இன்றே செய்.




தை தை தித்திதை தை தை தித்தித்தை...  

யாழினிக்கு பரதநாட்டிய வகுப்பில்  முதல் பாடம்... 

இரண்டு ஸ்டெப்தான்  போட்டாளாம்..... மிஸ் எனக்கு  கால் வலிக்குது.. நாளைக்கு  மிச்சத்தை வச்சிக்கலாம் என்று உங்கள் பெண் சொல்கின்றார் என்றார் யாழினியை பார்த்துக்கொள்ளும் பெண்மணி..... 

இவங்கதான் யாழினிக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்கும் மிஸ் என்றார்.. நான் வணக்கம் சொன்னேன்...

நன்னா ஆடுறா... ஆனா  சரியான அடம் என்றார்...

நடன மிஸ்... என்னை அறிந்தால்  திரைப்படத்தில் வரும்  வயதான திரிஷாவை விட ஐந்து  மடங்கு அட்டகாசமாக இருந்தார்...

கவுதம்மேனன்...  படங்களில் வரும் ஓமன பெண் போல  கேரள ஸ்டைல் வெள்ளை புடவையும் ஐரிகை  பார்டரும்.... அழகுக்கு அழகு சேர்த்தன...

கண்ணா நீ இங்கே வா...என்று சொல்லி கண்களால் கண்ணணை ஒரு பார்வை பார்த்தால் போதும்... உடனே  மாட்டு  தொழுவத்தை டீச்சர் வீட்டு வாசலில் கட்டி விட்டு வெண்ணைய் திருடாடாமல்  புலுட்டில் மன மன மென்டல் மனதில் வாசித்து இருப்பான்....

 கவுதம் மேனன் படத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தால்.... இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்து ஜன்னல்  கை போல... டீச்சர்ர்ர்ர்ர்ர்ர் வேண்டாம் என்று தடுத்து இருப்பேன்..

பின்ன என்னங்க.. எப்ப பார்த்தாலும் அழகா பொண்ண காமிச்சிட்டு....பாயின்ட் பிளாக்  நெற்றிபொட்டில் சுட்டோ... அல்லது சைக்கோவிடம்  சிக்கி பத்து பண்ணிரண்டு  கத்தி வெட்டு வாங்கியோ சாக வேண்டியதுதான்..

 அதனால கைல கால்ல விழுந்தாவது அவர் படத்தில்  நடிக்க  வேண்டாம் என்று தடுத்து இருப்பேன்..

மிக திருத்தமாக இருந்தார்...புடவையை  கச்சிதமாக உடுத்தும் வரத்தை இயற்கையிலேயே பெற்று இருக்க வேண்டும்... அல்லது நல்லி சில்க்ஸ்சில்  வெள்ளைக்காரார்களுக்கு புடவை எப்படி கட்ட  வேண்டும் என்று கிளாஸ் எடுக்க  அழைத்து செல்லலாம்.... அப்படி உடுத்தி இருந்தார்.,..

நான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்த்தார்...

எனக்கு ரொம்பவே கூச்ச சுபாவம் என்பது அவருக்கு தெரிய நியாயம் இல்லை....

வாரத்துக்கு  ரெண்டு கிளாஸ்... மாதத்துக்கு எட்டு கிளாஸ்...சரி இரண்டாவது கிளாசில்  அந்த நடன பெண்ணுக்கு மீண்டும் ஒரு  வணக்கம் வைப்போம் என்று இருந்தேன்...

மூன்று கிளாஸ் ஓடி விட்டது...  அந்த பெண்ணை அதற்கு பின் பார்க்கவேயில்லை..

நடன டீச்சர் எங்கே என்று விசாரித்தேன்..

அவருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று சொன்னார்கள்....

எனக்கு  கன்னிராசி திரைப்படத்தில்  பாட்டு வாத்தியார்  ஜனகராஜின் இதயம் போல  சின்ன லிட்டில் ஹார்ட்   வெடித்து விட்டது...

அன்னைக்கே ஒரு வார்த்தையாவது பேசி இருக்கலாம்...

ச்சை....

இதனால் சகலருக்கு தெரிவிக்கும் நீதி என்னவென்றால்... இன்றே செய்....இப்போதே செய்...இந்த நிமிடமே செய், இந்த நொடியே செய்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
18/03/2015



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. இன்றே செய். -- oru kurum padam

    ReplyDelete
  2. அதுவும் நன்றே செய்

    ReplyDelete
  3. இதைத்தான் பெரியவங்க அன்னிக்கே சொன்னாங்களோ?!

    ReplyDelete
  4. சரிதான். இது புனைவோ?. சொந்த அனுபவத்தில் சொல்றேன். பார்த்து ஜொள்ளுங்க. அதுவும் ப்ளோகில் பார்த்து சொல்லுங்க. பொண்ணைப் பெத்தவனுக்கு எல்லாம் ஒரு நல்ல முகமூடி தேவைப்படுகிறது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner