இது வெறும் பாண்டியன்
நூல் பாண்டியன்… ஆனா கதை….
உலக புத்தகதினமான இன்று நூல் பாண்டியை
பற்றி பேசுவதுதான் சிறப்பான காரியமாக இருக்கும்….
வெறும் பாண்டியனாக சென்னையில் வாழ்க்கையை ஆரம்பித்தவர்… அதிகஅளவில் அறிய பல நூல்களை விற்றகாரணத்தால் நூல் பாண்டியாக
பிரமோஷன் பெற்றார்.
சென்னையில் இருக்கும் புத்தக விரும்பிகள்… நூல் பாண்டியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது…
200 வருடத்துக்கு முன் அச்சடித்த பழைய
புத்தகங்களில் இருந்து இன்றைய நவீன புத்தகங்கள் வரை நூல் பாண்டியிடம் இருப்பதுதான் அவரின் தனித்தன்மையும் விசேஷமும்...
நூல் பாண்டிக்கு புத்தகம் சேகரிக்கும்
ஆர்வம் எப்படி தொடங்கியது தெரியுமா? அது சுவாரஸ்ய
கதை…சென்னையில் பேப்பர் கவர் செய்து கடைகளில்
கொடுக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை..
கவர் செய்ய பழைய பேப்பர்கள் புத்தங்கள் வாங்கும்
போது பல அறிய புத்தங்கள் வாங்கும் போது தட்டுப்பட
அதனை கவர் செய்ய கழிக்க மனம் இல்லாமல் சேகரிக்க ஆரம்பித்த விஷயம் இன்று அதுவே தொழிலாகி போனது…
என் வீட்டில் இருக்கும் 700 புத்தகங்களையே
என்னால் பராமரிக்க முடியவில்லை… ஆனால் சொன்னால் நம்மமாட்டீர்கள்… அரைகோடி புத்தங்கள்
இவர்
பராமரித்து வருகின்றார் என்பது அதிசயம் தானே..??
அசோக் நகரில் ஒரு கடை.. இரண்டு கொடவுன் மற்றும் குடும்பம் நடத்த வீடு என்று
வாடகையாக 25 ஆயிரம் செலவு செய்து புத்தகங்களை
பராமரித்து வருகின்றார்…
மனைவி பிள்ளைகள் சப்போர்ட் இல்லாமல் இந்த
தொழிலை செய்ய முடியாது என்றும் அவர்களுக்கு
தன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றார்…
வேலைக்கு ஆட்களை எல்லாம் பாண்டி வைத்துக்கொள்ளவில்லை…
50 லட்சம் புத்தகத்தில் எந்த புத்தகத்தை கேட்டாலும் எடுத்துக்கொடுக்கும் நியாபக சக்தியை அந்த சரஸ்வதி தேவியே அவருக்கு இயற்கையிலேயே வழங்கி
இருப்பதுதான் அவரின் சிறப்பு…
அவருக்கு ஒரு விஸ்தாரணமான கடை தேவைப்படுகின்றது…. அரசு மனது வைத்தால் முடியும்..
ஆனால் மனது வைக்க வேண்டுமே,,. புத்தகங்கள்
சில நேரங்களில் கரையானுக்கு தின்னக்கொடுக்கும் போது தனது வலியில் துடிக்கும் என்று
வேதனையுடன் தெரிவிக்கின்றார்..
அதே போல இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்க பழக்கம் குறைவதாலும்…. டவுன்லோட் செய்து புத்தங்கள் கம்யூட்டர் ஸ்மார்ட் போன்களில்
வாசிப்பதாலும் தனக்கு முன்பு போல வாசகர்களின்
வருகை இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கின்றார்…
அறிய பல புத்தகங்களை தன் வாழ்க்கை பயணத்தில் பலருக்கு கடத்தும் நூல் பாண்டியின் பணி பாராட்ட தக்கது… உலக புத்தக
தினமான ஏப்பரல் 23 ஆம் தேதியான இன்று அவரை
வாழ்த்துவதில் ஜாக்கிசினிமாஸ் பெருமை கொள்கின்றது
..
அவரது தொலைபேசி எண்…9444429649
புகைப்பட உதவிஇந்து.
======
அவரை நான் எடுத்து நேர்முகம் இந்த வீடியோ பதிவில்...நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
செம அட்டகாஷ்!
ReplyDeleteநன்றி ஐயா.
அருமையான மனிதர்! என்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சிலவற்றை கரையான் அழிக்க சிலவற்றை காயலான் கடையில் கோபத்துடன் போட்டுவிட்டேன்! அதை நினைக்கையில் வருத்தம் மேலிடுகிறது!
ReplyDelete