ஏர்டெல்காரர்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்...
எந்த இடத்தில் அவர்கள் நெட் ஒர்க்கை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை... அதனால்தான் இதுவரை என்னுடைய நம்பரை மாற்றாமல்
வைத்து இருக்கின்றேன்…
எப்போதுமே… முதலில்
களத்தில் இறங்குபவனுக்கே வாழ்த்தும் மரியாதையும்…. காரணம்.. அவன்தான் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிபவன்….
உதாரணத்துக்கு கேபிள்
டிவி என்றாலே சன்டிவி என்று எப்படி அழைக்கபடுக்கின்றதோ..? அதே போல செல் போன் நெட்ஒர்கிற்கு
இன்றுவரை ஏர்டெல்தான்…
அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங்கிற்கு 50 பைசா பணம் கட்டிய காலம் உண்டு… அன்றில் இருந்து இன்று வரை நான் அதே ஏர்டெல் எண் தான் வைத்துள்ளேன்.…
நிறைய பேர் புது நெட்ஒர்க் வந்தவுடன் மாறிபோனாலும்… நான் இன்னும் மாறவேயில்லை…
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் நண்பர்கள் இன்னும் அதே செல் நம்பர்தானே --?? என்று கேட்கும்
போது ஏர்டெல் கம்பெனி இழுத்து மூடினாதான் அந்த
நம்பர் மாறும் போதுமா -? என்று விளையாட்டுக்கு நான் என்
நண்பர்களிடத்தில் சொல்வது உண்டு…
மற்ற நெட் ஒர்க்குகளின் இண்டர்நெட் ஸ்பீடுக்கும், ஏர்டெல்
நெட் ஒர்க் ஸ்பீடுக்கு ஈடு இணையே இல்லை என்பேன்.. அதை நிச்சயம் ஏர்டெல் நெட் ஒர்க் யூஸ் செய்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள்..
ஒரு சில நேரங்களை தவிர சேவையும் நன்றாகவே இருக்கும்…
போரூரில் ஏர்டெல் பிராட் பேண்டுதான் வைத்து இருந்தேன்.. போன் செய்த நான்கு மணி நேரத்தில் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தார்கள்….
எல்லா வற்றிலும் முதலாவதாக வருவது போல 4G நெட் ஒர்க்கிலும்
ஏர்டெல் நிறுவனத்தினர்…. முதன் முதலாக சென்னையில் கால் பதித்து இருக்கின்றார்கள்….
நேற்று ஏர்டெல் அலுவலகத்தில் சமுக வலைதள ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது…
நேற்றுதான்… சென்னையில் ஏர்டெல் 4G சேவையை அறிமுகப்படுத்தியதாக அதிகார பூர்மாக அறிவித்தது…
தம்பி கடலூர் ராஜசேகர்… இந்த நெட்ஒர்கில் பணி புரிந்து இருக்கின்றான்… ஒரு நாள்
திடிர் என்று போன் செய்தான்…அண்ணே ஏர்டெல் 4G
நெட்ஒர்கிங் நாங்கதான்செய்யறோம்… வேலை பெண்டு நிமிருது.. எங்கயாவது சாப்பிட போலாமா ? என்று கேட்டு ராயப்பேட்டை சார்மினாரில்
சாப்பிட்டுகொண்டே 4G பற்றி லைட்டாக சொன்னான்..
எனக்கும் அப்போது ஒன்றும் புரியவில்லை……
ஆனால் நேற்று 4G
network பற்றி அருமையாக விவரித்தார்கள்… அதிகாரபூர்வமாக 14/05/2015 அன்று 4 G அறிமுப்படுத்தி விட்டாலும் இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன என்று தெரிவித்தார்கள்..
2G networkற்கு அண்ணன் 3G networkற்கு அண்ணன் 4G network
அவ்வளவதான்.,.. மேம்படுத்தப்படட அலைவிரிசைதான் 4G network
2G network அதுவே போதும் என்று இருந்தோம்… ஆனால்… 3G
network வந்த போது விலை அதிகம் என்றும் அது
தேவையில்லை என்றும் நாம் புறக்கணித்தோம்… ஆனால் அதன் வேகத்தை பார்த்து விட்டு பத்து
ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை… என்று 3G networkற்கு மாறினோம் இல்லையா..??அது போல
தற்போது 4G network வந்து இருக்கின்றது…
3G networkயை விட
பத்துமடங்கு வேகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. முக்கியமாக யூடியூபில் எந்த
வீடியோவை கிளிக் செய்தாலும் buffer ஆகாமல்
பார்க்க முடிகின்றது…படங்கள் எல்லாம் நொடியில் அப்லோட் ஆகின்றன.
டவுன் லோட் அப்லோட் எல்லாம்… மின்னல் வேகத்தில் நடக்கின்றது.
சென்னை வாடிக்கையாளர்களுக்கு என்று பிரத்யோகமாக 4G
network அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்… தற்போதைக்கு 3G network சேவை விலையை 4G networkற்கும் அறிமுக ஆபராக அறிமுகப்படுத்தி
இருக்கின்றார்கள்..
இந்தியாவில் கல்கத்தா பெங்களுருக்கு பின்பு 4G network அறிமுகப்படுத்தும்
மூன்றாவது நகரம் சென்னை என்பது குறிப்பிடதக்கது…
அறிமுக சலுகையாக 3G networkற்கில் இருந்து 4G networkகிற்கு மாற வேண்டும் என்றால் தற்போது இலவசமாக ஏர்டெல் கஸ்டமர் கேரில் மாற்றி தருகின்றார்கள்..
4G networkகில் ஒரு சிக்கல் இருக்கின்றது… 4G networkக்கு என்று
பிரத்யோகமான மொபைல்களில்தான் 4G network வரும்… தற்போது ஏர்டெல் சாம்சங் மோபைல் நிறுவனத்தோடு
கூட்டு சேர்ந்து galaxy-s6 . galaxy s6
edge . galaxy a5மற்றும் galaxy a7 போன்றவை 4G networkற்கு சப்போர்ட் செய்யும் மொபைல்கள்.
சரிசார் எனக்கு 4G
network சப்போர்ட் செய்யத மொபைல்தான் இருக்கின்றது என்றால்…. அதற்கு ஒரு டாங்கில் (ஹாட் ஸ்பாட்) கொடுக்கின்றார்கள்.. அதன் மூலம் நீங்கள் 4G
networkஜை வைபையாக பத்து கனென்ஷன்களுக்கு பயண்படுத்திக்கொள்ளலாம்..
2G network தடுமாற்றத்தில் இருந்து 3G networkற்கு மாற கொஞ்சம்
காலம் பிடித்தது போல தற்போது 4G networkற்கு
மாற சிலகாலம் பிடிக்கலாம்.
ஆனால் ஹைகிளாஸ் மற்றும் அப்பர் மிடில்கிளாஸ் கூட்டத்தினர் வெகுவேகமாக இந்த 4G networkற்கு உடனே மாறிவிடுவார்கள்… காரணம் அதன் வேகம்…. மடிப்பாக்கத்தில் இருக்கும் என் அக்கா
வீட்டில் இந்த 4G network நெட்வொர்க்கை டெஸ்ட் செய்தேன்… ‘ செம பாஸ்ட்…
அந்த வேகத்துக்காவே
கண்டிப்பாக 4G network மாறலாம்…
ஆனால் மாற்றம் ஒன்று மற்றுமே மாறதது என்பது நிதர்சனம்.. அதில் ஒரு பகுதிதான் ஏர்டெல்லின் 4G
network என்றால் அதில் மிகையில்லை..
மொபைலில் 4G இல் இன்டர்நெட் யூஸ் செய்து விட்டு 3Gக்கு நெட் ஒர்க் மாறினால் கடுப்பாக இருக்கின்றது... அந்த அளவுக்கு 4G நெட் ஒர்க் அசத்துகின்றது...
ஜாக்கிசேகர்.
15/05/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment