காத்திருத்தல்....

பத்து வருடம் காத்திருந்து காதலித்த என் மனைவியை கைபிடித்தேன்... என்பது பெருமைதான் என்றாலும்...ஒரு புள்ளியில் இவள்தான் இவளை விட்டுவிடக்கூடாது என்று ஒரு கணம் தோன்றுமே... அதைதான் இப்போது இந்த காதலர் தினத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன்...
கலப்புதிருமணத்தின் வெற்றி என்பது ....இரண்டு பேருமே பொருளாதார சூழலில் சற்றே வெற்றி பெற வேண்டும் அப்போதுதான் அந்த காதல் நிலைக்கும்...


காதலை ஏற்றுக்கொள்ளும் முன் என் மனைவியிடம் சொன்னேன்...


ஏழு வருட வயது வித்தியாசம்...

12 வதுதான் படிக்கறே... இது சரி வர வாய்ப்பே இல்லை என்றேன்... எனக்கு நாலு தங்கைகள்...நான் பத்தாவதுதான் படித்து இருக்கின்றேன்.. கைத்தொழில் என்று சொல்லிக்கொள்ள பெரியதாய் இல்லை..மாதம் எவ்வளவு சம்பாதிப்பேன்??? என்று உறுதியாக சொல்ல முடியாது... நம்ம காதல் தேறுவது கஷ்டம் என்றேன்...


நான் காத்திருக்கின்றேன்... எத்தனை வருடம் என்றாலும் காத்திருக்கின்றேன்....அப்படி உன்னால் சம்பாதிக்க முடியாமல் சொற்பவருமானம் கொண்டு வந்தாலும்.... நான் விராணம் பைப் உள்ளே சாக்கு கட்டி ... குடும்பம் நடத்த கூட நான் ரெடி என்று சினிமா வசனம் போல அவள் பேசினாள்...

அவ்வளவு ஏன் நான் வேலைக்கு போனா உன்னை உட்கார வச்சி நான் சாப்பாடு போடுறேன்... என்று பெரிய சப்போர்ட்டாக தன்னம்பிக்கை கொடுத்தவள் அவள்தான்...

வீராணம் பைபில்ஒரு பெண் என்னோடு குடும்பம் நடத்த தயாராக இருக்கும் போது.. நான் எந்த அளவுக்கு உழைக்க வேண்டும்... ?? எப்படியெல்லாம் நான் முன்னேற வேண்டுமோ...? அப்படியெல்லாம் உழைக்க ஆரம்பித்தேன்.
அதனாலே காத்திருத்தல் அவசியமாகி போனது...

ஆனால் அவன் என்னிடத்தில் காதல் சொன்ன கணத்தில் ஒரு ஊசலாட்டம் இருந்தது... இந்த பெண்ணை எந்த அளவுக்கு நம்பலாம்?? என்று ஒரு யோசனை...

இரண்டு வாரத்தில் அதற்கு பதில் கிடைத்தது...

வேலை வேலை என்று சுற்றிக்கொண்டு இருந்தேன்... காலையில் சொன்னாள்... சாயங்காலம் எழு மணிக்கு வீட்டுக்கு  வா... உன்னை பார்க்க வேண்டும் என்றாள்....

நான் அதை உண்மையில் மறந்து போய் இருந்தேன்... இரவு 9,30 மணிக்கு சென்றேன்... படிகளில் பிங்க் நிற தாவணியில் வாசல் படியில் உட்கார்ந்து இருந்தாள்...

அந்த பொண்ணு மூணு மணி நேரமா... அந்த படிக்கட்டைவிட்டு எழுத்துறக்கலையே ? என்று கீழ் வீட்டில் இருப்பவர்கள் சொன்னார்கள்... அந்த காத்திருந்தல் எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. காரணம் எனக்காய் யாரும் அப்படி காத்திருந்தது இல்லை...


அந்த கணத்தில் முடிவு செய்யதேன்.... அவள்தான் என் வாழ்க்கை என்று...


நீங்கள் ஏன் புத்தகம் போடவில்லை...???

 நீங்கள் ஏன் சினிமா இயக்கவில்லை..? என்ற கேள்விகள் இணையத்தில் புழங்க வந்து சரியாக இரண்டு வருடம் கழித்து மேலே சொன்ன கேள்விகள் இன்றுவரை என்னை துரத்தி வருகின்றன...

20 ஆயிரம் செலவு செய்தால் புத்தகம் போட்டு எழுத்தாளர் முத்திரைக்குள் வலம் வரலாம்..... நைச்சியமாக பேசினால்... தயாரிப்பாளர் ரெடி செய்து இயக்குனராக விடலாம்... ஆனால் அதனை தக்க வைத்த கொள்ள நிறைய உழைக்க வேண்டும்.... இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்... அதை செய்ய நேரம் இல்லை...


எங்கே செல்வதாக இருந்தாலும் அவளையும் குழந்தையையும்.. இன்று வரை அழைத்து செல்கின்றேன்.....அது மட்டுமல்ல... கிடைத்த நேரத்தை குடும்பத்துடன் செலவிடுகின்றேன்.


அது மட்டுமல்ல என் வாழ்க்கை யாரோடும் போட்டு போடும் ரேஸ் குதிரை வாழ்க்கையை நான் வாழவில்லை.

விகடனில் கவுதம் மேனன் பேட்டி படித்து இருப்பீர்கள்... கவுதம் கஷ்ட ஜீவனத்தில், காதல் தோல்வியில் தோள் கொடுத்த ‘நட்பாய் பழகிய பெண்ணைதான் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்....

அதில் சொல்லி இருப்பார். எந்த சக்சஸ் பார்ட்டிக்கும் நான் செல்வது இல்லை.. கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் செலவு செய்வேன் என்று அது போலத்தான் நானும்...

அந்த பேட்டியை முழுதாய் படித்தால் அதன் அர்த்தம் புரியும்.

சரவணா வீடியோசில் வேலை செய்த போது கையில் காசு இருக்காது... அவள் வேலைக்கு போய் வீட்டில் கொடுத்தது போக மீதம் உள்ள காசில் தாம்பரம் பட்ஸ் பேரடைசில் ஒரு தோசைக்கு மேல் ஒரு ஸ்வீட் சொல்லி சாப்பிட்டு விட்டாள் என்று எல்லாம் காசு இல்லாத கோரமைக்கு சண்டையெல்லாம் போட்டு இருக்கின்றேன்....


என் அம்மாவுக்கு பிறகு என் திறமை மீத நம்பிக்கை கொண்ட பெண் அவள்தான்... நான் ஆட்டோ ஓட்டிய போது ஒரு பயணத்தில் பழக்கமானவள்..
ஆட்டோவில் இருந்து கேமராமேன், போட்டோகிராபர்,வாத்தியார், ஸ்கிரிப்ட் ரைட்டடர், புரோகிராம் பிரொட்யூசர், சப் எடிட்டர் ,விமர்சகர் என்று என் தாயை போல இன்றுவரை என்னை வளர்ந்து அழகுபார்ப்பது அவள்தான்...
இன்னும் நான் பொருளாதார சூழலில் வளர வேண்டும்...


பிங்க் கலர் தாவணியில் 12 ஆம் வகுப்பு படித்த பெண்... என் வருகைக்காய் காத்திருந்த அந்த மூன்று மணி நேரக்காத்திருப்புக்கு நான் செய்யும் கைமாறு அதுவாகத்தான் இருக்க வேண்டும்.


((இந்த போட்டோ 2005 ஆம் ஆண்டு வாக்கில் டிவி ஸ்டேன்மேல் ஆட்டோ போகஸ் கேமராவில் டைமர் செட் செய்துக்கொண்டு நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் செல்பி இது.. ))


((காத்திருந்து அதே பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்..))


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14/02/2015

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. உங்கள் உணமையான காதலே உங்களை இன்னும் நல்லா வாழ வைக்கும்...பகிர்வுக்கு மிக்க நன்றி....
  மலர்

  ReplyDelete
 2. அருமை அண்ணா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. காலமெல்லாம் காதல் வாழ்க... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  தம 2

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பா. உங்களை பார்த்தால் பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கிறது. திருஷ்டி சுத்தி போட்டுகொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை தங்கையின் காதல்தான் உங்களை இந்த உயிரத்திற்கு கொண்டுவந்திருக்கு.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள், நண்பரே!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner