சன் டிவி தமிழகத்தின் முதல் சேனல்…திரைப்படங்கள். சீரியல்கள்… என்று அசத்திக்கொண்டு
இருந்த போது , விஜய் டிவி பல கை மாறி பேர் மாறி....விஜய் தமிழகத்தில் வலுவாய் கால் பதித்தாலும்... விஜய் டிவி சன்டிவியோடு எவ்வளவோ மல்லுக்கட்டி போராடியும் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை… இத்தனைக்கும் புதுப்படங்கள் எல்லாம் வாங்கினார்கள்….
கவுரவமான இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ன செய்ய?? என்று தலையை பிய்த்துக்கொண்டு யோசித்த போது...
இளைஞர்கள் என்று ஒரு கேட்டகிரி இருக்கு…
அவர்களுக்கு சீரியல் பிடிக்காது அவர்களை தன் பக்கம் திருப்ப வழி என்ன-?? என்று விஜய் டிவி நிர்வாகம் யோசித்ததன்
விளைவு. சூப்பர் சிங்கர் ஜூனியர்… ஆரம்பிச்சாங்க… அதன் பிறகு உங்களில் யார் பிரபு தேவா, நீயா நானா, ஜோடி நம்பர் ஒன், லொள்ளு சபா, சகலை வெசஸ்
ரகளை, அது இது எது, காபி வித் அனு போன்றவை சீரியல் பதிப்பில்
இருந்து தப்பிக்க நினைத்தவர்களுக்கு விஜய்டிவி புகலிடமானது…
முன்னனி நிறுவனம் சன் தொலைகாட்சி யோசிக்காத விஷயத்தை விஜய் டிவி கிளாவராக செய்த விஷயம்... விஜய்டிடிவி விருதுகள்... சான்சே இல்லை.. அந்த ஐடியா.... வருடா வருடம் கலைஞர்களை பாராட்டி கவுரவித்தால் போலவும் ஆச்சி.. நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுக்காமல் வருவார்கள்.. ஒரே கல்லில் நா லுமங்கா அடித்தது.. விஜய் விருதுகளில்தான்... பட் விஜய் டிவி விருதுகளை அறிவித்தாலும் சும்மா இருந்து விடவில்லை.. நிறைய மெனக்கெடல்கள்.. நிறைய உழைப்பு.. ஆஸ்காருக்கு நிகராக அந்த விருதை சிலாகிக்கும் அளவுக்கு கடந்த வருடம் வரை அந்த விருது இருந்தது உண்மை... அந்த விருதை பெறும் போது ரொம்ப உயர்வாய் நினைத்த
தருணங்கள், நெகிழ வைத்த விஷயங்கள் என்று அசத்தியது விஜய் டிவி..
விஜய் விருதுகளை ஆஸ்கர் விருதுக்கு இணையாக வாங்கி சிலாகித்த தமிழ் சினிமா பிரபலங்கள்
நிறைய பேர் உண்டு..
ஏழு வருடங்கள் சின்ன சின்ன உட்கட்சி
பூசல்கள் இருந்தாலும்.. நன்றாகவே போனது…
எட்டாவது வருடம்… அதாவது கடந்த வருடம்...
நெகிழ்ச்சியாகவும் பிரமாண்டமாக நடந்தாலும்
ஒரு சாரருக்கு மட்டுமே விஜய் விருதுகள் சாமரம் வீசுகின்றது என்று பொதுவெளியில் விவாதித்த போது....விஜய்
டிவி ஒன்றும் அரசாங்கம் தரும் விருது போல இல்லையே…
அவர்கள் கமர்ஷியல் தொலைகாட்சி...சில பல காம்பரமைஸ் இருக்கத்தான் செய்யும் என்று சப்போர்ட் செய்தார்கள்…
ஆனால் இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர்
சிம்பு… அது ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது , அவர்களுக்கு பிடித்தவர்களுக்குதான் விருதுகள் அறிவிக்கின்றார்கள் என்று சொல்லிவைக்க…. பிரச்சனை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது...
அதை விட கடந்த வருட விருது வழங்கும் விழாவில் இயக்குனர் ராம்…ஆனந்த யாழ் பாட்டே இல்லை… என்று
சொல்லி தன் உதவியாளர் மாரியை பாட வைத்ததோடு , எனக்கு விருது கொடுக்கப்போகின்றார்கள்
என்று நான்கு நாட்களுக்கு முன்பே தெரியும் என்று
பொதுவெளியில் போட்டு உடைத்து வைக்க… இதை விஜய்டிவியே சற்றும் எதிர்பார்க்கவில்லை…
இந்த வருடம்… விஜய்டிவி செல்லப்பிள்ளை சிவகார்த்கேயன் மணி இரண்டு ஆயிடும்… தண்ணி கூட குடுக்கமாட்டாங்க
என்று ஓப்பன் மைக்கில் விளையாட்டுக்கு சொல்ல… இன்னும் பிரச்னை பெரிதானது.
சிவகார்த்திகேயனும் கோபிநாத்தும் சில வருடங்களுக்கு முன் காம்பயர் செய்த போது அண்ணே… நாம தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருப்போம்.. ஆனா நடிகனான பிறகுதான்
உணர்ந்தேன்… அங்க ஆப்பிள் ஜூஸ் அது இதுன்னு கொடுத்து அசத்துவாங்க என்று சொல்ல… அது
வெளியே சிரித்தாலும்.. அதன் உள் ஒளிந்து இருந்தத
வருத்ததத்தை கவனிக்க யாரும் தவறவில்லை…
ஒன்பதாவது விஜய் அவார்டுக்கு கோலகல
அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று முதல் குண்டை போட விழா நடக்கப்போகும் இரண்டு நாளுக்கு முன் போட.... விஜய்
டிவி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தவித்து போய் இருப்பார்கள்…
கல்யாணம் பண்ணி ஆர்வத்தோடு முதலிரவு அறைக்கு போகும் போது … பொண்ணுக்கு பீவர்ன்னோ.. அல்லது பீரியட்ஸ்ன்னு சொன்னா??? செமையா மூட் ஸ்பாயில் ஆவுமே அது போல சகல ஊழியர்களும் நொறுங்கி போனார்கள்…
ஒரு கட்டத்தில்.. விருது வழங்கும் விழாவை அறிவித்தாகி விட்டது நடத்தி முடிந்து விடுவோம் என்று
நடத்தினார்கள்… உதாரணத்துக்கு மேக்ஸ் பரிட்சைக்கு பிரிப்பேர் பண்ணாம போய்…
பேப்பரை பத்து நிமிஷத்துல கொடுத்துட்டு பதட்டத்தோட
வெளிவருவோமே அப்படித்தான் விழா நடந்து இருக்கின்றது…
ஏற்கனவே சர்ச்சையில் விஜய் விருதுகள் சிக்கி சின்னா பின்னப்பட்டுக்கொண்டு இருந்த
போது…. வேலையில்லா பட்டதாரி படத்துக்கு ஐந்து அவார்டு கொடுத்தா சிம்பு சொன்னது உண்மைன்னு
ஆயிடாதுன்னு கூடவா நினைக்க மாட்டாங்க…??
அதே போல ஜிகர்தண்டா படத்துக்கு ஐந்து விருது முடிஞ்சி போச்சி...
பழைய விழாக்கள் அப்படித்தான் இருந்திச்சி.. கடந்த வருடத்தில் இருந்தே விமர்சனங்கள்
ஏழ ஆரம்பிச்சிது… அவுங்ககிட்ட ரைட்ஸ் இருக்கற படத்துக்கும் அவுங்களுக்கு பிடிச்ச நடிகர்களுக்குதான் விருது கொடுப்பாங்க என பொதுவெளியில்
பேச ஆரம்பித்து விட்டார்கள்.. ஒன்பதாவது விஜய் அவார்ட் விருதுகள் கொடுக்கப்பட்டதை பார்க்கும் போது பொதுவெளியில் பேசியது
போலத்தான் நிரூபித்தன.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு டயலாக் வரும்….ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்து இருக்கனும்.. அப்பதான் அது பொய்ன்னு தெரியாது…. கடந்த வருட விஜய் அவார்டுகளில் காம்பரமைஸ் பொய்கள் இருந்தாலும் அதுல நிறைய உண்மை இருந்திச்சி.. அது ஒன்பதாவது அவார்டுல மிஸ்சிங்…
வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மொத்தம் ஐந்து அவார்டு… ஜிகர்நதாண்டாவுக்கு ஐந்து அவார்டு அவ்வளவுதான் முடிஞ்சி போச்சு… அதனாலதான் விஜய் அவார்டு ரிப்ன்னு போட்டு ரசிகர்கள் டுவிட் பண்ணாங்க…
எல்லாத்தை விட ரஜினியின் லிங்கா படத்துக்கு விருது கொடுத்து அவரை காக்கா பிடிச்சது எல்லாம் ரஜினி ரசிகர்களே கலாய்ச்சதுதான் இதுல செம காமெடி.
அதே போல இன்னோரு விஷயத்தை சொல்லனும் அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு.,.. அதிக பட்சம் ஒரு நிகழ்ச்சி மூன்று மணி நேரம் அல்லது நாலு மணி நேரம்தான்… இதுக்கு மேல அது போர் அடிச்சிடும்.. ஆனா விவியற்காலை இரண்டு மணிவரை நிகழ்ச்சி நடத்துவாங்க...
கமல் 50 நிகழ்ச்சியில கூட கமல் சொல்லி இருப்பார்…. ஒருத்தரை பத்தியே திரும்ப திரும்ப பேசறதால போர் அடிச்சிடும்… அதனால சீக்கரம் நிகழ்ச்சியை முடிச்சிடுங்க என்பார்.. ஆனால் கமலுக்காக.. மம்முட்டி மோகன்லால் எல்லாம் நெளிந்தபடி உட்கார்ந்து இருப்பார்கள்…. அந்த நிகழ்ச்சியை பார்த்தால் தெரியும்… அது கமலுக்காக என்பதை விஜய் டிவி நிர்வாகம் புரிந்துக்கொள்ள வேண்டும்...
எல்லா நிகழ்ச்சியையும் இரவு இரண்டுமணி வரை நடத்தினால் சலிப்பு நிகழ்ந்து விடும்.. அது மட்டுமல்ல…சூப்பர் சிங்கர் ஜூனியர் புரோகிராமையும் இந்த விருது வழக்கும் நிகழ்ச்சி போல நினைத்தது பிசகு… சூப்பர் சிங்கர் புரோக்கிராம் 2 மணிவரை போச்சின்னா.. கேள்வி இல்லை.. ஏன்னா அது இனிமே சாதிக்க போறங்க… ஆனா இங்க சாதிச்சவங்க வந்து எத்தனை மணி நேரம் உட்கார்ந்து இருப்பாங்க. சொல்லுங்க…???
இந்த வருடம் ஆஸ்கர் விருது பாத்திங்களா---??? மூன்று மணி நேரம்… அவார்டுவாங்கறவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவனுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள்ள பேசி முடிச்சிடனும் இல்லைன்னா அர்கெஸ்ட்ராவுல மியூசிக் காஷன் கொடுத்து அவனை சீக்கரம் முடிக்க சொல்லிட்டு கீழ அனுப்புவாங்க இதுதான் ரூல்….. நம்ம ஆளுங்ககிட்ட மைக்க கொடுத்த போதும் …அவ்வளவுதான் பழங்கதை எல்லாம் பேசி முடிக்க நேரம் ஆயிடும்… ஒருத்தவர் பேசறது எல்லாருக்கும் சுவாரஸ்யத்தை கொடுக்காது என்பதை உணரவேண்டும் அதனாலதான்.. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஆஸ்கார் விருதுவாங்கும் போது பேச கால அளவை வைப்பதால்தான் எத்தனை பெரிய செலிபிரட்டியா இருந்தாலும்... எழுதிக்கிட்டு வந்து சொல்லனும்னு நினைச்சதை ஷார்ட்டா சொல்லிட்டு போயிடுறான்… அதனாலதான் ஒரு மணிநேரம்தான் வருவேன்னு சொல்லிட்டு வந்த இளையராஜா செவாலியே சிவாஜி விருது பெறாமல் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடதக்கது…
நானும் ஒரு புரோக்கிராம் புரொட்யூசர் என்பதால் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை
அழைச்சிகிட்டு வருவதற்குள் தாவு தீர்ந்து
போயிடும்.. இங்க இத்தனை பேர்… அழைச்சிக்கிட்டு வந்து அசெம்பிள் பண்ணுவது பெரிய
விஷயம்…அப்படி பேவரான ஆர்ட்டிஸ்ட் மற்றும்
இயக்குனர்க்கு பேவர் செய்ய நிறைய தளங்கள் இருக்கும் போது விருது வழங்கும் விழா என்று அறிவித்துவிட்டு ஒருசாரருக்கு
மட்டுமே விருதுகள் கொடுத்தால் அது பெரிய சர்ச்சையை
உருவாக்கும் அதுதான்இப்போது நடந்துக்கொண்டு இருக்கின்றது..
அதனால்தான் ரிப் விஜய் அவார்ட்ஸ் என்று ஹேஷ்டாக்கோடு வலம் வந்துக்கொண்டு இருக்கின்றது.
மக்கள் அந்த அளவுக்கு விபரம் தெரியாதவர்கள் அல்ல என்பதை விஜய் டிவி உணர வேண்டும்..
உண்மையிலே இப்போதும் அசத்தலாக நிகழ்ச்சி
என்று சொன்னால் கமல் 50 நிகழ்வை தாரளமாக சொல்லலாம்.. அருமையான நிகழ்ச்சி
ஆனால் அந்த நிகழ்ச்சி கூட நீண்ட நேரம்
எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி..
ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைக்க எவ்வளவோ பாடு பட்டு இருப்போம்.. அது நில நேரங்களில் சறுக்கலை சந்திக்கும் போது அதில் உள்ள குறைகளை உடனே கலைய வேண்டும்..
விருது என்பது வளரவேண்டிய தனி நபர்களுக்கு உற்சாக ஏணி... அந்த விருது குறைந்த பட்டசமாவது நேர்மையாக கிடைத்தால்தான் அந்த விருதுக்கும் பெறுபவருக்கும் மரியாதை...
பிரச்சனைகளை களைந்து மீண்டும் விஜய் விருதுகளுக்கு பொதுவெளியில் நன்மதிப்பை பெறுவது விஜய் நிர்வாகத்தின் கையில் உள்ளது... அதற்கான வேலைகளை அவர்கள் செய்வார்கள் என்றும்நம்புகின்றோம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
இது வீடியோ பதிவு....
பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
OMG லிங்கா படத்துக்கு விருதா.? நல்லவேளை மான் கராத்தே படத்துக்கு எந்த விருதும் தராம விட்டாங்களே அது வரைக்கும் சந்தோஷம்.
ReplyDeleteமுதலில், என்ன தலைவர் சன் தொலைக்காட்சிக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிக்கிறாரோ என்று நினைத்தேன். சொன்ன கருத்தில் நேர்மை இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. முன்னால சன் தொலைக்காட்சி, திரைப்படங்களை வரிசைப்படுத்தும்போது, சார்பு நிலை எடுத்ததனால், அதன் மரியாதை போனதுதான் மிச்சம். விருது அல்லது வகைப்படுத்துவதில் நடுனிலைமை மிக முக்கியம்.
ReplyDeletevijay awrd's for the film which vijay tv owns
ReplyDelete