சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்|19-04-2015


  ஆல்பம்.
பிரதமர்    வெளிநாடு வெளிநாடாக பறந்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுதான் டாக் ஆப் த டவுன்..... சமுகவலைதளங்களில் வறுத்து எடுக்கப்படுகின்றார்... ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்று  நினைத்தவர்கள் எல்லோருக்கும்  மரண அடி... புதிய பூதத்திற்கு பழைய பூதமே தேவலாம் என்ற நிலை...  மக்களுக்காக  சேவை  என்ற  மனப்பான்மையே அறிதாகிவிட்டது... ஆம் ஆத்மியாவது நம்பிக்கை கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக்கொண்டதோடு உட்கட்சி பூசலில் திலைத்து வருகின்றது... அப்போ யார்தான் இந்தியாவை  காப்பாற்றுவது...???



==
ராகுல் காந்தி எங்கே போனார்...?? தேர்தல்  நடக்கும் போது செல்லவில்லை... ஆட்சியில் இருக்கும் போது ஓய்வெடுக்க  சென்று காணாமல் போகவில்லை... தேர்தல் முடிந்தது.. அவர் ஓய்வெடுக்க சென்று இருக்கின்றார்.... பொது வாழ்க்கையில் இருக்கும் ஒரே காரணத்தால்  அரசு பொறுப்பில் இல்லாத ஒருவர்  எல்லா இடத்துக்கு அறிவித்துவிட்டு செல்ல வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை... விடுமுறைக்கு செல்கின்றார் என்ற செய்தி சொல்லிவிட்டார்கள்... ஆனால் அதை வடநாட்டு   ஊடகங்கள் செய்தியாக்கின....ஏவாள்  கடித்த ஆப்பிளைவிட  மிக மோசமாக அதனை  சித்தரித்தன... அதற்கு தமிழக ஊடகங்களும் ஒத்து ஊதின. ஆனால்  தமிழகத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன... ஆனா கேட்க தைரியம்  இல்லாமல்  பம்மிக்கொண்டுள்ளன.
=====
மிக்சர்.
கர்நாடக அரசு இரண்டு  அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது... அதில்  ஒன்று மேகதாது...பெங்களூர் மெஜட்டிக்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் இடம்... இங்கே அணை கட்ட  தமிழகம் எதிர்ப்பு தொடர்ந்து  தெரிவித்து வருகின்றது...அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கர்நாடகாவில் நேற்று பந்த் நடந்தது... கர்நாடகாவில்  பிறந்த ஜெயலலிதா  தாய் மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் ,முதல்வர் பன்னீர் செல்வத்தில் கொடும்பாவிகள்  கன்னட எதிர்பார்களகளால் எறிக்கப்பட்டன.... நாம் எப்போது பந்த் நடத்த போகின்றோம் என்று  தெரியாது...  எல்லாம்  ஜெவின் தீர்ப்புக்கு பிறகே  தெரியவரும்.
=====
விடாது கருப்பாக ஜெ வழக்கின் தீர்ப்பு தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது.. நீதிபதி குமாரசாமி  தீர்ப்பு தேதியை   குறிப்பிட்டாமல் தள்ளி வைக்க... அன்பழகன்  தாக்கல் செய்த பவானி சிங் நியமித்தது தவறு எனும்   வழக்கின்  தீர்ப்பில்  முரண்பாடு எட்ட... அது  இன்னும்  மூன்று பேர் அமர்வுக்கு மாற்ற பட்டு அந்த தீர்ப்புக்கு காத்து இருக்க.. இங்கே ஜாமீன் மீதான தீர்ப்பு தள்ளி வைக்க...  அடேய்யப்பா... எழுதும் எனக்கே குழப்பமாக இருக்கின்றது. என்னவாக போகின்றதோ... தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
=========

கல்யாண் ஜீவல்லர்ஸ் அலப்பறைகளை  பார்த்து விட்டு சமுக சவலைதளங்களில் ஓட்டு ஒட்டு என்று ஓட்டினாலும்...  நல்லதாகவோ கெட்டதாகவோ அந்த விளம்பரம் பெரிய  அளவில் ரீச் என்பதை கல்யாண் ஜூவல்லரி கடைக்கு முன் கூடிய கூட்டமே சான்று இத்தனைக்கும்  அன்று யாரும் கடைக்கு நகை வாங்கபோகவில்லை... ஆனால்  வந்த பிரபலங்களை பார்க்க வந்த கூட்டம்..ஏது எப்படியோ அந்த விளம்பரத்தை எடுத்தவர்கள் அவர்கள் வேலையில் சாதித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
======
 சென்னை மெட்ரோபணிகள் விரைவாய்   நடந்துக்கொண்டு இருந்தாலும் கிண்டி ஸ்டேஷனை கட்டி முடித்து விட்டார்கள்.. சின்ன  வேலைகள்  நடந்துக்கொண்டு இருக்கின்றன... இரண்டு ரயில்கள் மேலும் கிழும் வந்து செல்லும் பிரமாண்ட ஸ்டேஷனாக பின்னாளில்   கிண்டி மெட்ரோ ரயில்வே  ஸ்டேஷன் புகழப்படும் என்பது என் எண்ணம்...
======
தற்போதைய  சினிமா விமர்சனங்கள்  பற்றி..
விமர்சனம் என்பதே குத்திக்கிழிக்க வேண்டும்... விமர்சனம் மூலம் படைப்பாளியை ஓட்ட வேண்டும்....
தன் சுயநலனுக்காக தன் மீது பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காக அநியாயத்துக்கு ஒரு படத்தை காலய்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சிலர் விமர்சனம் செய்கின்றார்கள்.... அதுதான் நல்ல விமர்சனம் என்றும் சிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்...
குறைகளை கூட நாசூக்காக சொல்ல தெரியவில்லை...ஏதோ படத்தில் அநியாயத்துக்கு இருக்கும் லாஜிக் மீறலை காலாய்க்கலாம் ஆனால் எல்லா படத்தையும் தொடர்ந்து விமர்சனம் செய்யும் போது கலாய்த்துக்கொண்டே இருப்பது என்ன விதமான மனநிலை என்று புரியவில்லை....
என்னையும் அப்படி விமர்சனம் செய்ய சொல்கின்றார்கள்...
ஒரு படம் நல்லா இல்லை என்றாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி விட்டு குறைகளை சொல்லும் போது அவைகளை தவிர்த்து இருக்கலாம் என்று சொல்வதுதான் விமர்சனத்துக்கு அழகு....
ஆனால் எப்படி தன் பக்கம் எல்லேரையும் கவரலாம் என்று நினைத்து விமர்சனம் செய்தால் அது இன்று வேண்டுமானல் கைதட்டல் பெறும்.... ஆனால் நீண்டகாலம் தாக்கு பிடிப்பது கஷ்டம்...
சுஹாசினி  இதையேதான் சொன்னார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள  முடியாது...தகுதியுள்ளவர்கள்தான்  விமர்சனம் செய்ய வேண்டும் என்றார்.. படம் பார்த்த  யார் வேண்டுமானாலும்   விமர்சனம் செய்யலாம்.. அதில் தரம் இருக்க வேண்டும் என்று  சொல்லி இருந்தால் எந்த  பிரச்சனையும் இல்லை என்பதே என் வாதம்.
========
1950 களில் என்றுநினைக்கின்றேன்... இந்தி   திரைப்படங்களில் நாயகி தேர்வுக்கு எந்த மாதிரி தேர்ந்து எடுத்தார்கள் என்று வலைதளத்தில் ஒரு  லிங்க் பார்த்தேன்  சாம்பிளுக்கு இரண்டு படங்கள் மட்டும்... அந்த லிங்  மிஸ் ஆகிவிட்டது...



==
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும்  ஓ காதல் கண்மணி  திரைப்படம் பற்றி  எதிர்ப்புகள் எழுந்து இருக்கும் நிலையில் ....தாலிகட்டாமல் லிவிங்டுகெதர் வாழ்க்கை சமுகத்தை சீரழிக்கின்றது.. எதிர்ப்போ எதிர்ப்பு ஆனால்....
தன் மகன்களின் கே திருமணத்தை இரண்டு வீட்டாரும் அங்கீகரித்து தன் பிள்ளைகளுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்து விட்டார்கள்...தமிழ் கேரள இளைஞர்களின் ஓரின திருமணம்...




========
முகநூலில் பிரகாஷ் சுகுமாறன் பதிந்த செய்தி உங்களுக்காக...






ரெட் கிராஸ் என்றால் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்து செய்தித்தாள்களுக்கு போஸ் கொடுத்து விட்டு செல்பவா்கள் என நம்மில் பெரும்பாலானவா்கள் நினைக்கிறாா்கள். உண்மை அதுவல்ல.
ஆந்திராவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழக கூலி தொழிலாளா்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு அங்கிருந்த மருத்தவப் பணியாளா்கள் தொடக்கூட முன்வராமல், ஸ்டிரக்சா்கள் கூட வழங்காத நிலையில், உறவினா்களே பாா்க்க அஞ்சும் வகையில் இருந்த இறந்தவா்களின் உடல்களை தூக்கி வந்து வீடுகளில் ஒப்படைத்து, பிறகு மறு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்து, 9 தினங்கள் கழித்து திரும்ப ஊருக்கு செல்லும் வரை முகம் சுளிக்காமல் கடமையை நிறைவேற்றிய ரெட்கிராஸ் ஊழியா்கள்...
நம்முடன் நம் பகுதிகளில் வசிக்கும் நமது சகோதரா்களே.
நம்மைப் போன்ற சாதாரணா்கள் நெருங்கவே பயப்படும், தவிர்த்து ஓடி ஒளியும், அசாதாரண செயல்களில் எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் ஈடுபடும் இவா்களை போற்றாவிட்டாலும் உரிய மரியாதையை அவ்வப்போது வழங்கவாவது அரசாங்கம் முன் வரவேண்டும்.
ஆந்திராவிலிருந்து வந்து சில மணி நேரங்களில் திரும்பிய மருத்துவா்களுக்கு குளுகுளு அறைகள் கிடைத்த நிலையில், சிதைந்த உடல்களை சிந்தாமல் சிதறாமல் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இவா்களுக்கு..
வெயிலுக்கு ஒதுங்கி உட்கார இடம் கூட தர முன்வராத ஊழலில் திளைக்கும் அரசு நிா்வாகங்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் அதை பற்றியெல்லாம் சற்றும் கவலையே படாமல், போதிய மருத்துவ பணியாளா்கள்.. பராமரிப்பு பணியாளா்கள் இல்லை என மருத்துவ கல்லூரி நிர்வாகம் கைவிரித்த போதெல்லாம்..
மருத்துவா்கள், உயரதிகாரிகள் உட்கார நாற்காலிகள் தூக்குவதில் தொடங்கி.. காவலுக்கு நின்று நொந்து போயிருந்த காவல்துறையினருக்கு சிறு சிறு உதவிகளை செய்து, உடல்களை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வீடுகளில் இறக்குவது வரை முகச்சுளிப்பில்லாமல் பணியாற்றிய ரெட்கிராஸ் நண்பர்களுக்கு மனமாா்ந்த நன்றிகள்.. வணக்கங்கள்..
==========
நான்வெஜ் 18+
Masturbation is like procrastination, it's all good and fun until you realize you are only fucking yourself!

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. நல்ல திரட்டு
    வாக்கு ஒன்று

    ReplyDelete
  2. http://forum.santabanta.com/showthread.htm?296766-The-Murky-World-Of-Casting-Couch-In-Bollywood!

    http://www.bollywoodlife.com/news-gossip/bollywood-behind-closed-doors-ar-kardars-1951-film-audition-pics-go-viral-view-pics/

    Here is the link Jackie Sir. கொஞ்சம் கூகிள் கிட்டே கேட்டுப்பார்த்தேன். லிங்க் கிடைத்தது.

    ReplyDelete
  3. http://www.indiatimes.com/entertainment/bollywood/this-is-what-a-bollywood-audition-looked-like-back-in-the-50s_-231075.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner