வாழ்த்துகள் வேண்டி ...சுதா மேடம் உங்க வாழ்க்கையில ரீவைன்ட் பட்ட்னை கடவுள் உங்க கிட்ட கொடுத்தா.. உங்க வாழ்கையில  நடந்த ஒரே விஷயத்தை நீங்க மாத்திக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்.....ஒரே  ஒரு சான்ஸ்தான்  என்ன செய்விங்க...??? என் மனைவியின் அலுவலகத்தில் அவள்  நண்பர்கள் என் மனைவியிடத்தில் கேட்ட கேள்வி.

யோசிக்க நேரம் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை...

 சட்டென என் மனைவி சொன்னாள்... 


எங்க கல்யாணத்துல தாலி கட்டும் போது ஜாக்கியோட  சட்டை  எல்லாம் வேர்வையில தொப்பலா நினைஞ்சி இருந்துச்சி..... ரிவைன்ட் பட்டன் இருந்தா எங்க கல்யாண மேடையில் ஏர்க்கூலர் ஜாக்கிக்கு பக்கத்துல  வச்சிருவேன்....

அவ்வளவுதானா,,?? என்ன மேடம் வேற எதையாவது சொல்லுவிங்கன்னு நினைச்சேன்...

எனக்கு அதுதான் தோனுச்சி...  நான் எதுக்கு மாத்தி சொல்லனும்...?? இதுதான்  எங்க
 ஆளு  ஸ்டைல்...

என் மனைவிக்கு இந்த உலகில் மிகவும் பிடித்த விஷயங்கள் இரண்டு... ஒன்று அவளின் அப்பா.. இரண்டாவது அவளின் தம்பி.

அப்பாவை உயிரோடு கொடுத்து விடு என்று கேட்டு இருக்கலாம்...

கட்டினா வடகலை ஐயங்கர் பெண்ணைதான் கட்டுவேன் என்று தான் நேசிக்கும்  தம்பிக்கு பெண் அமைய வேண்டும் என்று கேட்டு இருக்கலாம்.. அல்லது மனதை மாற்றி விடு என்று கேட்டு இருக்கலாம்.

என் கரம் பற்றிய பிறகு அவளுக்கு எல்லாம் நானே...

என் முகம் கொஞ்சம் சுண்டினாலும் அதை சரிப்படுத்தி முடித்தால் மட்டுமே அவளுக்கு நிம்மதி...

நான் ஒரு முரடன்... ஆண் ஆதிக்கவாதி.....ரோட்டிலே இழுத்து போட்டு டகா டகா என்று சண்டைக்கு போகும் ரகம்.

அடிப்பது  என்பது ஆண்மையின் அடையாளம் என்ற சமுகத்தில் வளர்ந்தவன்... அதனால் காதலிக்கும் போதே கண்ணாடி பறக்க அவளை அறைந்து இருக்கின்றேன்... திருமணம் முடிந்து ஒரு நான்கு  மாதம் கழித்து ஏதோ  ஒரு சண்டை இரவு பத்து மணிக்கு ஆரம்பித்தது கோவத்தில்  அடித்து விட்டேன்.. விசும்பலோடு அறையின் ஓரத்தில் விசும்பலோடு உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க நான் படுத்து  தூங்கி விட்டேன்... 
ஒரு நான்கு மணிக்கு  எழுந்து பார்த்தால் அதே இடத்தில் விசும்பலோடு  தூங்காமல் அழுதுகொண்டே இருக்க  அவளை வாரி உச்சி முகர்ந்தேன்... திருமணம் முடிந்த ஆறு வருடம் ஆக போகின்றது... இன்றுவரை அவளை அடிக்க என் கை அவள்மேல் பட்டதில்லை.. கோவம்வந்தா அதிக பட்சம் திட்டி தீர்த்துக்கறதோடு சரி...

பொம்பளைய அடிக்கறவன்  பொட்டைன்னு  எனக்கு வார்த்தையில உணர்த்தாம வாழ்ந்து காட்டி உணர்த்தினவ அவதான்..

 எனக்கு கோவம் இப்படின்னு அவங்களுக்கு  கோபம் அதிகம்... பிடிச்சுதுன்னா.. பிடிச்சது... பிடிக்கலைன்னா அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்   தூக்கி போட்டுவா...


டாக்டர்,பைலட், அர்மி ஆபிசர் என்று அள் உறவுகள் அவளுக்கு  மாப்பிள்ளை பார்த்தாலும் நான்தான் வேணும்ன்னு பத்து வருஷம் காத்து இருந்து கட்டிக்கிட்டவ...  எவ்வளவோ கஷ்ட தருணங்களை கடந்து இருக்கோம்... ஆனா ஒரு நாள் கூட  உன்னை போய்  கல்யாணம்  கட்டிக்கிட்டு என் வாழ்க்கை  நாசமா போச்சின்னு  ஒரு நாளும்  சொன்னதில்லை... அதனாலே என் கேரியர்... என் ஆசைகள்ன்னு  நிறைய நான் செக்ரிபைஸ் பண்ணி இருக்கேன்.. அதை நானே சொல்லக்கூடாது....


ஏம்மா பேசமா ஆர்மீ ஆபிசரையே கல்யாணம் பண்ணி இருந்தா.--? உன் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்து இருக்குமோன்னு நான் நக்கலா கேட்டா கூட அவ சீரியசா பதில் சொல்லுவா..


நீ கொடுக்கற சுதந்திரத்தை எவனை கட்டி இருந்தாலும் எனக்கு  கிடைச்சி இருக்காது...  காசு பணத்தை விட அதானே முக்கியம்..?,?? நீ திறமைக்காரன்...புத்திசாலி... கொஞ்சம் கோவக்காரன்...அவ்வளவுதான்... அந்த கோவத்தையும் எப்படி சரிபடுத்தனும்ன்னு எனக்கு தெரியும்... 
அதே போல யாரு கிட்டயும் என்னை எங்கேயும் விட்டுக்கொடுக்கவே மாட்டா...


என்னை பெத்த ஆத்தா கூட நான் எதுனா கேட்டா....காசு வந்ததும் வாங்கிதரேன்னு சொல்லுவாங்க.. ஆனா நான் எதை ஆசைப்பட்டாலும் அதை எனக்கு வாங்கி கொடுக்கனும்ன்னு ரொம்ப தீவிரமா இருப்பாங்க...
தத்தேரியா ஆட்டோ ஓட்டிக்கிட்டு  பத்தோட பதினொன்னா கடலூர் குப்பைகொட்டிக்கிட்டு இருந்து இருப்பேன்... இந்த ஜாக்கிசேகரை நாலு பேர் இன்னைக்கு மதிக்க காரணம் அவதான்...
நான் மக்குன்னு நான் நம்பினேன்.. நான் திறமையானவன் அவ நம்பினா... அதனாலே நான் உங்கள் முன்.


இன்று எங்கள் திருமண பந்ததில் அடி எடுத்து வைத்து ஆறு வருடம் முடிந்து ஏழாவது வருடத்தில் கால் பதிக்கின்றோம்...

இன்னும் அவள் ஆச்சர்யபடும் அளவில் வளர வேண்டும்...முன்னை விட இன்னும்  அவளை காதலிக்க வேண்டும்..

வழக்கம் போல உங்கள் வாழ்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டி...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
19/10/2014
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

23 comments:

 1. Happy Anniversary for a wonderful Couple...
  who are made for each other

  Enchanting showers of Almighty's ble"SS"ings
  with gifts Lin"EU"p of His wonderful Brings..
  With bac"KD"rop of Heartful Wishes from Friends/Families
  m"AH"araja / maha"RA"ni of "YAZHINI" kingdom Shines..
  May all your Dreams come true
  In A exciting journey of together crew..
  Your Beginning of another happy year
  have Kind bunches of, A love to cheer.

  ReplyDelete
 2. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஏழாவது திருமண நாள் வாழ்த்துகள் -

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்! இப்படி ஒரு இணை ,கொடுப்பினை,..எனக்கும் கூட ..
  உங்களின் இந்தப் பொன்னாள், என் பிறந்த நாள்

  ReplyDelete
 5. திருமணத் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் தல அப்படியே அண்ணிக்கும் என்னுடய வாழ்த்துக்களை சொல்லிடுங்கள் தாங்கள் குடும்பம் இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 7. belated happy wedding anniversary wishes
  anbudan sundar g

  ReplyDelete
 8. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! Jackie

  ReplyDelete
 9. Happy married life Jackie, Keep going...

  ReplyDelete
 10. தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 11. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! !

  ReplyDelete
 12. வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் என்ப அன்பும் கனிவும்.

  ReplyDelete
 13. பல்லாண்டு காலம் இப்படியே அன்னியோன்யமாய் வாழ வாழ்துக்கள் தல - பகுருதீன் துபாய்

  ReplyDelete
 14. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! !

  ReplyDelete
 15. Dear Mrs & Mr. Jackie,
  Wish you a Happy Wedding Anniversary..... God Bless you with more Goodness in your Life.....

  Wishes From Victor Paulraj - Doha

  ReplyDelete
 16. ஜாக்கி,

  திருமண நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner