சாக்லெட்டோடு இருக்கும் போது பெண்ணின் தகப்பனர் வருகின்றார்.. அவர்கள் நட்பாய்  இருக்கலாம்.. அல்லது இருவரும் காதலராகவும் இருக்கலாம்..நமக்கு எழும் அதே சந்தேகம் அந்த பெண்ணின் அப்பாவுக்கும்....

பெண்ணின் அப்பா அவனை பார்க்கும் போது கண்கள் எல்லாம் சேர்ந்து சிரிப்பது போல  அந்த பையன் ஒரு வழிச்சல் சிரிப்பு பல்லைக்காட்டி சிரிப்பான் பாருங்கள்... அதுக்கே இந்த விளம்பரத்தை நிறைய முறை பார்க்கலாம்..


====================

படித்ததில் பிடித்தது...



லக்கி லுக் என்று அழைக்கபடும் பதிவர்,பத்திரிக்கையாளர்,எழுத்தாளர் லக்கி எழுதி இருக்கும்  கட்டுரை ரொம்பவும்  என்னை ரசிக்க வைத்தது.. அவரது பல கட்டுரைகள் மற்றும் அரசியல் நக்கல் கட்டுரைகள்  ரசிக்க வைத்து இருந்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு அவர் எழுதி இருக்கும்  அந்த கட்டுரை மிகவும் ரசிக்க வைத்தது...எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சிக்கு  முன் 1990களுக்கு முன் பால்ய வயதை அலைக்கழித்த விஷயத்தை எழுதி இருக்கின்றார்.... செமை... படித்து பார்க்க கிளிக்கவும்.. 

===================
வாழ்த்துக்கள்...

பதிவர் கேஆர்பி செந்திலின் ழ பதிப்பகம் வெளியிட்ட  கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீட்டுக்கும், கேஆர்பி செந்திலின் அடுத்த புத்தகவெளியிட்டுக்கும் என் வாழ்த்துக்கள்..

==============
இந்தவார கடிதம்..

Thalaiva,
I am Rajamani, hometown is vriddhachalam, currently in bangalore (
software preofessional, kazuthai ketta kutti suvaru). I am following your blog for the past few months, and everything is really good. I even posted a comment for the post related to Kamal. I am married and expecting kid by October 10th (suya vilambaram pothumnu ninakiraen).
Actually i wanted to email you sometime back, when you posted about Amma, but couldn't.

 please do visit us when you visit bangalore.


Sorry for writing in english, didn't have time to type in tamil (i meant i wanted to communicate in tamil as i love tamil most). Going forward will try and converse in Tamil.
Thanks for your time.
Rmani (a) Rajamani
========================================================

சினிமா...

ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஸ்ருதி,திரிஷா என்று பெயர்கள் பரிசீலிக்கபட்டு இப்போது ஹன்சிகா நடிக்க இருக்கின்றார்....
=============
துங்கா நகரம் டிரைலர் ரொம்பவும் நன்றாக இருக்கின்றது.. அந்த படம் பார்க்கவேண்டும் என்று இருக்கின்றேன்.

===============

ஆடுகளம் டிரைலர் கூட மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது.. இன்டர்வெல் பிளாக் மட்டும் 25 நாட்கள் ஷுட் செய்து இருப்பதாக சொல்லியதால்  படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.....

=============

வாழ்த்துக்கள் திரு ராம்.....

கற்றது தமிழ் பார்த்து விட்டு ராமுக்கு போன் செய்து பேசிய போது அதன் மூலம் நட்பான நண்பர்...அடுத்து வெகுநாட்களுக்கு பிறகு  அவர் இயக்கும் தங்கமீன்கள் என்ற திரைப்படத்தில் எழுதி இயக்கி அவரே நடிக்கவும் செய்கின்றார்.. நடிகர் அவதாரம் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... படத்தை தயாரிப்பது  இயக்குனர் கவுதம் மேனன்....
=========================
 பார்த்ததில் பிடித்தது...

இரண்டு நாட்களுக்கு பிறகு உத்தமபுத்திரன் படம் பார்த்தேன்.. ஏற்க்கனவே தெலுங்கில் பார்த்த படம்தான் என்றாலும்... பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன்.. நடிகர் விவேக் வருகைக்கு பிறக என்னால் சிரித்து மாள முடியவில்லை...  நன்றி விவேக பர கவலைகள் மறக்க  வைத்து  சிரிக்க  வைத்தமைக்கு......

அப்புறம் அந்த படத்தல ஒரு பாட்டு  நச்சுக்கு நச்சுக்குன்னு ரொம்ப நல்லா இருக்கு...அந்த பாட்ல ஜெலினியா ஒரு கிழிஞ்ச டவுசர் மாட்டிக்கினு ஆடும் போது  அந்த உயரத்துக்கு அந்த ஆட்டமும் இன்னும் மனசில் நச்சக்குன்னு இருக்கு....
===================

பிலாசபி பாண்டி
தண்ணி தெளிச்சி என் கோலம் போடறாங்க தெரியுமா? கோலம் போட்டு தண்ணி தெளிச்சா பைத்தியம்னு சொல்லுவாங்க...
============

இந்தவார நிழற்படம்..



புதுவையில் நான் செம மப்பில் என் ஆட்டோ போக்கஸ் கேமராவில் எடுத்த ஒரு சர்ச்சின் இரவுக் காட்சி...

===========================
நான்வெஜ் 18+

 அந்த பயபுள்ளைக்கு ஒன்னும் தெரியாது.. அப்படியே 25வயசு வரைக்கு வளந்துட்டான்... அப்பா இல்லாத பையன் அதனால் அம்மா செல்லம்....கை வேலை , கால் வேலை எதுவும் தெரியாது...12பி பஸ்ல ஏறினா.. நேரா டிரைவர் பக்கத்து சீட்ல உட்கார்ந்து கிட்டு போவோன்..பொம்பளை  வாசம் சுத்தமா கிடையாது... இன்னும் சொல்லனும்னா  அப்பாவிக்கு, சாரி படு அப்பாவிக்கு எடுத்துகாட்டா சொல்லும் சின்னத்தம்மி பிரபு போல  அவனுக்கு எதுவும் தெரியாது...

சின்ன வயிசுல கூட லாலிபப்பு சப்பிதான் சாப்பிடுவான்.. ஒரு நாளும் அதை கடிச்சது இல்லை.. இதையேன் சொல்லறேன்னா?? அப்படி அதிர்ந்து கூட நடக்காத பயபுள்ள அது...

சரி ஏழு கழதை வயசு ஆகுதே... இவனுக்கு ஒரு கால் கட்டை போட்டு வைப்போம்னு அவன் அம்மா முடிவு எடுத்தாங்க.. அந்த அளவுக்கு பையன் அம்மா கோந்து...
சரி கல்யாணம் பண்ணி வச்சாங்க...வந்த பொண்ணு அதுக்கு மேல.... அதுக்கும் ஒரு எழவும் தெரியலை...  அந்த பொண்ணு பொம்பளை சின்னத்தம்பின்னா பார்த்துக்கோங்க...

பையனோடு அம்மாவுக்கு இதயமே வெடிச்சிடுச்சி....நம்ம வீட்டு கிரகம்தான் இப்படின்னா வந்து சேர்ந்த கிரகமும் இப்படி இருக்கேன்னு வருத்தபட்டா....

முதல் இரவுரூமுக்குக்கு ரெண்டு பேரையும் அனுப்பி வச்சாங்க.. அனுப்பும் போது  அவன்கிட்ட செல்போன் கொடுத்த அனுப்பினா... எதாவது சந்தேகம் இருந்தா நம்ம பேமலிடாக்டர்கிட்ட கேட்டு கத்துக்கோன்னு சொல்லிட்டா....

பையன்  உள்ளே  போனதும் போன் அடிச்சான்..

 டாக்டர் நான் இப்ப  என்ன செய்யட்டும்...??

சரி ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு டாக்டர் கொஞ்சம் டீப்பா சொல்ல ஆரம்பிச்சார்...

முதலில் பொண்ணு ஜாக்கெட்....................................
அப்புறம் நீ  உன்.........................................................................செய்யனும்...

சரி டாக்டர்..

கடைசியா  உன்  சமாச்சாரத்தை அவுங்க டாயல்ட் போற ஹோல்ல.............................................................................. புரிஞ்சுதான்னு சொல்லி டாக்டர் போன் வச்சிட்டார்...

பையனை பத்தி டாக்டருக்கு தெரியும்.. எல்லாம் சரியா செஞ்சானா? இன்னும் போன் வரலையேன்னு  டாக்டரே அவனுக்கு போன் அடிச்சார்....

டாக்டர் இவ்வளவு பெரிய வெஸ்டன் டாய்லட் ஹோலில் என் சமாச்சாரத்தை எப்படி ???என்று அவன் பேசி முடிக்கும் முன் டாக்டருக்கு சிரிப்பை அடக்க முடியலை....உங்களாலும் அடக்க முடியலைன்னு தெரியுது.. போங்க பாத்ரூம் போங்க.......


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்..

18 comments:

  1. // பையன் பக்கி போல கையை எல்லாம் நக்கி வாயெல்லாம் சாக்லெட்டோடு இருக்கும் போது பெண்ணின் தகப்பனர் வருகின்றார்..//

    அந்தஇடத்தில நீ இருந்தா எப்படி இருக்கும் மச்சி.? அந்த பையன் ஒன்ன போலவே கோடுபோட்ட டீ ஷர்ட் போட்டுகிட்டு நக்கிக்கிட்டு நிக்கிது.

    ReplyDelete
  2. கலக்கல்ஸ்!
    விளம்பரம் சூப்பர்! :-)

    ReplyDelete
  3. நிறைய விஷயமுள்ளவரான ராம் தங்கமீன்கள் மூலம் ஜொலிக்க எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள். சினிமாவில் நல்ல சிந்தனையாளர்கள் ஜெயிக்கட்டும்.

    ReplyDelete
  4. தங்களது ழ பதிப்பகம் மூலம் கேபிளார் மற்றும் கே.ஆர்.பி. அவர்களும் புதிய சாதனைகள் புரியட்டும்.

    ReplyDelete
  5. அந்த விளம்பரத்தை நானும் ரசித்தேன். மப்புல போட்டோ எடுத்தாலும் சூப்பரா எடுக்கறீங்க. இயக்குனர் ராம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அந்த மப்புலயும் ப்ளாக் ல போடணும்னு போட்டோ பிடிச்ச உங்க கடமை உணர்ச்சி ..

    அப்ப அப்பா ... சிலிர்க்குதுங்க ...

    ReplyDelete
  7. மப்புல இருந்தாலும் வேல மட்டும் கரெக்டா ஆயிடும். போட்டோ நல்லாவே இருக்கு .
    மப்படிக்காம ஒரு போட்டோ எடுத்து போடு கண்ணு.
    கிழிஞ்சது .... நீ மப்படிக்காம வண்டிய எடுக்கவே மாட்ட. கடுபாகாத மச்சி. அதன் எனக்கு தெரியுமே!

    ReplyDelete
  8. வழக்கம்போலவே சூப்பர் அண்ணே

    தொடர்ந்து கலக்குங்க.........

    ReplyDelete
  9. Super anne...

    Intha vara 'A' joke than rasikkum padi illa... Mannikavum... matra seithigal nandraaga irunthathu...

    ReplyDelete
  10. காட்பரிஸ்ன் புதிய விளம்பரம்.. என்னை தற்போது கவர்ந்த விளம்பரம்...
    என்னையும் மிக கவர்ந்த விளம்பரம் அது.

    ஆடுகளம் டிரைலர் கூட மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது.. இன்டர்வெல் பிளாக் மட்டும் 25 நாட்கள் ஷுட் செய்து இருப்பதாக சொல்லியதால் படத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.....
    ஆடுகளம் டாப் சீ ரெம்பவும் அருமை
    இந்த வார சண்ட்வேஜ் நான்வெஜ் ரெம்பவும் அருமை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner