சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.13/05/2015


ஆல்பம்..
 பட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு  உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்…  முதலில்  வந்த  நிலநடுக்கத்தில் இருந்து  இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும்  அடுத்த  நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது  லேசாக உணரப்பட்டுள்ளது.


=========
காங்கிரஸ் ஆட்சியை விட நான் சிறப்பாகவே  ஆட்சி  செய்து இருப்பதால் ஓராண்டு  வெற்றி விழாவை  கொண்டாட போகின்றேன் என்று  மோடி  தெரிவித்துள்ளார்.. ஐந்து வருஷத்துல இது எல்லாம் சகஜம்தான்… பன்னாட்டு  நிறுவனங்க்ளுக்கு கூஜா தூக்கினாலும் ஏதோ கொஞ்சம் கட்டு பாடுகள் எல்லாம் விதித்தார்  மன்மோகன் சிங்…. ஆனால் கட்டுபாடுகள் என்பதை அறவே இருக்க கூடாது என்று நினைத்தால் எப்படி??? உதாரணம் நிலமசோதா சட்டம்.
========
மிக்சர்-
=======
தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வாரத்துக்குமுன்பே கணித்தாகி விட்டது..  அது மட்டுமல்ல… எந்த அரசியல் கட்சியிலும்  இல்லாத சல்மான்கான் போன்றவர்களே தீர்ப்பை வளைக்கும் போது…  ஆட்சிக்கட்டில் தன்னிடத்தில்இருக்கும் போது அந்த  தீர்ப்பு எப்படி வரும்என்பதை உணர்ந்துக்கொள்ள  முடிகின்றது.

==========
குன்ஹா கொடுத்த தீர்ப்பினால் குறைந்த பட்ச தண்டனையாவது கொடுக்கப்படும் என்று  நினைத்து இருந்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக விடுதலை செய்கின்றேன் என்று சொன்னதை இந்த வழக்கையும் வாய்தாக்களையும் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். வட இந்திய பத்திரிக்கைகள்  இந்த  நிலையையே பிரதிபலித்தன. என்டிடிவி இந்து Jayalalithaa's Acquittal Based on Deeply Flawed Math, Says Prosecutor என்று செய்தி வெளியிட்டுள்ளது… ஆனால் இது பற்றி எந்த தமிழ்ஊடகமும் வாய் திறக்கவில்லை…
=====
 ஜெ சொத்து குவிப்பு வழக்கு…18 வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி  தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது… தர்மம் வென்றது… என்று போஸ்டர்கள்.. இது பிரச்சனை இல்லை… ஆனால்இப்போது சொத்து மதிப்பை கூட்டல் செய்ததில் பிழை என்று ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது…  நான்கு மாதம் மூன்பே  பாஜகவுக்கு 100 சீட் ,தேர்தல் செலவுக்கு பணம், ஜெ விடுதலை என்று டீல் போய் விட்டது என்று  ஒரு வதந்தி பரவியது... வாய்க்கு வந்ததை அடித்து விடுகின்றார்கள்… ஆனால் தேர்தலின் போது அதிமுக பாஜக கூட்டனி என்றால்… நாம்  மேலே சொன்ன வதந்தியை நம்பித்தான் ஆக வேண்டும்… எது எப்படி இருந்தாலும்…  பதவி ஏற்று நின்று போன பணிகள் விரைந்து முடிந்தால்  மக்களுக்கு நல்லது.
=
தீர்ப்பில் அசந்து போன விஷயம் என்னவென்றால்.. ஏழு கோடிக்கு நிலம் வாங்கி அதில்  சில மாதங்களில் அதே அளவு லாபம் பார்த்த விஷயம் பொது தளத்தில் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது…

====
கியூப் ,யூஎப்ஒ எதிராக திரையுலகினர் போராடி வருகின்றனர்… 1000 தியேட்டர்களை கியூபுக்கு மாற்றி… அதில் விளம்பரம் போடுகின்றார்கள்.. இதில் எனக்கு லாபம் வேண்டும் என்கின்றார்கள் தயாரிப்பாளர்கள்… படத்தால்தான் விளம்பரம் என்கின்றார்கள்… படத்தால் தியேட்டரில்  கேன்டின்… படத்தால்தான் சைக்கிள் டோக்கன் என்றுஏகத்துக்கு  பங்கு  கேட்பார்கள் போல தெரிகின்றது… அதை விட  கொடுமை… அரசுக்கு வரி செலுத்திய கணக்கை காட்ட வேண்டும் என்பது.. இவர்கள் படம் எடுக்கும் போது உண்மையாக செலவுகளை காட்ட  தில் இருக்கின்றதா?? வரி ஏய்ப்பு  செய்யாமல்  இவர்கள் யோக்கியமாக படம் எடுக்கின்றார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.. நீங்கள்  அடுத்தவரை கேட்கும் போது அவர்கள் உங்களை நோக்கி கை காட்டினால் என்ன செய்வீர்கள்.,.??? வரும் 12 ஆம் தேதிக்கு மேல் படத்தை  வெளியிட தடை என்று தயாரிப்பாளர்கள்  அறிவித்துள்ளார்கள்  பார்ப்போம்.
======
வாட்சப்பில்   திண்டுக்கல் கலெக்டர் பேசிய பேச்சு இப்போது வாட்ஸ் அப் டிரண்ட்… நல்லா பேசறார் ….வாயில வண்டை வண்டையா வருதுன்னு சொல்வாங்க இல்லை….அது  போல நல்லா பேசறார்… அது மட்டுமில்ல… யாரை வேண்டுமானாலும் டென்ஷன் படுத்தி இது போல ஆடியோ ரெக்கார்ட் செய்யலாம்..  அதனால் உஷார் மக்களே.
=====
இந்த ரெண்டு வருஷத்துல நான் எந்த படமும் பண்ணலை... நான் சாமியாரா போயிட்டேன்.. ஆன்மீகம் பக்கம் போயிட்டேன்னு சொல்றாங்க...
நான் கடவுளை தானே தேடிப்போனேன்.. பிகரை தேடிப்போகலையே..??
-சிம்பு.

========== 
நேற்று டி ராஜேந்தர் கொடுத்த இன்டர்வியூ… செம  சிரிப்பாக இருந்தது…  அரசியலும் பதவியும் எப்படி எல்லாம் பேச வைக்கின்றது??? மற்ற எந்த கேள்விக்கும்  பதில் அளிக்காமல் கழுவன மீனில் நழுவன மீனாக நழுவினார்..
=======                  
சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் பணிபுரியும்… நண்பர்களுக்கு… டிஎல்ப்பில் இருந்து நான்கு கிலோ மீட்டரில் …. வீடு வாடகைக்கு….
1000sq.ft Ground floor 2 bhk with covered car park east facing apartment.

4km from DLF IT PARK

Location: Plot no.30, Max worth Nagar, Phase 1, G2 samandham apartments, Kolapakkam (near Madhanadhapuram Pon vidhyashram School)

Near by schools like Pon vidhyasharam,swamy school, omega international, psbb millenium,St.Francis international school

(Both Bachelors and Family)

Contact No.9840229629/

================
பாபநாசம்… படத்தின் பர்ஸ்ட் லுக்….

=========

நான்வெஜ் 18+
Definition of a teenager? God's punishment for enjoying sex.
            
=====நினைப்பது அல்ல
 நீ நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner