சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.18/05/2015




ஆல்பம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி  இரண்டு கலெக்டர்களுக்கும்  மத்திய அரசு ஓலை அனுப்பி  இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை  என்பதே  மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி  விட்டார்…  என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்… 


மோடியை விட கலெக்டர்  அமித் கூலரில்  ஸ்மார்ட்டாக இருக்கின்றார்… போட்டோவுக்கு பிரத்யோகமாக  போஸ் கொடுக்கும் பிரதமருக்கு இந்த விஷயத்தில் வருத்தம்தான் போல… பின்ன ஸ்மார்ட்டா ஒருத்தன் அதுவும் கூலரை அவிழ்க்காமல்  பிரதமாரோடு கை குலுக்குவது ஜனநாயக நாட்டுக்கு  அழகில்லை…
  இந்த விஷயம் கடந்த சில நாட்களாக இதுதான் இந்தியாவில் பெரிய அளவில் விவாதமாக இருந்து வருகின்றது.

அமெரிக்க அதிபர் ஒபாமா… தன் ஊழியர்களோடும் மக்களோடும் எவ்வளவு இணக்கமாகவும் நட்பாகவும் இருக்கின்றார் என்று  இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
=======
சொத்து குவிப்பு வழக்கில்  தீர்ப்பு  வந்தது போல கணக்கில் தவறு ஏற்ப்பட்டு விட்டது என்று 2ஜி வழக்கிலும் இது போல  தீர்ப்பு வந்தால் ஊடகங்கள் விட்டு விடுமா?-  இந்தியா எங்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டல் கணக்கில் கோட்டை விட்டதால் தீர்ப்பு முடிவு வேறுமாதிரியாக மாறிவிட்டது என்று விவாதம் ஒரு புறம்  நடந்துக்கொண்டு இருக்கின்றது… ஊடகங்கள் வழக்கம் போல மவுனிக்கின்றன… தமிழகத்தில் பதவியேற்புக்கான பணிகள்  வேகமாக நடந்து வருகின்றன… ஆர்கே நகர் எம்எல்ஏ  வெற்றிவேல் ராஜினாமா செய்து விட்டார்…. அம்மையார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தயாராகிவிட்டார்… முடங்கி கிடக்கும் முக்கிய பணிகளாவது துரிதகதியில் இப்போதாவது நடந்தால் சரி. 500 புதிய பேருந்துகள், மெட்ரோ ரயில் போன்றவை விரைவில்  தடதடக்கட்டும்.
=========
இன்று  தந்தி பேப்பரில் இரண்டு செய்திகள் விமுறை தினத்தில்  சென்னை மெரினா கடற்கரையில் கடலில் குளிக்க சென்று அலை இழுத்து சென்று  உயிர் விட்ட மருத்துவகல்லூரி மாணவி, மற்றும்  குமரி மாவட்டம் கொல்லங்கோடு  கடலில் 5 மாணவமாணவிகள் பலியான செய்திகள் மனதை கணக்கின்றன…



கடல் மற்ற நீர்நிலைகளை விட ரொம்ப டேஞ்சரான இடம்… கொஞ்சம் கவனம் சிதறினாலும்… முடிவு மரணம்தான்…
பாலிமர் செய்தி சேனலில் நான் பணி புரிந்த போது இதுபற்றி ஒரு விழிப்புணர்வு செய்திபடம் எடுத்தேன்.. அது உங்களுக்காக…

வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
========
நண்பர்கள் குழுவினர் நடத்தும் ShrutiWebTV யின் சிறப்பு என்னவென்றால் திரைப்படம் வெளிவந்த உடன்  முதல் முதல் காட்சியில்.. ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கின்றது என்பதை தொடர்ந்து மிக நேர்மையாக  பதிவு செய்து வருகின்றார்கள்… அதற்காக அவர்களின் உழைப்பு அபாராமானது…
 ஜோ நடித்த 36 வயதினிலே….  திரைப்படத்தை பார்த்து விட்டு பெண்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக பேட்டிக்கொடுக்கின்றார்கள் என்று  பாருங்கள்…




============
புறம்போக்கு திரைப்படத்தின் வீடியோ விமர்சனம்.


============
36 வயதினிலே திரைப்படத்தின் வீடியோ விமர்சனம்.

===========


=========
படித்ததில் பிடித்தது.
'நெகட்டிவ் எண்ணங்களே தேவை இல்லையா?''
''கட்டாயம் தேவை. பாசிட்டிவ் திங்கிங் இருப்பதால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யாரோ ஒருவருக்கு நெகட்டிவ் திங்கிங் இருந்ததால்தான் பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது!''


===========


முன் பக்க முடியை சிலுப்பி விட்டுக்கொண்டு  இயக்குனர் எஸ்பி  முத்துராமன் படத்தில்   ரஜினி  டயலாக் பேசும் ஸ்டைலை வச்சக்கண் வாங்காமல்   ரசித்து பார்த்த காலகட்டத்தில்  வழுக்கையான ஒரு  மனிதரை  நான் ரசித்த கதை

 வாத்தியார் மகிமைராஜ்.

  ஆசிரியர் பணியை எத்தனையோ பேர் செய்தாலும் சில பேரால் மட்டுமே  அதில் தனித்துவம்  பெற முடியும் அப்படி ஒரு தனித்துவமான மனிதர் மகிமைராஜ் சார்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்தார். எங்கள் பள்ளியில் 1988 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு ஜி பிரிவு அப்போதுதான் தொடங்கப்பட்டது அதில்  நான் மாணவன்.…


 எங்களுக்கு அறிவியல் கற்றும் தரும் ஆசிரியராக அவர் இருந்தார்...  பொதுவாக புத்தகம் பார்த்து கடம் அடிக்கும் வாத்திமார்களுக்கு மத்தியில்தனியாக ஒரு நோட்டில் மிக விளக்கமாக  அனைத்து பாடங்களையும் குறித்து வைத்து இருப்பார்


கிளாசுக்கு வந்ததுமே  அறிவியல் புத்தகத்தை   மூடி வைக்க உத்தரவிடுவார்.. அதன் பின் பாடத்தின் சாரம்சத்தை  மட்டுமே  எளிமையாக விளக்கி  நடத்துவார்அதன் பின், அந்த பாடத்தில் கேட்கப்படும் கேள்விகைளையும் அதற்கான  பதில்களையும் நோட்சாக கொடுப்பார்..


 சட்டையில் கீழே இருக்கும்  கடைசி பட்டனை  போட்டுக்கொண்டு  சின்ன பிளவு கூட இல்லாமல் இருக்கும்…… அதே போல பெல்ட்  இல்லாத ஒரு   லைட் பிரவுன் கலர் பேண்டை மேலே ஸ்டைலாக இழுத்து விட்டுக்கொண்டு   சாக்பிசை மிக ஸ்டைலாக கையில்  எடுத்துக்கொண்டு   கரும்பலகைக்கு எதிரே உள்ள போர்ட்டில் எழுத ஏறுவார்


சில நேரங்களில்  அந்த  போர்டுக்கு எதிரே இருக்கும் மர பிளாட் பார்ம்  கொஞ்சம் தள்ளி இருந்தால் அதனை காலால் மிக ஸ்டைலாக  டர்ரென்று இழுத்துவிட்டு அதில் ஸ்டைலாக ஏறிநின்று பாடம் நடத்துவார்.


கொஞ்சம்  ஸ்டைலான நக்கலான மனிதர் என்பதால் அவரை  சில மாணவர்களுக்கு பிடிக்காது எல்லா வாத்தியார்களுக்கும் ஒரு பட்ட பெயர் வைப்பது போல அவருடைய வழுக்கையை பார்த்து அவருக்கும் ஒரு பட்டபெயர் வைத்தார்கள்.
மனிதர் எதை பற்றியும்  அலட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நடந்து வருவார்.

மச்சான் மண்டை புல்லா அந்த ஆளுக்கு மூளை அதனாதான்  மண்டையில  முடியே இல்லை மச்சி என்று  அவரை பற்றி மாணவர்கள் பேசிக்கொள்ளுவார்கள்..

பாடம் கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில்  பாடம் கவனிப்பது போல  நடிக்கும் பசங்களை மிக எளிதாக கண்டு பிடித்து அவர்கள் காதை பிடித்து இழுத்து புட்டத்தில் பெரிதாகவும் பின் தலையில் லைட்டாகவும் மிக ஸ்டைலாக  அடிப்பார். அந்த சவுண்ட்.டப் டிப் என்று ரிதமிக்காக கேட்கும்.
அடிப்பதில் கூட ஒரு ஸ்டைல்    அவர் கத்தி பேசி  யாரும் பார்த்து இருக்க முடியாது. மிக மென்மையாக  பேசுவார்.. அந்த பேச்சை கேட்க வேண்டும் என்பதாலே வகுப்பு பின்ட்ராப் சைலைன்சுக்கு மாறி விடும்..


சைக்கிளில் அந்த நாள்முதல் இந்த நாள் வரை படத்தில் சிவாஜி ஓட்டிக்கொண்டு வருவது போலவே ஸ்டைலாக ஓட்டி வருவார்

அவர் அறிவியல் வாத்தியாராக  இருக்கும் வகுப்பு மாணவர்கள் ஒரு போதும் அறிவியல் புத்தகத்தை திறந்து பார்த்ததே இல்லை.. எல்லாவற்றையும் மிக அழகாக நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்து கேள்வி  பதிலையும் மாணவர்கள் எழுதிக்கொள்ள  சொல்லுவார்


சமீபத்தில் முகநூலில் திரிந்துக்கொண்டு இருந்த போது மகிமைராஜ் சாரின் புகைப்படம் 25 வருடங்களுக்கு பின்  என்  கண்ணில் பட்டது  அவருடைய மகன் Mahindeesh Sathish அவரின் படத்தை  பகிர்த்ததோடு  மகிமைராஜ்சார்  மரித்து கல்லறையில் புதைத்த விஷயத்தை எழுதி இருந்தார்.. அது கீழே


===============

அப்பா தவறிய மறுநாள் (சென்ற சனிக்கிழமை) அடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது..

கல்லறையில் குழி வெட்டியவன் சொன்னான்..
"இப்போதைக்கு அப்படியே போட்டு மூடத்தாங்க முடியும்..ரெண்டு மழை பெய்ஞ்சா தான் மண்ணு இறங்கி செட் ஆகும்.. இப்படியே மோடுல slab வைக்க முடியாதுங்க..செட் ஆகாது" என்று!

நான் கதறியபடி கேட்டேன்..

"மே மாசம் எப்படிங்க மழை பெய்யும்..எப்படி பெய்யும்..? "
இதோ நேற்றும் இன்றும் கடலூரில் அதுவரை இல்லாத சரியான மழை..!

# அப்பா..அப்பா..உன் ஞானம், உன் திறம், உன் வலிமை நானறிவேன்.. இன்று ஊரறியும்..!

இன்று ஊரே அறிந்து கொள்ளும் என் ஆசை அப்பா...

=======
 பதிவை படித்த உடன் 25 வருடங்களுக்கு முன் லைட் கலர் உடைகளில் வலம் வரும் மகிமைராஜ் சார் கண் முன் தோன்றினார்

மாசற்ற மனம் பயில்லோம்

மதி துலங்க அதில்நுட்ப கலை கொள்ளுவோம்

ஏசுவின் தந்தையான ஜோசப்பின் பெயர் கொண்ட என்று பிரேயர் பாடல் இன்னமும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது

ஆழ்ந்த அஞ்சலிகள் மகிமைராஜ் சார்.


உங்கள் மாணவன்
தனசேகரன் (எ) ஜாக்கிசேகர்
மயிலை , சென்னை
 =========
பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.



===============
நான் வெஜ் 18+ ஒன் லைன் ஜோக்.

You still use Internet Explorer? You must like it nice and slow.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

4 comments:

  1. . kadal endrume aapathana idam.. nan oru meenavan.. pala kadal maranangalai neril parthu marathu poi vittathu..

    ReplyDelete
  2. Memorable eulogy to your science teacher. I am wondering what happened to the teachers who shaped me.

    The trailer for Admiral makes me want to watch it.

    ReplyDelete
  3. Jackie,

    Getting the president out in a public place like that is a security nightmare. Hats off to his security services for still making it feel like normal.

    It is wonderful to see people's reaction to meeting him.

    If you are into reading books, please read 'Team of Rivals' book.It will shine a new level of respect for Abraham Lincoln.

    ReplyDelete
  4. மகிமைராஜ் சார் பற்றி மிக நன்றாக எழுதியிருந்தீர்கள். சில ஆசிரியர்கள் நம் நினவை விட்டு அகல்வதில்லை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner