ஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.…
பீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்..
சினிமா என்பது சமுகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமாக்கள் நடுத்தர அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் அதிகம் பதிவு செய்து இருக்கின்றன.. ஆனால் விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படங்கள் மிக மிக குறைவு…. உதாரணத்துக்கு ஈரான் படங்களை பார்த்தால் அந்த தேசத்தின் வறுமை அவர்கள் வாழ்வியல் போன்றவற்றை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்… இந்தி படங்கள் கூட வருடத்தில் நான்கைந்து படங்களில் விளம்புநிலை மக்களில் வாழ்வியலை பதிவு செய்கின்றன… ஆனால் தமிழில் மிக குறைவு… அந்த குறையை எந்த சினிமா பூச்சும் இன்றி காக்கா முட்டை சாதித்து இருக்கின்றது.
ஆர்டர் செய்தால் பீட்சா வீடு தேடி வரும்… ஆனால் அதே பீட்சாவை சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் வசிக்கும் வறுமை சூழல் கொண்ட இரண்டு சிறுவர்களுக்கு பீட்சா எட்டாக்கனியாக இருக்கின்றது…
சார் இப்ப எல்லாம் பணம் புழங்குது… 300 ரூபாய் பீட்சா எல்லாம் ஜூஜூப்பி என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்… கொஞ்சம் மனசாட்சியை அடகு வைத்து விட்டால் போதும் எல்லாமே கைவசம் அகும் எல்லாமே ஜூஜூப்பிதான்… ஆனால் நேர்மையாக வாழ வேண்டும் என்று யோசித்தால்… அதன் படி வாழ்தால்… சாதராண பீட்சா சுவை என்பதே போராட்டம்தான்…
சென்ட்ரல் போகும் போது பாடிகாட் மூனிஸ்வரன் கோவிலை தாண்டி பாலம் ஏறுகையில் வலப்பக்கம் பூங்கா நகர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி ஒரு குப்பம் இருக்கின்றது. அங்கேதான் தில்சன் என்ற பையன் பாதம் கொட்டை எடுக்க போய் ஒரு மில்ட்ரி ஆபிசரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லடப்பட்ட இறந்து போன இடம் அங்கேதான் இருக்கின்றது…
பாதம் கொட்டை எடுக்க போய் உயிர் விடும் அளவுக்குதான் அங்கே வாழ்க்கை இருக்கின்றது… பசிக்கு எதாவது கொறிக்கலாம் என்று சென்று உயிர் விட்டவன் அங்கேததான் வாழ்ந்தான்… அது போன்ற இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்படும் கதைதான் காக்கா முட்டை
========
காக்கா முட்டை படத்தின் கதை என்ன..?
ரமேஷ், விக்னேஷ் அண்ணன் தம்பிகள். அம்மா ஐஸ்வர்யா குப்பத்தில் தன் பிள்ளைகளுடன் சொற்ப வருமானத்தில் வசிக்கின்றார்கள்.. கணவன் திருட்டு கேசில் ஜெயிலில்….ரயில் டிராக் ஓரம் விழுந்து கிடக்கும் நிலக்கரிகளை பொறுக்கி எடுத்து விற்று வரும் சொற்பவருமானத்தில் வாழ்க்கை ஓட்டிக்கொண்டு இருக்கையில்… அவர்கள் ஏரியாவில் நடிகர் சிம்பு ஒரு பிட்சா கடை திறந்து வைக்க… அந்த பீட்சா ருசி எப்படி இருக்கும் என்ற அறிய விரும்பும் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த படத்தின் மீதிக்கதை.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment