Komban-2015 கொம்பன் திரைவிமர்சனம்.


சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்…    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில்   வெளியாகி இருக்கும் கொம்பன்.

படம் வந்தால்  தென்மாவட்டத்தில் ரத்த ஆறு ஓடும்… சாதீச்சண்டை மூளும் என்று   டாக்டர் கிருஷ்ணசாமி… சண்டியர் திரைப்படத்துக்கு  பிறகு மடித்து வைத்து ஓய்வு கொடுத்த சாட்டையை   மீண்டும் சுழற்ற… கொம்பன் டீம் கலங்கித்தான் போனது….
ஆனால் படத்தில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை.. அது மட்டுமல்ல.. சாதி ,  ஊர் பஞ்சாயத்துன்னு போய் வெட்டியா மீசையை முறுக்கிகிட்டு சுத்தாதிங்கடான்னு செவிட்டுல அடிச்சி சொல்லி இருக்கார் இயக்குனர் முத்தையா…
விகடனில் அட்டை படத்தில் கண்டு கொண்டேன்  கண்டு கொண்டேன் திரைப்படத்துக்கு பிறகு  கொம்பன் புகைப்படம் மனதை அள்ளியது என்பேன்… படத்துக்கு எதிர்பார்ப்பும் கூடியது.. காரணம் எட்டு வருடத்துக்கு பிறகு அதாவது பருத்தி வீரன் வந்து  எட்டு வருடத்துக்கு  பிறகு  கிராமத்து சண்டியர் சப்ஜெக்ட்டில்  கார்த்தி நடித்துள்ளார் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரிக்க செய்தது எனலாம்.
==
கொம்பன் படத்தின்  கதை என்ன?
கார்த்தி(கொம்பன்)  ….   தனக்கும் தன் ஊருக்கும் நீதி  நேர்மைக்கு பங்கம் வரும்  எந்த விஷயத்தையும்  அவனால் ஆதாரிக்க முடியாது… அதனாலே பல பிரச்சனைகளை  ஊருக்கா சந்திக்கின்றான்.. அவனுக்கு  லட்சுமிமேனனை (பழனி)யை மனம் முடிக்க நினைக்கின்றார்கள்..அதனால் லட்சுமியின் அப்பா ராஜ்கிரன் (முத்தையா) நிறைய இடங்களில்  கொம்பனை  பற்றி விசாரிக்கின்றார்… திருமணம் நடந்தாலும் தன்னை பற்றி அதிகம் விசாரித்த மாமனார் ராஜ்கிரனை கார்த்திக்கு பிடிக்காமல் போகின்றது… ஊரில் முன் பின் மிச்சம் வைத்த பகை…  பிடிக்காத மாமன் , ஆசை  மனைவி என்று  தவித்து போகும் கார்த்தி எவ்வாறு  பிரச்சனைகளை சமாளித்தான் என்பதுதான் கொம்பன் படத்தின் கதை.
=======
படத்தின் சுவாரஸ்யங்கள் .. ( ஸ்பாய்லர் அலர்ட்)
சாதி செனத்தோடு போய் சாமி கும்பிடலாம் என்று ராஜ்கிரணிடம் ஊர் பெரியவர்கள் சொல்ல…  சாமி கும்பிட போங்க.. ஆனா சாதியை கூப்பிட்டுக்கிட்டு போனா… வம்புதான் வரும்.. அதனால நான்  கோவிலுக்கு வரலைப்பா… என்று முதல் காட்சியிலேயே சாதிக்கு எதிராக சவுக்கை வீசி இருக்கின்றார் இயக்குனர்.
பூ படத்துக்கு  பிறகு தீப்பெட்டி  தொழிற்சாலையில்  ஐந்துக்கும்  பத்துக்கும் நம் பெண்கள் எந்த அளவுக்கு   அவமானபடுகின்றார்கள் என்பதை பதிவு செய்து இருப்பதோடு.. ஆறு மணிக்கு குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போகும் பெண்களை  காட்டி விட்டு …. குண்டியில் வெயில் படும் வரை தூங்கி .. பத்து  மணிக்கு விழித்து மீசை முறுக்கிக்கொண்டு… பத்து மணிக்கு மேல்  பஞ்சாயத்து பேச  வெள்ளையும் சொள்ளையுமாக செல்லும் கணவன்மார்களை செவிட்டில் அறைந்து காட்சிகள்  மூலம் புத்தி சொல்லி இருக்கின்றார் இயக்குனர் முத்தையா… அது மட்டுமல்ல… நல்ல படிடா என்று பையனுக்கு புத்தி சொல்வது போல பஞ்சாயத்துக்கு  கிளம்பும் ஆட்களை  ஒரு  பிடி பிடித்து இருக்கின்றார்..

http://www.jackiecinemas.com/indian-movies/komban-tamil-movie-review/

 வீடியோ விமர்சனம்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. படத்தின் உள்நோக்கம் மற்றும் அரசியல் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தென் தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய படம் ஆரோக்கியம் அற்றது என்பதே வாதம். கதாநாயகன் கையில் பச்சை கயிறும் வில்லன்கள் கையில் சிவப்பு மற்றும் பச்சை கயிறும் கட்டி இருப்பதின் காரணம் என்ன என்பதை இயக்குனர் அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner