மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.தமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும்  இயக்குனர் மணிரத்னம்... தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம்  தலை நிமிர வைத்தவர்களில் மணியும்   ஒருவர்.
மணியின் முந்தைய திரைப்படமான கடல் தோல்வியை சந்தித்தது...
இயக்குனர் மணிரத்னத்துக்கு ஒரு  மின்னல் வெற்றி   தேவையாய் இருக்கின்றது..நன்றாக படம்  எடுத்துக்கொண்டு இருந்தார்... ரோஜாமற்றும் பம்பாய் வெற்றி வடநாட்டு மோகத்தை கொடுக்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருக்கால் வச்ச காரணத்தால் மணி ரத்னம்   சவுத் நார்த்  ரெண்டு  ரசிகர்களையும்   திருப்தி படுத்தவில்லை...  என்றுஅவர் மீது குற்றச்சாட்டு உண்டு... இந்த படம் அந்த குற்றச்சாட்டுக்கு ஓ காதல் கண்மணி  பதில் சொல்லும் என்று எண்ணுகின்றேன்...

1989 இதயத்தை திருடாதே முழுக்க முழக்க காதல் திரைப்படம்...
2000  ஆம் ஆண்டில் அலைபாயுதே பெரிய  வெற்றி... அதன் பின்   இளம் காதலர் கதைகளை மணிரத்னம் தொடவில்லை... அதன்பின் எல்லாம் மெச்சூர்ட் காதல்கள்தான்...  கடல்  திரைப்படத்தை சொன்னாலும்... அது பெரிதாய் மனதில் நிற்கவில்லை. கடல் படத்தின் காதலர்கள்    அலைபாயுதே மாதவன்  ஷாலினி  போல மனதில் பதியவில்லை என்பதுதான்  முக்கியமான சேதி...
என்னை கேட்டால் அலைபாயுதேவுக்கு பிறகு ஆயுத எழுத்து திரைப்படத்தில்  சித்தார்த் திரிஷா காதல் போர்ஷன்  இளமை ததும்பும்... அதன் பின்  மனதில் எதுவும் நிற்கவில்லை  தைக்கவில்லை.திரும்பவும் அலைபாயுதே  பாணியில்  ஓ காதல்  கண்மணி  திரைப்படம்  வெளிவரபோகின்றது..

அலைபாயுதே படத்துக்கு பிறகு பிசிஸ்ரீராம் மணிரத்னம்,ரகுமான் கூட்டணி 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும்  இணைகின்றன...துல்கர் சல்மான், நித்யாமேனன்... பம்பாய் கதைக்களம்... சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களுக்கும் தீனி போட்டாச்சா..? உஸ்தாத் ஓட்டல் மலையாள பட வெற்றி ஜோடி...
செம யூத் புல்லான டிரைலர்... செம பிரஷ்ஷா  இருக்கு...

 டிரைலர் முத ஷாட்டே... மும்பை கட்டிடம்...
துல்கர் ஆதியாவும்.. நித்யா மேனன் தாரா கேரக்டர்களில் நடித்து இருக்கின்றார்... இன்னாடா சர்ச்சீன் போல இருக்குன்னு நினைச்சா தமிழ் பேரு சொல்லறாங்க.. காரா ஆட்டக்கார  ரகுமான் இசையில் பெப்பியா ஒலிக்குது...

மேலும் முழு கட்டுரையையும் வாசிக்க   ஜாக்கி சினிமாஸ்  தளத்துக்கு  செல்ல இங்கே கிளிக்கவும்..


வீடியோ  விமர்சனத்துக்கு...


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. ரஹ்மான் இசைன்னாலே படம் நல்லா தான் ஓடும்...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    மலர்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner