ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும். என்ற பழமொழி யாருக்கு சரியாக பொருந்துகின்றதோ இல்லையே எமது ஈழதமிழர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்...

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் போருக்கு முன் சுனாமி தன் ஆக்டோபஸ் கரங்களால் நிறைய பேரை மரித்து போக செய்தது... அந்த வேதனை தீர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று  யோசித்த காலதேவன்

 முள்ளிவாய்க்காலில் நான்காம் கட்ட ஈழ போரில் பாரிய இழப்புகளை சந்தித்து எம் உறவுகள். , நிறைய பேரை கிளஸ்டர் குண்டுகளுக்கு தின்னக்கொடுத்து பலர் இறந்து போனார்கள் ...அதில் உயிர் பிழைத்த எம் உறவுகள் உயிர் தப்பி  வெளிச்சிறையில் வாடினார்கள்... அந்த வடு இன்னும் மறையவில்லை...அது அந்த இயற்க்கைக்கு பிடிக்கவில்லைபோலும்...  இன்னும் என்ன  செய்யலாம் என்று யோசிக்க

ஆஸ்திரேலியாவில் அடித்த கனமழை..அப்படியே இலங்கையிலும் கால் பதிக்க வெள்ளம்  வெள்ளம்.... எங்கும் வெள்ளம்...வீடு இழந்த எம்மக்களை இந்த மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி  இருக்கின்றது...

14 மாவட்டங்கள்......
10லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள்.

23பேருக்கு மேல் மழை வெள்ளத்தில் இறந்து போய் இருக்கின்றார்கள்..
40க்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து இருக்கின்றார்கள்..

12க்கு மேற்ப்பட்டவர்கள்  கதி என்னவென்று தெரியவில்லை.

இந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் உறவுகளின் குழந்தைகள்.. மாற்றுதுணிக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்...

காசு பணம் கூட தேவையில்லை.. குழந்தைகளுக்கான  மாற்றுத்துணிகள்  தமிழகத்தில்  முக்கியமாக சென்னையில் வசிக்கும் உங்களிடத்தில் இருந்தால் கொடுத்து உதவவேண்டுகின்றேன்....


சுற்றிலும் வெள்ளம்..உயிர் பிழத்து இருப்பதே பெரிய விஷயம்... குழந்தைகளுக்கு உடை இல்லை..

நம்மை போல ஒரு ஆட்டோ பிடித்து ரங்கநாதன் தெருவுக்கு  போய் தங்கள் குழந்தைகளுக்கு உடை எடுக்க முடியாத  சூழலில் அவர்கள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகின்றேன்....

சென்னையில் இருப்பவர்கள்...குழந்தைகள் உடைகள் தேவைக்கு அதிகமாக இருந்தால் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்...


அருன் ..9962540078
சரவணகுமார்...9840090898

முக்கிய செய்தி...

வரும் செவ்வாய்கிழமைக்குள் (18/01/2011) குழந்தைகளுக்கான உடைகள் கிடைத்தால் ரொம்பவும் உதவியாக இருக்கும்

(Urgent Help required : We are collecting children's used clothes to be sent to Flood affected areas in Sri Lanka. Please help us , this is very urgent...Contact number -Arun -9962540078, Saravana Kumar - 9840090898)

மேலும் மழை வெள்ளத்தின்  தீவிரம் பற்றி அறிய...

 http://tamilwin.org/view.php?22GpXbc3BI34ei29302jQ6dd3Qjb20N922e4ILBcb3pGu2பிரியங்களுடன்.
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

9 comments:

 1. அயல் நாட்டில் வாழ்பவர்கள் இணையம் வழி பண உதவி செய்ய வழி உண்டா?

  -----------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

  ReplyDelete
 2. மிகுந்த வேதனையாக இருக்கிறது.
  இந்த இடுகை மூலம் தேவையான உதவி எம்மக்களுக்கு கிடைக்கட்டும்..

  ReplyDelete
 3. பின்னுட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி...

  பணம் காசு இப்போதைக்கு தேவை இல்லை... குழந்தைக்கான உடைகள் மட்டும் இப்போது தேவை.. செவ்வாய்க்கிழமைக்குள் கிடைத்தால் இங்கு இருந்து செல்லும் என்ஜிஓ நண்பர்களிடம் கொடுத்து அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று நண்பர் சொன்னார்....

  ReplyDelete
 4. உங்கள் தன்னலம் அற்ற சேவைக்கு தலை வணங்கிகிறோம்.

  ReplyDelete
 5. நன்றி நண்பரே! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ, நீங்கள் விடுத்த வேண்டுகோள், உங்கள் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கிறது! பதிவுகள் மூலமாக நாலுபேருக்கு நன்மை தேடித்தர நினைப்பது எமக்கெல்லாம் பெருமையே! தொடரட்டும் தங்கள் பணி!

  ReplyDelete
 6. வணக்கம்,

  தமிழனக்கு இயற்கையும் எதிரி தான், பண உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த link மூலம் செல்லலாம் http://www.tamilshealth.com/

  நன்றி
  துவா

  ReplyDelete
 7. நல்ல மனம் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..

  ReplyDelete
 8. மிகுந்த வேதனையாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ, நீங்கள் விடுத்த வேண்டுகோள், உங்கள் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.

  ReplyDelete
 9. மனசு கனக்கிறது. உங்களின் இந்த முயற்சி வீண் போகாது தல!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner