காத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கும்.



உங்களுக்கு பிடித்த  காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய  பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம்  ஆண்டு   அருண்  மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..

 உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
என்ற பாடல்   பலருக்கு  நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...

அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த  பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா  பாடல் கூட   அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய  கண்ணுக்கும் அதன் பின்  அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே  அன்றைய காலத்தில்  பிடித்தது..


1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் முறைமாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் சுந்தர் சியால் அறிமுகப்படுத்த பட்டார்..  விஜயகுமாரின் முதல்தாரத்து பையன் நடிக்க வந்து விட்டார் என்று பேச்சு இருந்தது என்றாலும் பரவலாக  இரண்டாவதாக வெளிவந்த  பிரியம்  திரைப்படம் மூலம்தான் அவர் பரவலாக அறியப்பட்டார்...

1995 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2012 ஆம் ஆண்டு வரை 15 படம் செய்து  இருக்கின்றார்... நிறைய  படங்களில் நாயகன் அவதாரம்  எடுத்து இருக்கின்றார்... பட் இந்த பதினைந்து படத்தில் துள்ளி திரிந்தகாலம் மற்றும் பாண்டவர் பூமி திரைப்படங்கள் இரண்டும் அவர் நடுவில் கவனிக்கப்பட்ட திரைப்படங்கள்....

தமிழ் திரையுலகில் விஜயகுமார் குடும்பத்தில் எல்லோரும் நடிகர்கள்... அவரின் சித்தி  மஞ்சுளா மகள்கள் அத்தனை பேரும் நடிகைகள்  அப்பா இன்னமும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் வேளையில்... நாயகன் முத்திரையோடு  நிறைய படத்தில் நடித்தலும் பெரிய பிரேக் இல்லையென்னறால்  அருணின் மனம் என்ன பாடு பட்டுஇருக்கும்..

ஒவ்வொரு படம் ரிலிசின் போதும் உயிரை கையில்  பிடித்துக்கொண்டுதான்  கடவுளை ஜெபித்துக்கொண்டு  உட்கார்ந்து இருக்க வேண்டும்... அந்த வெள்ளிக்கிழமையின் காலையும் படம் புட்டுக்கிச்சி என்று அதே வெள்ளியின்  தூக்கம் வராத  நீண்ட இரவுகளும்   கொடுமையிலும் கொடுமை.
  தன் மகன் நடித்த படங்கள் தோத்தாலும் சினிமா விழாக்களும் தன் குடும்பத்துடன் செல்லும் போது போட்டோகிராபர்கள் அருண் விஜய்யை சாஸ்திரத்துக்கு  ரெண்டு போட்டோ எடுத்து விட்டு அவருக்கு பின் நடிக்க  வந்து பிரபலமான சக நடிகர்களை எடுக்கும் போதோ அல்லது அவரை கருவேப்பிலை போல தூக்கி போட்டு விட்டு,அவரின் தங்கைகளிடம் அடுத்த படத்தில் என்ன ரோல் பண்ண போறிங்க? என்ற  கேள்வியை முன் வைத்தால் மனது எந்த அளவுக்கு வலித்து இருக்கும்..??


புறக்கணிக்கப்படுவதுதான் ங்கோத்தா வாழ்வில் பெரிய துயர்... அதை அனுபவித்தவனுக்குதான் அந்த வேதனை தெரியும்...  உதாரணத்துக்க விக்னேஷ் என்ற நாயகன்  தமிழ் திரைப்படத்தில்  நிறைய படங்களில் நாயகனாக நடித்தார்.. அவர் குடும்பம் சினிமா குடும்பம்இல்லை... அதிக விழாக்களுக்கு வர வாய்ப்பில்லை...


ஆனால் அருண் அப்படியில்லை...
 அருணை இவர் அப்பா விஜய்குமாரே அழைப்பார்...  வீட்டுல உட்கார்ந்துக்கிட்டு இருக்கறதுக்கு   சினிமா பங்ஷனுக்கு போனாதான் ...நாலு பேர் பார்ப்பான்.. எவனாவது   உனக்கு கதை சொல்ல வருவான்.. அது மட்டுமல்ல இப்படி ஒரு நடிகன் இருக்கான்னு  தெரியவச்சிக்கிட்டே இருக்கனும்.... என்று வலுக்கட்டாயமாக  அவரை  படுத்தி சினிமா நிகழ்ச்சிகளுக்கு அருன் விஜயை  அழைத்து சென்று இருக்கலாம்..2003 ஆம் ஆண்டு  வெளியான இயற்கை திரைப்படத்தின் மூலம் கொஞ்சம் திரும்பவும் பேசப்பட்டார்...


 அதுவும் நாயகனாக நடிக்காமல் சின்ன சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும்  அந்த பாத்திரங்களை அவர் ஏற்று   நடித்தார். அதன் பின் அருண் மீண்டும் அநியாயத்துக்கு  காணாமல் போனார்... 2009 மற்றும் 2010 களில்  வெளியான  மலை மலை மற்றும் மாஞ்சா வேலு திரைப்படத்தின் மூலம்    சென்னை சுவரொட்டிகளில்  மீண்டும் அருண் மூஞ்சியை பார்க்க முடிந்தது...
2012   ஆம் ஆண்டு கவுதமின் உதவியாளர்  மகிழ்திருமேணி இயக்கிய  முதல் படம் பெரிய  வெற்றியை பெறாத நிலையில்   அவரின் இரண்டாவது படத்தை  அதிகம் வெற்றியை சுவைக்காத  அருணை வைத்து இயக்கினார்.. அந்த படம்தான் தடையற தாக்க... படம் நல்லா இருக்காமே என்று அருண் நடித்து இருந்தாலும் தியேட்டருக்கு சென்று ஏ கிளாஸ் ரசிகர்கள் சென்று பார்த்த படம்தான் தடையறதாக்க...


அதன் பின் மகிழ்திருமேனியின் குரு கவுதம்   இயக்கத்தில் அஜித் நடிக்கும்  என்னை அறிந்தால் படத்தில் அருண் நடிக்க கமிட் அனது முதல் அவரை பற்றி படம் வெளிவரும் வரை  அவரை பற்றி பத்திரிக்கைகள்  எழுதி தள்ளின. கண்டு கொள்ளாத சினிமா போட்டோகிராபர்கள்  அவரை பொதுவிழாக்களில் கண்டு கொண்டார்கள்..


ஏன்டா இத்தனை படத்தில் நடிச்சி இருக்கேன்.. ஒரு வாட்டி கூட நான் வரும் போது இவ்வளவு பிளாஷ் மின்னியது இல்லையே என்று அவரின் நொந்த போன மனது, புறக்கணிக்கப்பட்ட மனது நினைத்து இருக்கலாம்.
  என்னை அறிந்தால் படம் வெளியானது...    அஜித்தை பேசும் அனைவரும்... அவருக்கு இணையாக   அருண்குமாரரையும் பேச  ஆரம்பித்தார்கள். அப்படி பேச ஆரம்பித்து இருக்கும் போது அருண் விஜய்க்கு அவரின் மனது என்னமாதிரியான  சந்தோஷ கொண்டாட்டத்தில்  திளைத்த இருக்கும்
  நடிகர் அருண் விஜய் 1977ல  பொறந்து 1995இல் நடிக்க வந்து 14 படங்களில்  பெரிய பிரேக் இல்லாமல்  காத்து இருந்து   நிறைய  தோல்விகளை பார்த்து வெறுத்து போய்  அதிஷ்ட தேவதை தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று தனது அருண்குமார் என்ற பெயரை அருண் விஜய் என்று புது நாமாகரணம் சூட்டிக்கொண்டு..... 35 வயதில் தடையறதாக்க திரைப்படம் மூலம் மீண்டும் கவனிக்கப்பட்டு அடுத்து இரண்டு வருடத்தில் அஜித்துக்கு இணையாக என்னை அறிந்தால் பேசப்பட்டவனின் மன  நிலை எப்படி இருக்கும்...
காசி தியேட்டர்  பக்கத்தில்தான் கலைமகள் நகர்.... அவர் வீடு அங்குதான் இருந்தது... திடிர் என்று போர் அடித்தால் அருண் காசிக்கும் உதயத்திலும் நிறைய  படம் பார்த்து இருக்கலாம்... எத்தனை  முறை இதே காசி தியேட்டரில் படம் பார்க்க அருண்  வந்து இருப்பார்.. டிக்கெட் கிழப்பவர்  கூட  ஏங்க லைன்ல நின்னு வாங்க  என்று அருணை  சொல்லி இருக்கலாம்..

ஆனால் அதே காசி தியேட்டர்...


என்னை அறிந்தால்  திரைப்படம் ரிலிஸ்... முதல்  காட்சியை பார்க்கின்றார்... கிளைமாக்சில்  அரைமணி நேரம்அருண்விஜய் அதகளம் செய்கின்றார்... படம் பார்த்து விட்டு வெளியே வந்த   அருண் விஜயை கொண்டாடுகின்றார்கள்... கூட்டத்தில் சிக்கி தவிக்கின்றார்... காணமல் போன மீடியா கூட்டம் அவரை சூழ்ந்து கொள்கின்றது. பிளாஷ்கள் மின்னுகின்றன... இதுவரை  கண்டு பெரிய அளவில் கண்டுக்கொள்ளாத ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றார்கள்...


  புறக்கணிக்கப்பட்ட  வலி, தொடர்  தோல்விகளை சந்தித்த மனது சுற்றம் முற்றம் பார்க்காமல் வெடித்து  அழுகையாக வருகின்றது... அழுகை மற்றும் உணர்ச்சி வசப்படுதலில் ஆண் பெண் பேதம் இல்லை என்றாலும் ஒரு ஆண் மகன் பொதுவெளியில் கண்ணீர் சிந்துவதை கவுரவக்குறைச்சலாக நினைத்துக்கொள்ளுவான்.


 ஆனால் அன்று அருண்  வெடித்து....   அழுதது... வெற்றையை  சுவைத்த அழுகை... அந்த அழுகை  என்ற ஆனந்த கண்ணீருக்கு சுற்றம் பார்க்க தேவையில்லை...


குறிப்பு...


 என்னை அறிந்தால்  வீடியோ விமர்சனத்திலும் சரி... எழுத்திலும் சரி நடிகர் அருண் விஜய் சிறப்பாக நடித்தும் அவரை  பற்றி குறிப்பிட்டு எழுதவில்லை என்று  நிறைய பேர்  வருத்தப்பட்டார்கள்... நண்பர்களே முதல் காட்சி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால்  அருண்  விஜய் காசி தியேட்டரில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய  வீடியோவை தமிழ்  இந்து வீடியோ தளத்தில் பார்த்தேன்.. அந்த அழுகைக்கு பின் இருக்கும் கதையை பற்றி விரிவாய் பேச வேண்டும் என்பதாலே    அடக்கி  வாசித்தேன்...

திறமையாளனை பாராட்டுவது என் இயல்பு..    அது ஏன் என்பதை விரிவாய் வீடியோவில்.....பகிர்ந்து இருக்கின்றேன்..  அருணுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராறு இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்...
 நண்பர் வீடியோவை பார்த்து விட்டு  கருத்து சொல்லவும்..




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது....

    மலர்

    ReplyDelete
  2. Priyam songs are my favorite too. Someday, Jackie shall also make an article on vidyasagar. Only hits will be noticed here. Whether, it is a music director or a hero or any other common man. The point is the same. At last Arun vijay is on the track, but long way to go. Still waiting for Actor Shyam's day.

    ReplyDelete
  3. I expected this write up Jackie. I know I know i know.....Fantastic

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner