திருட்டுக்கு 20 பேர் சுட்டுக்கொலை- நியாயமா ???





 செம்மமரத்தை  திருடினார்கள்  சுட்டுக்கொன்றோம்... ஆமாம் அது நியாம் தானே..

திருடினார்கள் என்றால்... சுட்டுக்கொள்வோம்...

லஞ்சம் வாங்கி அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தினார்கள்... சுட்டுக்கொன்றோம்.

அரசு நிலத்தை அதிகாரத்தை  பயண்படுத்தி ஆட்டையை  போட்டார்கள்... சுட்டுக்கொன்றோம்...

தொலை தொடர்பு ஏல  விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பை ஏற்ப்படுத்தினார்கள்... சுட்டுக்கொன்றோம்..

 லஞ்சம் வாங்க நிர்ப்ந்தித்த காரணத்தால்  அதிகாரி  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்  அதனால் அமைச்சரை சுட்டுக்கொன்றோம்...

 என்கவுண்டர் என்பது  பெரிய ரவுடிகள் .... அதிகாரத்தை  தன்  பக்கம் வைத்துக்கொன்டு பலரை வாட்டி வதக்கியர்களை என்கவுண்டர் செய்யும் போது  மனித உரிமை ஆர்வலர்களை தவிற  பொதுமக்கள்  கண்டிப்பாக ஆதாரிப்பார்கள்...  ஆனால் ஆந்திராவில் சுடப்பட்ட இந்த 20 பேர் என்கவுண்டரில் தமிழக   பொதுமக்கள் கொதிப்பாய்தான் இருக்கின்றார்கள்...


செம்மரத்தை  வெட்டியவர்களை சுட்டுக்கொண்றோம் என்பது பிராது...

அதுக்காக 20 பேரா...?அப்படி 20 பேரை சுட்டு வீழ்த்த முடியும்  என்றால் காட்டில் உள்ளே சென்ற காரணத்துக்காகவே  சுட்டு கொன்று விட்டு பக்கத்தில் ஒரு கயிற்றையும்  கோடாலியையும் போட்டு விட்டு.. அப்பாவி ஒருத்தனை   மரம் வெட்ட வந்தார்கள் சுட்டுக்கொன்றோம் என்றுமிக ஈசியாக  கேஸ் ஜோடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்....


ஆந்திர வனப்பகுதியில் அத்து மீறி 20க்கும் மேற்ப்பட்டவர்கள்  செம்மரம் வெட்டிய போது...மரம் வெட்டியவர்களை  போலிசார் சுற்றி வளைத்த பொது நடந்த மோதலில்....துப்பாக்கி சூட்டில்  இரண்டு பேர் பலி 18 பேர் கைது என்றால் கூட மனது ஆறுதல் அடைந்து இருக்கும்.... 20 பேர்.... அனைவரும் கூலி  தொழிலாளர்கள்...  உடனே பணக்காரர்கள் ஆக தவறான பாதைக்குதிருப்பி விடப்பட்டவர்கள்...


 உதாரணத்துக்கு கஞ்சா விற்க தடை.... அதையும் மீறி விற்றவர்களை  சுட்டுக்கொன்றோம் என்று சொல்லும் அதே வேளையில்... கஞ்சா பயிரிட்ட... கஞ்சாவை இவர்களுக்கு சப்னை செய்த  அதிகாரவர்கத்தையும்  சேர்த்து சுட்டுக்கொன்றோம் என்று சொன்னால்... வாழ்த்தலாம்..

ஆனால்   வில்லை  விட்டு விட்டு அம்பை கொன்று குவித்து இருக்கின்றார்கள்...

டெல்லியில்  யோனியில் ராடு ஏற்றி  கற்பழிப்பு செய்தவன்  சட்டத்துக்கு முன் சின்ன பையன் என்பதால் இன்னும்  மூன்று வருடத்தில் வெளியே வந்து விடுவான்... அதை விட யோனியில் வழியே குடல் எடுக்கும் அளவுக்கு கற்பழிப்பில் ஈடுபட்ட  வெறிகொண்ட அத்தனை   பேரும் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள்..


முதல்வர் ஹெலிகாப்டர்  இறங்க இடையுறாக இருந்தது என்று வெட்டி சாய்த்த மரங்கள் ஏராளம்... மரம்  வெட்டியதை விட பெரிய தவறுகள் இங்கே அதிகம் நடக்கின்றன....

குற்றவாளிகளுக்கு வக்காலத்து  வாங்கவில்லை...

ஆனால் இந்த குற்றத்துக்கு  மரணம்தான் தண்டனையா என்பதுதான்  நான் முன் வைக்கும் கேள்வி....???

ரயில் நிலையத்தில்  நிராயுத பானியாக நின்று கொண்டுஇருந்த மக்களை காக்கை குருவி சுடுவது போல  சுட்டுக்கொன்ற தீவிரவாதிக்கு ஆதாரமாக  சிசிடிவி கேமரா பதிவு இருக்கின்றது.. உடனே  தூக்கிலிடுங்கள்... அல்லது என்கவுண்டர்  செய்யுங்கள்.. ஆட்சேபனை இல்லை...

நிருபயா கற்பழிப்பில் தன்னை  கற்பழித்தவர்களை இறப்புக்குமுன் அடையாளம் காட்டி விட்டு மரித்து போனாள்.. அவர்களை  தூக்கிலிடுங்கள்  என்கவுண்டர் செய்யுங்கள் ஆட்சேபனைஇல்லை...

ஆந்திர மாநிலத்தை  சேர்ந்தவர்கள்  மரம் வெட்டவில்லையா??? அவர்கள் என்ன அவ்வளவு உத்தமர்களா?? மரம் வெட்டிய எத்தனை பேரை ஆந்திர வனத்துறை சுட்டுக்கொன்று இருக்கின்றது..??? ஆக இங்கே இது திட்டமிட்ட படுகொலை என்பது ஊர்ஜிதமாகின்றது.


இந்த விஷயத்தில் தமிழன் என்ற பதம் நெருடல்தான்..இல்லை என்று சொல்லவில்லை... இதற்கு முன் செம்மரம் வெட்டிய ஆந்திரக்காரர்கள் அட்லிஸ்ட் பத்து பேரை சுட்டு சாவடித்து இருந்தார்கள் என்றால்.. இப்போது தமிழன் என்ற பதத்தை யார் உபயோகித்தாலும்  அது தவறுதான்..

செம்மரம் வெட்டிய 20 ஆந்திர கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொன்றார்கள் என்று கடந்த பத்து வருடத்தில் ஒரே ஒரு செய்தி வந்து இருந்தாலும் .. தமிழன் என்ற பதத்தை யாரும் சொல்ல போவதில்லை...

எச்சில் துப்பினா ஃபைன் அல்லது ஜெயில் தண்டனைன்னு சொல்ற ஊர்ல துப்பினா தப்புத்தான் என்றாலும்..... எச்சில் துப்பினா பைன் போடறது தப்பில்லை ... எச்சி துப்பிட்டே அதனால் தலையை வெட்டுனேன் சொன்னா நீங்க ஒத்துக்கிவிங்களா?-? அல்லது நாக்கை வெட்டி விடுவோம்ன்னு சொன்னா நீங்க ஒத்துக்கிவிங்களா-?? இந்த குற்றத்துக்கு இதுதான்தண்டனைன்னு இருக்குஇல்லை....

அது மட்டுமல்ல... கொசு திடிர்ன்னு வாயில பூத்துடுச்சி.... அனிச்சை செயலா எச்சியை துப்பிடடேன்.. அசுத்தம் ஏற்ப்படுத்தி விட்டாய்ன்னு நக்கை வெட்டினா அது சரியா..???

மனித உரிமை அமைப்பு  மற்ற மாநிலத்தவர்களுக்கு போராடும்... ஆனால் இறந்து   போனவர்கள் தமிழர்கள் என்பதால்  அது ரொம்பவே யோசிக்கும்.
 கண்ணுக்கு  கண் பல்லுக்கு பல் என்று தண்டனை  கொடுப்போம் என்றால்... மவுலிவாக்கம் கட்டிடம் கட்டியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்..?

செம்மரக்கட்டை ஏற்றி பிடிபட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்....???

 நான் திரும்புவம் அடிக்கடி சொல்வதுதான்..  இந்தியாவை பொருத்தவரை குற்றத்தை மிக பெரியதாக ... அதுவும் அரசியல் பின் புலத்தோடு  செய்தால்.....


நீங்கள் நிச்சயம்  உயிர்  பிழைக்கலாம்...

 சட்டம் தன் கடமையை கண்டிப்பாக செய்யும்....


குறிப்பு....
நிறைய பாலிட்டிக்ஸ்... வனத்துறை ஊழியர்களை  மிரட்டுவது, கொலை செய்வது, நிறைய விஷயங்களை  மரம் வெட்ட செல்லும் கூலி தொழிலாளர்ள் செய்து இருக்கின்றார்கள்.... அது ஆந்திர தொழிலாளிர்களாகவும் இருக்கலாம்.. அல்லது   தமிழக தொழிலார்களாகவும் இருக்கலாம்...

 ஆனாலும் 20 பேரை போட்டு தள்ளி இருக்கின்றார்கள்  என்றால்... மிகப்பெரிய சதியை வெளியே சொல்லி  விடுவார்கள் என்ற பயமே இதுக்கு காரணமாக அமைந்து இருக்கும் அது மட்டுமல்ல... வனத்துறை ஊழியர்களை கொன்றவர்கள்... இவர்களுடைய  ஆந்திரவில் இருக்கும் பெரிய டானாக  இருக்கலாம்...

 உதாரணத்துக்கு பிதாமகன் படத்துல கஞ்சா பயிர் வைக்கும் மாதவன் போல  பெரிய கையா இருக்கும்  அந்த கை  வனத்துறை ஊழியர்களை கொலை  செஞ்சி இருக்கும்... மாட்டிக்கிட்டது.. சூர்யா,  விக்ரம் போன்ற ஆட்கள்தான்... இப்படிம் இருக்கலாம் என்பது  அனுமானம்தான்.... இப்ப எப்படி கதை வந்துடுச்சின்னா... நாங்க யோக்கியங்க...தமிழ்காரவங்கதான்  கெட்டவங்க... அவுங்கதான் நம்ம வனத்தை நாசம் செய்யறாங்க... என்பதாய்...

அது மட்டுமல்ல ...  உள்ளுர் ஆட்கள்  மரம் வெட்ட வர மறுத்தகாரணத்தால் இங்கே தமிழ்நாட்டில்  இருந்து ஒரு நாளைக்கு 6000 கூலி பேசி அழைத்து சென்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 திருடனாங்க சுட்டோம்... சரிதான்.. ஆனால் 20 பேரில் இரண்டு பேரை கூடவா உயிரோடு பிடித்து ரீமாண்ட் செய்ய முடியவில்லை... உயிரோடு விட்டால்...???? மிகப்பபெரிய உண்மை வெளிவந்து விடும் என்ற பயத்தில் இந்த படுகொலைகள் நடந்து இருக்க வாய்ப்புள்ளதாகவே சந்தேகம் எழுகின்றது.

திருட போனது தப்புதான்.... சட்டது தப்பில்லைன்னு வச்சிச்கோங்க... ஆனா ஒரு ஐந்து பேரை கூடவா.. சட்டத்துக்குமுன்ன நிக்க வைக்க தோனலை...????

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. விரிவான விசாரணையில் உண்மைகள் தெரிய வரும். அந்த விரிவான விசாரணை உண்மையாக நடைபெற வேண்டும். இல்லையென்றால் பிணமான கூலி தொழிலாளர்களுடன் உண்மையும் பிணமாகிவிடும்.

    ReplyDelete
  2. நம்ம நாட்டுல நீதி இல்லை. நிறைய கோமாளித்தனம் நடக்கிறது. எந்த வழக்கிலும் யாரும் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டுத் தண்டிக்கப் படுவதில்லை. ஏமாந்தவர்கள் மட்டும்தான் குற்றவாளியாக்கப்படுகிறார்கள். போலீஸ் என்னதான் முயற்சி செய்தாலும், குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். 20 பேரைக் கொன்னது தவறு. ஆனால், இனிமேல் மரம் வெட்ட யாரும் போக மாட்டார்கள் அல்லவா? கொலையைத் திட்டமிட்டவனைக் காட்டிலும் கொன்றவனுக்குத்தானே தண்டனை கொடுக்க வேண்டும்? தில்லி கற்பழிப்பு வழக்கிலேயே, மக்களே அவர்கள் எல்லோரையும் கொன்றிருக்க வேண்டும். ஏனெனில் நம் நாட்டுச் சட்டம் ஏமாந்தவர்களைப் பழி வாங்கும். பணக்காரர்களை விட்டுவிடும். (உதாரணத்துக்கு, நீங்கள் 1000 ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றினால் துண்டுபோட்டுக் கழுத்தைப் பிடிக்கும் அரசு, பல கோடி ரூபாய் வரிகட்டாமல் ஏமாற்றும் பெரியாட்களிடம் சலாம் போடுகிறது).

    என்னைப் பொருத்தவரையில் நான் இந்த எங்கவுண்டரில் தவறு காணவில்லை.

    ReplyDelete
  3. அய்யாமாருன்களா!உங்கள் வாத விவாதங்களை எல்லாம் பார்க்கும் போது எங்களை விட்டு நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஒருவன் நம் ஊரில் பிறந்த தாலோ நம் மொழி பேசுவதலோ நம்மவன் இல்லை நம் அன்றாட பிரச்னை களை புரிந்தவன் தான் நம்மவன் ஊருலே விவசாயம் இல்ல விளைய வச்சாலும் விலை இல்ல வேற வேலை வாய்ப்பும் இல்ல எங்க ஊருல நாங்க மணல் அல்ல போறோம் எங்க ஆத்துல நாங்க மாட்டு வண்டியிலே மணல் அள்ளுனா அது மணல் திருட்டாம் ஆனால் டிப்பர் லாரியிலே அள்ளினா அது மணல் குவரியாம் இப்போ நாங்களும் திருடங்கல்யிடோம் எங்களையும் சுட போலிசை அனுப்புங்க

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner