சாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))

ஆல்பம்.

இந்தியா டாட்டர் ஆவணபடம்  வந்து ஒரு பெரிய பிராளயத்தை உண்டு பண்ணியது.... என்னை பொருத்தவரை  இந்த ஆவணப்படம் நம்மோடு  சுற்றிக்கொண்டுஇருக்கும் செவ்வாழைகளை இனம் காட்டியது எனலாம்..

இருந்தாலும்  இந்தியாவின் மானத்தை எல்லாம் கப்பல் ஏற்றியதாக சூளுரைப்பது தேவையில்லாதது...20 நிமிடத்துக்கு ஒரு பெண் இந்தியாவில் கற்பழிக்கபடுகின்றார் என்கின்றது புள்ளி விபரம். அதனால் ஏகத்துக்கு  இதற்கு குதிக்க வேண்டாம். அதனை தடை செய்ய முக்கியகாரணம் .. திரும்புவம்  டெல்லியில் இளைஞர்கள் ஒன்று கூடி விடுவார்கள் என்ற பயம்தான்.. அந்த ஆவணபடத்தின் சுவடு மறைவதற்குள்... கன்னியஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார்...முன்னை விட தெருவுக்கு தெரு கற்பழிப்புகள் மலிந்து விட்டன...  பாலியல் வறட்சியே இதற்கு முக்கியகாரணம்... தினவை தீர்த்துக்கொள்ள செக்ஸ் பார்லார்கள் திறந்தால் ஓரளவுக்கு குறையும் என்பது என் அபிப்பராயம்... பார்ப்போம்... என்ன நடக்கின்றது என்று..!!!


=========
மத்தியில் எந்த ஆட்சிவந்தாலும்இலங்கை தமிழர் விஷயத்தில்  பெரியதாய் மாற்றம் எல்லாம் வராது.,.. அதிகாரிகள் என்ன சொல்கின்றார்களோ.. அதைதான் எந்த பிரதமராக இருந்தாலும் கேட்டாக  வேண்டும் என்பதே நியதி... ஆனால் ரனில் எல்லைதாண்டும் மீனவர்களை சுட்டுக்கொல்லுவோம் என்று சொன்னதை குறைந்த பட்சம் கண்டித்து  பிரதமர் மோடி அறிக்கையாவது விட்டு இருக்கலாம்...நினைத்து எல்லாம் நடந்து விட்டால்..??? பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்..

====
நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு  எதிர்ப்பு வலுத்து வருகின்றது....இதற்கு அதிமுக ஆதரவு அளித்து பெரும் குற்றத்தை இழைத்துள்ளது...டெல்லியில் எதிர்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து மணு அளித்து விட்டு  வந்துள்ளார்கள்... அதிகாரிகளும், பணபலம் படைத்த நிறுவணங்களும்தான் இந்திய சர்க்காரை ஆட்டி வைக்கின்றன... இதில் மக்களுக்காகவே நான் என்று சொன்ன மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல...காங்கிரஸ் விட பிஜேபி வந்தால் ஒரளவுக்கு நியாயமாக நடந்துக்கொள்ளுவார்கள் என்று பார்த்தால்... காங்கிரஸ் அரசே  நியாயமாக நடந்து இருப்பதாகவே இவர்கள் செய்யும் அட்ராசிட்டியில்  தற்போது  என்ன தோன்றுகின்றது.

========
 ஏப்ரல்  ஒன்னாம் தேதியில் இருந்து ஐந்து ரூபாய்  ரயில்வே பிளாட் பார்ம் டிக்கெட்  பத்து ருபாய்க்கு விலை ஏற்ற இருக்கின்றார்கள்.. அடுத்த பட்ஜெட்டில்  எப்படியும்  இரண்டு மடங்கு  ரயில் டிக்கெட் விலை ஏறும் என்று கருதுகின்றேன்.. காரணம்.. அறுதி பெரும்பாண்மை  பெற்ற அத்தனை காட்சிகளும் மக்களுக்கு போடும்  நாமம் தமிழகம் பார்க்காத ஒன்றா என்ன??

======
மிக்சர்.

தமிழகஅரசு டிராபிக் ராமசாமியை  கைது செய்து... சட்டம் தன் கடமையை  எந்த நேரத்திலும் செய்யும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது... என்ன காரணம் என்று சஎல்லோருக்கும் தெரியும்... குற்றவாளி ஜெயலலிதா முதல்வராக கூடாது என்று  வெளிப்படையாக அறிக்கை விட... அதன் பின்... போயஸ் கார்டன் அருகில் இருந்த  பேனர்களை  தொடர்ந்து கிழித்தார்... அது போதாதா???

=======
வாட்ஸ் அப்பில் வைரலாக  ஏசி தனது கீழ் பணிபுரியும்... காண்ஸ்டபுள் பெண்ணிடம் கடலை  போட்ட விவகாரம் காட்டு தீயாக மாறிவிட்டது...தலையெழுத்தே என்று அந்த பெண் பேசுகின்றார்... தனது உயரதிகாரியை  கண்டிக்க முடியாமல் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பேசுவது புரிகின்றது.. அவரை அதிக பட்ச தண்டனையாக கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றி விட்டார்கள் என்று தகவல்... கல்லூரி படிக்கும் வயதில் அவருக்கு மகள் இருக்கின்றாள் என்று ஒரு செய்தியை அடிக்கடி சொல்கின்றார்கள்... அவர்  பணியில், இப்படி தனது கடை நிலைஊழியரிடம்  அப்படி பேசியது பெரும்  தவறு என்றும் தன் அதிகாரத்தை தவறாக பயண்படுத்தினார் என்று  தண்டனை கொடுங்கள்..  சஸ்பென்ட் செய்யுங்கள் அதை விட்டு விட்டு... அவருக்கு கல்லூரி படிக்கும் மகள் இருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்... காமம் கட்டையில  போற வயசு வரைக்கும் இருக்கும்...கல்லூரி படிக்கும் மகள் இருந்தால் காமம் இருக்க கூடாதா?  எனக்கு ஒன்றுமே புரியவில்லை.???

======
நேர்மையாக இருப்பவர்கள் வாழ வழியே இல்லையா.??? வேளாண் அமைச்சர்  டார்ச்சருக்கு பயந்து  தமிழகத்தில் ஒரு அதிகாரி ரயில்  முன் பாய்ந்து  சின்ன பின்னமாகின்றார்... கர்நாடகாவில் மணல் மாபியாவை உண்டு இல்லை என்று பண்ணிய ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில்  கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் கடந்த திங்கட்கிழமையன்று  தூக்கில் தொங்கினார்.... நேர்மைக்கு ரயிலும் கயிறும்தான் பரிசோ....????? எல்லோரை போல லஞ்சம்   வாங்கி   பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மனைவி பிள்ளைகளுடன் ஒன்டர்லா தீம் பார்கிற்கு சென்று இருக்கலாம்.. ஆனால்...????? நேர்மையாக பிள்ளைகளை அவர்களது பெற்றோர்  வளர்த்து விட்டார்கள்  அதுதான் பிரச்சனை... ஒரே ஆறுதல் எதிர்கட்சிகள் ஒன்ற கூட சட்டசபையில்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வழக்கை  சிபிஐக்கு மாற்ற வைத்து இருக்கின்றார்கள்.. பார்ப்போம் தர்மம் ஜெயிக்கின்றதா என்று??

===========
இன்றோடு ஒன்பது நாட்கள்.. அவர்கள் போராட்டத்துக்கு வர வேண்டும் என்றால் நம்மை போல ரைட் ரயாலாக போய் இறங்க முடியாது... கண் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் அவர்கள்... தங்கள் உரிமைக்காக  ஒன்பதாவது நாளாக போராட்டம் நடத்துகின்றார்கள்... அவர்கள் தங்கள் நிலைக்கு ஓய்வூதியம் கேட்கவில்லை... தான் படித்த  படிப்புக்கு வேலை வேண்டும் என்கின்றார்கள்...  ஆனால் நேரில் போய்  சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்  சொல்லவோ.. அவர்களது பிரச்சனைகளை கேட்கவோ... எந்த அதிகாரிக்கும் , அமைச்சருக்கும்  நேரம்தான்இல்லை... பாவம் அவர்கள்.
இன்னும் எத்தனை   நாட்கள் அவர்களை படுத்தி  எடுக்க போகின்றார்களோ தெரியல்லை...???


=======
சினிமா ஜெய்  சிக்ஸ் பேக் அவதாரம் வலியவன் படத்தில்  எடுத்து இருக்கின்றார்..

 படத்தின் டிரைலர்...


======
மன மன மென்டல் மனதில்.... ஓகே கண்மணி..1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் ஆரம்பித்தது அந்த பயணம்....மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் இணைந்து 2015 இந்த வருடத்தோடு சரியாக 23
வருடங்கள் ஆகின்றன....

இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் மணியும் ரகுமானும் இணைந்து 12 படங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்... ஓ காதல் கண்மணி திரைப்படம் 12வது திரைப்படம்...

மணியின் ரோஜா தொட்டு தனது குரலை ரகுமான் ஏதாவது ஒரு படத்தில் பயண்படுத்தி விடுவார்.. அது இன்றுவரை தொடர்கின்றது...ரோஜாவின் சின்ன சின்ன ஆசை பாடலில் ஏலேலோவில் ஆரம்பித்தது இன்று மன மன மென்டல்வரை தொடர்கின்றது...

ஒரு பதிவோ கட்டுரையோ எழுதுகின்றோம்.. அதை சரியாக மக்களிடம் சென்று சேரவில்லைஎன்றால் அதனை மீள் பதிவு செய்வோம் இல்லையா..?? அது போல பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்களால் கைது செய் ..
திரைப்படத்தில் ஆஆ தமிழம்மா.. பாட்டை கேட்டது போலவே இருந்தது மன மன மென்ட்டல் மனதில் பாடலின் பஸ்ட் பீட்

மணி படங்களில் ரகுமான் முழு சுதந்திரத்தோடு வேலை பார்ப்பார்..
திருடா திருடா படத்தில் இண்டர்வெல் பிளாக்கில் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டப்போவுதுடி வெள்ளக்காரி என்று சொல்லும் போது... சிவ சங்கரே.. என்று ஸ்டைலாக அந்த பெயரை ஒலிக்கவிடுவார்...

அது போல இந்த பாடலிலும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்துகின்றார் ரகுமான் என்றே சொல்ல வேண்டும்...

மேலும் வாசிக்க...
http://www.jackiecinemas.com/…

/o-kadhal-kanmani-single-tra…/
‪#‎OKadhalKanmani‬ ‪#‎ARRahman‬ ‪#‎MentalManadhil‬ ‪#‎ARR‬ ‪#‎jackiecinemas‬

சாங் ரிவியூவ்...===========
நடிகர்  சூர்யா தயாரிப்பில்...  அவர் மனைவி  ஜோதிகா திருமணத்துக்குபறிகு  நடிக்கும் 36 வயதில் திரைப்படத்தின் டிரைலரை கண்டு மகிழுங்கள்.=========
கிரிக்கெட் ரசிகர்களுக்கான வீடியோ.. டோன்ட் மிஸ் இட். தம்பி கார்கியுடையது.
==========
இலக்கியத்துக்கும் நமக்கும் ஏணி வச்சாலும் எட்டாது...ஆனாலும் விதி யாரை விட்டது... நண்பர் Natarajan Jaganathan ஒரு ஜப்பானிய சிறுகதையை மொழி பெயர்த்து இருப்பதாகவும் அதை வல்லினம் இலக்கிய இதழில் வெளி வந்துள்ளதாகவும் அதனை வாசிக்கும் படி என்னை கேட்டுக்கொண்டார்....
இன்று அதிகாலையில் தூக்கம் வரவில்லை என்பதால் அந்த சற்றே பெரிய சிறுகதையை வாசித்தேன்....
முதன் முறையாக நுனிபுல் மேய்ந்தது போல வாசித்ததில் எனக்கு எதுவுமே விளங்கிவில்லை...இரண்டாவது முறை திரும்ப வாசித்த போது கொஞ்சம் புரிபட்டது போல இருந்தது...
ஆனாலும் ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன் என்று சொல்ல வேண்டும். ஆனாலும் எனக்கு குழப்ப மனதோடு இருக்கும் கினோவை ரொம்பவே பிடித்து விட்டது..
ஜப்பானிய சிறுகதையை வாசிக்க...


======
 நான்வெஜ்...18+
life is like a penis
simple. relaxed and hanging freely
its women thats make it very hard....

=======நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner