வாழ்த்துகள் வேண்டி ...



சுதா மேடம் உங்க வாழ்க்கையில ரீவைன்ட் பட்ட்னை கடவுள் உங்க கிட்ட கொடுத்தா.. உங்க வாழ்கையில  நடந்த ஒரே விஷயத்தை நீங்க மாத்திக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்.....ஒரே  ஒரு சான்ஸ்தான்  என்ன செய்விங்க...??? என் மனைவியின் அலுவலகத்தில் அவள்  நண்பர்கள் என் மனைவியிடத்தில் கேட்ட கேள்வி.

யோசிக்க நேரம் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை...

 சட்டென என் மனைவி சொன்னாள்... 


கிரேசி மோகன்





இன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்…

தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர்.

இதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் இந்த கால கட்டத்தில் பெரிய விஷயம்.

கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு  பார்த்தவைகள் என் நியாபக அடுக்குகளில்....

அந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம்  வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது....


நல்ல நண்பர்கள்.

இரவு உணவுக்கு மயிலையில்  உள்ள ஒட்டலுக்கு சென்றோம்... யாழினி வழக்கம் போல கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டு நச்சரித்தாள்...


 எதிர் மேசையில்  மொத்தம் 12 பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதில் இரண்டு பேர் பெண்கள்...

வாட்ஸ் அப்,ஹேப்பி நியூயர்  ஷாருக்கின் சிக்ஸ் பேக்,அஜித்தின் லுக், பேஸ்புக்,எதிர்பார்த்த பேங்க் பேங்க் மொக்கையான கதை என்று இன்றைய இளைஞர்களின்  வாழ்வை பேச்சில் பிரதிபலித்துக்கொண்டு இருந்தார்கள்...

பெண் நண்பர்களோடு கெட்டு கெதர் வந்து இருந்தாலும்.. அதே  நட்பு கூட்டத்தில் யாரோ ஒருவனை இரண்டு பேரில் ஒருத்திக்கு பிடித்து இருக்க வேண்டும். கண்களில் மகிழ்ச்சி, அதை விட காதலில் சிக்கியவள் கண்களில் வெளிப்படும் போதையான அலட்டல்.... ஹீ இஸ் மை மேன் அப்படின்ற ஒரு அலட்டல் அவளின்  கண்கள்,உடல்மொழி போன்றவற்றில்   வெளிப்பட்டுக்கொண்டு இருந்ததது...

 எங்கேயாவது என்னை போன்ற ஒரு ஆள் அவள் நண்பர்கள் கூட்டத்தில் அவள்  வெளிப்படுத்தலை கண்டுபிடித்து தொலைய போகின்றான் என்ற கவலை அவ்வப்போது  அவள் அலட்டலை குறைத்ததோடு  அவள் இயல்புக்கு திரும்ப ரொம்பவே  பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருந்தாள்.

மற்றொரு பெண் எல்லா பசங்களோடும் நின்றுக்கொண்டு  செல்பி எடுத்துக்கொண்டு இருந்தது...

பில் செட்டிலிங் டைம்...

இரண்டு பேர்  ஓஎம்ஆர் அருகில் இருக்கும் பிரமாண்ட வளாகத்தில் இன்ட்ர்வியூவிக்கு செல்ல போவதாக சொல்ல...

என் மனைவி அவர்கள் பேச்சில் ஆர்வமானாள்...

என் மனைவி மேனேஜராக இருக்கும் வளாகத்தில்  உள்ள ஒரு கம்பெனியில்  ஒப்பனிங் இருப்பதாக அவர்கள் பேசிக்கொள்ள.....

ஏங்க.. அந்த பசங்க ரெஸ்யூமை எனக்கு  அனுப்ப சொல்லுங்க..  எங்க கம்பெனியில் ஓப்பனிங்க இருந்தா சொல்லலாம் இல்லை என்றாள்..

நான் அவர்களில் ஒருவனை அழைத்தேன்.... அவன் முதலில் ஏன் இந்த ஆள் அழைக்கின்றான்...? என்று கேள்விகுறி முகத்தில் அப்பிக்கொண்டு  தயங்கி தயங்கி  என் முன்னே வந்தான்....

நீ இன்டர்வியூக்கு போற இல்லை.. அதே வளாகத்தில்  இருக்கும் பிரபல கம்பெனியில்  அங்க இவுங்கதான் மேனேஜர்...நீ இன்ர்வியூவுக்கு போறபடி போ... உன் ரெசியூமை இவங்களுக்கு அனுப்பு... இவுங்க கம்பெனியில் ஓப்பனிங் இருந்தா கண்டிப்பா  சொல்லுவாங்க.. என்றேன்..

தேங்யூ சார்...

ஆண்ட்டி ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி..

ஆண்ட்டியா...?  அப்ப உனக்கு வேலைக்கு ஹெல்ப் பண்ணமாட்டாயா? என்று கலாய்த்தேன்..


சாரிக்கா.... என்று சொல்லி விட்டு மெயில் ஐடி வாங்கி கொண்டு  வேலை தேடும் பையன்  சென்று விட்டான்..

பில் செட்டில் செய்து பேரர் வரும் வரை வெளியே அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்...

அதில் இரண்டு பேர்  உள்ளே வந்தார்கள்...

மேம்...எங்க  செட்டுல  எல்லோருக்கும் வேலை கிடைச்சிடுச்சி... அவனக்குமட்டும்தான் இன்னும் வேலைகெடைக்கலை.. அவனும் டிரைப்பண்ணிக்கிட்டுதான் இருக்கான்...எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு... பிளிஸ்மேம் அவனுக்கு எங்கயாவது ஓப்பனிங் இருந்தா சொல்லுங்க மேம் என்று  கெஞ்சினார்கள்...

என் வாழ்வில், என் முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு இன்றியமையாதது... அவர்களின் தூண்டுதலாலே வளர்ச்சியடைந்தேன்....

 பாருங்கள்... தன் நண்பனு வேலைவேண்டி கெஞ்சிக்கொண்டு இருக்கும் இரண்டு இளைஞர்களை பார்க்கையில் எனக்கு பெருமையாக இருந்தது..

நல்ல  நண்பர்கள் அமைந்தவர்கள் பாக்கியசாலிகள்...

அவர்கள் சென்றஉடன் தளபதி படத்தில்  வரும்... கீழுள்ள வரிகளும் என் நண்பர்களும் நினைவில்  வந்தார்கள் என்பதே உண்மை.
======
பந்தம் என்ன சொந்தம் என்ன போன என்ன வந்த என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே உசுரகூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு தாளமிட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14/10/2014



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

MADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு


தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க  தென் சென்னையில் தெரியாம  இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்னையில் தெரியாம  இடிச்சிட்டா ஏய் கண்ணு என்னை தலையிலயா.. வச்சிக்கிட்டு இருக்கே..??  ஒம்மால பார்த்து போ.. என்ற சீறல்  இருக்கும்...

அன்புள்ள அம்மா. 23/09/2014



23/09/1996....இதே தேதியில் பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....


அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...


பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் ....


படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...


சின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))



அவர்  ஒரு எடிட்டர்.பேரு பாலுன்னு வச்சிக்குவோம்.. சென்னையில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இயங்கும் தொலைகாட்சியில்  வேலை பார்த்தவர்... 

திடிர் என்று வேலையை விட்டு விட்டு   உப்புமா படங்கள் எடிட் செய்ய செல்லுவார்...

பாலுவுக்கு வேலை தெரியும் என்றாலும் நிறைய அள்ளி விடுவார்... எப்படி என்றால் ? எனக்கு கமிஷ்னரை தெரியும் என்ற ரேஞ்சிக்கு...பாலுவுக்கு சினிமா வேலை இல்லாத காரணத்தால்  அவசரத்து வேறு ஒரு தொலைகாட்சியில்  வேலைக்கு சேர்ந்தார்....

அங்கே  சேவியர்  என்ற எடிட்டர்   வேலை பார்த்தார் ....

சேவியருக்கு சம்பளம் கம்மி...

ஒர்க் லோட் அதிகம்...


சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014


நீண்ட நாட்கள்  ஆகி விட்டது... இனி நேரம்  கிடைக்கும் போதாவது சாண்வெஜ் நான் வெஜ் எழுதி வைப்போம்.
  ஆல்பம்.
 ஆசை60 வது நாள் மோகம்  முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க...  இந்தியாவில் மோடி பீவர் முடிந்து விட்டது என்று கட்டியம் கூறுவது போல 9 மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெருத்த  பின்னடைவு ஏற்பட்டுள்ளது..நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை ரட்சிக்க வந்த பிதாமகன் மோடிதான் என்று நினைத்து  பொருவாரியான தொகுதிகளில் வாக்களித்த மக்கள்... 100 நாட்களில் இப்படி ஒரு முடிவை கொடுத்து  பிஜேபிக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டனர்.
====

HOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35 வயதை கடந்த பெண்கள் அவசியம் காண வேண்டிய சித்திரம்.





பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும்  புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு   பின்னால்  எல்லா களவானி  தனங்களும் அனுதினமும் நடக்கும்  தேசம்.

 இங்கு எல்லாம புனிதம்தான்...

 ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை  நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்...

 ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்....  அவர்கள் நாட்டு  கொடியில்  ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்... ஆனால்  நகரம் தூய்மையாக   இருக்கும்...

எதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ...? அதற்கு கொடுப்பார்கள்... எல்லாத்தையும்  புனிதமான பார்க்கமாட்டார்கள்...

எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில்  அமெரிக்க  அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்... எச்சி துப்புவார்கள்... அடிப்பார்கள் துவைப்பார்கள்... வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்... எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள்  சொல்ல வந்த விஷயத்தை  வாழை பழத்தில்  ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..

KILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை தன்னைச்சுடும்.



கண்டிப்பாக வயது வந்தோருக்கான சைக்லாஜிக்கல் திரைப்படம்...
ஜப்பானின் லேட்டஸ்ட் சைக்கலாஜிக்கல் திரில்லர்...2014 பிப்ரிவரி ஒன்னாம் தேதி ரிலிஸ் ஆன  இந்த திரைப்படம்  உலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது...

SIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.






பொதுவாக தற்போது  எந்த படத்தை பார்த்தாலும் ரசிக மகாஜனங்கள்...  பேஸ்புக் பக்கங்களில் எங்கே இருந்து இந்த   படத்தை உருவினார்கள் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ஆக மாறி கண்டு பிடித்து  பாடல் ஓடுகின்றதோ இல்லையோ??? அதற்குள் இயக்குனர்ரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி தள்ளி விடுகின்றனர்...

 அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருப்பது ஒரு முக்கியகாரணம்....

 என்னதான் ரசித்து  ரசித்து  இழைத்து இழைத்து  ஒரு  திரைப்படத்தை எடுத்தாலும்  ஏதோ ஒரு பாரின் படத்தின் தழுவல் இந்த திரைப்படம் என்று மனதில் ரசிகனுக்கு  தொன்றியதுமே படம் பார்க்கும் ஆசையே  ரசிகர்களுக்கு போய் விடுவதும் உண்மை.

அதே போல் இப்போதைய ரசிகர்கள்.. வா மச்சி படத்துக்கு போலாம் என்று எல்லாம் திடிர் என்று கிளம்புவதில்லை...

120 டிக்கெட், பார்கிங் 20,  பாப்கார்ன் கோக் 200 என்றால் ஆன் லைன் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய்  சர்விஸ் கட்டனம்... அதாவது ஒருவன்  தனியாக படம் பார்க்க சென்றலே 500  ரூபாய் செலவு ஆகின்றது... 

அப்படி இருக்கையில் எவனும் வா மச்சி படத்துக்கு போயிட்டு வரலாம் போர்  அடிக்குது என்று யாரும் இப்போது சொல்வதில்லை.. அந்த வாக்கியமே வழக்கொழிந்து வருகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம். 

 முதல் காட்சியில்  படம் பார்த்து விட்டு பேஸ்புக்கிலும் , டூவிட்டரிலும்  ஒத்த அலைவரிசையுள்ள   நண்பர்கள் படத்தை பற்றி எழுதும் ஒரு வரி விமர்சனத்தை வைத்தே... அந்த  படத்தின் அடுத்த காட்சிக்கான  டிக்கெட்டை இப்போது எல்லாம் ரசிகர்கள் புக் செய்கின்றார்கள்..


DAGLICHT-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/சில ரகசியங்கள் வெளிச்சம் பெறாமல் இருக்கின்றன.


உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...

உங்களுக்கு என்று சொல்கின்றீர்களே...? நான் ஆனா? அல்லது பெண்ணா??

பெண்....

 நீங்கள் உங்கள் அம்மாவுக்கு ஒரே பெண்..

சரி...

 சொல்லுங்க...

 அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ... நீங்கள் வக்கில் தொழில் செய்கினறீர்கள்.

அமலா



1986 ஆம் வருடம் கடலூர் ரமேஷ் திரையரங்கம்... பின்பு பாலஜி தியேட்டராக மாறி இப்போது மண்ணோடு மண்ணாகி கேவிடெக்ஸ் துணிக்கடை கார்பார்க்கிங் ஆக இருக்கின்றது.

மைதிலி என்னைகாதலி படம் ரிலிஸ்...

Air Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்


1997 ஆம்  ஆண்டு  வெளியான ஏர் போர்ஸ் ஒன்  திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-??

 அதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்... அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை... எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை  மெய் மறந்து ரசிப்பேன்...

நல்ல திரைக்கதைக்கும்  நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்....

தன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்



அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.

இந்திய சென்சார் போர்ட்   செய்த  இரட்டை வேடத்தால் இவரின்  முதல் படத்தை  இன்றுவரை  ரிலிஸ்   செய்ய முடியவில்லை..

இரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை  சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது.. 

சினிமாவில் சாதிக்க  மும்பையின் பிளாட்பாரங்களில்  வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல்  மாடியில்   உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே  தன்  வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில்   விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால்  அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு   தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..???

ஏக்கப்பார்வை.

இன்று காலையில் மனைவியை அழைக்க  சென்னை விமான  நிலையம் சென்று இருந்தேன்...

மனைவியின் வருகைக்கு   யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...

அவரை  பார்த்தேன்.


அவருக்கு 45 வயது இருக்கும்...

கலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....

வெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம்  தன் உறவுகளை கண்டு விட  மாட்டோமா ? என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..


இசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்





இந்த உலகில் புகழ்   போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்....

 சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள்  படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது  உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...

தைரியமான நடிகர் பிரசன்னா.



நீங்கள் பிரபல  நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்...  போண்டிதான் பின்பு சாட்சாத்  ஆண்டிதான்.

அஜித் சொல்வது போல நீங்கள்  தனியா  வளர்ந்த காட்டு மரம்.

அப்பாவின்  செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ   ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை  இந்த  தமிழ் திரையுலகில் பெற முடியாது,...


தன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.




எனது திரைப்படங்கள் தீர்ப்பு எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது   திரைப்படங்கள் மூலம் தீர்வுகள்  கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில்  மதூர் சொல்லி இருக்கின்றார்....

-         தேசிய விருது இயக்குனர் மதூர்  பாண்டார்கர்.



ராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.


காதர்  மொய்தீன்...

சினிமா துறை   உச்சரிக்கும் பெயர்... ஆனால்  சினிமாவில்  இருந்தாலும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு  இந்த பெயர் அறிய நியாமில்லை... காரணம் சினிமாவில் இருக்கும் வினியோகஸ்தர்கள் மத்தியில்  காதர் மொய்தீன்   என்ற பெயர் வெகு பிரபலம்..


அஞ்சலி தேவி என்ற ஆளுமை.

அஞ்சலி தேவி.

தென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு  நிலையான இடத்தை பிடித்து, தன் மயக்கும் விழிகளால் தமிழ் சினிமா ரசிகனின்  மனதில்  நீங்கா  இடம் பிடித்தவர்  பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி…  



சில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.



ஒரு ஓட்டல்  முதலாளி பையன்  தமிழ் நாட்டின்  ரசிகர்களை  கிறங்க வைக்க முடியுமா?

 அதுக்கு முன்ன ஒரு சின்ன அனலைசஸ்....


சென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். மீயூசியம் தியேட்டர்.



சென்னை பாத்தியன்  சாலையில்  அமைந்து இருக்கும் எக்மோர்  அரசினர்   அருங்காட்சி வளாகத்தில் இருக்கும்   இந்த  கட்டிடத்தை பார்த்து  ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..

  வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான்  மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..

  அப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா திரைப்படத்தில் வரும்  கொஞ்சம் நிலவு பாடலில் வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...



உப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)



இது நான் லீனியர் உப்புக்காத்து..


ஜாக்கி சார்...

நீங்க   டிவி  மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??

 சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்..  ஆனா இந்த நேரத்துல  ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம  தவிக்க விட முடியாது இல்லையா..?  யாழினி  பொறந்தா..... அப்புறம்  எங்க சினிமா???

தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு  கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா  கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..

சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...

பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...

சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில்  சாதிக்கலாம்... 

ஆனால்   வாழ்க்கை...??

 கட் டூ பிளாஷ் பேக்.........

இன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.






இயக்குனர் ஷங்கர்....

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற ரத்தம் பாய்ச்சிய பெயர்...

ஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் பட்டி தொட்டி யில் இருக்கும் ரசிகனுக்கும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர்.


ஜெர்மனியில்...



இப்பதான் வீட்டம்மாவை(16/08/2014) 9.30 நைட் பிளைட் ஏத்தி ஜெர்மனிக்கு அனுப்பினேன்... ஒரு மாதம் கம்பெனி பிராசஸ் டிரெயினிங்.
கடந்த 20 நாட்களாக விடாமல் வேலை... 


இன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்,ஹாலிவுட் நடிகை halle berry





புருஷன் செத்தா... அவன் உடல் எரிகின்ற தீயில் கதற கதற வலுகட்டாயாமாக அவனது மனைவியையும் இழுத்து வந்து, குபு குபு என்று எரிகின்ற தீயில் தள்ளி விட்டு... , கண் எதிரில் அப்பாவி மனைவிமார்களை துடிக்க துடிக்க கொலை செய்த சமுகம் நம்முடையது...

BORGMAN-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/ நெதர்லேன்டின் குழப்பமான படம்.


சுப்ரமணியபுரம்  திரைப்படம்  நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.

சுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு தான்  தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும்  ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில்  நிராயுதபாணியாக  ஜெய்யை மாட்டி விட்டு தாவணி  தலைப்பை  வாயில் வைத்து  அழுதுக்கொண்டே செல்வாரே....
 பட் ஜெய்  பாயிண்ட் ஆப் வீயூவுல    நினைச்சி பாருங்க... 

THE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.



இன்னைக்கு போல  அவசரம் இல்லை... 1990 களில் தூர்தர்ஷன் மட்டும்தான்...  பல ஆண்டுகள்  இந்தியாவில் அதுதான் தனிக்காட்டு ராஜா... அது என்ன  ஒளிப்பரப்புதோ...  அதை மட்டும்தான்  பார்க்க வேண்டும் ...

LOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்



 இப்படி  ஒரு திரைப்படத்தை நீங்க பார்த்து இருப்பிங்களான்னு தெரியாது.. நான் பார்த்தது இல்ல....

 எஸ்  அற்புதமான.... தைரியமான அட்டம்ட் ன்னு இந்த படத்தை  தைரியமாக சொல்லலாம்.

  சான்சே இல்லை....


  சரி அதுக்கு முன்ன கதைக்கு போவோம்...

பெரிய கஷ்ஸ்ட்ரக்ஷ்ன்   நடக்கின்றது... அதில் ஐவன் ஒரு  சூப்பரவைசர்.....

2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.


குறள்.
 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=======
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
======
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=========
Translation:
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.
========
Explanation:
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
========


BLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.




 முதல்ல  நாம சொல்லற  கதை  நம்பறா மாதிரி இருக்கனும்...

நம்பறமாதிரின்னா...

 நான் சொல்ற கதையை என்  நெருங்கிய நண்பர்கள் நம்பவுவது  போலவாவது இருக்க வேண்டும்... அப்போதுதான்  அந்த கதை வெற்றி பெறும்.

இப்படி ஒரு ஒன்லைனை நான்  சொல்கின்றேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்..

Young & Beautiful-2013(Jeune & Jolie) உலகசினிமா/ பிரான்ஸ்/ பாதை மாறிய கல்லூரி மாணவி.




செக்ஸ் வாழ்க்கை  கல்யாணம்  ஆன எல்லாருக்கும்  கரெக்ட்டா அமைஞ்சிடனும்.... அப்படி அமையலைன்னா... சிக்கல்தான்...

( கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான திரைப்படம்  இது பொதுவெளியில்  இந்த திரைப்படத்தின் பதிவினை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்...)

THE PREY-2011(LA PROIE)/பிரான்ஸ்/சைக்கோவிடம் இருந்து தன் மகளை காக்க போராடும் சிறை கைதி.


 கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஒதவாதுன்னு  ஒரு கிராமத்து  பழமொழி ஒன்னு  இருக்கு... ஜெயிலுக்கு போனா கண்டிப்பா கூட்டு உதவவே உதவாது....

பெட்டி கேஸ் லெவல்ல  உள்ளே போய் இருப்பான் ... அங்க இருக்கற குற்றவாளிங்க...  இவனை அடுத்த லெவலுக்கு மாத்தி அனுப்பி இருப்பாங்க... 

பிட்பாக்கெட் மட்டும் முன்னாடி அடிச்சிக்கிட்டு இருந்தவன் ...இப்போ  கஞ்சா விக்ற அளவுக்கு மாத்தி விட்டு இருப்பாங்க..

THE BOOK THIEF-2013/உலக சினிமா/ஜெர்மனி/புத்தகத்தின் மீது காதல் கொண்டவள்.




ஜெர்மனியில்  யுதர்களுக்கு எதிராக நடந்த  துயரங்களை  முன் வைத்து இதுவரை  ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன... இதன் மூலம்   ஹிட்லரையும் நாஜிக்களையும்    நேற்று உலக வரலாறு  தெரிந்த இளைஞன்   கூட இன்னும் திட்டி தீர்க்க ஏதுவாகவும் , அந்த  கனல் அனையாமல் பார்த்துக்கொள்ளுகின்றார்கள்...

ZULU-2013/உலகசினிமா/ பிரான்ஸ்/கொலை கொலையா காரணமாம்.



மனிதன் ...சக மனிதனை துன்புறுத்த ஏதாவது ஒரு காரணம் தேவையாய் இருக்கின்றது.. ஜாதி, மதம், தேசம், எல்லை, பண்பாடு , கலாச்சாரம்  போன்ற விஷயங்களை முன்னிறுத்தி சக மனிதனை துன்புறுத்த வேண்டும்... இதில் முக்கியமாக ஒன்றை சேர்க்க வேண்டும்... அது நிற பாகுபாடு...கறுப்பினம் என்றால் கிள்ளுக்கிரையாக பார்த்த  மனித சமுகம்... அவர்கள் அடிமைகளாகவே   வாழ வேண்டும் என்ற  ஆழ் மனதின் எண்ணம்... 

TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண்.



நடிகர்  விஜய் நடித்த  துள்ளாத  மனமும் துள்ளும்  திரைப்படத்தில்   இன்னிசை பாடி வரும்  இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய  பாடலில் கடைசியில்  பாராவில்....


தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே...
 என்று முடியும்...

மைதிலிக்கான கல்வி உதவித்தொகை 2014-2015 (உதவி தேவை)



நேற்று ஆரம்பித்தது போல் இருக்கின்றது...
இதோ மைதிலி  இந்த வருடத்தோடு.... தன்  பிஈ என்ஜினியரிங் படிப்பை முடிக்க  போகின்றார்...

பழங்கதை  தெரியாதவர்களுக்கு  கீழே இருக்கும்  லிங்குகளை  ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்.


BIG BAD WOLF-2013/உலகசினிமா/இஸ்ரேல்/மகளை பறிகொடுத்த தகப்பனின் வெறி.




அசத்தலான இஸ்ரேலிய திரைப்படம்...

செமையான திரில்லர்.

 சான்சே இல்லை..

 மேக்கிங் அக்மார்க்..

 சைக்காலஜிக்கலா நம்மை வேற பக்கம் அழைச்சிக்கிட்டு போய்... திடிர்ன்னு வயித்துல குபுக்குன்னு  குத்து விடும் கிளைமாக்ஸ்.

Velai Illa Pattadhaari -2014-வேலையில்லா பட்டதாரி சினிமா விமர்சனம்.


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக சோபித்து  வெற்றியை சுவைப்பது என்பது   சாதாரண விஷயம் அல்ல....  

Sathuranga Vettai-2014-சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.




 முதலில்  உள்ளே போய் துழாவும் முன்...

 சில வரிகளில் முதலில் பேசி  தீர்த்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் பாலியல் கல்வி.



காமத்தை ரசித்துக்கொண்டே காமத்தை எதிர்க்கும் நம்மவர்கள் என்று   நான்  அடிக்கடி சொல்லிவருவதுண்டு...

கால ஒட்டத்தில் காணாமல் போனவை...27( பிலிம்)


 ராஜராஜ  சோழன் எப்படி இருப்பான்...? அவன் கருப்பா சிவப்பா? தாடி வச்சி இருப்பானா? அல்லது... சிவாஜி போல புள்ளா ஷேவ் அடிச்சி  பளபளன்னு இருப்பானா?

இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்.



இன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள்..... உங்கள்  முன் நான் மதிக்கப்படும்  ஆளாய் இருக்க நேரடி காரணகர்த்தா ஐயா பாலகுமாரன்தான்...




THE ANGLE-கோணம்

காலேஜில் வேலைக்கு போனதுமே  போட்டோ... வீடியோ   ஆர்டர்கள் எடுப்பதை நான்  விட்டு விட்டேன்.. 

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (15/06/2014)


 கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி  விட்டது...  சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்  எழுதி... 2013  ஆம் ஆண்டு என் வாழ்வில்  மறக்க முடியாத ஆண்டு.... 

வீணாகும் மக்கள் வரிப்பணம்.


பாண்டி கடலூருக்கு இருப்பு பாதை இல்லை  வான் வழிப்போக்குவரத்தும்  இல்லை... நீர்வழி போக்குவரத்தும் இல்லை.... மக்கள் தரை வழி போக்குவரத்தைதான் பெரிதும் நம்பி இருக்கின்றார்கள்... 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner