ஆல்பம்.
நேபாளத்தில் நில நடுக்கம்… 1500க்கு மேற்ப்பட்டவர்கள் பலி… மலைவாழ் பகுதி என்பதால்
இன்னும் சேதவிவரம் அதிகம் இருக்கும்…மனிதனால் ஒரு செயற்கை பரபரப்பு ஏற்படுத்தினால்..இயற்கையால்
அடுத்து நொடியே பெரிய பரபரப்பை யாரும் எதிர்பார்க்காத
நேரத்தில் நிகழ்த்தி விடுகின்றது… அதுவும் சுற்றுலா தொழில் கலைகட்டும் நேரத்தில் பெரிய அளவில் வாழ்வாதார பாதிப்பினை சந்தித்து இருக்கின்றார்கள்..
நேபாள மக்கள் சகல பலத்தோடு மீண்டு வர வேண்டிய வல்லமையை கொடு பரம்பொருளே..
=======
அம் ஆத்மி நடத்திய சில மசோதாவுக்கு எதிரான கூட்டத்தில் அரவிந்த கெஜ்ரிவால் முன்னிலையில் விவசாயி
ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டது டெல்லியை உண்டு இல்லை என்று பண்ணியது.. இது தேசிய
அவமானம்தான்… பருவ மழை பொய்த்து என் பயிர்கள்
அழிந்த காரணத்தால் நான் தற்கொலை செய்துக்கொள்கின்றேன்
என்று ராஜஸ்தான் விவசாயி துண்டு சீட்டில் எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டது
இந்திய அளவில் விவசாயிகளின் வாழ்க்கை முறையை அது உணர்த்தினாலும்… தன்னிறைவு
பெற்ற நாடு என்று எப்போது மார்தட்ட போகின்றோம் என்று தெரியவில்லை… அது கனவிலாவது நடக்குமா ? என்று தெரியவில்லை..
எல்லா வற்றையும் கிழித்து விடுவோம் என்று சொல்லும்எந்த கட்சியையும் இனி நம்ப ரொம்பவே யோசிக்க வேண்டும்… பத்து லட்ச
ரூபாய் கோட்டு போடும் பிரதமர் இருக்கும் நாட்டில் தான்
விவசாயி தற்கொலை செய்துக்கொள்கின்றான்… சரி அதை விடுங்கள்.. விவசாயி இறந்த பிறகும்…
பேரணி நடத்திய கெஜ்ரிவாலுக்கு மன்னிப்பு கேட்டாலும் நம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளுவோம்.
===========
டெல்லியில் ஹோமோ கணவனால் மன அழுத்ததிற்கு உள்ளாக்கப்பட்ட பெண் டாக்டர் திருமணம்
ஆகி ஐந்து வருடம் கழித்து பிள்ளை பேறும் ,உடலுறவு சுகங்கள் அற்ற நிலையில் வாழ்க்கை
வெறுத்து, தன் கை மணிக்கட்ட்டில் அறுத்துக்ககொண்டு
மறித்து போய் இருக்கின்றார்… இதுல கொடுமை என்னவென்றால்??
மெத்த படித்த டாக்டர் பெண்ணுக்கே இந்த கதி என்றால்??? கட்டுபெட்டியான குடும்பத்தில்
ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்துக்கொடுத்து இருந்தால் என்னவாகி இருக்கும்… இவன் பெண் மீது நாட்டம்
இல்லாமல் ஆண்களை தேடி போக… வம்ச விருத்திக்கு மருமகள் பிள்ளை கொடுக்கவில்லை
என்று அவளுக்கு மலடி பட்டம் கட்டி அவளை கொடுமை
படுத்தும் நிகழ்ச்சியை குடும்பமே செய்து இருக்கும்…
அமெரிக்காவில் தன் பிள்ளைகள் உணர்வுக்கு
மதிப்பளித்து ஹோமோ திருமணம் செய்து வைத்த குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்..
சமுக அங்கீகாரத்து பயந்து ஏதோ ஒரு பெண்ணுக்கு
திருமணம் செய்து வைத்து இருந்தால்… அந்த இரண்டு பெண்களும் ஒன்று தற்கொலை செய்துக்கொள்ளுவார்கள்… மற்றது அவர்கள் உயிரோடு
இருந்து இருந்தாலும் நடை பினமாக வாழ்ந்து இருப்பார்கள்… அதனால் உங்க புள்ளைக்கு
எது மேல விருப்பம் இருக்கோ… அதுல கல்யாணத்தை
பண்ணி தொலையுங்க… அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்து குட்டிசுவராக்காதிங்கடா வெண்ணைங்களா…
========
மிக்சர்..
டாக் ஆப் த டவுன் என்னவென்றால் வைரமுத்து மேட்டர்தான்… ஆறு முறை தேசிய விருது வாங்கிய கவிஞர் வைரமுத்துவையே கொஞ்சம் ஆட்டம் காண வைத்து அப்செட் செய்ய வைத்து விட்டது என்பது உண்மைதான்.
குமுதத்தில் வைரமுத்துவின் சிறுகதையை
ஜெயகாந்தன் இறக்கும் முன் பாராட்டி மகிழ்ந்தார் என்பதுதான் செய்தி…
ஜெயகாந்தனிடம் வாசித்து காட்டப்பட்டு இருக்கின்றது… வாழ்த்து மடல் எழுதி அதில் கையெழுத்து போட முடியாத நிலையில் பழைய
கையெப்பத்தை பயண்படுத்திக்கொள்கின்றோம் என்று சொல்லிவிட்டுதான் வந்து இருக்கின்றார்கள்…
ஆனால் அதை அப்படியே எழுதினால் என்ன பத்திரிக்கை அதனால் ஜெயகாந்தன் மனப்பூர்வமாய் வாழ்த்தியது போல கடிதம் எழுதி கையெழுத்து
போட்டது போல குமுதம் வெளியிட… இதனை பார்த்த
ஜெயகாந்தன் மகள் தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் குமுறி விட்டார்…
அவர் எழுதியது கீழே..
“சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது
:
இந்த வாரக் ‘குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி,
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, ‘அவரது கடைசி எழுத்து’ என ஆவணப்படுத்தி
இருக்கிறார்கள்.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ, எழுதவோ இயலாத நிலையில்தான் இருந்து
வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப் பிடித்துக் கொண்டு
பேசும் அவர்கள், எதைச் சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோகூட இயலாத நிலையில்
இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதிக் கொண்டு வந்து, வாசித்துக் காட்டி,
அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போட வராத நிலையில், ‘உங்கள்
பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா..?’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்ற
பின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே..!?
அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும், அதுவே பெரிய விஷயம்தான் என்று..!
அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட
வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து
என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும்
நியாயமாகாது..”
என்று எழுதி வைக்க… கவிஞர் வைரமுத்துவும் குமுதமும் இப்படியான திடிர் எதிர்வினையை எதிர்பார்த்து இருக்கவேமாட்டார்கள்…
வேறு யாராவது சொன்னாலும் அதையாவது சப்பைக்கட்டு
கட்டலாம்..ஆனால் ஜெயகாந்தன் மகளே சொல்லிவிட்டதால்…திருடனுக்கு தேள் கொட்டிய நிலை…. இருந்தாலும் அவர்கள் பக்கம் நியாயம் இனிமேல்தான் தெரிய வரும் பொருத்து இருந்து
பார்ப்போம்..
ஆனாலும் வைரமுத்துவை வறுத்து எடுத்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த
புமாரங் பூகம்பத்துக்கு குமுதமும் வைரமுத்துவும்
என்ன பதில் சொல்லபோகின்றார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் பத்தி எடுத்துக்கு வெயிட்டிங்.
=======
ஐயப்ப பாடல்கள் புகழ் வீரமணி…. திக தலைவர் வீரமணிக்கு தனது முகநூல் பக்கத்தில்
சில கேள்விகளை முன் வைக்கின்றார்….அவைகள் கீழே..
வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.
1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில்
பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா?
பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக
கூறமுடியுமா?
3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை
கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ
அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை
உண்டா?
5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும்,
அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட்
உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம்
உண்டா?
6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை
உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள்
இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள்
என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு
பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த
முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர்
அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
8. பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள்
முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?
9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள்
இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு
எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?
10. கோவிலில் நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை
டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம்
பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை
எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?
11. ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே.
இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?
12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது,
ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?
13. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ்,
இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன்
வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை
அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல்
என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று
கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க
முடியுமா?
16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள்.
ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும்
போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத்
திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை
என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான்
காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு
உண்டா?
18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர்
கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள்
பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?
19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல.
பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும்
என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும்
கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.
முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள்.
=========
உங்கள் கருத்தையும் அப்படியே பின்னுட்டத்தில் பகிருங்கள்..
=====
கலைஞர் அவர்கள் அவரது முகநுலில் மேட்ரோ ரயில் திட்டம் ஏன் தாமதபடுகின்றது என்று எழுதி இருக்கின்றார்….
வாசித்து பாருங்கள்… கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு திட்ட மதிப்பீடு மற்றும் இடம் ஒதுக்கி அடிக்கல் நாட்டியவர் அவர்தான்… ஆனால்
திறந்து வைத்தவர் பெயர் நடுநாயகமாக இருப்பதுதான் தமிழ்நாட்டின் சாபம்.
அவர் முகநூலில் இருப்பது உங்களுக்காக வாசிக்க.
=====
நான் முதலமைச்சராக இருந்த போது, தொடங்கப்பட்ட திட்டம். எப்படி அதை வெளியிடுவார்கள்?
இவ்வாறு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும், அது தி.மு. கழக ஆட்சியில்
தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவும், ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை என்பதாலும், மெட்ரோ
ரெயில் திட்டத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, போக்குவரத்து நெரிசலைக்
குறைக்கக் கூட முன் வராமல் இருக்கிறார்கள்.
**************************************************************************
சென்னையில் "மெட்ரோ ரெயில்" சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதாவே
தொடங்கி வைத்தார். அனைத்து நாளேடுகளிலும் அதைப் பற்றி முதல் பக்கத்திலேயே பெரிதாக செய்திகள்
வந்தன. 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அன்றாடம் தலைமைச் செயலகத்திலிருந்து "காணொலி காட்சிகள்"
மூலமாக பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதைப் போல இல்லாமல், இந்தத் திட்டத்திற்கு நேரிலே
வந்து தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே
பேசியிருந்தால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப்
பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி
அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டார். அவர் அங்கே உரையாற்றா
விட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டது. அதிலே
அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக்
காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை விட்டு விட்டார்கள். அந்தத் திட்டம் திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போது, தொடங்கப்பட்ட திட்டம். எப்படி அதை வெளியிடுவார்கள்?
இவ்வாறு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும், அது #DMK தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட
திட்டம் என்பதற்காகவும், ஜெயலலிதா #Jayalalithaa முதலமைச்சராக இல்லை என்பதாலும், மெட்ரோ ரெயில் திட்டத்தை
பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூட
முன் வராமல் இருக்கிறார்கள்.
இதுபற்றிக் கூட நேற்றையதினம் "தினமலர்" நாளேடு முதல் பக்கத்திலே வெளியிட்ட
செய்தியில், "அ.தி.மு.க. பொதுச் செயலர், ஜெயலலிதா, முதல்வர்
பதவியிலிருந்து விலகிய பிறகு, தமிழகத்தில், கட்டடங்கள் திறப்பு விழா, திட்டம்
துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. சென்னையில், மெட்ரோ ரயில்
துவக்கமும் தள்ளிப் போடப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னரே, இப்பணிகளை
மேற்கொள்ள வேண்டுமென, ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பதால், திருப்பணி முடிந்தும், 85
கோவில்கள், கும்பாபிஷேகத்திற்காக, காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று
குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும், சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தை இடையிலே அ.தி.மு.க. அரசு
நிறுத்தி வைத்தது. அப்போது தான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முதன்மை ஆலோசகரான
திரு. இ. ஸ்ரீதரன் 11-4-2012 அன்று சென்னையில் அளித்த பேட்டியில், "சென்னை மெட்ரோ
ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைக் கைவிட்டதன் மூலம் தமிழக அரசு மிக மோசமான தவறைச்
செய்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இது குறித்து தமிழகஅரசின் தலைமைச் செயலாளருக்கு
எழுதிய கடிதத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மெட்ரோ ரயில் திட்ட
விரிவாக்கத்தைக் கைவிடும் தமிழகஅரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனம், மெட்ரோ ரயில் பணிகளை தொழில் ரீதியில் சிறப்பாகச் செய்து வருகிறது. முதல்கட்டத்துக்கும்,
இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் இந்த அளவிற்கு இடைவெளி விழுவது நல்லதல்ல. மெட்ரோ
ரயில் மூலம் செல்லும் பயணிகளில் நான்கில் ஒரு பங்குதான் மோனோ ரயிலில் பயணம் செய்ய இயலும்.
பெரும்பாலான நகரங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வி அடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெருவாரியாக மக்கள் பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம்தான் உகந்தது. மோனோ ரயில் சாதாரண
ஒன்றுதான். அதில் அதிகம் பேர் பயணம் செய்யமுடியாது. மோனோ ரயில் திட்டம் வெற்றிகரமான
திட்டம் இல்லை. தற்போது அந்த ரயில் பயன்படுத்தப்படும் ஜப்பானில்கூட, சிறு சிறுநகரங்களில்தான்
பயன்படுத்தப் படுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்தான்
அவசியமாகும். அதேசமயம் மெட்ரோ ரயில் செலவும் குறைவாகும். மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது
மோனோ ரயில் திட்டத்திற்கான செலவு 50 சதவிகிதம் அதிகமாகும்" என்று அனுபவத்தின்
அடிப்படையில் திரு. இ. ஸ்ரீதரன் தெரிவித்த கருத்தை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக்
கொள்ளவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும்
முடக்கி வைத்திருப்பதைப் போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி
வைத்தவர்கள் தான் அதன் பிறகு, மெட்ரோ ரெயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி
வைத்து, தாங்கள் தான் அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப் போல பெருமை தேடிக்
கொள்ள முயன்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் யாருடைய ஆட்சிக்
காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மை நன்றாகவே தெரியும்.
=======
நண்பர் விஷ்வா பேஸ்புக்கில் ஒரு கருத்தை
பகிர்ந்துஇருக்கின்றார்… அதில் எனக்கு உடன்பாடு என்றாலும்… செக்ஸ்டாக்டர் பிரகாஷ்
என்றே இதுவரை ஊடகங்களால் அழைக்கப்பட்டதால் புது பெயரில்
அழைக்க ஊடகங்கள் ரொம்பவே யோசிக்கின்றன… அவ்வளவுதான்….
டாக்டர் பிரகாஷ் ஒரு திறமையான எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவர்னு பேர் எடுத்தவர்.
அதே சமயம் ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிறைசென்றுவிட்டு 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையாகியிருக்கிறார்.
அவர் கைது செய்யப்பட்டபோது எண்ணூர் தாண்டி இருந்த சவுக்கு மரக்காட்டில் அவரது கடற்கரை
பண்ணை வீட்டிற்கு சென்று அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக செய்தி சேகரித்தது நினைவிருக்கிறது.
சிறையிலிருந்தே 150 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதி இருக்கிறார். சிறையில்
நன்னடத்தை காரணமாகவும், தனது தவறை அவர் உணர்ந்துவிட்டதாகக் கூறி அவரை நீதிமன்றம் விடுதலை
செய்திருக்கிறது. அவர் விடுதலையான செய்தியைசெய்தித்தாள்கள் இப்படி வெளியிடுகின்றன.
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் விடுதலைன்னு...
நீதிமன்றமே மன்னித்த ஒருவருக்கு தொடர்ந்து தண்டனை தருகின்றன ஊடகங்கள். மேலும்
செக்ஸ் குற்றத்தில் தொடர்புடைய ஒருவரை செக்ஸ் டாக்டர் என்று கொச்சையாச் சொல்வதன் மூலம்
முறையான பாலியல் மருத்துவர்களையும் அவமதிப்பதாக அமையாதா ?
வாழ்க..வளர்க ஊடக அறம் !
==
திருச்சி சிவா அவர்களின் மகத்தான சாதனை… அதனை சட்டமன்ற உறுப்பினர்.. எஸ்எஸ்
சிவசங்கர் தன் முகநூல் பக்கத்தில் பாமரரும் புரியும் வகையில் பகிர்ந்து இருக்கின்றார்கள்…
படித்ததில் பிடித்தது.
======
இது அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வாழ்நாள் சாதனை. திருநங்கைகள் வாழ்வில்
ஓர் பொன்னாள். திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்.
பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்கள் தான் சட்டமாக வடிக்கப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு பொதுப் பிரச்சினைக்காக மசோதா கொண்டு வரும் வாய்ப்பும்
பாராளுமன்றத்தில் உள்ளது.
ஆனால் இது போன்று தனி நபர் தீர்மானம் 1970-ல் ஒரு முறை நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அதற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்து அனைவர் ஆதரவோடும்
நிறைவேற்றியது அண்ணன் சிவா அவர்கள் சாதனை.
அதிலும் அவர் யாருக்காக இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார் என்பது தான் முக்கியமானது.
திருநங்கைகளுக்காக என்பது தான் வரலாறு. தமிழகத்தில் இன்றும் திருநங்கைகளுக்கு பெரிய
அளவில் மரியாதை கொடுப்பதில்லை.
ஆனால் வடமாநிலங்களில் திருநங்கைகள் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள்.
குழந்தை பிறந்த உடன் திருந்ங்கைகள் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது இன்றும் மரபாகவே இருக்கிறது.
ஆனால் அவர்களுக்காக அந்த வடபுலத்தில் இருந்து குரல் வரவில்லை.
தமிழகத்திலிருந்து கழகக் குரல் தான் ஒலித்திருக்கிறது. அதற்கு காரணம் உண்டு.
சமூகநீதி தான் இதற்கு அடிப்படை. சமூகத்தில் யார் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறார்களோ,
அவர்களுக்காக குரல் எழுப்பியவை திராவிட இயக்கங்கள் தான்.
மதரீதியாக, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை திராவிட
இயக்கம். மகளிருக்கு சம உரிமை கேட்டதும் திராவிட இயக்கம் தான், தந்தை பெரியார் தான்.
அந்த அடிப்படையில் தான் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக விளங்கிய மூன்றாம் பாலினத்தனருக்கு
முதன் முதலில் அங்கீகாரம் வழங்கினார் தலைவர் கலைஞர்.
குடும்ப அட்டைகள் கூட வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, முதன்முதலில்
வழங்கியது தலைவர் கலைஞர் ஆட்சியில் தான். 15.04.2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல
வாரியம்’ தொடங்கப்பட்டது.
அடையாள அட்டைகள், தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப் பட்டாக்கள், காப்பீடு திட்ட
மருத்துவ அட்டைகள் என அனைத்து விதமான உதவிகளும் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான்
வழங்கப்பட்டன. அது வரை இந்த அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் தான் வாழ்ந்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தனி நபர் மசோதாவை திராவிட இயக்கத்தின் பிரதிநிதியாக
நின்று அண்ணன் சிவா அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உணர்வை வணங்குகிறேன்.
அவரது பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
இனி அவர்களுக்கு “சம உரிமை” கிடைப்பதற்கான சட்டப்பூர்வமானப் பணிகள்
துவங்கிவிடும்.
# இந்திய திருநங்கையர்களின் கலங்கரை விளக்கு அண்ணன் சிவா வாழ்க !
=========
பல வருடங்களுக்கு பிறகு தந்தி டிவி
எடுத்து வாக்கெடுப்பில்… திமுக முன்னிலை வகிக்கின்றது…
2016 தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்.???
அதிமுக - 33.0%
திமுக - 49.0%
மாற்றுஅணி - 16.0%
- தந்தி டிவி இணையதள வாக்கெடுப்பில் மக்கள் கருத்து..!!
====
வாட்சப்பை கலக்கி கொண்டு இருக்கின்றது… அனுஷ்கா ஆர்யா ஆபாசபடம்.. அது அவர்களாக
இருக்க வாய்ப்பில்லை.. தெளிவான வீடியோ இல்லை
என்பதை விட.. அது போலான சாயல் சற்றே இருந்தாலே போதும்… கற்பனையை பறக்கவிட்டு கதைக்கட்டி
விடுகிறார்கள் நம்மவர்கள்….. உதாரணத்துக்கு தமிழக டீச்சர் ஒரு பையனுடன் ஓடி விட்டார்… சட்டென வட இந்தியாவில் ஓடிய டீச்சரையும் மாணவனின்
போட்டோ வீடியோக்களை ஷேர் செய்து இதுதான் அந்த டீச்சர் என்று தலையில் அடித்து சந்தியம் செய்தார்கள்…
ச்சே.. ங்கோத்தா நாம படிக்கறப்ப இது போல எந்த டீச்சரும் பாடம் சொல்லி கொடுக்கலையே?? என்று படித்து முடித்து நாலு கழுதை வயசானவர்களே வெறுத்து போய் உட்கார்ந்து இருந்தார்கள் …. இதில் கொடுமை என்னவென்றால் செய்தியின் உண்மைதன்மையை விசாரிக்காமல் இதுதான் அந்த
டீச்சர் என்று வட இந்திய டீச்சரை தமிழ் பத்திரிக்கை மற்றும் இணைய இதழ்களில் போட்டு
வறுத்து எடுத்தார்கள்.. சரியாக மூன்று நாட்களுக்கு
பிறகுதான்.. டீச்சர் உண்மையான டீச்சரின் முகத்தை
பிரசுரித்தார்கள்…. டீச்சர் மேட்டருக்கு தினமும்
ரன்னிங் கமென்ட்ரி கொடுத்ததோடு… டீச்சர் தங்கி இருந்த இடத்தை அம்புகுறி போட்டு காட்டியது தந்தி…
இந்த படுக்கையில்தான் இரண்டு பேரும் சல்லாபித்தார்கள் என்று படத்தை போடாத வரை
ஷேமம்தான். அதே போல ஆர்யா அனுஷ்கா வீடியோ என்று
கதை கிளப்பிவிட… கொஞ்சம் நாளைக்கு முன் லக்ஷ்மிமேனன்
வீடியோ ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது…1990களில் வீடியோ டிரேன்ட் தமிழகத்தில் மெல்ல
கொலோச்ச ஆரம்பித்த போது …கமல் ஸ்ரீதேவி மேட்டர் வீடியோ இருக்கின்றது என்று தமிழ் சமுகம் அப்பட்டமாக நம்பியது…
அது போலத்தான் இதுவும்.
=======
அதிரவைத்த குறும்படம்.. ஏற்கனவே இந்த கான்செப்ட்டில் கருங்காலி படத்தில் ,இயக்குனர் களஞ்சியம் இந்த கான்செப்ட்டில் சொல்லி விட்டாலும் குறும்படத்தில் இந்த கான்செப்ட் வரவேற்க வேண்டியதே..
=======
காக்கைகள் பற்றி நான் எடுத்த வீடியோ பெரிய அளவில் பாராட்டை பெற்றுக்கொடுத்து…
ஷெர் செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
========
சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தின்
டிசர் வெளியீடு.
==========
எனது டுவிட்டுகள்..
நமக்கு சமமான ஆட்கள்கிட்ட தோத்துபோறது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனா தொடர்ந்துமொக்கை
மோகன்கள்கிட்ட தோத்து போறதை நினைச்சாதான் கடுப்பு மயிறா இருக்கு
======
உம்மாச்சி பார்த்துக்கிட்டு இருக்கு என்பதன்நவீனவடிவம்தான் சிசிடிவி கேமரா,எல்லா
தப்புக்கும்உம்மாச்சி தண்டனை கொடுப்பதில்லைஅது போலத்தான் இதுவும்
=====
நான்வெஜ்/ 18+
Why is sex like a bridge game? You don't need a partner if you have a
good hand.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
You wasted space by put those 20 Qs. All those Qs answered by many of them in he past. By posting those Qs what are you try to say? You don't know the answers or you agree with all that Qs.
ReplyDeleteமோடி போட்டிருந்தது 10 லட்ச ரூபாய் கோட் அல்ல என்று தெரிந்த பிறகும் இப்படி தவறான தகவலை தெரிவிப்பது எப்படு சரி என்று தெரியவில்லை. மேலும் அவர் அதை ஏலத்துக்கு விட்டு அதன் மூலம் வந்த பணத்தை கங்கையை சுத்தம் செய்ய கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா? தாங்கள் திமுக விசுவாசியாக இருக்கலாம், குறைந்தபட்சம் திராவிட திரிபுவாத நாகரிகத்தை (?!) பின்பற்றாமல் இருக்கலாமே?
ReplyDelete'நேபாளத் துயரை எண்ணி மனம் வருந்துகிறது. கூடிய விரைவில் அவர்கள் துன்பத்திலிருந்து மீண்டு வரட்டும்.
ReplyDeleteரொம்ப கருணானிதிக்கு ஜிங்க் ஜாங்க் போடுவது அசிங்கமாகத்தான் இருக்கிறது. திருச்சி சிவா பாவம். நேரு factorனால் ஒடுக்கி வைக்கப் பட்டிருக்கிறார். அவர் திறமைக்கு, தலைவி கனிமொழிக்குக் கீழே சேவை செய்யவேண்டிய நிலைமை.
20 கேள்விகளிலும் உண்மை இருக்கிறது. உண்மை சுடும் என்பதால் மழுப்பலான பதிலே கிடைக்கும்.
மோடி நிஜமாகவே அப்படி ஏலமிட்டு தானமிட 'நினைத்திருந்தால், அதை முதலிலேயே சொல்லியிருக்கலாம். பின்னால் செய்தது, கண்டனத்துக்குப் பயந்து செய்ததுபோல்தான் தோன்றுகிறது.