காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில் முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...
டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில் பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..
====
டிமான்டி காலனி திரைப்படத்தின் கதை என்ன??
நான்கு பேர் கஞ்சிக்கு லாட்ரி அடித்துக்கொண்டு பட்டினபாக்கம் அவுசிங் போர்டில் காலம் தள்ளி வருகின்றனர்... நால்வரில் யாருக்கு பணக்கஷ்டம் என்றாலும் அருள்நிதி நிதி கொடுத்து உதவுவார்.. அவருக்கு எப்படி நிதி வருகின்றது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
ஒரு நாள் மழை இரவில் போதையில் .. திரில்லாக எதாவது செய்ய வேண்டும் என்று நண்பர்கள் பேச அந்த கூட்டத்தில் இருக்கும் எதிர்கால சினிமா இயக்குனர்... நான் ஒரு பேய் படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்ணும் போது டிமார்ட்டி காலனி பத்தி கேள்வி பட்டு இருக்கேன்... அங்க இருக்கற‘ பங்களாவுக்கு நாம் இப்ப போலாம் என்று போகின்றார்கள்.. பயந்து சாகின்றார்கள்... படம் பார்க்கும் நாமும்.. தான் ஆனால் அந்த பங்களாவுக்கு போய் வந்ததில் இருந்து நால்வருடைய வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள் அது என்ன என்பதை தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் விரிவாய் வாசிக்க இங்கே கிளிக்கவும்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment