1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை பிடித்து அழைத்து வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…
ஜூராசிக் பார்க் இரண்டாம் பாகத்தை ஸ்டீவன் இயக்கினார்…மூன்றாம் பாகத்தை ஜோயி ஜான்சன் இயக்க விட்டு வேடிக்கை பார்த்தார்.. தற்போது நான்காம் பாகம் ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை கோலின் டிரவோரா இயக்கி இருக்கின்றார்…
ஒரு முள்ளுக்காட்டில் முதன் முறையாக பயணம் செய்பவன்… கல்லு, மண்ணு மூட்கள், செடி , கொடிகள், போன்றவற்றை விலக்கி ஒரு பாதையை உருவாக்குவது மிகப்பெரிய கஷ்டம்.. ஆனால் அந்த பாதையில் பின்னாளில் நடை போடுவது மிக எளிது…
கோலின் டிரவோராவுக்கு ஸ்டீவனும் ஜான் வில்லியம்சும் ஜூராசிக் பார்க்கில் போட்டுக்கொடுத்த பாதை அவருக்கு வெகுவாய் கை கொடுத்து இருக்கின்றது..
2001 ஜூராசிக் பார்க் மூன்றாம் பாகம் வெளியானது… சரியாக 14 வருடம் கழித்து அந்த சிரிசில்… நான்காவது படமாய் இந்த ஜூராசிக் வேல்டு திரைப்படம் வெளிவந்து இருக்கின்றது…
இன்னும் திரிடியில் வெளிவந்து மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி தள்ளுகின்றது.. இதற்கு முன் பெரிய பயமுறுத்தும் மிருகங்கள் படங்களில் என்ன விதமான யுக்திகளையெல்லாம் அந்த படங்களில் பார்த்தோமோ..??? அது எல்லாம் புதிய தொழில் நுட்பத்தோடு இந்த படத்திலும் இருக்கின்றது…..
=======
ஜூராசிக் வேல்டு கதை என்னவென்றால்…???
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வெரைட்டியான டயனோசர்களை கேட்டகிரியாக பிரித்து தனித்தீவில் வண்டலூர் மிருக காட்சி சாலை போல தனித்தீவில் வளர்த்து வருவதோடு பார்வையாளர்களையும் அனுமதித்து கல்லா கட்டுகின்றார்கள்…
மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.
0 comments:
Post a Comment