இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் கள்ளப்படம். கள்ளப்படம் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாலும் மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்... கள்ளப்படம் எனது நண்பரின் அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்...
அது மட்டுமல்ல முக நூலில்.... அருன் என்ற உதவி இயக்குனர் எனது பதிவுகளுக்கு பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்.. அவரும் இந்த படத்தில் வேலை செய்கின்றார் என்று தெரிந்து கொண்டேன்... அதை விட நேற்று கள்ளப்படம் திரைப்படத்தின் இயக்குனர் வடிவேல் தனது மனைவி மற்றும் தான் உயர காணமான நண்பரின் புகைப்படத்தை போட்டு நன்றி தெரிவித்து இருந்தார்... செம டச்சிங்காக இருந்தது...
அதே போல உதவி இயக்குனர் அருன்...முதன் முதலாக கிளாப் போர்ட் பிடித்த போட்டோவை போட்டு அதன் பின் இருக்கும் சுவாரஸ்ய மிக்க விஷயத்தை பகிர்ந்து கொண்டது செமஇண்டர்ஸ்டிங்காக இருந்தது....
சினிமாவுக்குள்ளே சினிமா எடுக்கும் கதை.... சர்வ சுந்தரம் பார்த்துஇருப்பீர்கள்... கதை திரைக்கதை வசனம்,தாவாணி கனவுகள்,வெள்ளித்திரை, சமீபத்தில் வந்த ஜிகர்தண்டா... என்று இது போன்ற ஜானர்களில் நிறைய திரைப்படங்களை பார்த்து நீங்கள் இருப்பீர்கள்... அந்த வரிசையில் கள்ளபடமும் ஒன்று.
====
கள்ளப்படம் படத்தின் கதை என்ன?
வடிவேலு இயக்குனராக கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டு இருப்பவன்...கூத்துகலையின் விற்ப்பண்ணர் ஆனா வடிவேலுவின் அப்பா அந்த கலை தன் கண் எதிரே அழிவதை பார்க்க முடியாமல் மரித்து போகின்றார்... அந்த கதையே திரைக்கதையாக்கி தனது நண்பர்களுடன் வாய்ப்பு தேடி மூன்று வருடமாகியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் கொள்ளை அடித்து திரைப்படம் எடுக்கமுடிவு செய்கின்றனர்.... கொள்ளை அடித்தார்களா? மாட்டிக்கொண்டார்களா??
படம் எடுத்தார்களா? என்பதை வெண்திரையில் பாருங்கள்.
http://www.jackiecinemas.com/indian-movies/kallappadam-tamil-movie-review/
வீடியோ விமர்சனத்துக்கு....
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment