1976,77 களில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், காலையிலும்…. ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்… இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்… நடிகை லட்சுமியின் கங்கா கல்யாணி கதாபாத்திரங்களை கருப்பு வெள்ளையை மீறி மானசீகமாக காதலித்துக்கொண்டு இருக்கின்றேன்.
சம்சாரம் அது மின் சாரம் படத்தில் கூட கொஞ்சம் மிகையாக நடிக்கின்றாரே என்று யோசித்து இருக்கின்றேன்…. ஆனால் இந்த இரு படங்களிலும் சான்சே இல்லை… என்ன நடிப்பு..???? என்ன நடிப்பு...??
யப்பா… அதுவும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் அலுவலக காட்சி மற்றும்ஸ்ரீகாந் காமினேஷன் ஷாட்டுகளில் அசத்தி இருக்கின்றார்… இயல்பான உடல்மொழியுடன் கூடிய நடிப்புக்கு அந்த படத்தை உதாரணத்துக்கு சொல்லலாம்…
ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்... படத்தில் கல்யாணி கதாபாத்திரம்...32 வயது நடிகை, முதிர்கன்னி, அவளுக்கான காமம், காதல், இயலமை, தவிப்பு, அங்கலாய்ப்பு, நடிகை என்பதால் கிழவிரக்கம்.. எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் அந்த நடிப்பு...??? ஏகிளாஸ்.
சீ துரு சேலையில் ஒற்றை பிளிட்டில் ஜாக்கெட்டி முந்தியை சைடில் சொருகிக்கொண்டு படுக்கையறையில் கொஞ்சி நடிகை லட்சுமி கொஞ்சி பேசுகையில் … யப்பா…. டைம் மெஷின் என்று ஒன்று இருந்தால் ..பிளாக் அண்டு ஒயிட்டாக இருந்தாலும் பரவாயில்லை… என்று ஸ்ரீகாந்தை தள்ளி விட்டு நாம் போய் அந்த இடத்தில் இருந்தால் என்ன? என்று எண்ணும் அளவுக்கு பேச்சிலேயே சொக்க வைக்கின்றார்….
ஸ்ரீகாந் சாப்பிட்டு கைகழுவியதும் துண்டு கொடுக்கும் அந்த நெருக்கமான நேர்த்தியிலும் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவும் அந்த காட்சியிலும்… யப்பா என்ன நடிப்பு… உடம்பு எல்லாம் நடிக்கிதுப்பா…
ஆனால் அவரை மிகச்சரியாக தமிழ் சமுகம் பயண்படுத்திக்கொள்ளவில்லை என்பது என் அபிப்பராயம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
21/04/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Julie and Mithunam
ReplyDeleteஎன்னய்யா திடுமென்று நடிகை லட்சுமி ஞாபகம்? ஏதேனும் கருப்பு வெள்ளை டிவி படம் பார்த்தீர்களா? அவரின் திறமையும் தைரியமும் பாராட்டப்படக் கூடியது. அந்த தைரியத்தைத் தன் மகளிடம் பார்த்தபோது அவரால் பாராட்ட இயலவில்லை.
ReplyDelete