புலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை இனி குறையும்...




ஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்... சரியாக எழுமணிக்கே  சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து  பூட்டி வைத்து விடுவார்கள்..  ஆனால்  எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர்  பின் பக்க  வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும்  என்று மல்லுக்கட்டும் பொது  வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா?? அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது...


Bangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா




பெங்களூருவில்  வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய சிறிய  நகரம்… பின்னாளில்  பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு  இன்னமும்  எப்படி அண்ணாசாலை என்று அழைக்காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ??? அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..


Romeo Juliet movie Review -2015 |ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.

romeo-juliet-poster_139744498800



இயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று  படம்  பற்றிய  செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் ???எதிர்பார்ப்பை  எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல….
டிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது..
எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்…

Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.



????????????????????????????????????????????????????????????


சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான்  நடிப்பேன்…. முக்கியமாக  நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்  தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம்.

Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்


1993 ஆம்  ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன்  தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை  பிடித்து அழைத்து  வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…



Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா



ஏற்ற தாழ்வுகள் கொண்ட  நகரம் சென்னை.. அதிலும் கடந்த  2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த  பத்து வருடத்தில்  வெவ்வேறு முகமூடிகளை  சென்னை  மாட்டிக்கொண்டுவிட்டது.…

பீட்சா ஆர்டர் செய்தால் வீடு  தேடி வரும் என்று என்  நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில்  வாழ்கின்றார்கள்..

Mass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்



சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன்  ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு  வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…


பாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)



1988களில் அந்த செருப்பின்  விலை… பத்து ரூபாய்…  அந்த  செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில்  காத்தன என்றால் அது  மிகையில்லை.


Ilayaraja music copyright Issues | இளையராஜா காப்பிரைட் சர்ச்சை’




இளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...

Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்


காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில்   முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...

டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில்  பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..


PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்


எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..


50 பைசா சுற்றுலா…



சில நேரங்களில்  அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…??  ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது…  வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி  விடையில்லையோ??? அது போலத்தான்  சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான்  நாம ஏத்துக்கனும்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.18/05/2015




ஆல்பம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி  இரண்டு கலெக்டர்களுக்கும்  மத்திய அரசு ஓலை அனுப்பி  இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை  என்பதே  மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி  விட்டார்…  என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்… 

Airtel launched 4G in chennai |சென்னைக்கு அறிமுமானது எர்டெல்லின் 4G அலைவரிசை.



ஏர்டெல்காரர்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்... எந்த இடத்தில் அவர்கள் நெட் ஒர்க்கை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சன  உண்மை... அதனால்தான் இதுவரை என்னுடைய நம்பரை மாற்றாமல் வைத்து இருக்கின்றேன்…

எப்போதுமே…  முதலில் களத்தில் இறங்குபவனுக்கே வாழ்த்தும் மரியாதையும்…. காரணம்.. அவன்தான் மக்கள்  மனதில் நிரந்தரமாக பதிபவன்….

உதாரணத்துக்கு  கேபிள் டிவி என்றாலே சன்டிவி என்று எப்படி அழைக்கபடுக்கின்றதோ..? அதே போல செல் போன் நெட்ஒர்கிற்கு இன்றுவரை ஏர்டெல்தான்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.13/05/2015


ஆல்பம்..
 பட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு  உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்…  முதலில்  வந்த  நிலநடுக்கத்தில் இருந்து  இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும்  அடுத்த  நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது  லேசாக உணரப்பட்டுள்ளது.

disappointments & controversy 9th Annual Vijay Awards 2015|சலிப்பூட்டும் விஜய் டிவி விருதுகள்.




 சன் டிவி தமிழகத்தின்   முதல் சேனல்…திரைப்படங்கள். சீரியல்கள்… என்று அசத்திக்கொண்டு இருந்த போது , விஜய் டிவி பல கை மாறி பேர் மாறி....விஜய் தமிழகத்தில் வலுவாய் கால் பதித்தாலும்... விஜய் டிவி  சன்டிவியோடு எவ்வளவோ  மல்லுக்கட்டி போராடியும் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை…  இத்தனைக்கும்  புதுப்படங்கள் எல்லாம் வாங்கினார்கள்….

சாண்ட்வெஜ் & நான்வெஜ் | 26/04/2015





ஆல்பம்.

நேபாளத்தில் நில நடுக்கம்… 1500க்கு மேற்ப்பட்டவர்கள் பலி… மலைவாழ் பகுதி என்பதால் இன்னும் சேதவிவரம் அதிகம் இருக்கும்…மனிதனால் ஒரு செயற்கை பரபரப்பு ஏற்படுத்தினால்..இயற்கையால் அடுத்து நொடியே பெரிய பரபரப்பை யாரும்  எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்த்தி விடுகின்றது… அதுவும் சுற்றுலா  தொழில் கலைகட்டும் நேரத்தில் பெரிய அளவில் வாழ்வாதார  பாதிப்பினை சந்தித்து இருக்கின்றார்கள்..

தலையில் உட்காரும் காக்கைகள்.



இடத்தை  கொடுத்தால்  மடத்தை பிடிக்கின்றார்கள் என்று ஒரு கிராமத்து பழமொழி யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ.. கேகே நகர் நாகத்தம்மன்  கோவில்  அருகே வசிக்கும்  சில காக்கைகளுக்கு பொருந்தும்…


நடிகை லட்சுமி



1976,77 களில் வெளியான  சில நேரங்களில் சில மனிதர்கள், காலையிலும்…. ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்… இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்… நடிகை லட்சுமியின் கங்கா கல்யாணி கதாபாத்திரங்களை கருப்பு வெள்ளையை மீறி மானசீகமாக  காதலித்துக்கொண்டு இருக்கின்றேன்.


மணிரத்னம் மற்றும் ஓ காதல் கண்மணி படம் பற்றி சற்று விரிவான அலசல்…


மணிரத்னமே ஆனாலும்… படம் நல்லா இல்லை என்றால்  நல்லா இல்லை என்றுதான்  சொல்லுவார்கள்… கடல், இராவணன் எல்லாம்…படுதோல்வி படங்கள்…
ஆனால் ஓ காதல் கண்மணி அப்படியில்லை….

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்|19-04-2015


  ஆல்பம்.
பிரதமர்    வெளிநாடு வெளிநாடாக பறந்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுதான் டாக் ஆப் த டவுன்..... சமுகவலைதளங்களில் வறுத்து எடுக்கப்படுகின்றார்... ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்று  நினைத்தவர்கள் எல்லோருக்கும்  மரண அடி... புதிய பூதத்திற்கு பழைய பூதமே தேவலாம் என்ற நிலை...  மக்களுக்காக  சேவை  என்ற  மனப்பான்மையே அறிதாகிவிட்டது... ஆம் ஆத்மியாவது நம்பிக்கை கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக்கொண்டதோடு உட்கட்சி பூசலில் திலைத்து வருகின்றது... அப்போ யார்தான் இந்தியாவை  காப்பாற்றுவது...???


O Kadhal Kanmani‬-2015 ஓ காதல் கண்மணி திரைவிமர்சனம்.




1998 ஆம் ஆண்டு….
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று அவளிடத்தில் சொன்னேன்…


GREY-2011- கிரே... சாம்பல் நிற ஓநாய்களுடன் வாழ்வா சாவா போராட்டடம்



வாழ்க்கை சில நேரத்துல வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை அள்ளித்தெளிக்கும்….

சுஹாசினி பேசியது சரியா?



சுஹாசினி மணிரத்னத்தின் பேச்சால் .. கம்யூட்டர் மவுஸ் பிடிக்க தெரிந்தவர்களால்…. இரண்டு நாட்களாக தமிழ் இணையவெளி சூடாகி கிடக்கின்றது…

Nanbenda-2015 | நண்பேன்டா…. திரை விமர்சனம்.



உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது போட்டோக்களை நீங்கள்  பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான்  சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள்  என்பது வேறு விஷயம்….

 ஆனால் அப்படி நக்கல் விடுவது போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…

ஒரு அழகான  பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக  இறப்பதுதான் தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்.. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு  வெற்றி அடைய வேண்டும்..

இந்த விஷயத்தில் உதயநிதியை நான்  கண்டிப்பாக பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்  தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து  நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..

இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும்  நடனம் அடத்தெரியவில்லை என்றால்  தான் அம்பேல் என உதயநிதி  உணர்ந்து இருக்கின்றார்…  நீ சன்னோ …நீ மூனோ  பாடலில்  ஆடும் அந்த  நடனம் ஒன்று போதும்….  

அவருடைய டெடிகேஷனுக்கு….



http://www.jackiecinemas.com/indian-movies/nanbenda-tamil-movie-review-2015

வீடியோ விமர்சனம்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ
.....
EVER YOURS...
 

Komban-2015 கொம்பன் திரைவிமர்சனம்.


சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்…    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில்   வெளியாகி இருக்கும் கொம்பன்.

valiyavan-2015- வலியவன் திரைவிமர்சனம்.




முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…
பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…

Geethanjali Telugu movie review – 2014- கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படவிமர்சனம்.



நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.

 சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில்  கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக  போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...


உப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)



மரக் என்று  வெங்காயத்தை  கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட  நாலைந்து  சோற்று  பருக்கைகளை  வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும்  முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு   எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...

kallappadam/2015 கள்ளப்படம் திரைவிமர்சனம்.



இயக்குனர் மிஷ்கின் உதவியாளர்  வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  கள்ளப்படம்.  கள்ளப்படம் என்று  ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று  கேள்வி பட்டு இருந்தாலும்   மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்... கள்ளப்படம் எனது நண்பரின்  அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்...


சாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))

ஆல்பம்.

இந்தியா டாட்டர் ஆவணபடம்  வந்து ஒரு பெரிய பிராளயத்தை உண்டு பண்ணியது.... என்னை பொருத்தவரை  இந்த ஆவணப்படம் நம்மோடு  சுற்றிக்கொண்டுஇருக்கும் செவ்வாழைகளை இனம் காட்டியது எனலாம்..



இன்றே செய்.




தை தை தித்திதை தை தை தித்தித்தை...  

யாழினிக்கு பரதநாட்டிய வகுப்பில்  முதல் பாடம்... 

இன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015



அப்பா ....

என்னம்மா?
(என் மார்ப்பு மற்றும் கை கால்களை சுட்டிக்காட்டி)

குரங்குக்கு முடி இருக்கறது போல.... உன்  உடம்பு புல்லா   ஏன்பா முடி வளர்ந்திருக்குது?

ஙே...


JK Enum Nanbanin Vaazhkai-2015 ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைவிமர்சனம்.




சேரனின் ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை...
தமிழகத்தின் ஏன் இந்தியாவின் முதல் சிடூஹெச் திரைப்படம்..


Ennakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம்.



லுசியா... ((எனக்குள் ஒருவன்))

 கன்னட  சினிமாவுக்கு சமீபத்தில்  மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும்  கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில்  டார்ச்  அடித்து வழிகாட்டுப்வனை போல    லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது....


சென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.

சென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக  இந்த  மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க  வாய்ப்புண்டு...  இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும்   சின்ன வயது  பசங்கள் டீ  விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....


மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.



தமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும்  இயக்குனர் மணிரத்னம்... தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம்  தலை நிமிர வைத்தவர்களில் மணியும்   ஒருவர்.


kakki sattai-2015 காக்கி சட்டை திரைவிமர்சனம்.



மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்...மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்.... அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்...

சினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...



அன்பின் நண்பர்களே...

சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை  கட்டுரைகளை  விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....


சிண்டி கிராப்போர்ட்.


தாவணி கட்டிய பெண்களை  பார்த்து அவர்கள்மீது கொண்ட  ஈர்ப்பினை  தவிடு பொடியாக்கி....ஒரு வெள்ளைக்கார நடிகை ஒரே படத்தின் மூலம்  தூக்கத்தை கெடுக்க  வைத்தார்...  அவரின்பெயர் சின்டி கிராப்போர்ட்...


கோவம்.



மனைவியை ஓஎம்ஆரில்  உள்ள  அவர் அலுவலகத்தில் பைக்கில்  விட செல்கையில் இரண்டு மூதேவிகளை சந்தித்தேன்..


துரத்தும் கேள்விகள்.






மேலே  உள்ள புகைப்படத்தை பார்த்த  கணத்தில் மனம் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்தது என்பேன்.

சிலபுகைப்படங்கள் நிறைய  சேதிகளையும் கேள்விகளையும்விட்டு செல்லும் அப்படியான புகைப்படம் இது...


காத்திருத்தல்....





பத்து வருடம் காத்திருந்து காதலித்த என் மனைவியை கைபிடித்தேன்... என்பது பெருமைதான் என்றாலும்...ஒரு புள்ளியில் இவள்தான் இவளை விட்டுவிடக்கூடாது என்று ஒரு கணம் தோன்றுமே... அதைதான் இப்போது இந்த காதலர் தினத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன்...


காதலர் தின ஸ்பெஷல்.

காதலர் தின ஸ்பெஷல்.....


ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...




மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...

கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.

மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........

அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.

14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.






கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.

ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..

எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...

ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...







நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Anegan-2015- அனேகன் திரைவிமர்சனம்



எழுத்தாளர்கள் சுபாவோடு  சூப்பர் நாவல் காலத்தில் இருந்து  கேவி ஆனந்துக்கு  உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது... இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால்   அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்... அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்....  அயன் திரைப்படத்துக்கு பிறகு... வெற்றி பெற்றாக வேண்டிய சூழல்,  சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்... தனுஷ்வுடன்  முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்...  ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்...


காத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கும்.



உங்களுக்கு பிடித்த  காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய  பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம்  ஆண்டு   அருண்  மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..

 உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
என்ற பாடல்   பலருக்கு  நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...

அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த  பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா  பாடல் கூட   அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய  கண்ணுக்கும் அதன் பின்  அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே  அன்றைய காலத்தில்  பிடித்தது..

Yennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.




ஒரு திரைப்படம்  நன்றாக ஒடுகின்றதா-? இல்லையா ? என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல்   சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இருக்கும்... ஆனால் ஒரு  இயக்குனர் ஒரு படத்தை   நன்றாக இயக்கி அந்த படம் தோல்வி படமாக மக்கள் நிராகரித்தாலும், நான்  என்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன் மக்கள் அங்கீகரீக்கவில்லை என்று சொன்னால்அதில் ஒரு நியாயம் இருக்கின்றது... எந்த பெஸ்ட்டையும் கொடுக்காமல் ஆற்றில் ஒருக்கால் சேற்றில் ஒருக்கால்  வைத்தால் என்ன  செய்வது...?? அதுதான் தமிழ் திரையுலகில்  தற்போது நடந்துவருகின்றது.


பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்
என்பது இப்போது சாதாரணம்... ஐந்து பிள்ளைகள்  உள்ள வீட்டில் மூன்று வேளை உணவே சரியாக கிடைத்தால் போதுமானது என்ற வாழ்க்கை...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner