காதலர் தின ஸ்பெஷல்.

காதலர் தின ஸ்பெஷல்.....


ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...
மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...

கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.

மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........

அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.

14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.


கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.

ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..

எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...

ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. // அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.

    14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம். //

    ஹா...ஹா..ஹா. உண்மையான உண்மை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner