தலையில் உட்காரும் காக்கைகள்.



இடத்தை  கொடுத்தால்  மடத்தை பிடிக்கின்றார்கள் என்று ஒரு கிராமத்து பழமொழி யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ.. கேகே நகர் நாகத்தம்மன்  கோவில்  அருகே வசிக்கும்  சில காக்கைகளுக்கு பொருந்தும்…



கேகேநகரில் இருந்து நாகத்தமன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே 10 வருடத்துக்கு மேல் பழக்கடை வைத்து இருப்பவர்  சேகர்.


 கடந்த இரண்டு வருடங்களாக இங்கே வசிக்கும் காக்கைகள்  சேகரிடம் ரொம்பவும் உரிமை எடுத்துக்கொள்கின்றன… சதாரணமாக  காக்கைகளுக்கு உணவு கொடுக்க போய்… இப்போது தினமும் சேகரிடம் தைரியமாகவும் ரைட் ராயாலாகவும் காக்கைகள்   உணவு பெறுகின்றன என்பது   ஆச்சர்யம்……


 எல்லாவற்றையும்  விட  ஆச்சர்யமான  விஷயம் என்னவென்றால்  காக்கைகள் அவர் தலையில்  உட்கார்ந்துக்கொண்டு அவர் கொடுக்கும் திரட்சை மற்றும்  தானிய உணவுகளை காக்கைகள்  விரும்பி   சாப்பிடுகின்றன..

ஒரு தாய்  வழி குட்டியாக மூன்று காக்கைகள் அவரை சொந்த தகப்பன் போல பாவித்து அவரோடு பாசப்பினைப்பை  காண்பிக்கின்றன….

சேகரின் மனைவி  தினமும் 100 ரூபாய்க்கு தானியங்கள் வாங்கி போடுவதாகவும்… இது எங்களுக்கு  கிடைத்த பெரிய கொடுப்பினை என்று  சொல்லி மகிழ்கின்றார். காக்கை தலையில் பட்டால் தீட்டு… என்று அபசகுனமாக  யோசிக்கும்  வேலையில்…
காக்கைளுக்கு பசி போக்குவது சாதாரண விஷயம்  அல்ல…

பாச நேசங்களுக்கு  மொழி, இன பாகுபாடு கிடையாது…   பாசம் என்பது  உணர்த்தப்படுவது அல்ல… உணரப்படுவது….அதை சென்னை அசோக் நகர்  பழக்கடை சேகர் நன்றாகவே உணர்ந்து இருக்கின்றார்…

நேசம் காட்டு சேகர் தம்பதிகளுக்கு உங்கள் வாழ்த்துக்களை ஜாக்கி சினிமாஸ் சார்பாக  தெரிவியுங்கள்..  அவரது தொலைபேசி எண்,…9444393172

 வீடியோ கானொளி...


========

  நல்ல விஷயங்களை  இனம் கண்டு அதனை பாராட்டுவது என்பது   பெரிய விஷயம்...  இந்த வீடியோ பதிவை.. சிறப்பு வீடியோ  பகிர்வு என்று தனது பேஸ்புக் தளத்தில் ஷேர் செய்த... தமிழ் இந்து பத்திரிக்கைக்கும்... அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது நன்றிகள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

1 comment:

  1. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்.... தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்.

    விலங்குகளை (pet) வளர்ப்பவர்கள் எல்லோரும், விலங்குகள் மனிதனைவிட மிக மேன்மையானவை. கட்டுப்பாடு இல்லாத அன்பை செலுத்தக்கூடியவை (unconditional love) என்று சொல்கிறார்கள். மனிதந்தான் Selfish in nature.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner