சென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.

சென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக  இந்த  மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க  வாய்ப்புண்டு...  இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும்   சின்ன வயது  பசங்கள் டீ  விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....




அது பற்றிய சிறிய சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்களுக்காக...,
தமிழகத்தில்  சேட்டன்கள்   தெருமுனைகளில் டீக்கடை  வைக்க ஆரம்பித்தார்கள்... பின்னர் அது  மெல்ல  பரிணாமவளர்ச்சி அடைந்து  ‘சைக்கிள்களில் டீ விற்பனை சூடு பிடித்தது...

அதன் பின் டீக்கடைகாரர்கள்.... பக்கத்தில் இருக்கும் அலுவலகங்களுக்கு பிளாஸ்க்கில்  டீ , காபி போட்டு   அலுவலக டீ பிரேக்கில் டீ விற்பனை செய்து   வியாபாரத்தை  அதிகரித்தார்கள்...   ஆனால் மயிலையில் சமீபகாலமாக    தெருவுக்கு தெரு   பிகார், ஜார்க்ன்ட், மத்திய பிரதேஷ், போன்ற வடநாட்டு இளைஞர்கள்  இரண்டு லிட்டர் பிளாஸ்கில்  டீ நிரப்பிக்கொண்டு, கையில்  பேப்பர் கப்புடன்  தெரு தெருவாக  டீ விற்று வருகின்றனர்...

ஒரு டீயின் விலை... 5 ரூபாய்...

தெருதெருவாக  கடை கடையாக ஏறி இறங்கி  டீக்களை விற்று வருகின்றனர்.. முதலில் சுத்தமாக அவர்களுக்கு தமிழ் தெரியாது....டீ கேட்டால் டீ ஊற்றிக்கொடுத்து விட்டு , மீதம்  சில்லரை கொடுத்து விட்டு மறுப்பேச்சு இல்லாமல்  சென்று கொண்டு இருப்பார்கள்... ஆனால் தற்போது தமிழ்  வார்த்தைகளை  கோர்த்து பேச கற்றுக்கொண்டுள்ளார்கள்.

 அவர்களிடம் விசாரித்த போது மொத்தம் 25க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள்  பணியாற்றுவதாகவும்,  எல்லோரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும்...  மாதம் அவர்களுக்கு உதியமாக 5000  ரூபாய்  கொடுக்கபடுவதாகவும்.,. தங்கஇடமும்  உணவும்  இலவசம்  என்றும்  அவர்கள்தெரிவித்தனர்.. இதுபற்றி பேட்டி கொடுக்க முடியமா? என்று அவர்களை  கேட்ட போது மறுத்து விட்டனர்...


கடையில் இருந்துக்கொண்டு நகர மூடியமல் இருக்கும் மெயின் ரோட்டு  வியாபாரிகளில் இருந்து சந்துக்கடை  வியாபாரிகள்  மற்றும் முதியவர்கள் இவர்களுடைய பிரதான  வாடிக்கையாளர்கள்...

டீயின் தரம்... ஐந்து ரூபாய்க்கு எப்படி இருக்குமோ? அப்படித்தான் இருக்கும்...  ஆனால்... ஒரு சின்ன ரெப்பிரஷ்னஸ்சுக்கு  இந்த ஐந்து  ரூபாய் டீ கடையை விட்டு நகர முடியாத  வியாபாரிகளுக்கு அமிர்தம்...


காலை மாலைகளில்  ஒரு மணி   நேரத்துக்கு ஒரு டீ பையனை  ஒவ்வோரு மயிலை தெருக்களிலும் காணலாம்... பள்ளி படிக்கும் வயதில் வறுமை காரணமாக  ஆயிரம் கிலோமீட்டர் கடந்து வந்து, நேர்மையாக வியாபாரம் செய்யும் இவர்களிடம்  மூன்று டீ குடித்து விட்டு இரண்டு டீ க்கு காசு  கொடுப்பதும்,, மிரட்டப்டுபவதும் என்று சிலபல பிரச்சனைகளை இவர்கள் நாள் தோறும் சந்தித்து வருகின்றார்கள்.


 தெரு தெருவாய் பிளாஸ்க்கில் டீ யோடு சுற்றும் ஒவ்வோரு இளைஞனின் பின்னும்... சொல்ல முடியாத குடும்ப பாரங்களும் வலிகளும் பின்னி பினைந்து இருப்பதை  அவர்களின் சிரிப்பில்லாத  இறுக்கமான முகங்கள் நமக்கு உணர்ந்துகின்றது

========

மயிலை தெருக்களையும் அவர்களை பற்றியும் வீடியோ காட்சிகளாக பதிவு   செய்து இருக்கின்றேன்.... வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்...





பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. மற்ற கடைக்காரர்கள் பிரச்சினை ஏதும் பண்ணுவதில்லையா...
    ஒவ்வொரு இளைஞனுக்கும் பின்னால் இப்படி ஒரு சோகம்.,..

    ReplyDelete
  2. அந்த கஷ்டத்திலும் அவங்க உழைத்து தான் சாபிடுறாங்க....இது பல பெரிய மனுஷங்களுக்கு தெரிய மாட்டேங்குது....

    மலர்

    ReplyDelete
  3. who is preparing the tea?

    please see the video
    https://www.youtube.com/watch?v=Qfogpw37QC4

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner