மனைவியை ஓஎம்ஆரில் உள்ள அவர் அலுவலகத்தில் பைக்கில் விட செல்கையில் இரண்டு மூதேவிகளை சந்தித்தேன்..
பூலான் தேவி காதலி போல் முகத்தை முழுக்க மறைத்துக்கொண்டு ... பெவிக்காலின் பலமான இணைப்பு போல... பச்சக் என்று அவன் முதுகில் ஒட்டிக்கொண்டு இருந்தாள் அந்த பெண்...ஹெல்மெட் போட்ட இரு சக்கர வாகனத்தை ஓட்டியவனுக்கு சென்னையில் அவனுக்கு மட்டுமே ரோடு போட்டு இருப்பதாக நினைப்பு...
சத்தியா ஸ்டுடியோவில் இருந்து அடையாறு பாலத்தை அடைவதற்குள் நேராக நாங்கள் செல்லும் பாதையில் அவன் பாட்டுக்கு வெகுவேகமாக கட் அடித்து வந்துக்கொண்டே இருந்தான்... ரேஸ் போல...
நான் விரட்டி மலர் ஆஸ்பிட்டல் எதிரில் இருக்கும் பாலத்தில் அவனை பிடித்து என் வாகனத்தால் மறித்தேன்...
டேய் நீங்க போய் எங்காவது விழுந்து தொலைங்க... ஏன்டா எங்களையும் சேர்த்து காலி பண்ண வந்திங்க என்று கோவமாக கேட்க....
பின்னால் உட்கார்ந்த பூலான் தேவி...முகத்தில் கட்டிய திரையை கழட்டி விட்டு... ஏதோ பேச வர.. அம்மா உனக்கு நடந்த விஷயம் தெரியாது. நீ கம்மூன்னு இரு என்று நான் சொல்ல..
திடிர் என ஹெல்மெட் கண்ணாடியை இறக்கி விட்டு ....விருட் என்று பேட் மேன் போல சிட்டாக பறந்து விட்டான்...
அவன்து 220 சிசி... நம்மளது 125 சிசி நிறுத்தி கேள்வி கேட்டது ஒன்றே ஆறுதல்...
=====
சரின்னு அப்படியே போய்கிட்டு இருக்கேன்... எஸ்ஆர்பி டூல்ஸ்கிட்ட சிக்னல் விழுந்து, பெருங்குடி போற வாகனங்கள் எல்லாம் விரைவா போயிக்கிட்டு இருக்கு... எனக்கு பின்னாடி ரெண்டு குப்பை லாரி கருப்பு புகையை கக்கிகிட்டு ஹாரன் அடிச்சிக்கிட்டு வேகமா வந்துக்கிட்டு இருக்கு....
பெருங்குடி பக்கம் இருந்து ஒரு பிகோ கார்ல ஒரு மூதேவி.... ரொம்ப ரிலாக்சா..??அப்படியே யூ டேர்ன் போட்டு வளைஞ்சான்...
50 கிலோ மீட்டர் வேகம்தான்... பட் திடிர்ன்னு சிக்னலில் அவனுக்கு இல்லாத டைமில் பின்னாடி குப்பை வண்டி வந்துக்கிட்டு இருக்கும் போது வளைஞ்சா எப்படி இருக்கும்.??
ஒரு செகன்ட்ல சப்தநாடியும் நடுங்கிடுச்சி..
த்தா... இதோட விட்ட நாம பைத்தியமாயிடுவோம்ன்னு வண்டியை துறத்தி ....காருக்கு முன்ன வண்டியை நிறுத்தினேன்... கார்ல ஏசி போட்டு கண்ணாடி ஏத்திட்ட பெரிய புடுங்கி மயிறுன்னு நினைப்பு...
கண்ணாடியை இறக்கு.... என்றேன்...
கார்ல வந்த பெரிய மயிரா?? சிக்னல் போட்டு இருக்குல்ல... உனக்கு சிக்னல் போட்டு இருக்கா..?? என்று கேட்டேன்
அவன் பேசவேயில்லை...
இல்ல இல்லை... அப்புறம் என்ன மயித்துக்கு வளைஞ்சடா பொறம் போக்கு.... உன் பக்கத்து சீட்டுல உட்கார்ந்து இருக்கற உன் பொண்டாடியோட பைக்லவா என் போல நீயும் வா....... நான் கார்ல அதே மாதிரி சிக்னல் போட்டு இருக்கறப்ப எதிரில் ப்பரக்கேன்னு எதிரில் வரேன்...... ‘
"லவடா".. வயிறு ஒரு நிமிஷம் கலங்கிடும்டா என்றேன்...
சாரி கேட்க கூட ஒனக்கு தோனலை பாருன்னு நான் சொன்னதுக்கு அப்புறம்... பத்துதேதிக்குள்ள மாத இனம் வாங்க வந்த கூர்க்கா... பத்து ரூபாய்க்கு பதில் 5 ரூபாய் கொடுத்தால் செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்சது போல கொஞ்சமா கை தூக்கி சல்யூட் வைப்பானே அது போல...கையை தூக்கினான்.... சாரி கேட்பதை கவுரகுறைச்சலாக அந்த கார் ஓட்டி நினைத்தார்....
நான் பைக்.. கார் இரண்டிலும் சென்று இருக்கின்றேன்.. நான் அக்மார்க் யோக்கியம் எல்லாம் இல்லை....தெரியாமல் என்னையும் மீறி ஏதாவது தவறு நிகழ்ந்தால் சாரி பாஸ் என்று சொல்லி இருக்கின்றேன்... அவர்கள் கொடுக்கும் திட்டினை ஏற்று இருக்கின்றேன்.. ஆனால் தவறையும் செய்து விட்டு அது தவறே அல்ல என்று நினைக்கும் ஜென்மங்கள் சென்னையில் நிறையவே இருக்கின்றது....
பெண் எதிரில் சாரி கேட்பதில் அவ்வளவு கவுரகுறைச்சல்... அவ்வளவு யோக்கிய மயிறா இருந்தா எந்த பிரச்சனையும் இல்லையே???
இது போன்ற பிரச்சனையில் எட்டு வருடங்களுக்கு முன் போலிஸ் ஸ்டேஷன் வரை சென்ற அனுபவம் இருக்கின்றது.... இது ஒரு பெரிய கதை... நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்...
பட்.. அதன் பின் கோவத்தை ரொம்பவே குறைத்து இருந்தேன்.. முக்கியமாக யாழினி பிறந்த பிறகு கோவம் குறைந்து இருந்தது...
மீண்டும் அது இன்று தலை தூங்கி இருக்கின்றது...
கோவத்தை மீண்டும் குறைக்க வேண்டும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
19/02/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இந்தியச்சாலையில், குறிப்பாக சென்னையில் நடப்பதைப் பார்த்தா கோபமே வராம இருந்தால் அவர் புத்தரின் அவதாரம்தான்.
ReplyDeleteநியாயமான கோபம்தான். ஆனால்.... என்னசெய்ய? கோபம்வரும்போது நியாயம் அநியாயம் பார்த்துக்கிட்டா வருது?
யாழினிக்கு என் அன்பு.
முக்கியமாக யாழினி பிறந்த பிறகு கோவம் குறைந்து இருந்தது...
ReplyDeleteமீண்டும் அது இன்று தலை தூங்கி இருக்கின்றது...
கோவத்தை மீண்டும் குறைக்க வேண்டும்...
///Appo thambi pappa ready panna vendiathu dhane...;-) ///
நியாயமாக வரவேண்டிய கோபம்தான்..! வரட்டும்..!
ReplyDeleteநிறைய வரட்டும்..!
If there is no change from such levels - especially when people are in a common place, do not respect each other - India will just be worst place than what it is at now.
ReplyDeleteJust education is not enough, but people need to understand the difference between the education and civilization....
Great question.. Always face this issue, when step into road for walking / cycling or in bike.. Take care jackie.
ReplyDeleteசாவுற நாயிங்க நல்ல நான்கு வழி சாலையில் போய் சாக வேண்டியது தான....
ReplyDeleteஇப்படி பட்ட பைக் பரதேசிகளை நானும் நிறையவே பார்த்து இருக்கிறேன்..
அந்த மாதிரி எந்த நாயாவது அடிபட்டு கிடந்தால் தயவு செய்து உதவாதீர்கள், முடிந்தால் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் போட்டுவிட்டு நன்றாக சர்க்கஸ் செய்தாய் என்று கை தட்டிவிட்டு செல்லுங்கள்!