O Kadhal Kanmani‬-2015 ஓ காதல் கண்மணி திரைவிமர்சனம்.




1998 ஆம் ஆண்டு….
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று அவளிடத்தில் சொன்னேன்…



இந்த வார்த்தையை சொல்ல சில மாதங்கள் எடுத்துக்கொண்டேன்…. காரணம்… நிறைய யோசித்தேன்….பிளஸ் மைனஸ்,… சரி வருமா வராதா? எல்லாம் யோசித்து பார்த்து அதன் பிறகே சொன்னேன்…
நான் சொன்ன ….அன்றே எங்கள் திருமணம் முடிந்து விட்டது...
அதன் பிறகு பத்து வருடம் கழித்து திருமணம்…. 

திருமணத்துக்கு முன் ஒன்றரை வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கை…

சமுக அங்கீகாரத்துக்குதான் கல்யாணம், தாலி, வீடியோ, போட்டோ, பதிவு திருமணம் எல்லாம்.

வீட்டுக்கு தெரியாமல் முதல்முதலாக நாங்கள் சென்ற சினிமா அலைபாயுதே… உதயம்.. சந்திரன் தியேட்டரில்… வியர்த்து வழிய… வெதுக்கலோடு பார்த்த திரைப்படம்.. பயந்து பயந்து பார்த்த படம்…..

15 வருடம் கழித்து மணி இயக்கத்தில் ஓ காதல் கண்மணி…
இப்போது எங்களோடு யாழினியும்....

என் காதலை திரையில் பார்த்தது போல இருந்தது…

இன்றோ, நாளையோ…. மனைவியை அழைத்து செல்ல வேண்டும்..

ஓகே கண்மணி…. காதலர் கொண்டாடும் படம்… கண்டிப்பாக படம் பார்த்து முடிக்கும் போது ஒரு ரொமான்ட்டிக் பீல் வருவதே படத்தின் வெற்றி…

ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் திரிஷா போர்ஷன் சான்சே இல்லை… அதே பார்ட்டை ஒரு இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றி விட்டார் மணி…. அள்ள அள்ள குறையாத காதலுடன்…

குரோம்பேட் வெற்றியில் காலைக்காட்சி…. எட்டு மணிக்கு….ஆண்களுக்கு நிகராக பெண்கள் கூட்டம்… இப்படியான பெண்கள் கூட்டத்தை முதல் நாள் முதல் காட்சியில் அதவும் காலை எட்டுமணிக்கு நான் பார்த்ததேஇல்லை… இதுதான் மணிரத்னம் மேஜிக்..

படம் நல்லா இருந்தா மவுஸ் புடிச்சாலும் புடிக்காட்டியும் நல்லா இருக்குன்னுதான் சொல்லுவான். விமர்சனத்தில் தரம் வேண்டும் என்று வேண்டுமானால் சுஹாசினி சொல்லிஇருக்கலாம்.

தற்போதைக்கு….
வீடியோ விமர்சனம்…
இன்று இரவு இன்னும் விரிவாய்… எழுத்தில்..




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner