Nanbenda-2015 | நண்பேன்டா…. திரை விமர்சனம்.



உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது போட்டோக்களை நீங்கள்  பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான்  சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள்  என்பது வேறு விஷயம்….

 ஆனால் அப்படி நக்கல் விடுவது போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…

ஒரு அழகான  பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக  இறப்பதுதான் தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்.. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு  வெற்றி அடைய வேண்டும்..

இந்த விஷயத்தில் உதயநிதியை நான்  கண்டிப்பாக பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்  தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து  நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..

இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும்  நடனம் அடத்தெரியவில்லை என்றால்  தான் அம்பேல் என உதயநிதி  உணர்ந்து இருக்கின்றார்…  நீ சன்னோ …நீ மூனோ  பாடலில்  ஆடும் அந்த  நடனம் ஒன்று போதும்….  

அவருடைய டெடிகேஷனுக்கு….



http://www.jackiecinemas.com/indian-movies/nanbenda-tamil-movie-review-2015

வீடியோ விமர்சனம்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ
.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner