சிண்டி கிராப்போர்ட்.


தாவணி கட்டிய பெண்களை  பார்த்து அவர்கள்மீது கொண்ட  ஈர்ப்பினை  தவிடு பொடியாக்கி....ஒரு வெள்ளைக்கார நடிகை ஒரே படத்தின் மூலம்  தூக்கத்தை கெடுக்க  வைத்தார்...  அவரின்பெயர் சின்டி கிராப்போர்ட்...இதே மாசம்  இதே தேதியில்  அமெரிக்காவில் 1966 ஈல்  பிறந்த பெண்மணி....5 அடி ஒன்பது அங்குல தேவதை...
அந்த உதடும்.. அதுக்கு மேல இருக்கும் மச்சமும்... சான்சே இல்லை...  


சின்டியோட பாதிப்புதான் பிற்காலத்துல  சிம்ரன் மேல  மையல்  வர காரணமாய் இருந்தது எனலாம்.. காரணம் சிம்ரன்  உதட்டுக்கு மேலயும் மச்சம் இருக்கும்... ஆனா இப்ப எல்லாம் ஸ்டைலுக்கு அப்படி மச்சம்  போல  மையால் வைத்துக்கொள்வதாக படித்து வெறுத்தேன்..


சாரி சின்டி லைட்டா உணர்ச்சி வசப்பட்டு  லோக்கல்  பக்கம் போயிட்டேன்...

16 வயசுல ஒரு  லோக்கல் போட்டோகிராபார் எடுத்த போட்டோ மூலம் மாடலிங்துறையில் அசத்தி  அதன் பின்  திரைப்படங்களில்  நடிக்க ஆரம்பித்தார்...


1990 ல இருந்து 95 வரை நடிகர் ரிச்சர்டு கிரோடு வாழ்க்கை நடத்தினார்..  அதன் பின் முன்னாள்  ஆண் மாடல் ரேண்டி கேர்பரோடு 1998 இல்  திருமணம் செய்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு அன்னை ஆனார்..


அதன் பின் 1995 இல்  இருந்து திரைப்படங்களில் தலை  காட்டினார்.. ஏனோ அவர் திரைப்படதுறையில் பெரியதாய் சோபிக்க வில்லை...


அவர் சோபிக்கா  விட்டால் என்ன..?

1995 ஆம் ஆண்டில் fair game என்று ஒரு படம்... அந்த படம் ஒன்று போதும் காலமெல்லாம் சிண்டியை  நினைவில் நிறுத்த...


1996 வாக்கில் பாண்டி ரத்னா தியேட்டரில்  அந்த திரைப்படம் வெளியானது...


கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு  செம மேட்டர் காட்சி இருக்கும்.... கிளைமாக்சில்  எப்படி இப்படி ஒரு காட்சியை வைத்து தொலைந்தார்கள் என்று இன்றுவரை வியப்பில் ஆழ்த்தும் விஷயம்..

அந்த படம் பார்த்து விட்டு இந்த பெண் அழகாக இருக்கின்றாளே அவளின்  பெயர் என்ன என்று படித்து மனதில் நிறுத்திக்கொண்ட பெயர் சிண்டி...

 சான்சே இல்லை...  அப்படி ஒரு அழகு அன்டு ஸ்டெக்சர்.
 சரி விடுங்கள்.. பார்க்காதவர்கள்... கண்டிப்பாக பேர் கேம் படத்தை பார்த்து விடுங்கள்...


  அதற்கு முன் சின்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள்..

happy birth day cindy crowford


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
20/02/2015


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

 1. கல்லூரி நாட்களில் இவரைப் பற்றி நண்பர்கள் சிலாகிப்பார்கள்! நினைவு படுத்திய பதிவு! நன்றி!

  ReplyDelete
 2. சரி...பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  மலர்

  ReplyDelete
 3. சிண்டியை ரசித்து வாழ்த்தியிருக்கீங்க...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner