லுசியா... ((எனக்குள் ஒருவன்))
கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது....
அது மட்டுமல்ல 2013 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாக சைக்கிலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் லுசியா வெளியானது.. படத்தை பவன்குமார் இயக்கி இருந்தார்.............
2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் பவன்குமார் படம் இயக்க பணம் வேண்டும் என்று அறிவித்து பொதுமக்களிடம் பணம் திரட்டி கிரவுட் பண்டிங்கில் எடுத்த திரைப்படம் லுசியா...... நிறைய சிரமத்துக்கு இடையே அந்த படத்தை இயக்குனர் பவன் ரிலிஸ் செய்தார்.
லுசியா கவனிக்கப்படாமல் பத்தோடு பதினொன்றாக காணாமல் போய் இருக்க வேண்டிய திரைபடம்.. ஆனால் படத்தை பார்த்த இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யாப் டுவிட்டரில்.. அட்டாகசமான திரைப்படம் மட்டுமல்ல..இது எனது பிறந்தநாள் கிப்ட் என்று டுவிட்செய்ய... நான் பார்க்கின்றேன் நீ பார்க்கின்றேன் என்று எல்லோரும் பார்த்து படத்தை பெரிய அளவுக்கு கொண்டாடினார்கள்.. அந்த திரைப்படம் கொண்டாட வேண்டிய திரைப்படம்தான்....
மூன்று கோடி ஒரு படத்துக்கு செலவு செய்தாலும் மொக்கையான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அதிகம்.வெறும் 75 லட்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது.....
அப்படி 2013 ஆம் ஆண்டு சூறாவளியாக சற்று சுழன்ற லுசியா திரைப்படம்தான் தற்போது சித்தார்த் நடிப்பில் எனக்குள் ஓருவன் என தமிழ் பேசி இருக்கிறது....
மேலும் பதிவை வாசிக்க ஜாக்கிசினிமாஸ் தளத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்
#Siddarth #எனக்குள்ஒருவன் #Yennakuloruvan
முதலில் வீடியோ விமர்சனம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
sunday poganum
ReplyDelete