சுஹாசினி பேசியது சரியா?சுஹாசினி மணிரத்னத்தின் பேச்சால் .. கம்யூட்டர் மவுஸ் பிடிக்க தெரிந்தவர்களால்…. இரண்டு நாட்களாக தமிழ் இணையவெளி சூடாகி கிடக்கின்றது…


புள்ளையார் பிடிக்க போய் குரங்காகி போன கதையாக…. பத்திரிக்கையாளர்களுக்கு ஐஸ் வைக்கின்றேன் பேர்வழி என்று இணைய ரசிகர்கள் ஒரு பிடி பிடிக்க…. இரண்டு நாட்களாக சுஹாசினியை வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்…

மவுஸ் பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் சினிமாத விமர்சனம் எழுத வந்து விட்டார்கள்… பத்திரிக்கையாள்ர்களை பார்த்து …..நீங்கள் அவர்களை வளரவிடக்கூடாது… நீங்கள் எங்கள் படத்தை பார்த்து நல்ல படியாக விமர்சனம் எழுத வேண்டும் என்று விழாவில் பேசி வைத்தார்....

நடிக்க தெரிந்தவர்கள் சினிமாவில் நடிப்பது போல… இசை தெரிந்த ஏ ஆர் ரகுமான் இசையமைப்பது போல சினிமா தெரிந்தவர்கள் சினிமா விமர்சனம் செய்ய வேண்டும் என்று கருத்தை உதிர்க்க… ஜனநாயக நாட்டில் கருத்தை உதிர்க்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருந்தாலும்… எந்த இடத்தில் என்ன பேச வேண்டும்…?? 
அது என்ன மாதிரியான எதிர் வினையை உருவாக்கும் என்று இன்னேரம் அவர் புரிந்துக்கொண்டு இருப்பார்….

இராவணன் படத்தில் வசனம் எழுதும் போது நீங்கள் குவாலிபைடான வசனகர்த்தாவா?
நீங்கள் கேமரா மேன்..?? முதலில் நடிக்க வந்த போது நடிப்பு துறையில் தேர்ச்சி பெற்றவரா?

போன்ற கேள்விகள் சமுகவலைதளத்தில் எழுப்படுகின்றன.,

ஆனால் அவர் அப்பா .,… சித்தப்பா… கணவருக்கு இருக்கும் உலக அனுபவம்… அவருக்கு மிகவும் குறைவு என்பது என் கருத்து…

எந்த பிரேமாக இருந்தாலும் அழகாக காட்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்தோடு வளர்ந்தவர் என்பதால் அவர் எண்ணமும் அப்படியே இருக்கின்றது…

குவாலிபைடு பீப்பிள் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டும்… பயப்படுறியா குமாரு என்று தமிழ் பறவை டைமிங் டுவிட் செய்துள்ளார்…

அருக்கானிக்கு நாக்குல சனி.

புருஷன் எடுத்து வச்ச நல்ல பேரை எல்லாம்… இந்த அம்மா மைக்ல பேசி கெடுக்குது.. என்று சமுக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்…

இன்னும் படம் வெளிவந்தால் வேறு ஒரு பஞ்சாயத்து கண்டிப்பாக ஓடும்…

பார்ப்போம்.


விரிவாய் வீடியோ விமர்சனத்தில்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. Her Family always talk Non sense (includes her appa and chithappa)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner